Title of the document

காமராஜர் கவிதைகள் | Kamarajar Kavithaigal in Tamil





பள்ளி மாணவர்களுக்காக - காமராஜர் முழு திரைப்படம் - KAMARAJAR FULL HD MOVIE DOWNLOAD Link



ஏழைகளின் கல்விக் கனவு
விடியும் முன்னே பலிக்கிறது
கற்கண்டாய் இனிக்கிறது - உன்
கல்வித்திட்டம்.
ஆரவாரம் கொள்கிறது
மதிய உணவுத் திட்டம்.

மக்களுக்கு மகுடம் சுட்டி
படிக்காத மேதையாக
பண்பாளன் நீ ஆட்சி செலுத்த
எளிமையும் நேர்மையும்
எட்டிப் பிடித்து
உன் தோளில் தொற்றிக் கொண்டது.

உன் இரு தோளிலும்
உயிர்த் தோழனாயாய் அமர
நேர்மைக்கும் எளிமைக்கும்
வாய்ப்பு கொடுத்தாய்!

இறக்கும் வரை
இறங்க வில்லை - அவைகள்
உன் தோளை விட்டு!

உனது எளிமையும் நேர்மையும்
ஆங்காங்கே சிதறிக் கிடக்கிறது
பள்ளி கல்லூரி பொது இடங்களில்
உருவச் சிலையாய்!

உன் சிந்தனையில் உதித்து
உயிர் பெற்று
கம்பீரமாய் காட்சி தருகிறது
பல தொழிற்சாலைகளும்
பல அணைக்கட்டுக்களும்!

நீ செய்த சாதனைகளால்
உன் உருவச்சிலை
உயிர் பெற்று நிற்கிறது
பட்டி தொட்டி எல்லாம்!

மண்ணில் பிறந்து
மனதை விட்டு நீங்காமல்
சரித்திரம் படைத்த கர்ம வீரரே !
கிங் மேக்கரே!
ஏழைகளுக்கு உதவுவதில் வள்ளலே!
இந்தியாவின் மற்றுமொரு அண்ணலே!
பிறந்த நாள் வாழ்த்துக்கள்!


யார் தலைவன்    


கல்விக்கு வழிகண்டு சோறிட்டு வளர்த்தாய் நீ !
அதில் முட்டை அடிக்க கற்றுகொண்டார் இவர் !
அணைகள்பல கட்டி தாகம் தீர்த்தாய் நீ !
அதில் மின்சார திருடி காசு சேர்க்கிறான் இவன் !


காமராஜர்


குமாரசாமி சிவகாமியின் மைந்தனே
"கர்மவீரறாய்" காலத்திலும் நிற்பவரே !
படிப்பின் அவசியம் உணர்ந்த "படிக்காத மேதையே" !
"பாரத ரத்னா விருது"ம் தேடி வந்ததே உன்னை தேடி !

படிக்கும் பிள்ளைகளின் பசியை உணர்ந்தவரே !
இலவச உணவை வழங்கி இன்புற்றவரே !
எளிமைக்கும் நேர்மைக்கும்
எடுத்துக்காட்டாய் விளங்கியவரே !

பதவி சுகம் இல்லாத
பண்பட்ட மானிடனே !
"பெருந்தலைவர்" எனும்பட்டம்
போற்ற வேறு யாருமுண்டோ ?'

மூன்று முறை தமிழக -
"முதலமைச்சராய்" இருந்தும் கூட ;
முழுமையான வீடும் இல்லை!
வசதியாக வாழவுமில்லை!
வாழ்ந்த காலம் எல்லாமே -
வாடகை வீட்டில்தானே !

"கருப்பு காந்தியாக"
காதர் உடுத்தி வாழ்ந்து வந்தாய் !
"கல்வியின் நாயகனாக"
காலமெல்லாம் வாழுகின்றாய் !


நானிலம் போற்றும் நல்லவர்


கல்வி கண் திறந்த கர்ம வீரர் நீ..!
தமிழகத்தின் வளர்ச்சிக்கு வித்திட்ட
தன்னலமில்லா தலைவன் நீ..!
பட்டம் வாங்காமல் உலகை
பகுத்தறிந்த பட்டதாரி நீ..!


கல்வி அறிஞன் காமாட்சி ராஜன்


கனன்றது உன்னுள் பெரும் நெருப்பு
கல்வியின் பால் நீ கொண்ட நல்ஈர்ப்பு
சுழன்றாய் கதிராய் முதல்வராய் பதவி ஏற்று
சூரராய் நெஞ்சுரம் நெடுமைக் கொண்டு
சூழலை கல்வியால் மாற்றம் கண்டு
சுழியமாய் இருந்த வாழ்வை ஏற்றம் செய்து
சூத்திரத்தின் விதையாய் முளைத்தாய் அன்று
நேத்திரங்கள் கல்வியால் நிறைந்தது இன்று
கீரிவிட்ட பாதையினிலே செழித்த விருட்சம்
கீழை மேலை தேசங்களை கூவி அழைக்கும்
வாழையாய் எண்ணி கல்வி மரத்தை நட்டாய் அன்று
வானளவு சந்தன மரமாய் மணம் வீசுது உயர்ந்து
உணவோடு உன்னத கல்வியை ஊட்டி வளர்த்தாய்
உணர்வோடு உன்னைத் தொழுது வாழ்கிறோம் இன்று
     - நன்னாடன்.

 

காமராஜர் கவிதைகள் | kamarajar kavithai in tamil


இனி ஒருமுறை தான் ஆட்சிக்கு வந்தாய்! ஆனால் பல ஆட்சிகள் பேசும் அளவிற்கு நல்லது செய்தாய்!

எளிமைக்கு நீ ஒரு எடுத்துக்காட்டு! நம் தமிழ்நாட்டு மக்கள் தான் உன் உயிர் காற்றும்!

உழைப்பால் உயர்ந்த வல்லர் இவரே! ஊருக்கு உழைத்த உத்தமர் இவரே! நாட்டிற்காக வாழ்ந்த நல்லவர் இவரே!

தன்னை மறந்து பிறரை நினைத்து தன் வீட்டையும் மறந்து நாட்டுக்காக வாழ்ந்தவர்!

பல அணைகள் கட்டி நீரைத் தேக்கியவர்! அந்நீரைக் கொண்டு விவசாயம் காத்தவர்! விவசாயம் செழிக்க மின்சாரமும் கொடுத்தவர்!

பயிர்கள் விளைந்தால் உயிர்கள் வாழும் என்பதால் பசுமை செழிக்க, பல திட்டங்கள் செய்தவர்.

விவசாயத்திற்கு வித்திட்ட இவர் பெயர் நிலைத்து நிற்கும் தமிழகம் வாழும் வரை.

ஆற்றினிலே இமயமலை! அன்பினிலே மேருமலை! எத்தனையோ ஆட்கள் உண்டு ஆனாலும் இவரை போல யாருண்டு!

தனக்கென வாழாததால் பெருந்தலைவர் என்றானார்… தர்மத்தின் தலைவனாக, தரணியிலே வாழ்ந்து வந்தவர்…

இவர் வாழ்ந்த காலமே காவியமாய்! இவர் வாழ்ந்த வருடங்கள் பொற்காலமாய்!

பல பேரறிவு கொண்ட மாணவர்கள் மனதில் நம்பிக்கை நாயகனாய் இவர் முகம் மட்டுமே.

அருண் தலைவர் இவர்! பெருந்தலைவர் இவர்! பொதுநலத் தொண்டில், முழுவதுமாய் நின்றவர் இவர்!

பொருள் தேடலில் இவர் இறங்கவில்லை செல்வ வளத்தை இவர் சேர்க்கவில்லை அதனால்தானோ இவர் இன்றளவும் போற்றப்படுகிறார்.

பகட்டான வாழ்க்கையை மறக்க வைத்தவர் இவரே! பண்பாக வாழ்ந்து காட்டி பல இதயங்களை தொட்ட வரும் இவரே!

அழகு தமிழிலே இவரது பேச்சு… சமத்துவம் என்பதே இவரது மூச்சு…

ஏழை எளிய மக்கள் வாழ்வில் ஏற்றம் காண சேவை செய்த பெருந் தலைவர் இவரே! கல்வி சிறந்தால் நாடு செழிக்கும் என்பதால் கல்லாமை என்பதை இல்லாமல் செய்தவர் இவரே!

மனிதாபிமானம் கொண்ட தென்னாட்டு காந்தி இவர்… கதராடை அணிந்த கல்வியின் தந்தை இவர்…

தர்ம வீரரும் இவரே! கர்ம வீரரும் இவரே! தமிழகத்தில் சுதந்திர தியாகிகளில் இவரும் ஒருவரே!

வறுமையில் சிறுவன் கூட வேலைக்கு கால்பதித்த நேரத்தில், வயிற்றுப் பசியையும் போக்கி அறிவு பசியையும் போக்கியவர் இவரே.

பிறர் நலம் வாழ தன் நலம் துறந்தவர்.

கடமையைக் கண் என கொண்டவர்! சுதந்திரத்திற்கு முன் பிறந்தே நம் நாட்டிற்கு உழைத்தவர்!

அனைவரையும் மதிப்பவர்! தமிழகத்தின் எதிர்காலத்தை நினைப்பவர்!

தன்னை போன்றே பிறரை கருதுபவர்! தான் தான் பெரிது என்று கர்வம் கொள்ளாதவர்!

இளமையிலிருந்தே எளிமையாக வாழ்ந்தவர் இதுதான் தன் பாதை என்று நமக்காகவே வாழ்ந்தவர்.

தனிப்பட்ட தன் வெற்றி தோல்விகளை நினையாமல் நாட்டின் வெற்றியை மட்டும் நினைத்த ஒரே தலைவர் இவரே.

மக்கள் வளர்ச்சியை மனதில் கொண்டவர் மணவாழ்க்கை கூட கொள்ளாமல் நமக்காகவே வாழ்ந்தவர்.

காமராஜரின் தாரக மந்திரமாய் தாயகம் இருந்ததனால், தாயகத்தில் இன்று தாரக மந்திரமாய் காமராஜர் இருக்கின்றார்.

தன்னாட்டு சிங்கத்தமிழன் இவர்! நேசம் போற்றும் வரலாற்று தலைவர் இவர்!

இலட்சிய வாழ்க்கை வாழ்ந்தவர் இவரே! இலட்சங்களை விரும்பாத தலைவரும் இவரே!

கொடுத்த டாக்டர் பட்டத்தையும் மறுத்தவர் இவரே! கொண்ட கொள்கைக்காக உழைத்தவரும் இவரே!

இவரது உன்னத உடையும் பெண்மையே! அதுபோல இவரது உள்ளமும் வெண்மையை!

நேர்மையே இவரது அடையாளம் எளிமையே இவரது அவதாரம். 



இதையும் படிங்க :

 

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post