QR Code மூலம் மாணவர் சேர்க்கை - திருப்புட்குழி அரசுப் பள்ளிக்கு அமைச்சர் அன்பில் மகேஸ் அவர்கள் பாராட்டு
இது குறித்து காஞ்சிபுரம் மாவட்டம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி திருப்புட்குழி அரசு பள்ளியின் Facebook பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில் :
#ஆன்லைன்_மாணவர்_சேர்க்கை
பெற்றோர்கள் விடுமுறையில் தாங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே தங்கள் குழந்தைகளை நம் பள்ளியில் சேர்க்க எளிய வடிவில் google form இல் சேர்க்கை விண்ணப்பத்தை தயார் செய்து அதை qr code ஆக மாற்றி பள்ளியில் வெளியிலும் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வைத்துள்ளோம். பெற்றோர்கள் அதை ஸ்கேன் செய்து கேட்கப்பட்டுள்ள விவரங்களை பூர்த்தி செய்து தங்கள் குழந்தைகளை நம் பள்ளியில் சேர்க்கலாம்.
மீண்டும் பள்ளி திறக்கும் போது நேரிடையாக வந்து மற்ற ஆவணங்களை கொடுக்கலாம்.
என்றும் மாணவர் நலனில்- ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.
என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இது குறித்து காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் எழிலரசன் தனது Facebook பக்கத்தில் பகிர்ந்துள்ள செய்தியில் :
கற்றல் இடைவெளியை குறைத்து, இடைநிற்றலை அறவே நிறுத்துகின்ற பணிகளை மேற்கொண்டு, பள்ளிக்கல்வி மேம்பாட்டில் பல புதுமைகளை செய்து, தொடர்ந்து தமிழ்நாட்டின் கல்வித்துறை, இந்திய துணைக்கண்டத்தின் முதன்மை மாநிலம் என்பதை விட, அயல்நாடுகளோடு ஒப்பிடும் அளவிற்கு சிறந்து விளங்குகிறது என்பதற்கு பல காரணிகள் உண்டு!
அதன் ஒரு பகுதியாக, எங்கள் காஞ்சிபுரத்தின் திருப்புட்குழி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம். , நமது அரசு வகுப்பறை கட்டிடம், ஸ்மார்ட் #Dravidian Model கிளாஸ், கலைத் திருவிழா, எண்ணும் எழுத்தும் போன்ற திட்டங்களை அறிமுகம் செய்திருப்பதில், மிக நேர்த்தியாக செயல்படுத்திய பள்ளிகளில் ஒன்றாக உள்ளது. இப்பள்ளி, இவ்வாண்டு மாணவர் சேர்க்கைக்காக வழக்கமான விளம்பரங்களையோ, படிவங்களையோ இல்லாமல், QR கோட் என்ற முறையை அறிமுகம் செய்து, மீண்டும் மீண்டும் புதுமையான அணுகுமுறைகளை கையாண்டு, மாணவர்களை வளர்ச்சி பாதைக்கு அறிவியல் பார்வையில் அழைத்து செல்லும் இந்த முயற்சிக்கு, நமது மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் #Anbil Mahesh Poiyamozhi அவர்கள் பாராட்டு தெரிவித்துள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது.
பாராட்டி ஊக்கமளித்த மாண்புமிகு அமைச்சருக்கு நன்றியும், புதுமைகளை நிகழ்த்தி வருகிற திருப்புட்குழி தொடக்கப்பள்ளியின் வளர்ச்சிக்கான பணியில் முக்கிய பங்காற்றும், ஒரு நல்ல ஆசிரியருக்கான விருதும் அதற்கான பரிசுத்தொகையும் தமிழ்நாடு அரசு வழங்கியதிலும், அதை “என் பள்ளியின் வளர்ச்சிக்காகவே செலவழிப்பேன்” என்று மனமுவந்த முன்முயற்சியுடன் செயல்படும் ஆசிரியர் செல்வகுமார் மற்றும் அனைத்து ஆசிரியர் பெருமக்கள், துணை நிற்கும் பெற்றோர்கள், கல்வியாளர்கள் அனைவருக்கும் என் அன்பான வாழ்த்துகளும், இதயம் நிறைந்த பாராட்டுகளும்!
"அரசுப் பள்ளி என்பது வறுமையின் அடையாளம் அல்ல; அது பெருமையின் அடையாளம்!"
என்று அவர் குறிப்பிட்டு உள்ளார்..
#thiruppukuzhi #kanchipuram #kanchipuramassembly #kanchipuramassemblyconstituency
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment