School Morning Prayer Activities - 13.07.2018 (Daily Updates... )

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

உரை:

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

பழமொழி :

A honey tongue and a heart of gall

அடி நாக்கில் நஞ்சும், நுனி நாக்கில் தேனும்

பொன்மொழி:

இந்த உலகில் நாம் நம் கண் முன்னால் காணும் ஒவ்வொருவரையும் நேசிக்க இயலவில்லை என்றால் கண்ணுக்குத் தென்படாத கடவுளிடம் எவ்வாறு அன்பை செலுத்த இயலும்.

-அன்னை தெரசா

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1..”சோன்ங்கா” என்ற மொழி எந்த ஆசிய நாட்டின் ஆட்சி மொழியாகும்?
பூடான்

2.”கவான்சா” என்பது எந்த நாட்டின் நாணயம்?
அங்கோலா

நீதிக்கதை :

பாம்பும் விவசாயியும்
(The Farmer and the Snake Story in Tamil)

அது ஒரு அழகிய குளிர்காலம். ஒரு நாள் பாம்பு ஒன்று பனியில் விரைந்து உயிர் போய்விடுமோ என்ற நிலையில் சுருண்டு கிடந்தது.

அந்த நேரத்தில் அவ்வழியே வந்த விவசாயி ஒருவன் அந்த பாம்பினைப் பார்த்தான். இரக்க குணமுள்ள அந்த விவசாயி அப்பாம்புக்கு உதவிட நினைத்தான்.

பாம்பினை எடுத்து தன் மார்போடு அணைத்து அதனைச் சூடேற்றினான். விவசாயியின் உடல் சூடு பட்டதும், பாம்பு மெள்ள மெள்ள உணர்வு பெற்றது.

அதற்கு நன்றாக உணர்வு வந்ததும், அது தன்னைக் காப்பாற்றிய விவசாயியை பலமாகக் கடித்துவிட்டது. பாம்பின் நஞ்சு ஏறி உயிர் போகும் நிலையில் இருந்த அந்த விவசாயி தன் செய்கைக்காக வருந்தினான்.

பாம்பைப் பார்த்து "ஏ நன்றி கெட்ட நாகமே! உன்னைக் காப்பாற்றிய என்னையே கடித்துவிட்டாயே!! உன் குணம் தெரிந்தும் நான் உனக்கு உதவி செய்தேன் அல்லவா? அதற்கு இது சரியான தண்டனை தான்" என்று கூறிவிட்டு இறந்தான்.

நீதி: தீயவர்களுக்குச் செய்யும் உதவி தீமையாகவே முடியும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.ஜூலை 15 - காமராஜர் பிறந்த நாள் - பள்ளியில் மாணவர்கள் புத்தாடை அணிந்து, பல்வேறு போட்டிகள் வைத்து கொண்டாட வேண்டும் - கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாட பள்ளிக்கல்வி இணை இயக்குநரின் செயல்முறைகள்.

2.மருத்துவப் படிப்புக்கான தனியார் கல்லூரி நிர்வாக ஒதுக்கீட்டு கலந்தாய்வை ரத்து செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

3.ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்குவதற்கான அரசாணை தமிழக அரசு வெளியீடு.

4.ஜூலை 20-இல் லாரிகள் வேலைநிறுத்தம்: அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் ஆயத்தம்

5.கால்பந்து உலகக் கோப்பைப் போட்டியில் இங்கிலாந்தை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது குரோஷிய அணி

ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் ஒன்றியம் கத்தாளம்பட்டு அரசு தொடக்கப் பள்ளியில் மாணவர்களுக்கு அலைபேசி செயலி மூலம் பாடம் நடத்தப்படுகிறது.

2017-18 க்கு கனவு ஆசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள இப்பள்ளி ஆசிரியர் கணேசனின் சொந்த முயற்சியால் விர்சுவல் ரியாலிட்டி, 4 டி கிளாஸ், மைக், கணினி, புரஜக்டர் போன்றவற்றை பயன்படுத்தி ஒன்று முதல் 5 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறார். ஒன்றாம் வகுப்பு மாணவர் கூட கணினியை இயக்குகிறார்.

கலை, இலக்கியம், யோகா, செஸ், பேச்சு, நாடகம் போட்டிகளிலும் மாணவர்கள் பல பரிசுகளை அள்ளியுள்ளனர். பள்ளியில் நுாலகம், அறிவியல், கணித ஆய்வகம் போன்ற வசதிகள் உள்ளன. குழந்தைகள் அமர்ந்து படிக்க வட்ட மேஜைகள், நாற்காலிகளை கிராமத்தினர் நன்கொடையாக வழங்கியுள்ளனர். தாய், தந்தை இல்லாத குழந்தைகளுக்கு ஆசிரியர் கணேசன், தலைமைஆசிரியர் வளர்மதி சொந்த பணத்தில் ஆண்டுதோறும் ஆயிரம் ரூபாயை கொடுக்கின்றனர்.

கணேசன் கூறியதாவது: இன்பர்மேஷன் அன்ட் கம்யூனிகேஷன் டெக்னாஜி மூலம் மாணவர்களுக்கு பாடம் கற்பிக்கிறேன். இதனால் கனவு ஆசிரியர் விருது கிடைத்தது. நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதால் மாணவர்கள் எளிதில் கற்கின்றனர். பி.எஸ்சி., சைக்காலஜி படித்துள்ளதால் குழந்தைகளின் மனநிலைக்கு ஏற்ப கற்பிக்கிறேன்.

படிப்பு மட்டுமின்றி இணைய செயல்பாடுகளிலும் மாணவர்கள் சிறப்பாக செயல்படுகின்றனர். ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15 ல் 51 மரக்கன்றுகள் வழங்குவோம். கிராமமக்களும் தேவையான உதவிகளை செய்கின்றனர், என்றார்.

ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல் இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு


ஆசிரியர்களுக்கான‌ பொது மாறுதல்
இரண்டாம் கட்ட கலந்தாய்வு 15 நாளில் நடத்தப்படும் அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில் ஜெர்மனியில் வாகனங்களை வாங்கி பள்ளி  கழிவறைகளை சுத்தம் செய்யும் திட்டம் 3 மாதத்தில் துவங்கப்படும் எனவும் , காலமுறை ஊதியம் பெறும் ஊழியர்களை நிரந்தரம் செய்ய வாய்ப்பில்லை என்றும் தெரிவித்தார்.
முதுகலை ஆசிரியர் தேர்வு முடிவுகள் நான்கு மாதங்களில் வெளிவந்த உடன் தேர்வானவர் பணியமர்த்தப்படுவர் எனத் தெரிவித்தார்

பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கு அரசு வேலை!!


சென்னை வேப்பேரில் உள்ளதமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தில்
நிரப்பப்பட உள்ள லேபடேட்டரி அனிமல் அட்மெண்ட் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி:laboratory/ Animal attendant

காலியிடங்கள் : 02
சம்பளம்: மாதம் ரூ.10, 000 வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் 5சதவீதம் உயர்வு அளிக்கப்படும்

தகுதி: 10 ஆம் வகுப்புதேர்ச்சியுடன் பணி அனுபவமும் இருக்க வேண்டும்

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத்தேர்வு,நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர்கள்தேர்வு செய்யப்படுவர்.

நேர்முகத்தேர்வின்போது தேவையான அனைத்து சான்றுகளின் அசல் மற்றும் நக்லகளையும் இணைத்து சமர்பிக்க வேண்டும்.

நேர்முகத்தேர்வு நடைபெறும் தேதி:18.07.2018

நேர்முகத்தேர்வு நடைபெறும் இடம்:

The Director,

Directorate of Clinics

Madars Veterinary College

Tamil Nadu Veterinary and Animal Sciences University

Vepery, Chennai-7

மேலும் விவரங்களுக்கு http://www.tanuvas.tn.nic.in/nea/vacancies/dc_laa_pmu_2018.pdfலிங்கை கிளிக் செய்யவும் .

ஆவின் நிறுவன பணிக்கு 16க்குள் விண்ணப்பிக்கவும்காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: தமிழ்நாடு பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு இணையம் (ஆவின்) நிறுவனத்தில் காலியாகவுள்ள 275 சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணியிடத்திற்கான கல்வி தகுதி பிளஸ் 2 தேர்ச்சி அல்லது ஐடிஐ தேர்ச்சி. சீனியர் பேக்டரி அசிஸ்டெண்ட் பணி காலியிடத்திற்கு உரிய கல்வித்தகுதி, வயது வரம்பு, இனசுழிற்சி, மொத்த பணி காலியிடம் மற்றும் தேர்வு செய்யும் முறை ஆகியவை குறித்த விவரம் www.omcaavinsfarecruitment.com என்ற வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ள மனுதாரர்கள் மேலே தெரிவிக்கப்பட்டுள்ள வலைதளம் வாயிலாக ஜூலை 16ம் தேதிவரை தங்களுடைய விண்ணப்பங்களை பதிவு செய்து கொள்ளலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் இயங்கும் பள்ளி: தொடக்கக் கல்வி இயக்குநர் ஆஜராக உத்தரவு


  ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி இயங்குவதற்கு அனுமதி வழங்கப்பட்டது குறித்து
, தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 - ஆம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது*

*🔴இதுதொடர்பாக சின்ன கொடுங்கையூரைச் சேர்ந்த சசிகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சென்னையை அடுத்துள்ள புழல் அருகே கன்னடப்பாளையத்தில் ஸ்ரீ சரவணா வித்யாலயா நர்சரி பள்ளி இயங்கி வருகிறது*


*🔴இந்தப் பள்ளிக்கு பாதுகாப்பான கட்டடங்கள் இல்லை. ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன் பள்ளி செயல்பட்டு வருகிறது*


 *🔴விதிமுறைகளை மீறி உரிய பாதுகாப்பு வசதிகள் இல்லாமல் இயங்கி வரும் இந்த பள்ளிக்கூடம் குறித்து திருவள்ளூர் மாவட்ட தலைமை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலரிடம் புகார் அளித்தேன்*


*🔴அந்த புகாரின் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை' எனக் கோரியிருந்தார்*

*🔴இந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது*


*🔴அப்போது மனுதாரர் தரப்பில் பள்ளிக்கூடத்தின் தற்போதைய நிலை தொடர்பான புகைப்படங்கள் தாக்கல் செய்யப்பட்டன*

 *🔴புகைப்படங்களை பார்த்த நீதிபதி, கும்பகோணம் பள்ளி தீ விபத்து போல் மற்றொரு சம்பவம் நடந்தால் தான் நடவடிக்கை எடுப்பீர்களா? ஆஸ்பெஸ்டாஸ் மேற்கூரையுடன்கூடிய பள்ளிக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது? மேலும் இந்த பள்ளிக்கு எப்படி ஆண்டுதோறும் அங்கீகாரம் நீட்டிக்கப்படுகிறது? எனக் கேள்விகளை எழுப்பிய நீதிபதி, இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்கக் கல்வி இயக்குநர் வரும் 18 -ஆம் தேதி ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தார்*

படைப்பாற்றலில் முன்னேறிய இந்தியா!புதிய கண்டுபிடிப்புகளைப் படைப்பதில் சர்வதேச அளவில் இந்தியா ஏற்றம் கண்டுள்ளது.

உலகளவில் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்கும் நாடுகளுக்கு ஜிஐஐ குறியீடு (GII - Global Innovation Index) வழங்கப்படுகிறது. இந்தப் பட்டியலில் 2015ஆம் ஆண்டு முதல் இந்தியா முன்னேற்றத்தைக் கண்டு வருகிறது. எனினும் சீனா உள்ளிட்ட இதர போட்டியாளர்களுக்கு நிகராக செயல்புரிய இந்தியா மேலும் பல குறியீடுகளில் முன்னேற்றத்தை அடைய வேண்டும். மொத்தம் 126 நாடுகள் அடங்கிய GII தரவரிசைப் பட்டியல் ஜூலை 10ஆம் தேதியன்று நியூயார்க் நகரில் வெளியிடப்பட்டது. இதில் நடப்பு ஆண்டில் இந்தியா 57ஆவது இடத்திலும், சீனா 17ஆவது இடத்திலும் உள்ளன. முந்தைய ஆண்டில் இந்தியா 60ஆவது இடத்திலும், சீனா 22ஆவது இடத்திலும் இருந்தன.

இத்தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து மீண்டும் முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதற்கு அடுத்த இடங்களில் நெதர்லாந்து, சுவீடன், இங்கிலாந்து, சிங்கப்பூர், அமெரிக்கா, பின்லாந்து, டென்மார்க், ஜெர்மனி, அயர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன. இந்தப் பட்டியலை உலக அறிவுசார் சொத்துரிமை அமைப்பு வெளியிட்டுள்ளது. அறிவுசார் சொத்துரிமை பதிவு விகிதம், ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மொபைல் செயலிகள் உருவாக்கம், ஆன்லைன் படைப்பாற்றல், கணினி மென்பொருளுக்கான செலவுகள், கல்விக்கான செலவுகள், அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வெளியீடுகள், தொழில் தொடங்குதல் உள்ளிட்ட 80 குறியீடுகளின் அடிப்படையில் GII குறியீடு மதிப்பிடப்படுகிறது.

வெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சிவெளிநாட்டு பயிற்சியாளர்கள் மூலம் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தார்.

  ஆரணி அருணகிரிசத்திரம் பூந்தோட்டம் பகுதி கண்ணப்பன் தெருவில் உள்ள நகராட்சி உயர்நிலைப் பள்ளியில் ரூ.1.61 கோடி செலவில் புதிதாக கட்டப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது. இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன் தலைமை வகித்தார். கட்டடங்களை திறந்து வைத்து அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது.

  ஜிஎஸ்டி வரியை எதிர்கொள்ளும் வகையில், 25 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பட்டயக் கணக்காளர் (சார்டர்டு அக்கவுன்டன்ட்) பயிற்சி அளிக்கப்பட உள்ளது. தற்போது பிளஸ் 2 பயின்று வரும் மாணவர்கள் படித்து முடித்தவுடன் அவர்களுக்கு பட்டயக் கணக்காளர் பயிற்சி அளிக்கப்படும்.

  1, 6, 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத் திட்டத்தின் மூலம் கணினி வழியில் பயிலும் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழகத்தில் 3 ஆயிரம் பள்ளிகளில் ஸ்மார்ட் வகுப்புகள் அடுத்த வாரம் முதல் தொடங்கப்படுகின்றன.

   9 முதல் 12-ஆம் வகுப்பு வரை ரூ.500 கோடியில் இணையதள வசதியுடன் முற்றிலும் கணினிமயமாக்கப்படுகிறது.அடுத்த ஆண்டு அனைத்துப் பாடங்களும் புதிய பாடத் திட்டங்களாக மாற்றப்பட உள்ளது.

  ஆகையால், சுமார் ஒரு லட்சம் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிநாட்டில் இருந்து 600 பயிற்சியாளர்களை வரவழைத்து ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இதனால் மாணவர்கள் அரசுப் பள்ளிகளிலேயே ஆங்கிலத்தை சரளமாக பேசக்கூடிய வாய்ப்பை தமிழக அரசு ஏற்படுத்துகிறது.

 பள்ளிகளில் கழிப்பறையை சுத்தம் செய்ய ஜெர்மனி நாட்டிலிருந்து 1,000 வாகனங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளன என்றார்.

நிகழ்ச்சியில் செய்யாறு எம்எல்ஏ தூசி கே.மோகன், மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பயன்பாட்டுக்கு வராமலே இடிந்து காணப்படும் பள்ளிக் கட்டடம் - கலெக்டர் ஆய்வில் அதிர்ச்சி!


  நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே ஆத்துக்குடி
கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது.


   இங்கு புதிதாகக் கட்டப்பட்ட பள்ளிக் கட்டடம் திறக்கப்படாத நிலையில் மழையில் கரைந்தும், சுவர் இடிந்தும் அபாயகரமான நிலையில் இருப்பதைக் கண்டு பொதுமக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.நூற்றுக்கும் மேற்பட்ட ஏழை, எளிய மாணவர்கள் கல்வி பயின்று வரும் இப்பள்ளியில் பழைய கட்டடத்தை இடித்துவிட்டு கடந்த 2016-2017 நிதியாண்டில் புதிய கட்டடத்தைக் கட்டினார்கள்.


  ஊரக வளர்ச்சி நிதி ரூ.10 லட்சம் மற்றும் மயிலாடுதுறை தொகுதி அ.தி.மு.க எம்.எல்.ஏ ராதாகிருஷ்ணன் தொகுதி மேம்பாட்டு நிதி ரூ.12 லட்சம் என மொத்தம் ரூ.22 இலட்சம் மதிப்பீட்டில் நான்கு வகுப்பறைகள் கொண்ட புதிய கட்டடம் கட்டப்பட்டது.தற்போது, கட்டடம் கட்டி முடிக்கப்பட்டு வர்ணம் பூசப்பட்டுள்ளது.


  புதிய கட்டடம் இன்னும் பயன்பாட்டுக்குத் திறந்துவிடப்படவில்  இந்நிலையில் கடந்த சில நாள்களுக்கு முன் பெய்த மழையில் கட்டடத்தின் வெளிப்புற சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து அதனுள் இருந்த கம்பிகள் வெளியே தெரிய ஆரம்பித்தது. அதனைக் கண்ட கிராம மக்கள் அதிர்ச்சியடைந்தனர். அவர்கள் வெறும் கையால் தட்டினாலே சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்துவிழுந்தன.


   தரைப்பகுதி ஓங்கி மிதித்தாலே சிமென்ட் பெயர்ந்து உள்வாங்கிக்கொள்கிறது.


  இதனால் பெற்றோர்கள் குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்பவே தயக்கம் காட்டுகின்றனர்.  இந்நிலையில், நாகை கலெக்டர் சுரேஷ்குமார் ஆத்துக்குடி பள்ளியின் புதிய கட்டடப் பணி களை ஆய்வு செய்தார்.

   இதுபற்றி அவரிடம் பேசியபோது, ``பள்ளியின் புதிய கட்டடம் தரமான முறையில் கட்டப்படவில்லை என்று புகார் வந்ததையடுத்து நேரில் ஆய்வு செய்தேன்.


