Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

குறைந்த விலை பேட்டரி ஸ்கூட்டர் ரூ.19,990/-.!!!

குறைந்த விலை பேட்டரி ஸ்கூட்டர் ரூ.19,990/-.!!!


ஹீரோ மோட்டார் குழுமத்தின் அங்க மான ஹீரோ எலெக்ட்ரிக் நிறுவனம் குறைந்த விலையிலான பேட்டரி ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. `பிளாஷ்’ என்ற பெயரிலான இந்த ஸ்கூட்டர் கடந்த வாரம் டெல்லியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் விலை ரூ. 19,990 ஆகும். பேட்டரியில் இயங்கும் ஸ்கூட்டர்களில் இதுவரை வெளிவந்த மாடல்களில் இதுதான் குறைந்த விலையிலானதாகும்.

சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் வந்துள்ள இந்த ஸ்கூட்டரை ஓட்டுவதற்கு லைசென்ஸ் தேவையில்லை.இந்த ஸ்கூட்டருக்கு ஆர்டிஓ பதிவு எண் பெற வேண்டிய அவசியமும் கிடையாது. இது அதிகபட்சம் 40 கி.மீ. வேகத்தில் செல்லும் என்பதால் இதற்கு ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட கட்டுப்பாடுகள் கிடையாது.

இது 250 வாட்ஸ் மோட்டாரைக் கொண்டது. இதை ஒரு முறை சார்ஜ் செய்தால் 65 கி.மீ. தூரம் ஓடும். இதனால் இது நகர்ப்புற போக்குவரத்துக்கு மிகவும் ஏற்றதாகும். இதில் உள்ள 48 வோல்ட்/20ஏஹெச் பேட்டரி சார்ஜ் செய்வதற்கு 6 மணி நேரம் முதல் 8 மணி நேரம் வரையாகும்.

இதில் எடை குறைந்த 16 அங்குல அலாய் சக்கரங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இதன் ஒட்டுமொத்த எடையே 87 கிலோவாகும். முன்புறத்தில் டெலஸ்கோப்பிக் சஸ்பென்ஷனும், பின்பகுதியில் இருபுறமும் ஷாக் அப்சார்பர்களும் உள்ளன. இரு சக்கரமும் டிரம் பிரேக் கொண்டது.

அவசர கால ஷார்ட் சர்கியூட் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. இந்த ஸ்கூட்டருக்கு இரண்டு ஆண்டு உத்தரவாதத்தை இந்நிறுவனம் அளிக்கிறது. பர்கண்டி மற்றும் சில்வர் ஆகிய இரு கண்கவர் வண்ணங்களில் இது விற்பனைக்கு வந்துள்ளது.

வழக்கமான ஸ்கூட்டர்களை விட இது சற்று உயரம் குறைவானது. இதனால் முதல் முறையாக ஸ்கூட்டர் ஓட்ட விரும் பும் அதேசமயம் வேகமாகச் செல்வதை விரும்பாதவர்களுக்கு மிகவும் ஏற்றது. பேட்டரி வாகனம் என்றாலே விலை அதிகம் என்ற நிலையை முற்றிலுமாக மாற்றியுள்ளது பிளாஷ்

posted from Bloggeroid

CPS வல்லுனர்கள் குழு தலைவர் இராஜினாமா !! தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.

CPS வல்லுனர்கள் குழு தலைவர் இராஜினாமா !!

தமிழக முதல்வரின் தனிப்பிரிவு சிறப்புச் செயலாளர் சாந்தா ஷீலா நாயர் தனது பதவியை இன்று ராஜினாமா செய்தார்.
தனிப்பட்ட காரணங்களுக்காக பதவி விலகுவதாக அவர் தெரிவித்துள்ளார்.
முந்தைய அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல் அமைச்சராக இருந்தபோது திட்டக்குழுவின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டு, ஐந்து 
ஆண்டு காலம் பொறுப்பு வகித்தார்.
மீண்டும் அதிமுக ஆட்சிக்கு வந்து ஜெயலலிதா முதல்வரானதும் முதல்வரின் தனிப்பிரிவில் சிறப்பு செயலாளர் என்ற பதவி புதிதாக உருவாக்கப்பட்டு சாந்தா ஷீலா நாயர் அமர்த்தப்பட்டார்.
சொந்த காரணங்களுக்காக பதவி விலகுவதாக சாந்தா ஷீலா நாயர் கடிதம்

posted from Bloggeroid

2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !! தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


2,804 கிராமப்புற சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு !!

தமிழகத்தில் 2,804 தாற்காலிக கிராமப்புற சுகாதார செவியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழக அரசின் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின்(எம்ஆர்பி) மூலம் நேரடி நியமனத்தில் கிராமப்புற செவிலியர்கள் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.


இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், தங்களது விண்ணப்பத்தை www.mrb.tn.gov.in என்ற இணையதளத்தில் மட்டும், வரும் 24 -ஆம் தேதிக்குள் (பிப்.24) சமர்ப்பிக்க வேண்டும். நேரடி விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

வங்கிகளில் விண்ணப்ப கட்டணத்தை செலுத்துவதற்கு பிப்ரவரி 28 கடைசி நாளாகும்.

விண்ணப்பதாரர்கள் பள்ளிக் கல்வி மற்றும் தொழிற்கல்வியில் பெற்ற மதிப்பெண்ணின் அடிப்படையில் தேர்வு நடைபெறும். தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பின்பு, பொது சுகாதாரத் துறை இயக்குநர் காலியாக உள்ள இடங்களில் அவர்களை நியமனங்களைச் செய்வார். கூடுதல் விவரங்களை www.mrb.tn.gov.in இணையதளத்தில் பெறலாம்

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விளக்கம் !!

*டிரக்கியோஸ்டோமி செய்தபின் ஜெயலலிதாவுக்கு சுயநினைவு திரும்பியது: சிகிச்சை அளித்த மருத்துவர்கள் விளக்கம்.*

*ஜெயலலிதாவுக்கு ரத்தத்தில் இருந்த நோய் கிருமி பல்வேறு உறுப்புகளுக்கு பரவியது: ரிச்சர்ட் பீலே.*

*மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட போது ஜெயலலிதாவிற்கு தீவிர தொற்று இருந்தது.  தொற்று பாக்டீரியாக்கள் அவரது ரத்தத்திலும் கண்டுபிடிக்கப்பட்டன.*

*தேர்தல் குறித்த ஆவணத்தை ஜெயலலிதா படித்து பார்த்தார்: மருத்துவர் பாலாஜி.*

*கையில் வீக்கம் இருந்ததால் கையெழுத்து போட ஜெயலலிதா சிரமப்பட்டார்: மருத்துவர் பாலாஜி.*

*கைரேகை வைத்தபோது ஜெயலலிதா பேசினார் மருத்துவர் பாலாஜி*

ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள் !! 10 லட்சம் வருமானம் வரை வருமான வரி விலக்கு பெற முடியுமா? முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.

ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள் !!

10 லட்சம் வருமானம் வரை வருமான வரி விலக்கு பெற முடியுமா? முடியும் என்கின்றனர் நிபுணர்கள்.
 எவ்வளவு சம்பளம் வாங்கினாலும் செலவுகளும் கூடத்தானே செய்கிறது. இது தான் நடுத்தர, உயர் நடுத்தர மக்களின் கவலை.
ஆனால்,  10 லட்சம் ரூபாய் வருமானம் வரை வருமான வரி
 கட்டுவதில் இருந்து தப்ப முடியும் என்று அவர்கள் கூறுகின்றனர். 

 இப்ேபாது ஆன்லைனில் ஏகப்பட்ட நிறுவனங்கள் வருமானவரி அறிக்கை தாக்கல் செய்ய உதவுகின்றன. அவர்களுக்கு ஆன்லைனில் தாக்கல் செய்வது சுலபம். அனுபவம் வாய்ந்த சிலர் மட்டும் தான் முடிந்தவரை வரி கட்டுவதில் இருந்து விலக்கு பெற்று தருவர்.  இதோ ரூ.10 லட்சம் வரை வருமானம் பெறுவோருக்கு விலக்கு பெறும் சில யோசனைகள்:

