BT TO PG Promotion Counselling Postponed!

PG Vacancy List as on 27.11.2018

Flash News : 2018-19ம் ஆண்டுக்கான பொது கலந்தாய்வு பட்டியலை ஒப்படைக்க உயர்நீதிமன்றம் உத்தரவு !!

2018-19ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர் பொது இடமாறுதல் கலந்தாய்வில் இடம்பெற்றவர்களின் பட்டியலை டிச.11ல் தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

எவ்வளவு பேர் பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர், எங்கு பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது குறித்து பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலர், இயக்குநர் விளக்கமளிக்க நீதிபதி உத்தரவிட்டுள்ளார்

1-5th TERM-II - SA (60 MARKS) ALL QUESTION PAPERS - 56 PAGES

BT, PET Teachers Wanted - Permanent Post - Govenrment Salary !!

வரலாற்றில் இன்று 30-11-2018

Useful English Websites - For Teacher's

TNPSC - அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு!


கஜா புயல் பாதிப்பு காரணமாக டி.என்.பி.எஸ்.சியில் அனைத்து தேர்வுகளுக்கும் விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

 தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க டிச.10ம் தேதி வரையும், கட்டணம் செலுத்த டிச.12ம் தேதி வரையும் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது

4 ஆண்டு ஒருங்கிணைந்த கல்வியியல் படிப்பு - வரும் கல்வியாண்டு முதல் தொடக்கம்

ஒருங்கிணைந்த நான்காண்டு கல்வியில் படிப்பு வரும் கல்வி ஆண்டில் அமலுக்கு வர உள்ளதாக கல்வியியல் பல்கலைக்கழக துணைவேந்தர் தங்கசாமி தெரிவித்துள்ளார்.
       
தமிழ்நாடு கல்வியியல் பல்கலைக்கழக 8-ஆம் ஆண்டு பட்டமளிப்பு விழா சென்னை பல்கலைக்கழக வளாகத்தில் நடைபெற்றது. இதில் தமிழக ஆளுனர் பன்வாரிலால் புரோகித் பங்கேற்று, மாணவர்களுக்கு பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தங்கசாமி, சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் விழுப்புரம் மாவட்டம் வி. மருதூர் ஆகிய  இடங்களில் பல்கலைக்கழகத்தின் சார்பில் இரு  புதிய கல்வியியல் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளதாகவும்,  டிசம்பர் 3-ம் தேதி முதல் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் என்றும்  கூறினார்

CCRT - 10 Days TRAINING FOR Govt / Aided School TEACHER'S

Flash News : NMMS Exam post postponed to 15 DEC 18

TNPSC - DEO Exam 2018 - Notification Published!

D.E.O EXAM-2018 ANNOUNCED | மாவட்டக்கல்வி அலுவலர் தேர்வு அறிவிப்பை வெளியிட்டது TNPSC | விளம்பர எண்-524/2014 | அறிவிப்பு நாள் - 27.11.2018 | விண்ணப்பிக்க வேண்டிய தேதி -10.12.2018 | விண்ணப்பிக்க கடைசி தேதி -09.01.2019 | வயது வரம்பு இல்லை (இடஒதுக்கீட்டு பிரிவினர்) விரிவான விவரங்கள் ....

வரலாற்றில் இன்று 29-11-2018

2018 செப்டம்பரில் நடைபெற்ற +2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் நாளை வெளியீடு

2018 செப்டம்பரில் நடைபெற்ற பிளஸ்2 துணைத் தேர்வு மறுக்கூட்டல் முடிவுகள் நாளை வெளியிடப்படும் என தமிழ்நாடு அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.

மறுமதிப்பீடு கோரியவர்களில் மதிப்பெண்கள் மாற்றம் உள்ளவர்களின் பதிவெண் scan.tndge.in இணையதளத்தில் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

World Differently Abled Day - Celebration

TNOU - Application For Genuineness

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் மற்றும் முதுகலை ஆசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு தேதி அறிவிப்பு?

மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வு கலந்தாய்வு நாளை 29/11/2018 (வியாழக் கிழமை) நடைபெறும் எனவும்,

பட்டதாரி ஆசிரியர்கள் முதுகலை பட்டதாரி ஆசிரியர்களாக பதவி உயர்வு கலந்தாய்வு 01/12/2018 (சனிக்கிழமை) நடைபெறும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால் இதுபற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வரலாற்றில் இன்று 28.11.2018

School Morning Prayer Activities - 28.11.2018பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள் : 92
அகன்அமர்ந்து ஈதலின் நன்றே முகனமர்ந்து
இன்சொலன் ஆகப் பெறின்.
உரை:
முகம் மலர்ந்து இன்சொல் உடையவனாக இருக்கப்பெற்றால், மனம் மகிழ்ந்து பொருள் கொடுக்கும் ஈகையைவிட நல்லதாகும்.
பழமொழி:
Do not rub peter to pay paul
கடைத் தேங்காயை எடுத்து வழிப்பிள்ளையாருக்கு உடைக்காதே
பொன்மொழி:
அணு அளவு கூட பிறரை ஏமாற்றுவது இல்லை என்னும் பூரண நிலை அடைந்து விட்டால் அவனே கடவுள்.
- பாரதியார்
இரண்டொழுக்க பண்பாடு :
1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .
2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .பொது அறிவு :
1.எந்த மொழியில் இருந்து “பீரோ” என்ற வார்த்தைத் தமிழுக்கு வந்தது?
ஃப்ரெஞ்ச்
2.கன்வாரிஸ் என்று அழைக்கப்படுபவர்கள் யார்?
சிவ பக்தர்கள்
நீதிக்கதை :
பொய்!
தேவர்கள் உண்ணும் அமிர்தத்தை உண்டால் சாக வேண்டியதில்லை...' என்ற உண்மையை அறிந்த ஒருவன், நீண்ட தவம் செய்தான்.
''உனக்கு என்ன வரம் வேண்டும்...'' என்றார் கடவுள்.
''ஒரு குடம் நிறைய அமிர்தம் வேண்டும்...''
''சரி தருகிறேன்... அதை, தரையில் வைத்தால் பலன் கிடைக்காது...''
வெள்ளி குடம் நிறைய, அமிர்தத்தை கொடுத்த கடவுள், மறைந்து விட்டார்.
மகிழ்ச்சியில், 'அமிர்தம் வாங்கிய பெருமையை, பலர் அறிய கூறி, எவருக்கும் கொடுக்காமல், தான் மட்டும் குடிக்க வேண்டும்' என நினைத்து, அமிர்த கலசத்தை தலையில் சுமந்தபடி நடந்தான்.
குறுக்கே சிற்றாறு வந்தது.
ஆற்றை கண்டதும், வயிறு தொல்லை செய்தது; சற்று மறைவாக ஒதுங்க நினைத்தான்.
அப்போது, ஆற்றின் பக்கம் ஒருவன் நின்று கொண்டிருந்தான்.
அவனிடம், அமிர்த குடத்தை கொடுத்து, சிறிது நேரம் தலையில் வைத்திருக்கும்படி வேண்டினான். ஆனால், குடத்தில் உள்ள அமிர்தம் பற்றி சொல்லவில்லை.
''சரி வைத்திருக்கிறேன்...'' என்றான், புதியவன்.
அதை திறந்து குடித்து விடுவானோ என்ற சந்தேகத்தில், ''அப்பனே... குடத்தில் விஷம் உள்ளது; அதாவது, ஆலகால விஷம். இதை மருந்துக்காக எடுத்துப் போகிறேன்; தரையில் வைத்தால், சக்தி போய் விடும்; எனவே, தலையிலேயே வைத்திரு...'' என கூறி, தொலைவில் நின்ற பனைமரங்களை நோக்கி நடந்தான்.
தலையில் ஆலகால விஷத்தை சுமந்து நின்றவனுக்கு, மூளை வேலை செய்தது.
அவனோ, 30 ஆண்டுகள் வயிற்று நோயால் அவதிப்படுகிறான். ஆற்றில் விழுந்து, இறந்து போக வந்திருந்தான். அப்படி வந்தவனுக்கு யோகம் அடித்தது.
அதாவது, ஒரு குடம் நிறைய ஆலகால விஷம் கிடைத்திருக்கிறது. சும்மா இருப்பானா...குடத்தை திறந்து, ஒரு சொட்டு விடாமல், 'மட... மட...' என, குடித்து முடித்து ஆற்றிலே விழுந்தான்.
திரும்பி வந்தவன், குடம் தரையில் கிடந்ததைக் கண்டு திடுக்கிட்டான். அதை சுமந்து நின்றவன், தண்ணீரில் விளையாடிக் கொண்டிருந்தான்.
''சுவாமி... நான் தீராத வயிற்று வலிக்காரன்; தாங்கள் கொடுத்த விஷம் அடியேன் வயிற்று வலியை நீக்கி விட்டது. நான், இறக்க நினைத்து, ஆற்றில் விழ வந்தேன். விஷம் கிடைத்ததால், அதைக் குடித்து செத்து போக நினைத்தேன்; ஆனால், நீங்கள் கொடுத்த விஷம் என் நோயிலிருந்து என்னை காப்பாற்றி விட்டது... நன்றி!'' வந்தவன் அதிர்ந்து நின்றான்.
குட்டீஸ்... உண்மையை திரித்து, சொன்னால், நமக்கு எதிராக மாறும் என, புரிந்து கொண்டீர்களா...
இன்றைய செய்தி துளிகள் : 
1.கஜா புயல் சேதம் குறித்த ஆய்வறிக்கையை 2 நாட்களில் மத்திய குழு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
2.நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க வேண்டும்: புயல் பாதித்த பகுதி மாணவர்கள் கோரிக்கை
3.கஜா புயல் நிவாரணத்துக்கு உண்டியலில் சேர்த்த பணத்தை தானமாக வழங்கிய மாணவன் : கலெக்டர் பாராட்டு
4.13-வது உச்சி மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி இன்று அர்ஜென்டினா பயணம்

