கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கல்வி தரத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள 10-வது மற்றும் பிளஸ்-2 மாணவ-மாணவிகளை வேறு பள்ளிக்கு மாற்றினால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

வேறு பள்ளிக்கு மாற்ற சான்றிதழ்

2016-17-ம் கல்வி ஆண்டில் நடைபெறவுள்ள 10 மற்றும் 12-ம் வகுப்பு அரசு பொதுத்தேர்வினை எழுதவுள்ள மாணவ-மாணவிகளின் பெயர் பட்டியல் தயார் செய்யும் பணி அனைத்து மாவட்டங்களிலும் ஏற்கனவே நடைபெற்று வருகிறது.

ஒரு சில மாவட்டங்களில் சில பள்ளிகள், கல்வி தரத்தில் பின்தங்கிய (பெயிலாகும் நிலையில் உள்ள) மாணவ- மாணவியர்களின் பள்ளி மாற்றுச்சான்றிதழை பெற்று வேறு பள்ளிக்கு செல்ல வற்புறுத்துவதாக புகார்கள் இவ்வியக்கத்தில் பெறப்பட்டு வருகின்றன.

நடவடிக்கை

எனவே இக்கல்வி ஆண்டு (2016-17) வருகை பதிவேட்டில் உள்ள அனைத்து 10 மற்றும் 12-ம் வகுப்பு மாணவ- மாணவிகளின் பெயர் கட்டாயம் அரசு தேர்வுத்துறை விதிமுறைகளின்படி அரசு தேர்வுகள் துறைக்கு அனுப்பும் பட்டியலில் இடம் பெற வேண்டும் எனவும், எவர் பெயரேனும் விடுபட்டால் பொறுப்பான அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளும் நிலை ஏற்படும் என திட்டவட்டமாக தெரிவிக்கப்படுகிறது.

இச்சுற்றறிக்கையின் நகலினை தமது மாவட்டத்தில் உள்ள அனைத்து வகை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும் அளித்து உரிய ஒப்புதலை பெற்று தமது அலுவலக கோப்பில் வைக்குமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறு ச.கண்ணப்பன் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

ரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு ரேஷன் கடைகளில், புகார் பதிவேட்டை, மக்கள் பார்வைக்கு வைக்காமல், ஊழியர்கள்அலட்சியமாக உள்ளனர். ரேஷன் கடைகளில், புகார் பதிவேடு என்ற நோட்டு உள்ளது. அதில்,

ரேஷன் புகார் பதிவேடு : ஊழியர்களுக்கு உத்தரவு

ரேஷன் கடைகளில், புகார் பதிவேட்டை, மக்கள் பார்வைக்கு வைக்காமல், ஊழியர்கள்அலட்சியமாக உள்ளனர். ரேஷன் கடைகளில், புகார் பதிவேடு என்ற நோட்டு உள்ளது. அதில், மக்கள், தங்களின் புகார்களை எழுதுவர். தற்போது, பல கடைகளில், புகார் பதிவேடு இல்லாததால், மக்கள் புகார் செய்ய முடியாமல், சிரமப்பட்டு வருகின்றனர். 

இதுகுறித்து, உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ரேஷன் கடைகளில், மக்கள் பார்வையில் படும்படி, ஊழியர்கள் புகார் பதிவேட்டை வைக்க வேண்டும்; அதிகாரிகள், ரேஷன் கடைகளுக்கு ஆய்வுக்கு செல்லும் போது, முதலில், அந்த பதிவேட்டை தான் பார்ப்பர். இதன் மூலம், மக்கள் தெரிவித்த புகார்களுக்கு, தீர்வு காணப்படும். சமீபகாலமாக ஊழியர்கள், பதிவேட்டை மறைப்பதாக, புகார்கள் வருகின்றன. எனவே, அவற்றை ஆய்வு செய்யும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்

தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல் தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தேர்தலில் போட்டியிடாமலேயே தமிழக முதல்வராகிறார் வி.கே.சசிகலா

மதுவிலக்கை அமல்படுத்தும் கோப்பில் முதல் கையெழுத்து எனவும் தகவல்

தேர்தலில் போட்டியிடாமலேயே ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் வி.கே.சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்க இருப்பதாக அதிமுக-வின் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பெருத்த எதிர்பார்ப்புக்கு இடை யில் அதிமுக பொதுக்குழு டிசம்பர் 29-ல் சென்னையில் கூடுகிறது. இந்தப் பொதுக்குழுவில் சசிகலா அதிமுக பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி விட்டது. இதனால், பொதுக் குழுவை சிறு சலசலப்புகூட இல் லாமல் வெற்றிகரமாக நடத்திமுடிப் பதற்கான அனைத்து வேலைகளும் சசிகலா தரப்பிலிருந்து கவனமாக செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஜெயலலிதா உயிருடன் இருந்தபோது அவ ருக்கு ஜோதிடம் கணித்துக் கொடுத்த ஜோதிடர் குழுவின் ஆலோசனைப்படி அரசியலின் அடுத்தடுத்த நகர்வுகளுக்கும் சசிகலா தயாராகி வருகிறார். இதுகுறித்து அதிமுகவின் நம்பத் தகுந்த வட்டாரத்திலிருந்து நம்மிடம் பேசியவர்கள் ‘‘29-ம் தேதி கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்படும் சசிகலா, புத்தாண்டில் முறைப்படி பொறுப்புகளை ஏற்றுக் கொள்கிறார். அநேகமாக ஜனவரி முதல் வாரத்தில் எளிய முறை யில் அவர் கட்சியின் பொதுச்செய லாளராக பதவி ஏற்றுக்கொள்வார்.

இதையடுத்து, தை பிறந்ததும் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்றுக் கொள்வதற்கான வேலைகள் முடுக்கிவிடப்படும். இதற்கேற்ற வகையில் அமைச்சர் கள், கட்சியின் நிர்வாகிகள் சசிகலா முதல்வர் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வெளிப்படையாக கோரிக்கை வைப்பார்கள். அதை ஏற்று, தை மாதத்தில் சசிகலா தமிழக முதல்வராக பொறுப்பேற்பார். அநேகமாக ஜனவரி 15-லிருந்து 31-ம் தேதிக்குள் அவர் தமிழக முதல்வராக பொறுப்பேற்பார்.

தற்போது ஆர்.கே.நகர் தொகுதி காலியாக இருப்பதால் அந்தத் தொகுதியில் சசிகலா போட்டியிடுவார் என்று பரவலான தகவல் உள்ளது. ஆனால், சென்னையில் போட்டியிடுவதை விட தென் தமிழகத்தில் போட்டி யிடுவதுதான் பாதுகாப்பாக இருக்கும் என்று உளவுத் துறை தகவல் தந்துள்ளது. இதனால், ஆர்.கே.நகர் தொகுதியை இரண்டாவது தேர்வாக வைத்திருக்கிறார் சசிகலா. அதற்கு பதிலாக ஆண்டிபட்டி, உசிலம்பட்டி, மதுரை மேற்கு இந்த மூன்று தொகுதிகளில் ஏதாவது ஒன்றில் சசிகலாவை நிறுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிரமலைக் கள்ளர் சமூகத்தைச் சேர்ந்த எட்டுப் பேருக்கு சீட் கொடுக்கப்பட்டது. இதில் பெரும் பாலானவர்கள் சசிகலாவின் சிபாரிசு. இதில் இரண்டு பேர் தற்போது அமைச்சர்களாகவும் இருக்கிறார்கள். இதனால் பிரமலைக் கள்ளர் சமூகத்தினர் சசிகலாவுக்கு ஆதரவாக இருக் கிறார்கள். அவருக்காக பரிசீலனை யில் உள்ள இந்த மூன்று தொகுதி களிலும் கணிசமாக இருப்பது இந்த சமூகம்தான். எனவே, இதில் ஏதாவதொரு தொகுதியில் சசிகலா போட்டியிடுவதற்கு ஆலோசனை தரப்பட்டுள்ளது’’ என்றனர்.

“சசிகலா தலைமைப் பொறுப் புக்கு வருவது பெண்கள் மத்தி யில் கடும் விமர்சனத்துக்கு உள் ளாகி இருக்கிறது. இந்த எதிர்ப்பை வீழ்த்தி, பெண்களின் நன்மதிப்பை பெறுவதற்காக, முதல்வர் பொறுப்பு ஏற்றுக் கொண்டதுமே மதுவிலக்கை அமல்படுத்தும் முக்கியக் கோப்பில் சசிகலா கையெழுத்திடுவார்’’ என்ற தகவலையும் அவர்கள் தெரிவித்தனர்

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !! இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு. தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம். சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?

தமிழக அரசுப்பதிவேட்டில் பெயர்மாற்றம் செய்துகொள்வதற்கான வழிமுறைகள் !!
இங்கே வீட்டில் ஒரு பெயர் வைத்திருப்பார்கள், விரும்புவது வேறு பெயராக இருக்கும். சிலர் பெற்றோர் வைத்த பெயரை மாற்ற நினைப்பதும் உண்டு.
தவிர, ஒருவர் தன் பெயரை நியூமராலஜிப்படியோ, ஜாதகப்படியோ அல்லது ஒரு நல்ல தமிழ்ப் பெயரையோ சூட்டிக்கொள்ளவும் விரும்பலாம்.
சரி, அதற்குரிய வழிமுறைகள் என்ன?
பெயர் மாற்றம்
செய்வதற்கான தகுதிகள்:
தமிழ்நாட்டில் வசிக்கும் எவரும் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பதாரர் 60 வயதுக்கு மேல் உள்ளவரானால் பதிவுபெற்ற மருத்துவரிடமிருந்து Life Certificate அசலாகப் பெற்று இணைக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் :
பிறப்பு / கல்விச் சான்றிதழ் நகல் இணைக்க வேண்டும்.
பிறப்பு / கல்விச் சான்றிதழ் இல்லாதவர்கள் வயதை நிரூபிக்க அரசு மருத்துவரிடம் உரிய சான்றிதழ் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.
சமீபத்தில் எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் புகைப்படத்தை, அதற்கென அளிக்கப்பட்டுள்ள இடத்தில் ஒட்டி, தமிழக / மத்திய அரசின் அ மற்றும் ஆ பிரிவு அலுவலர்கள் / சான்று உறுதி அலுவலரிடமிருந்து சான்றொப்பம் பெறப்பட வேண்டும்.
பிற மாநிலத்தில் பிறந்து, தமிழ்நாட்டில் வசிப்பவர்கள் - தமிழ்நாட்டில் வசிப்பதற்கு ஆதாரமாக உணவுப் பங்கீட்டு அட்டை/கடவுச் சீட்டு/
வாக்காளர் அடையாள அட்டை/ வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட இருப்பிடச் சான்றிதழ் இதில் ஏதேனும் ஒன்றின் சான்றிட்ட நகல் இணைக்க வேண்டும்.
தத்து எடுத்துக்கொண்டு, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் தத்துப்பத்திரத்
தின் சான்றிட்ட நகலை இணைக்க வேண்டும்.
மண முறிவு செய்து, அதனால் பெயர் மாற்றம் செய்வோர் நீதிமன்றத் தீர்ப்பை சான்றிட்ட நகலாக இணைக்க வேண்டும்.
கட்டணம்:
பொதுவாக பெயர் மாற்றக் கட்டணம் 9-2-2004 முதல் ரூ.415 மட்டும்.
தமிழில் பெயர் மாற்றக் கட்டணம் ரூ.50 மற்றும் அரசிதழ் & அஞ்சல் கட்டணம் ரூ.65.
செலுத்தும் முறை :
அலுவலகத்திற்கு நேரில் சென்று காலை 10.00 மணி முதல் 1.00 மணி வரை, பிற்பகல் 2.00 மணி முதல் 3.00 மணி வரை பணமாகச் செலுத்தலாம்.
அஞ்சல் மூலம் செலுத்த :
உதவி இயக்குநர் (வெளியீடுகள்),
எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம்,
சென்னை-600 002
என்ற பெயரில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி வரைவோலை மூலம்.
பண விடைத்தாள்/ அஞ்சல் ஆணைகள் ஏற்றுக் கொள்ளப்படாது.
விண்ணப்பிக்கும் முன்
கவனிக்க வேண்டியவை :
பெயர் மாற்றத்திற்கான காரணம் தெரிவிக்க வேண்டும்.
பழைய பெயர் ( ம ) புதிய பெயரில், என்கிற (Alias) என்று பிரசுரிக்க இயலாது.
பிரசுரம் செய்யப்பட்ட அரசிதழில் அச்சுப்பிழைகள் ஏதுமிருப்பின் அவற்றை ஆறு மாதங்களுக்குள் சரிசெய்து கொள்ள வேண்டும்.
அதற்குப்பின் பிழைகளை திருத்தம் செய்யக்கோரும் எவ்விதக் கோரிக்கையும் கண்டிப்பாக ஏற்கப்பட மாட்டாது.
பெயர் மாற்ற அறிவிக்கை தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு மட்டுமே.
அதற்கான உறுதிமொழியை உரிய இடத்தில் அளிக்க வேண்டும்.
விண்ணப்பத்துடன் இணைக்கும் அனைத்து நகல்களிலும் கெசட்டட் அலுவலரிடம் கையெழுத்துப் பெற்று இணைக்க வேண்டும்.
நிபந்தனைகள் :
விண்ணப்பதாரர் தவிர வேறு எவரும் எவ்வித தொடர்பும் கொள்ளக் கூடாது.
பணம் செலுத்துவது தொடர்பாக விண்ணப்பதாரருக்கு நினைவூட்டு ஏதும் அனுப்பப்பட மாட்டாது.
இத்துறையால் வழங்கப்பட்ட விண்ணப்பப் படிவம் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.
வெளியில் அச்சிட்ட அல்லது ஒளிப்பட நகல் படிவம் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
எப்படி பெறுவது ?
அரசிதழை நேரில் பெற விருப்பம் தெரிவிப்பவர்கள், அரசிதழ் பிரசுரிக்கப்பட்ட 5 நாட்களுக்குள் நேரில் வந்து அரசிதழை பெற்றுக்கொள்ள வேண்டும்.
தவறினால் அரசிதழ் தபால் மூலம் உரிய நபருக்கு அனுப்பப்படும்.
தபால் மூலம் அனுப்பப்படும் அரசிதழ்கள், தபால்துறை மூலம் திருப்பப்படும் பட்சத்தில், அரசிதழ்கள், உரிய நபர்களுக்கு மீண்டும் தபால் மூலம் அனுப்பப்படமாட்டாது.
இது போன்ற நிகழ்வுகளில், உரிய நபர்கள் 6 மாதங்களுக்குள் நேரில் வந்து, தபால்துறை மூலம் திருப்பப்பட்ட, அவர்களுக்கான அரசிதழ்களைப் பெற்றுச் செல்லலாம்.
விண்ணப்பத்தில் கையெழுத்திடும்முன்:
சுவீகாரம் தொடர்பாக பெயர் மாற்றம் செய்யும் பட்சத்தில், சுவீகாரம் எடுத்துள்ள தந்தை (ம) தாயார் மட்டுமே, பெயர் மாற்றம் செய்ய விண்ணப்பித்து, படிவத்தில் உரிய இடத்தில் கையொப்பம் இட வேண்டும்.
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரர் மட்டுமே கையொப்பம் இடவேண்டும்.
விண்ணப்பதாரர் 18 வயது பூர்த்தி அடையாதவராக (Minor) இருந்தால், தந்தை, தாயார் அல்லது பாதுகாப்பாளர் மட்டுமே கையொப்பம் இட வேண்டும்.
பாதுகாப்பாளராக இருப்பின் அவர் பாதுகாப்பாளராக நியமிக்கப்பட்டதற்கான ஆணை நகல் (Legal Guardianship Order) சான்றொப்பம் பெறப்பட்டு இணைக்கப்பட வேண்டும்.
கையொப்பத்தின்கீழ் உறவின் முறையை Capital Letter-இல்) தந்தை/தாய்/ பாதுகாப்பாளர் பெயருடன் குறிப்பிட வேண்டும்.
# மேலும் #விவரங்களுக்கு:
உதவி  இயக்குநர் (வெ), எழுதுபொருள் அச்சுத் துறை ஆணையரகம், சென்னை-2-இல் 044-2852 0038, 2854 4412 மற்றும் 2854 4413 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்
http://www.stationeryprinting.tn.gov.in/
servicetopublic.htm இத்தளத்திற்குச் சென்று மேலும் விவரங்கள் தெரிந்துகொள்ளலாம்.
http://
www.stationeryprinting.tn.gov.in/
forms.htm
விண்ணப்பப் படிவங்களை தரவிறக்கிக் கொள்ளலாம்.
தத்து எடுக்கும் பிள்ளைகளுக்கான பெயர் மாற்றம் செய்வோர் கவனத்திற்கு:
சுவீகாரத் தந்தை/தாய் இருப்பின் அவர்கள் சுவீகாரம் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் மற்றும் குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.
சுவீகாரம் கொடுக்கப்பட்ட மகன்/மகளின் சுவீகாரத் தந்தை/ தாய் இருவரும் காலம் தவறி இருப்பின் இதை அரசு வெளியீட்டில் பொது அறிவிக்கையாக மட்டுமே வெளியிட இயலும்.
இதற்கான ஆவணங்கள் பதிவு செய்யப்பட்ட சுவீகாரப் பத்திர நகலில் சான்றொப்பம் பெறப்பட வேண்டும், பிறப்புச் சான்றிதழ் நகல், குடும்ப அட்டை நகல் இணைக்கப்பட வேண்டும்.

IIT.,NIT., நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம் ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம்

IIT., NIT.,நுழைவு தேர்வு ஜன.2 வரை அவகாசம்

ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்ற உயர் கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் படிப்பு, நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, ஒரு வாரமே அவகாசம் உள்ளது.
ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - தஞ்சையிலுள்ள இந்திய உணவு பதப்படுத்தும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், சென்னையில் உள்ள காலணிகள் தயாரிப்பு தொழில் நுட்ப கல்லுாரி, காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள, இந்திய தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்ப கல்வி நிறுவனம், திருச்சி என்.ஐ.டி., போன்றவற்றில் சேர, நுழைவு தேர்வில்தேர்ச்சி பெற வேண்டும்.பிளஸ் 2 முடித்த மாணவர்கள், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., மெயின் நுழைவு தேர்வுக்கு, டிச., 1 முதல், ஆன்லைனில் விண்ணப்பம் பெறப்படுகிறது.

 தற்போது, பிளஸ் 2 படிக்கும் மாணவர்கள், இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம். ஜன., 2ல், விண்ணப்ப பதிவு முடிகிறது.இந்த ஆண்டு, ஜே.இ.இ., மெயின் தேர்வுக்கு, ஆதார் எண் கட்டாயம். மேலும், பிளஸ் 2 தேர்வில், குறைந்த பட்சம், 75 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். தேர்வுக்கு பின், இந்த மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே, தரவரிசை பட்டியல் வெளியிடப்படும்.

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி? டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்

டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்வது எப்படி?

டிஜிட்டல் பண பரிவர்த்தனை பாதுகாப்பும் வழிமுறைகளும்

கடந்த நவம்பர் 8 அன்று மத்திய அரசு மேற்கொண்ட பணசீர்திருத்த நடவடிக்கைகளுக்கு பின்பு, டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை அதிக அளவில் மேற்கொண்டு வருகிறோம். வருங்காலத்தில் பணமில்லா பரிவர்த்தனைகள் அதிக அளவிலோ அல்லது முழுமையாகவோ மேற்கொளள வேண்டிய நிலை வரும். எனவே அது தொடர்பான விபரங்களை தெரிந்து கொண்டு முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் நமது பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்க்கொள்ள முடியும்.


    இரண்டு வங்கி கணக்குகள் தொடங்குங்கள். பிரதான வங்கி கணக்கில் முழு பணத்தினை வைத்திருங்கள். அதற்கான டெபிட் அட்டையை எங்கும்  பயன்படுத்த வேண்டாம். அடுத்த வங்கி  கணக்கிற்கு அவ்வப்போது  தேவையான பணத்தினை மாற்றம் செய்து அதற்கான அட்டையை எங்கும் பயன்படுத்துங்கள். இதன் மூலம் உங்கள் பிரதான கணக்கு பணம் பத்திரமாக இருக்கும்.


    முடிந்தவரை கிரெடிட் கார்டு பயன்படுத்துங்கள். உங்கள் கிரெடிட் கார்டுகள் தவறாக  பயன் படுத்தும்போது வங்கி அப்பணத்தினை பயன்படுததப்பட்ட இடத்திலிருந்து திரும்பபெறும் பொறுப்பை எடுத்துக் கொள்கிறது. டெபிட் கார்டு பயன்பாட்டின்போது பொறுப்பு நம்மிடமே உள்ளது. தற்காலத்தில் ரூ 25,000 வங்கி டெபாசிட் கிரெடிட் கார்டு வாங்க போதுமானது என்பது குறிப்பிடத்தக்கத


நீங்கள் பயன்படுத]தும் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகள் சிப் பொறுத்தபட்டவை என்றால் மிக பாதுகாப்பானது. தகவல் திருட்டு தடுக்கப்படும். உங்களிடம் இல்லா விட்டால் வங்கியை அணுகவும்.


தற்போது கையடக்க POS ( Point of sale ) கருவிகள் பயன்பாடு அதிகம் என்றால் அவற்றை உங்கள் கண்முன் மட்டுமே பயன்படுத்துங்கள.; மறைவான இடங்களுக்கு அவற்றை கொண்டு செல்ல அனுமதிக்காதீர்கள்.


PIN நம்பரை மறைத்து பழகுங்கள். ATM,POS   என எங்கு உங்கள் கார்டுகளை பயன்படுத்தினாலும் ரகசிய எண்ணை கைகளால் மறைத்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட கால இடைவெளிகளில]  PIN எண்ணை மாற்றுங்கள்.


  உங்கள் வங்கி பரிவர்த்தத்தனைகளை மேற்கொள்ள தனியாக ஒருசெல்போனை பயன்படுத்துங்கள். அதில் தேவையற்ற APP என எதையும் டவுன்லோட் செய்ய வேண்டாம். APP மற்றம் சமூக ஊடகங்களை வேறு செல்போனில் பயன்படுத்தவும்.


  வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் உங்கள் வீட்டு மற்றும் அலுவலக கணிணிகளில் தரமான, நேரடியாக நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் APP மட்டுமே பயன்படுத்தவும். மலிவான மற்றும் போலியான APP மற்றும் Software கள் விபரத் திருட்டுக்கு வழி வகுக்கும்.


கணிணியின் தரத்தை அவ்வப்போது  update செய்து  வாருங்கள்.


Amazon, Flip cart offer only for three days என வரும் செய்திகளை திறக்க வேண்டாம். உங்களுக்கு பொருள் வாங்க வேண்டும் என்றhல் அந்த தளத்திற்கு சென்று பாருங்கள். Link open செய்ய வேண்டாம்.

பணபரிவர்த்தனைகளை எக்காரணம் கொண்டும் உங்கள் செல்போன் மற்றும் கணிணி தவிர வேறு எந்த சாதனத்திலும் மேற்கொள்ள வேண்டாம்.