  கட்டுமான பணிகள், பேஸ்மட்டம், பில்லர்கள் நன்றாக உள்ளதாகப் பொறியாளர்கள் கூறுகின்றனர். ஆனால், சிமென்ட் பூச்சுகள் தரமாக இல்லை என்கிறார்கள். இக்கட்டடத்தில் உள்ள குறைகள் அனைத்தும் நிவர்த்தி செய்யப்படும்.

  கட்டுமானப் பணியைத் தரமாகச் செய்யாத ஒப்பந்தக்காரர், அதைக் கண்காணிக்க தவறிய அரசு அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்" என்று தெரிவித்தார்.

4 நாட்கள் கனமழை! மழை நிலவரத்தை பொறுத்து பள்ளிகளுக்கு விடுமுறை.!நேற்று முதல் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது என்பதால்
, சில பள்ளிகள் மாணவர்களுக்கு விடுமுறையை அறிவித்துள்ளனர். சில பகுதிகளில் முழங்கால் அளவுக்கு சாலைகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் பெற்றோர்கள் பிள்ளைகளை வெளியில் அனுப்ப அஞ்சுகின்றனர். எனவே விடுமுறை அறிவிக்காத பள்ளிகளிலும் அதிகளவு மாணவர்கள்  வருகைபுரியவில்லை. சென்னையை பொறுத்தவரை மேலும் 2 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பாண்டிச்சேரி, கோவை, சேலம், மற்றும் மேற்குதொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள அனைத்து தமிழக மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்து வருகிறது.


இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களுக்கு மழைப்பொழிவை தரும் தென்மேற்குப் பருவக்காற்று மீண்டும் வலுப்பெற்று வருவதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு 96 - 104 சதவிகிதம் வரை தென்மேற்குப் பருவமழை இருக்கும் என்று வானிலை மையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல இடங்கள் வெள்ளக்காடாக மாறியுள்ளன.

மும்பையில் 30 செ.மீ. மழை பதிவாகியுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதனால் கடந்த இரண்டு நாட்களாக மும்பை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் மழை வெள்ளம் குளம்போல் தேங்கி நிற்கிறது. அடுத்த 3 அல்லது 4 நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் மழை நிலவரத்தை பொறுத்து, தேவைப்பட்டால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். என்று மும்பை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

மருத்துவம், பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது


மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஜூலை 16, 17 மற்றும் 18ம் தேதிகளில் நடக்கவிருந்தது.
இந்நிலையில் தமிழில் 'நீட்' தேர்வெழுதிய மாணவர்களுக்கு 196 கருணை மதிப்பெண்கள் வழங்க ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து மறு உத்தரவு வரும் வரை 2ம்கட்ட மருத்துவ கலந்தாய்வை நிறுத்தி வைக்கும்படி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது

அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி, எஸ்டிக்கு இடஒதுக்கீடு! தடை விதிக்க முடியாது - உச்ச நீதிமன்றம்அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டிக்கான இட ஒதுக்கீட்டில் கீரிமி லேயர் வரையறையைப் பொருத்துவதற்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு ஒன்றின் விசாரணையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கர் மற்றும் டி.ஒய்.சந்திரசௌத் ஆகியோர் கொண்ட அமர்வானது தனது தீர்ப்பில் கூறியதாவது:

2006இல் நாகராஜ் எதிர் இந்திய அரசு என்ற வழக்கில், கீரிமி லேயா் வரையரையை அரசுப் பதவி உயர்வுகளில் எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்குப் பொருத்துவது குறித்துத் தீர்ப்பு அளிக்கப்பட்டது. அந்தத் தீர்ப்புக்கு எதிராக இடைக்காலத் தடை விதிக்க முடியாது என்று கூறியுள்ளது. ஆனால், இந்தப் பிரச்சினையை ஏழு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்கும் என்றும் கூறியுள்ளது.

முன்னதாக அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் இப்பிரச்சினையை உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஏழு பேர் கொண்ட அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும். ஏனெனில் ரயில்வேத் துறையிலும் பல்வேறு அரசின் சேவைத் துறைகளிலும் இப்பிரச்சினை குறித்து வேறுபட்டநீதிமன்ற தீர்ப்புகள் வந்துள்ளதால் குழப்பம் நிலவுகிறது. அதைத் தீர்த்து வைக்க அரசியல் சட்ட அமர்வு விசாரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அவருக்குப் பதிலளிக்கும் விதமாக, தற்போது ஓர் அரசியல் சட்ட அமா்வானது பல்வேறு பிரச்சினைகளை விசாரித்துக் கொண்டிருக்கிறது. அதனால் இந்த வழக்கை உடனே எடுத்துக்கொள்ள முடியாது. ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த வழக்கின் விசாரணையை அரசியல் சட்ட அமர்வு எடுத்துக்கொள்ளும் என்று தெரிவித்தனர்.

6ஆம் வகுப்பு சமூகவியல் மதிப்பீடு qr code பயன்படுத்த சில குறிப்புகள்...

ஆசிரியர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய நூல்கள்!!1. குழந்தைகள் எவ்வாறு கற்கிறார்கள் - ஜான் ஹோல்ட்