 * அடிப்படை சம்பளம் ரூ.2.5 லட்சம் வரை வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது.
 * வருமான வரி சட்டம் பிரிவு 80சியின் கீழ் ரூ.1.5 லட்சம் வரை விலக்கு பெறலாம். பிபிஎப், வரி சேமிக்கும் மியூச்சுவல் பண்ட், பிக்சட் டெபாசிட்டில் முதலீடு செய்தால் விலக்கு பெறலாம்.
 * இந்த பிரிவின் கீழ், வீட்டுக்கடன் பிரின்சிபல் பங்கிலும் குறிப்பிட்ட சதவீதம் வரை விலக்கு பெறுவதற்கு பயன்படுத்தலாம்.
 * வீட்டுக்கடன் செலுத்துவதில் ஓராண்டு செலுத்திய வட்டியில் இருந்து 2 லட்சம் வரை விலக்கு பெறலாம்.
 * சொந்த வீடு இல்லாமல் வாடகை வீட்டில் இருந்தால், உங்களுக்கு வீட்டுவாடகை படி தருவதில் இருந்து கழித்து ெகாள்ள வழி உண்டு.
 * வருமான வரி சட்டம் பிரிவு 80 சிசிடி யின் கீழ் தேசிய பென்ஷன் திட்டத்தில் 50 ஆயிரம் ரூபாய் வரை முதலீடு செய்து வரிவிலக்கு பெறலாம்.
 * இதுதவிர, கம்பெனி தரும் பென்ஷன் பங்கில் அடிப்படை சம்பளத்தில் 10 சதவீதம் வரை வரி விலக்கு பெற முடியும்.
 * மருத்துவ காப்பீடு வைத்திருந்தால் இன்னும் விலக்கு பெற முடியும். இல்லாவிட்டால் காப்பீடு செய்வது நல்லது. இதில் பிரிமியத்தில் 25,000 ரூபாய் வரை விலக்கு பெற பயன்படுத்தலாம்.
 * உங்கள் வருமானத்தில் சில படிகள் கூட வரி விலக்கு பெறத்தக்கவை.  அவற்றை கண்டுபிடித்து சேர்த்து வருமானவரி விலக்கு பெறலாம்.
 * மாதத்துக்கு 15,000 ரூபாய் வரை மருத்துவ அலவன்ஸ், 2,200 ரூபாய் வரை உணவு கூப்பன் ஆகியவற்றையும் வருமான வரி விலக்குக்கு கழிக்கலாம்.
 * கம்பெனியில் இருந்து பரிசாக ஆண்டுக்கு ரூ.5,000 வரி விலக்குக்கு கழிக்கலாம்.
 * போக்குவரத்து அலவன்ஸ் என்று மாதத்துக்கு 1600 ரூபாய், அதாவது ஆண்டுக்கு 19,200 வரை விலக்கு பெற முடியும்.
 * குழந்தைகள் கல்விக்கு மாதம் அலவன்ஸ் ரூ.100 விலக்குக்கு பயன்படுத்தலாம். அதுபோல, விடுதி செலவு என்று மாதம் 300 வரை கழித்து கொள்ளலாம்.
 * உங்கள் வருமான வரிக்கு உட்பட்ட வருமானம் 5 லட்சம் என்றால், அதில் மொத்த வரியில் இருந்தும் ரூ.5000 வரி விலக்கு பெறலாம்

தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்..

தேர்தல் பணியில் இருந்து ஆசிரியர்களுக்கு விலக்கு மேல் சபையில் மசோதா தாக்கல்..

தேர்தல் பணியில் ஆசிரியர்களை ஈடுபடுத்துவதை கைவிடக் கோரும் தனிநபர் மசோதாவை டெல்லி மேல்-சபையில் தி.மு.க. எம்.பி. திருச்சி சிவா கொண்டு வந்தார்.

 அது குறித்து மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் பதில் அளிக்கையில் கூறிய தாவது:- 

கற்பிக்கும் பணியில் மட்டுமே ஆசிரியர்களை ஈடுபடுத்த வேண்டும் என்ற கருத்தில் நான் உடன்படுகிறேன். தேர்தல் பணியில் யாரை ஈடுபடுத்த வேண்டும் என்பது தேர்தல் கமிஷனின் அதிகாரவரம்புக்கு உட்பட்டது. எனவே, திருச்சி சிவாவின் உணர்வுகள், தேர்தல் கமிஷனுக்கு தெரிவிக்கப்படும். அனைத்து கட்சி கூட்டம் எப்போது நடந்தாலும், இதை வலியுறுத்தி பேச திருச்சி சிவாவுக்கு வாய்ப்பு அளிக்கப்படும்.
ஆகவே, அவர் இந்த மசோதாவை வாபஸ் பெற வேண்டும் என கூறினார்

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழி கலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு ஆங்கில வழி பள்ளி ஆசிரியர்களுக்கு, பிறமொழி கலப்பின்றி, எளிய முறையில் கற்பித்தல் தொடர்பான, பயிற்சிகள் விரைவில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

கோவை மாவட்டத்தில், 645 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில், ஆங்கில வழி கல்வி துவங்கப்பட்டு, வகுப்புகள் எடுக்கப்படுகின்றன. ஒரு வகுப்புக்கு, குறைந்தபட்சம் 15 மாணவர்களாவது இருந்தால் மட்டுமே, அடுத்தடுத்த கல்வியாண்டுகளில், புதிய மாணவர் சேர்க்கை நடத்த முடியும். இதன் காரணமாக, தமிழ் வழியில் படிக்கும் மாணவர்களும், ஆங்கில வழி வகுப்புகளில் சேர்க்கப்படுவதாக, கூறப்படுகிறது.

மேலும், ஆங்கில வழி வகுப்புகள் கையாள, பிரத்யேகமாக ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. எளிய மொழி நடையில், பாடம் நடத்துவதற்கான, கற்பித்தல் பயிற்சிகளும், ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், ஆங்கில வழியில் படிக்கும் மாணவர்களுக்கும், தமிழ் மொழியிலே, பாடத்திட்ட கருத்துகள் விளக்கப்படுவதாக கூறப்படுகிறது. 'ஆல்பாஸ்' நடைமுறை இருப்பதால், அடுத்தடுத்த வகுப்புகளுக்கு, தேர்ச்சி பெறுவதில், சிக்கல் இல்லை.