Vinayaga university distance degress not eligible for incentives.

NMMS EXAM 2018 - CUSTODIAN APPOINTMENT - REG

வரலாற்றில் இன்று 27.11.2018

250 ஆசிரியர்கள் கைதுஊதிய முரண்பாடு களையாவிட்டால் தொடர் உண்ணாவிரதம்: இடைநிலை ஆசிரியர்கள் திட்டவட்டம்...!!

ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்ட ஊதிய முரண்பாடுகளை அரசு நீக்காவிட்டால் தொடர் உண்ணா விரதப்போராட்டத்தில் ஈடுபடப் போவதாக இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கபொதுச் செயலாளர் ராபர்ட் கூறியதாவது.

 தமிழகத்தில் இயங்கும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு, 2009ம் ஆண்டு ஆறாவது ஊதியக் குழுவின் மூலம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டது.


 அப்போது புதியதாக பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியத்தில் ரூ.3170 குறைவாக நிர்ணயிக்கப்பட்டது.


 அதாவது, 2009ம் ஆண்டு மே மாதம் 31ம் தேதிக்கு முன்பு நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.8370 என்றும் அந்த தேதிக்கு ஒருநாள் பிந்தைய நாளான 2009 ஜூன் 1ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5200 என்று அடிப்படை ஊதியத்தை நிர்ணயம் செய்தனர்.


இதன்படி வித்தியாசம் ரூ.3170 வருகிறது. இது எங்களுக்கு இழப்பு. இந்த முரண்பாடுகளை களைய பல்வேறு போராட்டங்களை நடத்தினோம்.  இதையடுத்து மீண்டும் மூன்றுகட்ட போராட்டங்களை நடத்துவது என்று முடிவு செய்தோம்.


இதன்படி சென்னையில் ஒரு நாள் உண்ணாவிரதம் நடத்தப்படுகிறது. இரண்டாம் கட்டமாக டிசம்பர் 4ம் தேதி முதல் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.


அரசு இந்த இரண்டு போராட்டங்களையும் கண்டுகொள்ளவில்லை என்றால் அரையாண்டுத் தேர்வு விடுமுறையில் மீண்டும் குடும்பத்துடன் தொடர் உண்ணாவிரதம் இருப்போம்.


அப்போது ரத்த தானம் செய்வது, உண்ணா விரதம் காரணமாக உடல்நிலை மோசமாகும் ஆசிரியர்களின் உடல் உறுப்புகளை தானம் செய்வது என்றும் முடிவு செய்துள்ளோம்.