2. டோட்டோ சான் - ஜன்னலில் ஒரு சிறுமி

3. பகல் கனவு - ஜிஜுபாய் பதேக்கா

4. வன்முறையில்லா வகுப்பறை - ஆயிஷா நடராசன்

5. இது யாருடைய வகுப்பறை ? ஆயிஷா நடராசன்

6. கல்வி ஓர் அரசியல் - வசந்தி தேவி

7. என்னை ஏன் டீச்சர் பெயில் ஆக்கினீங்க - ஷாஜகான் - வாசல் பதிப்பகம்

8. முதல் ஆசிரியர் - சிங்கிஸ் அய்மாத்தவ்

9. குழந்தைகளைக் கொண்டாடுவோம் - ஷ.அமனஷ்வீலி

10. பாகுபடுத்தும் கல்வி - வசந்தி தேவி

11. ஒரு ஆரம்பப்பள்ளி ஆசிரியனின் குறிப்புகள் - பி.ச.குப்புசாமி - விஜயா பதிப்பகம்

12. டேஞ்சர்: ஸ்கூல் ! சமகால கல்விகுறித்த உரையாடல்

13. கரும்பலகையில் எழுதாதவை - பழ.புகழேந்தி

14. ஆயிஷா - ஆயிஷா நடராசன்

15. தமிழக பள்ளிக் கல்வி - SS.ராஜகோபாலன்

16. வகுப்பறைக்கு வெளியே - இரா.தட்சணாமூர்த்தி

17. எனக்குரிய இடம் எங்கே? - சா.மாடசாமி

18. என் சிவப்புப் பால் பாயிண்ட் பேனா - சா.மாடசாமி

19. தமிழக பள்ளிக் கல்வி - பிரச்சனைகளும் தீர்வுகளும்

20. பள்ளிகளில் பாகுபாடு - தமிழில் கோச்சடை

21. குழந்தை மனமும் அதன் மலர்ச்சியும் - பெ.தூரன்

22. ஆசிரிய முகமூடி அகற்றி

23. கற்க கசடற - பாரதி தம்பி

24. கசக்கும் கல்வியும் கற்கண்டாகும் - ஜோசப் ஜெயராஜ்

25. தமிழகத்தில் கல்வி - காலச்சுவடு பதிப்பகம்

26. வகுப்பறையின் கடைசி நாற்காலி. ம.நவின் - புலம் பதிப்பகம்’

27. ஆக்கவிய ஆசிரியம்
28. கிழக்கு வெளியீடு - குழந்தைகள் விரும்பும் பள்ளிக்கூடம்

29. அவர்கள் சின்னஞ்சிறு மனிதர்கள் - பூம்புகார் பதிப்பகம்

30. ஆல்பர்ட் காம்யூவின் "ஆசிரியர்"

31. எது கல்வி - இரா.எட்வின்

32.இது எங்கள் வகுப்பறை-சசிகலா உதயகுமார்

33.கரும்பலகைக்கு அப்பால்-கலகல வகுப்பறை சிவா

34.சீருடை- கலகல வகுப்பறை சிவா

"ஆங்கிலத்தில் அசத்தல்!" கிராமர் வீடியோக்களாக அசத்தும் அரசுப் பள்ளி ஆசிரியைதேர்வு என்றாலே மாணவர்களுக்கு பயம்தான். அதிலும், `இங்கிலீஷ் எக்ஸாம்' பற்றி சொல்லவே வேண்டாம். பெற்றோர்களோ, தங்கள் பிள்ளைகள் ஆங்கிலத்தில் சரளமாகப் பேச வேண்டும் என ஆசைப்படுகின்றனர்.

 அதனால், பெரும் பணம் செலுத்தி, தனியார் பள்ளிகளில் படிக்கவைக்கின்றனர். பெற்றோர்களின் இந்த விருப்பம் அரசுப் பள்ளியிலே கிடைத்தால்..?


 அதற்கான முயற்சியாக, ஆங்கில இலக்கணத்தை எளிமையாகக் கற்பிக்கிறார், அரசுப் பள்ளி ஆசிரியையான சித்ரா வெங்கடேசன்.

சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்லும் வழியில், சிங்கப்பெருமாள் கோயிலுக்கு உள்பக்கமாக நான்கு கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, தென்மேல்பாக்கம்.

 அங்கிருக்கும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றுகிறார், சித்ரா வெங்கடேசன். மாணவர்களுக்குப் புதிய முறையில் பாடங்களைப் புரியவைப்பதில் ஆர்வம் காட்டுபவர்.

 இவர் பள்ளியில் செய்த செயல்பாடுகள், சுட்டி விகடனின் எஃப்.ஏ பக்கங்களில் பிரசுரமாகியிருக்கின்றன. தற்போது, வகுப்பறையில் நடத்தும் ஆங்கில இலக்கணப் பகுதியை வீடியோவாக எடுத்து, யூ- டியூபில் பதிவேற்றிவருகிறார்.


 இவரது யூ- டியூப் சேனலுக்கு 9,500 சப்ஸ்கிரைபர்ஸும் இருக்கிறார்கள். எப்படி இது சாத்தியமானது என அவரிடம் கேட்டோம்.

``இந்தப் பகுதியில் உள்ள தொழிற்சாலைகளில் வேலைக்குச் செல்பவர்களின் பிள்ளைகளே எங்கள் பள்ளியில் அதிகம் படிக்கின்றனர்.

 அதிகாலையிலேயே வேலைக்குச்  களைப்புடன் வீடு திரும்பும் பெற்றோர்களுக்கு, தங்கள் பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் சொல்லிக்கொடுக்கும் வாய்ப்பு குறைவு. எனவே, அந்தப் பிள்ளைகளின் மேல் கூடுதலான அக்கறை காட்ட முடிவெடுத்தேன்.

 என்னுடைய சொந்த ஊரும் சிங்கபெருமாள் கோயில்தான். நான் படித்ததும் அரசுப் பள்ளியில்தான். நான் கடந்துவந்த பாதை நினைவில் இருக்கிறது.

 படிப்பு தவிர, பள்ளியைத் தூய்மையாக வைத்திருப்பதை முதன்மையான பணியாகக் கடைப்பிடிக்கிறோம்
 சில நிறுவனங்களின் உதவியோடு, கணினி உட்பட பல்வேறு வசதிகளை ஏற்படுத்தி, தனியார் பள்ளிக்கு நிகராக உருவாக்கியிருக்கிறோம். மாணவர்களுக்குப் பிடித்தவாறு சுவர்களில் ஓவியங்கள் வரைந்திருக்கிறோம். தலைமை ஆசிரியர் அனுகுமாரின் அக்கறையும் முயற்சியும் இதில் அளப்பரியது' என்று தன் பள்ளியின் அறிமுகத்துடன் தொடர்கிறார் சித்ரா வெங்கடேசன்.

``இங்கிலீஷ் என்றாலே பெரும்பாலான மாணவர்களுக்கு பயமும் தயக்கமும் வந்துவிடும். அதை அவர்களின் மனங்களிலிருந்து தகர்க்க நினைத்தேன்.

 அவர்களுக்குப் புரியும் வகையில் தமிழ் மற்றும் ஆங்கிலம் இரண்டையும் இணைத்துக் கற்பித்தேன். தமிழ் உரையாடலில் எப்படிச் சொற்களைப் பயன்படுத்துகிறமோ, அப்படித்தான் ஆங்கிலத்திலும் என எளிமையாக்கினேன்.