இதன் காரணமாக, மேல்நிலை வகுப்புகளில், ஆங்கில மொழி புலமையின்றி, அரசுப்பள்ளி மாணவர்கள், பின் தங்கும் நிலை தொடர்கிறது. இச்சிக்கலுக்கு தீர்வு காண, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி சார்பில், ஆசிரியர்களுக்கு கற்பித்தல் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதுகுறித்து, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி முதல்வர் திருஞானசம்பந்தம் கூறியதாவது:

கோவை மாவட்டத்தில், ஆங்கில வழி பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு, பாடத்திட்ட கருத்துகளை, எளிமையாக சொல்லிக் கொடுப்பது தொடர்பாக, கற்பித்தல் பயிற்சிகள் அளிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக, மாவட்ட ஆசிரியர் கல்வி பயிற்சி பள்ளி பேராசிரியர்களை கொண்டு, கற்பித்தல் செயலாக்க திட்டம் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. இதில், உச்சரிப்பு, மொழி நடை, மாணவர்களுக்கு எளிய முறையில் புரிய வைத்தல், கற்பித்தல் கருவிகளை பயன்படுத்தும் முறை குறித்து விளக்கப்படும். இது சார்ந்து, தொடக்க கல்வித்துறை ஒப்புதலுடன், இம்மாத இறுதிக்குள், பயிற்சி வகுப்புகள் துவங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்

தமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் தமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார்.

தமிழகப் பாடத் திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும்

தமிழகப் பள்ளிகளில் மாநிலப் பாடத்திட்டம் விரைவில் மாற்றியமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் கூறினார். தமிழ்நாடு தனியார் பள்ளிகள் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் தமிழக பள்ளிக் கல்வியின் எதிர்காலம் குறித்த கல்வியாளர்கள் மாநாடு சென்னையில் சனிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் அமைச்சர் பேசியது: தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டு பள்ளிப் படிப்பை முடித்து உயர்கல்விக்குச் செல்லும் மாணவர்கள் 45 சதவீதமாக உள்ளனர். தற்போது அது 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. தமிழக அரசு கல்வி வாய்ப்புக்கு முக்கியத்துவம் அளிப்பது போன்று, தரமான கல்விக்கும் முக்கியத்துவம் அளித்து வருகிறது. இதன் காரணமாக கற்றல் சார்ந்த பல்வேறு மதிப்பீடுகளுக்கு தமிழக அரசு தானாகவே தன்னை உட்படுத்தி வருகிறது.

தனியார் பள்ளிகள் அரசோடு கைகோர்த்து பள்ளிக் கல்வித் தரத்தை உயர்த்த வேண்டும். ஒவ்வாரு தனியார் பள்ளியும் தனக்கு அருகில் உள்ள அரசுப் பள்ளியைத் தத்தெடுத்து அதன் கட்டமைப்பு, தொழில்நுட்ப வசதிகளை மேம்படுத்த முயற்சிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் அரசுக்கு எதிரிகள் இல்லை என்றாலும், தனியார் பள்ளிகளை ஒழுங்குபடுத்துவதும் அரசின் கடமையாகும். கல்வி மாநிலப் பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்குச் சென்றுவிட்டது. கல்வி மாநிலப் பட்டியலில் இடம்பெற வேண்டும் என்பதுதான் தமிழக அரசின் நிலைப்பாடு ஆகும்.

பொதுப்பட்டியலில் இருக்கும் பட்சத்தில் கல்விக்காக மத்திய அரசு ஒதுக்கும் நிதி, திட்டங்கள் 100 சதவீதம் மாநில அரசின் மூலமாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்தின் பாடத்திட்டங்கள் குறித்து பல்வேறு கருத்துகள் நிலவுகின்றன. தமிழக பாடத்திட்டங்கள் விரைவில் மாற்றியமைக்கப்படும். பாடத்திட்டங்கள் நவீன காலத்துக்கு ஏற்ப அவ்வப்போது புதுப்பிக்கவும், மாற்றியமைக்கப்படவும் வேண்டும். சிறந்த கல்வி, அறிவியல், விளையாட்டு, கலாசாரம் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம், கல்வியில் நவீன தொழில்நுட்பங்களைப் புகுத்துதல், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் வகையிலான கல்வி ஆகியவற்றை முக்கியக் இலக்காகக் கொண்டு பள்ளிக் கல்வித் துறை செயல்பட்டு வருகிறது என்றார் அவர்.