  வங்கி பண பரிவர்த்தனைகளுக்கான பாஸ்வேர்டை  3 மாதங்களுக்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும். வங்கிக்கான பாஸ்வேர்ட்டை வேறு எங்கும்  ( பேஸ்புக். ஈமெயில்) என எங்கும் பயன்படுத்த வேண்டாம். மேலும் அது பெயர் மற்றும் எண் ஆகியவற்றின் கலவையாக இருக்கட்டும்.

சினிமா தியேட்டர், மால், ஷாப்பிங் காம்ப்ளெக்ஸ் என எங்கு கேட்டாலும் உங்கள் செல்போன் மற்றும் ஈ மெயில் முகவரிகளை கொடுக்க வேண்டாம். கட்டாயம் கொடுக்க நேரிட்டால் அதற்காக தனி எண், தனி முகவரி பயன்படுத்தவும்,

டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மேற்கொள்ள மேலே கூறப்பட்டுள்ள கருத்துக்கள் உங்களுக்கு உதவும்.

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி? மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்.. ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை மீட்பது எப்படி?

மெமரி கார்டில் அழிந்து போன புகைப்படங்களை பத்திரமாக மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை பற்றி இங்கு பார்ப்போம்..

ஸ்மார்ட்போன் அல்லது கேமரா மூலம் நாம் எடுக்கும் புகைப்படங்களை பத்திரமாக சேமித்து வைக்க அனைவரும் பயன்படுத்தும் சாதனமாக மெமரி கார்டு இருக்கிறது. மிகச்சிறிய பட்டை நமது புகைப்படங்கள் மட்டுமில்லாமல் வீடியோ, பாடல்கள் உள்ளிட்ட பல்வேறு டிஜிட்டல் தரவுகளை சேமித்து வைத்துக் கொள்ள உதவுகிறது.

நம் நினைவுகளை பல நாட்கள் கழித்து மீண்டும் திரும்ப பார்க்க புகைப்படங்கள் வழி செய்கின்றன. இது போல் நாம் சேமித்து வைத்திருக்கும் புகைப்படங்கள் மெமரி கார்டில் இருந்து அழிந்து போனால் அதனை மீட்க என்ன செய்ய வேண்டும் என்பதை இங்கு பார்ப்போம்..

முதலில் செய்யக் கூடாதவை:

மெமரி கார்டில் சேமித்து வைத்திருந்த புகைப்படங்கள் அழிந்து போனதை உறுதி செய்ததும், மெமரி கார்டினை எதுவும் செய்யாதீர்கள். புகைப்படங்களை புதிதாக சேமித்து வைப்பது, மெமரி கார்டினை ஸ்கேன் செய்வது போன்றவற்றை செய்ய கூடாது.

ரிக்கவரி மென்பொருள் தேவை:

அடுத்து ஆன்லைனில் கிடைக்கும் 'ரிக்கவரி சூட்', அதாவது அழிந்து போனவற்றை மீட்க பிரத்தியேகமாக கிடைக்கும் மென்பொருளினை டவுன்லோடு செய்ய வேண்டும். விண்டோஸ் இயங்குதளம் கொண்ட கணினியாக இருப்பின் ரெக்குவா மென்பொருளையும், மேக் இயங்குதளம் கொண்டிருக்கும் பட்சத்தில் போட்டோரெக் மென்பொருளையும் பயன்படுத்தலாம்.

இவை இரண்டும் இலவசமாக கிடைக்கும் மென்பொருள்கள் ஆகும். இவை இல்லாமல் பல்வேறு மென்பொருள்களும் சந்தையில் கிடைக்கின்றன.

இன்ஸ்டால்:

நீங்கள் கணினியில் டவுன்லோடு செய்த மென்பொருளினை இன்ஸ்டால் செய்ய வேண்டும். இதன் பின் புகைப்படங்களை மீட்க துவங்க முடியும்.

ரெக்குவா மென்பொருள்:

விண்டோஸ் இயங்குதளத்தில் ரெக்குவா இன்ஸ்டால் செய்யப்பட்டிருந்தால் அதனை ஸ்டார்ட் செய்ய வேண்டும். பின் நீங்கள் தொலைத்த தரவு எது என்பதை தேர்வு செய்ய வேண்டும்.

ரெக்குவா மென்பொருளில் அனைத்து தரவுகள், புகைப்படங்கள், இசை, கோப்புகள், வீடியோ, சுறுக்கப்பட்டவை மற்றும் மின்னஞ்சல் உள்ளிட்டவற்றை மீட்க முடியும்.

பின் நீங்கள் பார்க்க வேண்டிய இடத்தை ரெக்குவா தெரிவிக்கும் வரை மெனு ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். அடுத்து கார்டு ரீடரை கணினியில் இணைத்து, உங்கள் கேமரா புகைப்படங்களை பதிவு செய்யும் ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும்.
ஒருவேலை வேறு ஃபைல்களை மீட்க முயற்சித்து அவை மீட்கப்படவில்லை எனில் ரெக்குவாவின் "Switch to advanced mode" என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த அனைத்து தரவுகளையும் மீட்க முடியும்.

அழிந்து போன அனைத்து புகைப்படங்களையும் தேர்வு செய்து பின் ரிக்கவர் என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். இங்கு ரிக்கவர் செய்யப்பட்ட ஃபைல்களை எங்கு சேமிக்க வேண்டும் என்பதையும் குறிப்பிட வேண்டும்.

போட்டோரெக் மென்பொருள்:

போட்டோரெக் மென்பொருளை ஸ்டார்ட் செய்து, பாஸ்வேர்டு கேட்கப்படும் பட்சத்தில் பதிவு செய்து தொடர வேண்டும். பின் நீங்கள் மீட்க வேண்டிய ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும். அடுத்து என்டர் பட்டனை கிளிக் செய்து FAT16/32 தேர்வு செய்து, மீண்டும் என்டர் பட்டனை கிளிக் செய்து அடுத்த மெனுவிற்கு செல்ல வேண்டும். இனி அடுத்த ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும்.

அடுத்த ஆப்ஷனில் நீங்கள் பல்வேறு ஃபைல்களை கையாள வேண்டியிருக்கும். ஒரு வேலை மெமரி கார்டு கரப்ட் ஆகி இருந்தால் "Whole" தேர்வு செய்ய வேண்டும். கரப்ட் ஆகாத பட்சத்தில் "Free" ஆப்ஷனை கிளிக் செய்யலாம். மீண்டும் என்டர் பட்டனை கிளிக் செய்து மீட்கப்பட்ட புகைப்படங்களை சேமிக்கும் ஃபோல்டரை தேர்வு செய்ய வேண்டும். இதனை உறுதி செய்ய C பட்டனை கிளிக் செய்து, ரிக்கவரியை துவங்கலாம்.

இனி ஸ்கேன் செய்து மீட்கப்பட்ட ஃபைல்களை பார்க்க வேண்டும். இங்கு நீங்கள் தொலைத்த புகைப்படங்களை பார்க்க முடியும். முந்தைய மெனுவில் புகைப்படங்களை மட்டும் ரிக்கவர் செய்யும் ஆப்ஷனை தேர்வு செய்திருந்தால் ஃபைல்களின் பெயர் JPEG என்ற ஃபார்மேட்டில் காணப்படும்.

ஒருவேலை வேறு ஃபைல் ஃபார்மேட் தேர்வு செய்யப்பட்டிருக்கும் பட்சத்தில் மெனுவின் "FileOpts" கமாண்ட் பயன்படுத்தி சில ஃபைல்களை தேடலாம். சில ஃபைல்கள் .tiff என நிறைவுற்றிருப்பதை பார்க்க முடியும்.

இனி மீட்கப்பட்ட ஃபைல்களை பாதுகாப்பாக பேக்கப் செய்து கொள்ளுங்கள்.