 மாணவர்களுக்கு ஆர்வம் தொற்றிக்கொண்டது. எப்போது வேண்டுமானாலும் சந்தேகம் கேட்கலாம் என்று சொல்லியிருக்கிறேன்.

 நான் வகுப்பறையில் ஒருமுறை நடத்துவதைத் திரும்பவும் பார்க்க விரும்பும் மாணவர்களுக்கு உதவும் விதத்தில் வீடியோவாக்கி, யூ-டியூபில் பதிவேற்றினேன்.

 இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. பெற்றோர்களின் போனிலிருந்து மாணவர்கள் இந்த வீடியோவைப் பலமுறை பார்க்கிறார்கள். Direct and Indirect speech, Compound Sentence, Active and Passive Voice - Present Tense உள்ளிட்ட 64 வீடியோக்களைப் பதிவேற்றியுள்ளேன்.

இதைப் பார்த்த அரசு இணையதளமான TN SCERT, என் வீடியோக்களை அவர்களது இணையதளp பக்கத்தில் பகிர்ந்துள்ளது. வீடியோக்களுக்குக் கிடைக்கும் வரவேற்பும் விமர்சனமும் என்னை இன்னும் ஆர்வத்துடன் இயங்கவைக்கிறது.


 சவுதி அரேபியாவிலிருந்து ஒருவர், `தமிழ்நாட்டில் பலருக்கும் ஆங்கிலம் தெரியாது என இங்குள்ளவர்கள் நினைக்கின்றனர். அவர்களுக்கு உங்களின் வீடியோக்களைத்தான் அனுப்பிவைக்கிறேன்' எனப் பாராட்டியிருந்தார்.

 என்னுடைய நோக்கம், மாணவர்களுக்கு எளிமையான வழியில் ஆங்கிலம் கற்பிக்க வேண்டும்.

அதன்மூலம், உலகத்துடன் தொடர்புகொள்ளும் புதிய வாய்ப்புகளை உருவாக்கித் தர வேண்டும் என்பதே" என்று புன்சிரிப்புடன் சொல்கிறார் சித்ரா வெங்கடேசன்.

சமீபத்தில் இவர் வெளியிட்ட வீடியோவில், ஒரு வகுப்பறையில் பாடங்களைத் தொடங்குவதற்கு முன்பு செய்யவேண்டிய வாம்-அப் செயல்பாட்டை விளக்கியிருந்தார். அது, சிறப்பான கவனத்தைப் பெற்றுள்ளது. `இதை, நான் சிறுவயதில் பாட்டி வீட்டுக்குச் சென்றிருந்தபோது பழகிக்கொண்டேன் இந்த வாம்-அப் பயிற்சி, மாணவர்களின் கவனத்தை ஒருமுகப்படுத்தும்' எனப் பகிர்ந்துகொள்கிறார்.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச வேன் வசதி!திருப்பூர் மாவட்டம் பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி மாணவர்களை அழைத்து வர இலவச வேன் வசதி செய்யப்பட்டிருப்பது பொதுமக்களின் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.

அரசுப் பள்ளிகளில் குழந்தைகளைச் சேர்க்கத் தயக்கம் காட்டுவது வெகுவாக அதிகரித்துள்ளது. இதனால், தற்போது அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது. இந்தப் பிரச்சினையைப் பொறுத்தவரை கிராமம், நகரம் என்ற பாகுபாடு இல்லை. இதனைத் தீர்க்கப் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர் அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அதிகாரிகள்.

திருப்பூர் மாவட்டம் ஊத்துக்குளி ஒன்றியத்திலுள்ள பாரப்பாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் எடுக்கப்பட்ட நடவடிக்கை இதற்கு உதாரணமாக அமைந்துள்ளது. குளத்துப்பாளையம், பாரப்பாளையம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த 247 மாணவ, மாணவியர் இப்பள்ளியில் படித்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலானவர்கள் நடந்தே பள்ளிக்கு வருவது வழக்கம். அவர்களின் வருகையை ஊக்குவிக்கும் பொருட்டு, நேற்று (ஜூலை 10) முதல் இலவச வேன் வசதி தொடங்கப்பட்டது.

பள்ளி மேலாண்மைக் குழு, பெற்றோர் ஆசிரியர் கழகம், பேஸ்புக் நண்பர்கள், இப்பள்ளியின் தலைமையாசிரியர் அகிலா மற்றும் ஆசிரியர்கள் உட்படப் பலரது முயற்சியால் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கான மாத வாடகையை இவர்களே செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த இலவச வேன் வசதி தொடக்கவிழாவில் ஊத்துக்குளி வட்டாரக் கல்வி அதிகாரி வசந்தி மற்றும் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள் உட்படப் பலர் கலந்துகொண்டனர்.

கிராமத்தினரே நடத்தும் பள்ளி; 25 குழந்தைகள்... ஒரே ஆசிரியர்!


சிவகங்கை : சிவகங்கை அருகே ஒக்குப்பட்டி ஊராட்சி வி.புதுப்பட்டியில்தன்னார்வ
நிறுவனம் கைவிட்ட பள்ளியை கிராமத்தினரே நடத்துகின்றனர். இங்கு5 வகுப்புகள், 25 குழந்தைகள் படிக்கின்றனர். ஒரே ஆசிரியர் விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறார்.

மலையடிவார பகுதியான இங்கு 1986 ல் 'அசேபா' தன்னார்வ நிறுவனம் சார்பில் தொடக்கப் பள்ளி துவக்கப்பட்டது. சில ஆண்டுகளிலேயே நடுநிலைப் பள்ளியாக தரம் உயர்ந்தது. அந்நிறுவனம் பள்ளியை நடத்த முடியாமல் 2014 ல் கைவிட்டது. இதனால் 100 மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.

இதையடுத்து கிராமத்தினரே பள்ளியை நடத்துகின்றனர். தன்னார்வ நிறுவனத்தில் பணிபுரிந்த ஆசிரியர் வள்ளியம்மை விடுப்பு எடுக்காமல் 5 வகுப்புகளையும் நடத்தி வருகிறார்.