எனவே, அரசு தலையிட்டு ஊதிய முரண்பாடுகளை களைய ஆணை பிறப்பிக்க வேண்டும்.

கஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் : பள்ளிக்கல்வித்துறைகஜா புயலால் பிளஸ்2 சான்றிதழை இழந்த மாணவர்களுக்கு தற்காலிக சான்றிதழ் வழங்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
நீட் தேர்வு உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு விண்ணப்பிக்க பிளஸ்2 சான்றிதழ் முக்கியம் என்பதால், புயலால் பாதித்த டெல்டா மாணவர்களின் நலன் கருதி பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பை வெளியிட்டுள்ளது

Employment Time Table - 26 November 2018

டிசம்பர் மாத நாட்காட்டி

5 th std Lesson Plan - November last week - All Subjects

School Morning Prayer Activities - 26.11..2018 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:திருக்குறள் : 90

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

உரை:
அனிச்சப்பூ மோந்தவுடன் வாடிவிடும்: அதுபோல் முகம் மலராமல் வேறு பட்டு நோக்கியவுடன் விருந்தினர் வாடி நிற்பார்.

பழமொழி:
 
Do not look at gift horse in the mouth

தானம் கொடுத்த மாட்டை பல் பிடித்துப் பார்க்காதே

பொன்மொழி:

பேச்சு ஒரு விதமாகவும், செயல் வேறுவிதமாகவும் நடப்போரின் உறவைக் கனவிலும் நினைக்கவே கூடாது.
- பாரதியார்

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.முதலாம் உலகப் போரில் உயிர்த் தியாகம் செய்த 70,000 இந்திய வீரர்களை கெளரவிக்க எழுப்பப்பட்டது?
இந்தியா கேட்

2.ஆரம்ப காலத்தில் கடம்ப மரங்கள் நிறந்த காடாக இருந்ததாகக் கருதப்பட்டதால் “கடம்பவனம்” என அழைக்கப்பட்ட நகரம் எது?
மதுரைநீதிக்கதை :


குளத்தில் இருந்த நட்சத்திரங்கள்


மருதாபுரியில் மூன்று சகோதரர்கள் வாழ்ந்துவந்தார்கள். அதில் மூத்தவரின் பெயர் தன்யன், இரண்டாவது சோசு, கடைசியில் பிறந்தவர் பென்கன். தன்யன் நல்லவர். கடின உழைப்பாளி. மற்ற இருவரும் சோம்பேறிகள். அவர்கள் எந்த வேலையும் செய்யாமல் எப்பொழுதும் உறங்கிக்கொண்டும், விளையாடிக்கொண்டும் பொழுதைப் போக்கினார்கள்.

ஒரு நாள் தன்யன் தன் தம்பிகளிடம், “பிரியமுள்ள தம்பிகளே, நாம் இப்படிக் கஷ்டப்பட்டு வாழ்ந்துகொண்டிருப்பது சரியில்லை. நம் குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும். அதனால் நான் ஒரு பயணம் செல்லப் போகிறேன். நல்வாய்ப்பு கிடைத்தால் உழைத்து, சம்பாதித்துக்கொண்டு வருவேன்” என்றார். ஆனால் அது தம்பிகளுக்குப் பிடிக்கவில்லை.

“ஏன் நீங்கள் மட்டும் செல்வந்தனாக வேண்டும்? நாங்களும் பணம் சம்பாதிக்க வேண்டாமா? அதனால் நாங்களும் பயணம் போகிறோம்” என்று சொன்னார்கள். தன்யன் பதில் எதுவும் சொல்லவில்லை.

சோசு பயணம் சென்றார். ஒரு கிராமத்தில் மெதுவாக நடந்துகொண்டிருந்தார். ஒரு வயல்காட்டை அடைந்தார். அப்போது பசியும் தாகமும் ஏற்பட்டது. அருகில் இருந்த ஒரு குடிசையின் வாசல் கதவைத் தட்டினார். உள்ளேயிருந்து ஒரு வயதான குரல், “வெளியில யாரு?“ என்று கேட்டது.

“நான் ஒரு பயணி. இன்னிக்கு ராத்திரி இங்கே தங்கிக்கலாமா?” என்று கேட்டார் சோசு.

“இருந்துட்டுப் போகலாம். ஆனால் என் குடிசையின் பின்புறம் ஒரு குளம் இருக்கிறது. அந்தக் குளத்திலுள்ள நட்சத்திரங்களை எல்லாம் சுத்தப்படுத்தித் தர வேண்டும். முடியுமா?”

அது எப்படி முடியும்? சோசு யோசித்தார். குளத்தில் தெரிவது வானத்தில் தெரிகிற நடத்திரங்களின் பிம்பம்தானே! அவற்றை எப்படிக் குளத்திலிருந்து சுத்தப்படுத்த முடியும்? தோல்வியை ஒப்புக்கொண்டு, ஊருக்குத் திரும்பி வந்துவிட்டார். தன்னுடைய சகோதரர்களிடம் வருத்தத்துடன், “எனக்கு எங்கேயும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை. அதனால் திரும்பி வந்துட்டேன்” என்றார்.

அப்போது தன்யனும் பென்கனும் வீட்டில் இருந்தார்கள். அடுத்த முறை பென்கனுடையதாக இருந்தது. பல இடங்களுக்கும் அலைந்து திரிந்து கடைசியில் அவர் அந்தப் பழைய குடிசைக்குப் போனார். சோசு கேட்டதைப்போல அவரும் அதே கேள்வியைக் கேட்டார். சோசுவிடம் சொன்ன காரியத்தையே கிழவி பென்கனிடமும் சொன்னார். சோசுவைப்போல எதுவும் செய்யாமல் பென்கனும் வீட்டுக்குத் திரும்பினார்.

எனக்கு எந்த இடத்திலும் நல்வாய்ப்பு கிடைக்கவில்லை” என்று வேதனையோடு சொன்னார்.

கடைசியில் நல்வாய்ப்பைத் தேடி தன்யன் புறப்பட்டார். பல மைல் தூரம் கடந்து அவரும் அந்தக் கிழவியின் குடிசைக்குப் போய்ச் சேர்ந்தார். அப்போதும் கிழவி அந்தப் பழைய வேலையைச் செய்யச் சொன்னார்.

ஒரு நிமிடம் யோசித்த தன்யன், கிழவியிடம் ஒரு வாளியைக் கேட்டு வாங்கினார். வாளி கையில் கிடைத்த உடனே குளத்தில் இறங்கி தண்ணீரை வெளியில் எடுத்து ஊற்ற ஆரம்பித்தார். குளத்தில் இருந்த தண்ணீர் முழுவதையும் வெளியில் எடுத்து ஊற்ற கடுமையாக உழைத்தார். வேலை முழுவதும் முடிந்த பிறகே ஓய்வெடுத்தார்.
பொழுது விடிவதற்கு முன்பு குடிசையிலிருந்து வெளியே வந்தார் கிழவி. தன்யன் மகிழ்ச்சியோடு குளத்தைக் காட்டினார். தண்ணீர் இல்லாததால் ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இல்லை.

“நான் குளத்தில் இருந்த நட்சத்திரங்களை எல்லாம் வெளியே எடுத்து விட்டேன். இனி ஒரு நட்சத்திரம் கூட குளத்தில் இருக்காது.“

கிழவிக்கு மகிழ்ச்சி. தன்யனைப் பாராட்டினார். “உனக்கு முன்னால் பலரும் இங்கே வந்திருக்கிறார்கள். இந்தப் போட்டியில் கலந்துகொள்ள முயற்சி கூடச் செய்யாமல் திரும்பிப் போயிருக்கிறார்கள். உழைப்பதற்கான உறுதியோ, சிந்திப்பதற்கான புத்தியோ இல்லாதவர்கள். நீதான் சிறந்த உழைப்பாளி” என்று புகழ்ந்த கிழவி, தன்யனை உற்று நோக்கினார்.

“இனிமேல் இந்த நிலம் முழுவதும் உனக்குதான். இங்கே நீ உன் விருப்பம்போல் விவசாயம் செய்து சம்பாதிக்கலாம்!”