அவர் கூறுகையில், ''துவக்கத்தில் ஐந்து ஆசிரியர்கள் இருந்தனர். பள்ளியை கைவிட மனமில்லாமல் தொடர்ந்து நடத்துகிறேன். தற்போது ஐந்து வகுப்புகள் உள்ளன. விடுப்பு எடுக்காமல் பணிபுரிகிறேன்,'' என்றார்.

முன்னாள் ஊராட்சித் தலைவர் பழனி கூறியதாவது: இங்கு 300 க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்தனர். இரு ஆண்டுகளுக்கு முன், 50 குழந்தைகள் இருந்தனர். பள்ளி தொடர்ந்து நடக்குமா என்ற பயத்தில் சிலர் பக்கத்து ஊர்களில் குழந்தைகளை சேர்த்தனர். ஏழு கட்டடங்கள், ஒன்றரை ஏக்கர் நிலம் உள்ளது. 'குறைந்தது 25 மாணவர்கள் இருந்தாலே அரசு பள்ளி துவங்கலாம்' என விதிமுறை உள்ளது.

தற்போது ஒரு ஆசிரியருக்கு தொகுப்பூதியம் தருவதாக அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் கூறியுள்ளனர். பள்ளியை அரசு ஏற்று நடத்தினால் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும், என்றார்.

SPD - NEW SYLLABUS TRAINING - STATE LEVEL VISITING OFFICERS LIST PUBLISHED - ALL DISTRICTS - DIR PROC


அனைத்து வகை பள்ளி மாணவர்களின் விபரங்களை EMIS ல் பதிவு செய்தல் குறித்து முதன்மைக்கல்வி அலுவலரின் செயல் முறைகள்!!!
School Morning Prayer Activities - 12.07.2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் :

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

உரை:
கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பழமொழி :

A guilty conscience needs no Accuser

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கும்

பொன்மொழி:

வாழ்க்கையில் நீங்கள் வெற்றி பெற மூன்று வழிகள்

1. பிறரைக்காட்டிலும் அதிகமாக அறிந்து கொள்ள முயலுங்கள்.
2. பிறரைக்காட்டிலும் அதிகமாக உழைக்கக் கற்றுக்கொள்ளுங்கள்
3. பிறரைக் காட்டிலும் குறைவாக பிறரிடமிருந்து பெற முயலுங்கள்.

-அடால்ஃப் ஹிட்லர்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழ்நாடு சுற்றுலாத் துறையின் சின்னத்தில் உள்ளது எது?
குடை 2.இந்திய ரூபாய் நோட்டில் என்னென்ன மிருகங்கள் உள்ளன?
காண்டாமிருகம், யானை, புலி

நீதிக்கதை :

சேவலும் இரத்தினக் கல்லும்
( The Cock & the Jewel )


சேவலும் இரத்தினக் கல்லும் - ஈசாப் நீதிக் கதைகள். Read and download The Cock & the Jewel aesop moral story online with pictures in Tamil for kids.

அது ஒரு அழகிய பனிக்காலம். சேவல் ஒன்று வழக்கம் போல் காலையில் எழுந்து அதற்கான உணவைத்தேட தன் நண்பர்களுடன் கிளம்பியது. அந்த சேவல் தொலைவில் ஒரு குப்பைக் கிடங்கை கண்டது.


அந்த குப்பைக் கிடங்கில் ஏதாவது உணவு கிடைக்குமா என்ற எண்ணத்துடன் கிளற ஆரம்பித்தது. அப்போது அந்த சேவலுக்கு விலை மதிப்பில்லாத இரத்தினக்கல் ஒன்று கிடைத்தது.

அந்த கல்லை சேவல் திருப்பித் திருப்பிப் போட்டது. அதைக் கண்ட மற்றொரு சேவல் வருத்தமுடன் "இந்த கல் நமக்கு கிடைத்து என்ன பயன்? ஒரு இரத்தின வியாபாரியின் கையில் இது கிடைத்திருந்தால் அவனுக்கு இதன் மதிப்பு தெரியும். நமக்கோ இந்த கல்லை விட சிறிது தாணியம் கிடைத்திருந்தால் அதுவே விலை மதிப்பில்லாத பொருளாக இருக்கும்" இந்த கல் நமக்கு உதவாது என்று கூறியது.

நீதி: ஒருவருக்கு பயன்படும் பொருளே அவர்களுக்குச் சிறந்ததாகும்.

இன்றைய செய்தி துளிகள் : 

1.INSPIRE AWARD - மாணவர்கள் பதிவு செய்ய 31.07.2018 வரை கால நீட்டிப்பு!

2.தனியார் பள்ளிகளை நிர்வகிக்கும் விவகாரம்: கல்வித் துறை அரசாணையில் திருத்தம் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

3.தமிழகத்துக்கு கபிணி அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் அளவு 50,000 கனஅடியாக அதிகரிப்பு

4.பொறியியல் படிப்புக்கான விளையாட்டு பிரிவு மாணவர்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு ஜூலை 17-ம் தேதி நடைபெறுகிறது.

5. டிஎன்பிஎல் கிரிக்கெட் போட்டியின் 3-வது சீசன் தொடக்கம்.

ஆசிரியர்கள் இன வேறுபாட்டுடன் செயல்படக்கூடாது


'சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் புதியதாக பள்ளிகளை துவக்குவதோடு, பள்ளிகளில் நிலவும் மத மற்றும் பண்பாடு ரீதியிலான பிரச்னைகளை களையும் வகையில் ஆசிரியர்கள் செயல்பட வேண்டும்' என்று, தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி குழு (என்.சி.இ.ஆர்.டி.,) பரிந்துரைத்துள்ளது!

'பொதுவாக, பாகுபாடு மற்றும் துன்புறுத்தல்களை சிறுபான்மையின குழந்தைகள் சந்திப்பது ஒருபுறம் இருக்க, பள்ளிகள் மற்றும் வகுப்பறைகளிலேயே கலாசார மற்றும் மத ரீதியான வேறுபட்ட பிரச்சனைகளுக்கு அவர்கள் ஆளாகின்றனர். சில நேரங்களில், அவர்களது உணவு பழக்கமுறை கூட குற்றமாக கருதப்படும் சூழல் நிலவுகிறது. சில பிரிவினரால் வேறுபட்ட சீருடை பின்பற்றப்படுவதும் விரும்பத்தக்கதல்ல.