அந்த மகிழ்ச்சியான செய்தியைத் தம்பிகளிடம் சொல்வதற்காக வீட்டுக்கு ஓடினார் தன்யன். “நான் என்னுடைய நல்வாய்ப்பைக் கண்டுபிடித்துவிட்டேன்.” அவர்கள் திகைத்து நின்றனர்.

“எங்கே?”

தம்பிகளிடம் நடந்ததை எல்லாம் சொன்னார். அவர்கள் ஆச்சரியப்பட்டார்கள். அன்று முதல் சோம்பலை மறந்து உழைத்துப் பிழைக்க வேண்டும் என்று முடிவு எடுத்தார்கள்.

இன்றைய செய்தி துளிகள் :

1.பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டிச.4 முதல் ஜாக்டோ ஜியோ அமைப்பு காலவரையற்ற வேலைநிறுத்தம்

2.கஜா புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் பாதிப்பு எதிர்பார்ப்பை விட அதிகம்: மத்தியக்குழு தலைவர் டேனியல் ரிச்சர்டு

3.ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்கு 3 மாதங்களுக்கு முன் ஊதிய உயர்வு : தமிழக அரசு உத்தரவு

4.பிளஸ்2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை உடனடியாக தலைமை ஆசிரியர்கள் தனியார் பள்ளி முதல்வர்கள் அனுப்ப வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

5.ஆஸ்திரேலியாவிற்கு எதிரான 3-வது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி

வரலாற்றில் இன்று 26.11.2018

நாளை (26.11.2018) (1 மாவட்ட + 1 கல்வி மாவட்ட ) பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

     * மன்னார்குடி கல்வி மாவட்டத்திற்கு நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிப்பு .புயல் சீரமைப்பு பணி நடப்பதால் மன்னார்குடி கல்வி மாவட்ட பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை .

     *நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.


கஜா புயலில் அதிகமாக பாதிக்கப்பட்ட மாவட்டமாக நாகை மாவட்டம் உள்ளது.மேலும் மாவட்டத்தில் மறு சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருவாதலும்,மக்கள் பள்ளிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.இதனால் அங்கு சீரமைப்பு பணிகள் தொடர்கிறது மின்சார உள்ளிட்ட தேவைகள் தற்போது வரை முழுமையாக சரிசெய்யப்படாத நிலையில் நாகை வருவாய் கோட்டத்திற்கு உட்பட்ட பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுவதாக ஆட்சியர் சுரேஷ் அறிவித்துள்ளார்


🤔'அறிவியல் அறிவோம்' Tv , computer-ல் இருந்து வரும் நீல ஒளி கண்களை எப்படி பாதிக்கிறது?

           🤔டி.வி., கணினியின் நீல ஒளி கண்களை எப்படி பாதிக்கிறது?

நாம் பெரும்பாலும் கணினியில் பணி செய்கிறோம், டி.வி.யில் பொழுது போக்குகிறோம். அல்லது ஸ்மார்ட்போனில் அதிக நேரம் செலவிடுகிறோம். எல்லாவிதமான எலக்ட்ரானிக் கருவிகளின் திரைக் காட்சிகளும் நீல நிற ஒளியை உமிழ்கின்றன. இருட்டில் இந்த நீல ஒளியை நேரடியாக பார்க்கலாம். நீண்ட நேரம் இந்த நீல ஒளியில் இருப்பது கண்களை எப்படி பாதிக்கிறது? என்று புதிய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் ஓகியோ மாகாணத்தில் உள்ள டோலிடோ பல்கலைக்கழக ஆராய்ச்சியளார்கள் இது பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டனர். ஆய்வின் பயனாக, எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளி கருவிழியை பாதிப்பதோடு, அதன் லென்ஸ் பகுதியை நிறங்களை எதிரொளிக்க முடியாமல் செய்துவிடுகிறது என்று கண்டுபிடித்துள்ளனர்.

பொதுவாக நமது விழித்திரையே ஒளியை உணரும் பகுதியாக உள்ளது. இதுவே காட்சி தகவல்களை மூளைக்கு கடத்தி காட்சியைக் காணவும் துணை செய்கிறது. விழித்திரை செல்கள் தொடர்ந்து ஒளி சமிக்ஞைகளை மூளைக்கு அனுப்பினால்தான் நம்மால் காட்சிகளை காண முடியும். விழித்திரை இல்லாமல் அதனுடன் தொடர்புடைய ஏற்பி செல்கள் இணைந்து செயல்படாது.

எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது ஏற்பி செல்களை அழியச் செய்வதோடு, சில வேதிப்பொருட்களை சுரந்து விழித்திரையை பாதிப்படையச் செய்கின்றன. இந்த ஏற்பி செல்கள் மறுபடியும் உற்பத்தி ஆகாத செல்கள் என்பதால் ஒருமுறை இழந்தால் பார்வையை இழந்ததற்கு சமம்தான்.

வழக்கமாக வயதாகும்போது இந்த ஏற்பி செல்கள் மெதுவாக அழிந்து கொண்டே வருவதுதான், முதியவர்களின் பார்வை குறைபாட்டிற்கு காரணமாகும். எலக்ட்ரானிக் கருவிகளின் நீல ஒளியானது வயது மூப்பு செயலைவிட வேகமாக ஏற்பி செல்களை அழித்துவிடுகிறது. ஆனால் இந்த பாதிப்பு உடனடியாக நிகழ்வதில்லை. தொடர்ந்து தொலைக்காட்சி மற்றும் கணினி பார்க்கும் பழக்கமுடையவர்களுக்கே விரைவில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

அதிர்ஷ்டவசமாக நீல ஒளியைப்போல வேறு நிறங்களான பச்சை, மஞ்சள், சிவப்பு போன்ற ஒளியலைகள் விழிசெல்களை இவ்வளவு தீவிரமாக பாதிக்கவில்லை என்றும் ஆய்வில் தெரிய வந்திருக்கிறது. இந்த ஆராய்ச்சி கணினி மற்றும் டி.வி. ஒளிகளை வைத்து மேற்கொள்ளப்பட்டதாகும். இருந்தாலும் செல்போன்களும், டேப்லட்களும் இதே வகையில் பாதிப்பை உருவாக்கும் என்றே அவர்கள் கருது கிறார்கள். அது பற்றிய ஆராய்ச்சியைத் தொடரவும் முடிவு செய்துள்ளனர்.

இந்த பாதிப்புகளில் இருந்து கண்களைக் காத்துக் கொள்ள ஆராய்ச்சியாளர்கள் 2 எளிய வழிகளையும் சொல்கிறார்கள். முதலாவது வழி குறைந்த வெளிச்சத்தில் எலக்ட்ரானிக் திரைகளை பார்க்காமல் இருப்பது. அதாவது பகல் வெளிச்சத்தில் இந்த கருவிகளை பார்ப்பதால் அவ்வளவு தீவிரமாக கண்கள் பாதிப்படையாது என்கிறார்கள். இரண்டாவதாக ‘வைட்டமின்-இ’ உருவாக்கும் ஒருவகை நோய் எதிர்பொருளான ஆல்பா டோகோபெரல் இந்த செல்கள் பாதிப்படைவதை கட்டுப்படுத்தும். எனவே ‘வைட்டமின்-இ’ நிறைந்த உணவுப்பொருட்களை சாப்பிட வேண்டும் என்றும் ஆராய்ச்சியாளர்கள் வலியுறுத்துகிறார்கள். இவ்விரு வழிகளில் நீலநிற ஒளியில் இருந்து கண்களை காப்பாற்றலாம்.

வரலாற்றில் இன்று 25.11.2018

பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் பேக் அதிக எடை கூடாது : மத்திய அரசு புது விதிமுறை

பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்து மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம்  கடுமையான விதிகளை வகுத்துள்ளது.அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் கூடுதல் வகுப்புகள் நடத்துவதால் மாணவர்கள் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகின்றனர். அதிக எடை கொண்ட ஸ்கூல் பேக் தினமும் கொண்டு செல்வதால் உடல் ரீதியாக பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். இது தொடர்பாக  நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்தனர். இதன் மீது மத்திய அரசு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதற்கிடையே  மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் கடந்த மாதம் 5ம் தேதி அனைத்து மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில் பள்ளிகளில் பாடம் நடத்துவது மற்றும் ஸ்கூல் பேக் எடை குறித்தும் கடுமையான விதிகளை வகுத்துள்ளது. மேலும் கல்வித்துறையின்கீழ் வரும் அனைத்து பள்ளிகளும் இந்த விதிகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டுமென தெரிவித்துள்ளது. அதன்படி  ஒன்றாம் வகுப்பு மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக வீட்டு பாடம் கொடுக்கக்கூடாது.