'சிறுபான்மையினரது கலாசார ரீதியான பண்டிகைகள் பள்ளிகளில் கொண்டாடப்பட வேண்டும். சிறுபான்மையினர் சந்திக்கும் இன பாகுபாடு மற்றும் பல்வேறு சவால்களை, பள்ளி பாடத்திட்டத்தில் இடம்பெறச் செய்ய வேண்டும்' என்றும் என்.சி.இ.ஆர்.டி., பரிந்துரைத்துள்ளது

2019 Year's Government Holidays - Official List Published!

விருதுநகரில் நடைபெறவிருந்த "கனவு ஆசிரியர் விழா" சிவகாசிக்கு மாற்றம்!


திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற இருந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO PROCEEDINGS

திருவண்ணாமலை மாவட்டத்தில் நடைபெற இருந்த வணிகவியல் மற்றும் கணக்கு பதிவியல் முதுகலை ஆசிரியர்களுக்கான பயிற்சி ஒத்திவைப்பு - CEO PROCEEDINGS

PGTRB விரைவில் நடத்தப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்

தமிழக அரசு பள்ளி கல்வித்துறையின் சார்பில் கல்வித்தரத்தை உயர்த்த தேவையானபாடப்பொருள் மேம்பாட்டு மையம் (மின்னணு

பாடப்பொருள்மற்றும் மின்னணு மதிப்பீடு மையங்கள்) அமைக்கப்பட்டுள்ளது.

 இந்த மையத்தின் திறப்பு விழா நேற்று சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு விழா நூலகத்தில் நடைபெற்றது. விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்துகொண்டு மையத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்துவைத்தார்.பள்ளிக்கூடங்களில் அமல்படுத்தப்பட்ட புதிய பாடத்திட்டங்களில் ‘கியூ ஆர்’ கோடு இணைக்கப்பட்டுள்ளது. இந்த ‘கியூ ஆர்’ கோடுவை செல்போனில் ‘ஸ்கேன்’ செய்தால், இணையதளத்தில் வீடியோ மற்றும் ஆடியோ தெரியும். அதாவது உதாரணமாக 6–ம் வகுப்பு தமிழ் பாடத்தில் கும்மி அடி என்று தலைப்பில் உள்ள பாடத்தில் ‘கியூ ஆர்’ கோடு இருந்து, அதை ‘ஸ்கேன்’ செய்தால், கும்மி அடிப்பது மற்றும் சத்தம் ஆகியவை வீடியோ மற்றும் ஆடியோவாக தெரியும். அதை மாணவர்களுக்கு ஆசிரியர் கற்பிப்பார். இப்படி அனைத்து பாடப்புத்தகங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் ‘கியூ ஆர்’ கோடு இடம் பெற்றுள்ளது. இவற்றை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பார்வையிட்டார்.இதையடுத்து முதன்மை கல்வியாளர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள், வட்டார கல்வி அலுவலர்கள் ஆகியோருக்கான பயிற்சி அளிக்கப்பட்டது. அந்த பயிற்சியின் நிறைவு விழாவில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசியதாவது:–முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதற்கு காரணம் இணை இயக்குனர், இயக்குனர் மூலம் எதையும் தீர்க்க நாட்கள் அதிகமாகும். அதனால் தான் உங்களுக்கு அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது. அதை மனிதாபிமானத்துடன் அணுகவேண்டும். நான் 8 முறை மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளேன். அதற்கு காரணம், யார் எதை கூறினாலும் அதை காது கொடுத்து கேட்பேன். அவர்களை தட்டிக்கொடுப்பேன். அதேபோல நீங்களும் செயல்படுங்கள்.உங்கள் பகுதியில் உள்ள பள்ளிகளை பார்வையிட்டு அந்த பள்ளிகளில் கழிப்பறை மற்றும் ஏதாவது குறை இருந்தால்தெரியப்படுத்துங்கள். பள்ளிகளுக்கு அனைத்து கட்டமைப்புகளும் செய்து கொடுக்கப்படும். பெற்றோர் ஆசிரியர் சங்கத்தில் சேவை மனப்பான்மை உள்ளவர்களை சேருங்கள். சிறப்பாக பணியாற்றுங்கள். பிளஸ்–1 மற்றும் பிளஸ்–2 வகுப்புகளுக்கு இணையதள வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. பிளஸ்–2 படித்து முடித்த உடன் அவர்களுக்கு வேலை கிடைக்கும் வகையில் அனைத்து பாடங்களும் இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.பின்னர் அவர் புதுமை பள்ளி விருதுகளையும், கனவு ஆசிரியர் விருதுகளையும் ஆசிரியர்களுக்கு வழங்கினார்.

பின்னர் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–புதிய பாடத்திட்டத்தில் மாணவர்களுக்கு எப்படி பாடம்நடத்துவது என்பது குறித்து 1 லட்சம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும். நீட் தேர்வு வேண்டாம் என்பது தமிழக அரசின் கொள்கை முடிவு.ஆனால் இந்தியா முழுவதும் நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகத்தில் 412 மையங்களில் நீட் பயிற்சி நடத்தப்படும். அந்த பயிற்சி விடுமுறை நாட்களிலும், பள்ளிக்கூட வேலைநேரம் போக மற்ற நேரங்களிலும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

காலியாக உள்ள முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணியிடம் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்படும். விரைவில் அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

முன்னதாக விழாவின் போது பள்ளி கல்வித்துறை முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ், அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் சுடலைக்கண்ணன், பள்ளி கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர் எஸ்.கருப்பசாமி, மெட்ரிகுலே‌ஷன் பள்ளிகள் இயக்குனர்ச.கண்ணப்பன், இணை இயக்குனர் நாகராஜ முருகன் மற்றும் தீக்ஷா மற்றும் மின்னணு மதிப்பீடு மாநில ஒருங்கிணைப்பாளர் ஆர்.எம்.சதீஷ் ஆகியோர் கலந்துகொண்டனர்.

Popular Posts