என்சிஆர்டி தெரிவித்துள்ளபடி மொழிப்பாடங்களை தவிர்த்து கூடுதல் வகுப்புகள், பாடங்களை மாணவர்களுக்கு ஒரு போதும் நடத்துதல் கூடாது. அதேபோன்று கூடுதலாக புத்தகங்கள், பொருட்களை கொண்டுவர குழந்தைகளை கட்டாயப்படுத்துதல் கூடாது. ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்கள் ஸ்கூல் பேக் எடை 1.5 கிலோவுக்கு மேல் இருத்தல் கூடாது. 3,5 வகுப்பு வரை 2 முதல் 3 கிலோ வரையிலும், ஆறு, ஏழாம் வகுப்புகளுக்கு 4 கிலோ, எட்டு, ஒன்பதாம் வகுப்புகளுக்கு 4.5 கிலோ, பத்தாம் வகுப்புக்கு 5 கிலோவுக்கு மேல் எடை இருத்தல் கூடாது. இந்த விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த விதிகளை ஏற்று லட்சத்தீவுகள் அரசு உடனடியாக அனைத்து பள்ளிகளுக்கு கடந்த 20ம் தேதி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது

Forest Post 2018 - Online Exam Time Table Published!


மாணவர்கள் புத்தகம் வாங்கிக்கிட்டும் என சேமித்த 9300 -ஐ !’ -கஜா புயல் நிவாரணத்துக்கு நிதி கொடுத்த 7ஆம் வகுப்பு மாணவன்

கஜா புயலால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக வேலூரைச் சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவன் ரூ.9,300 நிதி கொடுத்தான்.

வேலூர் காட்பாடியை அடுத்த மெட்டுக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சுரேஷ்குமார். இவரின் மனைவி பிரியா. இவர்களின் இளைய மகன் சுஷாந்த் (12). அங்குள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் 7-ம் வகுப்பு படிக்கிறார். இந்த மாணவன், நடிகர் ரஜினியின் தீவிர ரசிகன். டிசம்பர் 12-ம் தேதி ரஜினி பிறந்தநாள் என்பதால், அவருக்குப் பரிசாக பொன்னாடை போர்த்த மாணவன் சுஷாந்த் விரும்பியுள்ளார். 
இதற்காக, பெற்றோர் சிறுக சிறுக கொடுத்த பணத்தைச் செலவழிக்காமல் சுஷாந்த் சேர்த்து வந்துள்ளார். இந்த நிலையில், கஜா புயலால் பல மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை டி.வி., பத்திரிகைகளில் வெளியான செய்தி மூலம் அறிந்துள்ளார். குறிப்பாக, தன்னைப் போன்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதை அறிந்து சுஷாந்த் வருத்தப்பட்டுள்ளார்..

இதையடுத்து, தான் சேமித்து வைத்திருந்த 9300 ஐ மாவட்ட ஆட்சியர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கினார் 


அப்போது பேசிய மாணவன் சுஷாந்த், ‘‘கஜா புயலால் பாதிக்கப்பட்ட என்னைப் போன்ற மாணவர்களின் நிலைமையை உணர முடிகிறது.
அவர்கள் புத்தகம் வாங்கிக் கொள்ள உதவியாக நிதி கொடுத்துள்ளேன். 


TN SCHOOL Attendance App Download !! Direct Link


TNPSC - FULL BOOK DOWNLOAD

TNTET STUDY MATERIALS PDF DOWNLOAD

TNPSC TET > SOCIAL SCIENCE STUDY MATERIALS

TNPSC & TET SCIENCE STUDY MATERIALS

TNPSC & TET MATHS STUDY MATERIALS DOWNLOAD PDF

TNPSC & TET TAMIL STUDY MATERIALS PDF DOWNLOAD

NMMS - Online Model Test -NMMS Exam - Study Materials

வரலாற்றில் இன்று 23.11.2018