EMIS மீம்ஸ் : After finishing Emis work.!!!

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி (DEO's)அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்!!

ALL DEOs NAME LIST AND PHONE NUMBER ALL OVER TAMILNADU

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி (DEO's)அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்!!

Click here to download

ALL DEOs NAME LIST AND PHONE NUMBER ALL OVER TAMILNADU

தமிழகம் முழுவதும் உள்ள மாவட்டக் கல்வி (DEO's)அலுவலர்களின் பெயர், தொலைபேசி எண் மற்றும் வாட்ஸ் அப் எண்!!

அரசு உத்தரவிட்டும் மாணவனை பள்ளியில் சேர்த்துக் கொள்ளாத தனியார் பள்ளி!

சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை சேர்மன் மாணிக்கவாசகம் அரசு உதவிபெறும் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்து, பல்வேறு போட்டிகளில் 40க்கும் மேற்பட்ட சான்றிதழ்களையும் 25க்கும் மேற்பட்ட பரிசுகளையும் பெற்றுள்ள மாணவர் கிஷோர்குமார் படிப்பிலும் சிறந்து விளங்கியதால் ஆதிதிராவிட நலத்துறை மூலம் திறன் அறிதல் தேர்வில் தேர்வு செய்யப்பட்டு, அரசு நிதியுதவி மூலம் விருப்பப்பட்ட தனியார் உண்டு உறைவிட  பள்ளியில் படிக்க அரசாணை 112-ன் படி  உத்தரவிட்ட நிலையில், சம்பந்தப்பட்ட தனியார் பள்ளி சேர்க்க மறுப்பதால் அம்மாணவனின்  எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது.  

 இதுபற்றி கிஷோர்குமாரின் தந்தை மாணிக்கம் நம்மிடம் பேசுகையில், ``தேவகோட்டை மாணிக்கவாசகம் பள்ளி தலைமையாசிரியர், மற்றும் ஆசிரியர்களின் ஊக்குவிப்பால் சின்ன வயதில் இருந்தே என் மகன் அனைத்து விதமான போட்டிகளில் கலந்துகொண்டு பரிசு வாங்கி வருகிறார். ரொம்ப புத்திசாலி என்று எல்லோரும் பாராட்டினார்கள். இதுபோன்ற மாணவர்களைத் தேர்வு செய்து சிறப்பாக செயல்படும் தனியார் பள்ளியில் 12-ம் வகுப்பு வரை தங்கி படிப்பதற்கான செலவுகளை அரசு செய்கிறது. அந்த முறையில் சிவகங்கை மாவட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட 11 மாணவர்களில் கிஷோரும் அடக்கம். இவர் தங்கிப் படிக்க மதுரை அழகர் கோயில் அருகில் இருக்கும் மகாத்மா ரெசிடென்சியல் பள்ளி சிறப்பாக இருக்கும் என்று கேள்விப்பட்டு சிவகங்கை கலெக்டர் அப்பள்ளியில் சேர்ப்பதற்கு உத்தரவிட்டு அந்த ஆணையை எங்களிடம் கொடுத்தார். கடந்த 29-ம் தேதி சேர்க்க வந்தபோது, சேர்க்க முடியாது என்று எங்களை அவமானப்படுத்தி வெளியில் அனுப்பி வைத்துவிட்டார்கள். தற்போது சிவகங்கை மாவட்ட அதிகாரிகளிடம் முறையிட்டுள்ளேன். என் மகனின் படிப்பு வீணாகிடுமோ என்று பயமாக உள்ளது'' என்றார்.

இது குறித்து மதுரை சி.இ.ஓ.விடம் கேட்டபோது, ``உடனே நான் விசாரிக்கிறேன். அந்த மாணவரையும், பெற்றோரையும் வந்து பார்க்கச் சொல்லுங்கள்'' என்று நம்பிக்கை அளிக்கும் விதமாகப் பேசினார்.

அரசு உத்தரவின் கீழ் மாணவர் கிஷோரை சேர்க்க மறுக்கும் மதுரை அழகர்கோயில் மகாத்மா உண்டு உறைவிடப் பள்ளியைப் பற்றி சிவகங்கை மாவட்ட நிர்வாகம், கல்வித்துறைக்குப் புகார் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

Flash News : TRB - ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை - ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதிமுறை!

ஆசிரியர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்பதாரர்கள் தேர் வெழுத வாழ்நாள் முழுவதும் தடை விதிக் கும் வகையில் ஆசிரியர் தேர்வு வாரியம் புதிய விதி முறையை கொண்டு வந்துள்ளது.

அதோடு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் நபர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடைவிதிக்கும் வகை யிலும் நடவடிக்கையை கடுமையாக்க முடிவுசெய்துள்ளது.

அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், அரசு பொறியியல் கல்லூரி மற்றும் கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், அரசு ஆசிரி யர் பயிற்சி விரிவுரையாளர், உதவி தொடக்கக்கல்வி அலுவலர்உள் ளிட்ட பணியிடங்களை நிரப்ப ஆசிரி யர் தேர்வு வாரியம் போட்டித் தேர்வு களை நடத்திவருகிறது.

மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வை யும் அவ்வாரியமே நடத்துகிறது. இந்த நிலையில், கடந்த ஆண்டு நடத்தப்பட்ட அரசு பாலி டெக்னிக் விரிவுரையாளர் தேர்விலும், தகுதித்தேர் விலும் மதிப் பெண்ணில் திருத்தம் செய்து முறைகேடு நடந்திருப்பதை ஆசி ரியர் தேர்வு வாரியமே ஆய்வு மூலம் கண்டுபிடித்தது. விடைத் தாள்களை ஸ்கேன் செய்து மதிப் பெண் பதிவுசெய்யப்படும் நிலை யில் இந்த முறைகேடுகள் நடைபெற்றிருப் பது கண்டறியப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, பாலிடெக்னிக் விரிவுரையா ளர் தேர்வை ரத்துசெய்த தேர்வு வாரியம், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித்தேர்வில் மதிப் பெண் முறைகேட்டில் ஈடுபட்ட 200 தேர்வர்களின் தேர்ச்சியை ரத்து செய்துள்ளது. அவர்கள் மீது காவல் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்பட இருக்கிறது.

நம்பகத்தன்மை

டிஎன்பிஎஸ்சி-யுடன் ஒப்பிடும் போது மிகக்குறைவான அலுவலர் களையும், பணியாளர்களையும் வைத்துக் கொண்டு ஆசிரியர் தேர்வு வாரியம் மிக வேகமாக தேர்வுகளை நடத்தி முடிவுகளை விரைவாக வெளியிடுகிறது என்று தேர்வர்கள் பாராட்டவே செய் கிறார்கள். எனினும், அண்மைக் காலமாக நடந்துள்ள தவறுகள், அதன் காரணமாக தேர்வு ரத்து நடவடிக்கை, மதிப்பெண்ணை திருத்தியவர்கள் தகுதிநீக்கம் ஆகியவை தேர்வு வாரியத்தின் மீது லேசான சந்தேகப் பார் வையை உண்டாக்கியுள்ளது. தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதும் உடனடி யாக நடவடிக்கை எடுக்கப்படுவதால் தேர்வு வாரியத்தின் நம்பகத்தன்மையை தேர்வர்களால் உதாசீனப்படுத்த இயல வில்லை.இந்த நிலையில், தேர்வுகளில் தவறு செய்யும் விண்ணப்ப தாரர்களை தண்டிக்கும் வகையில் விதிமுறை களை ஆசிரியர் தேர்வு வாரியம் கடுமையாக்கியுள்ளது.

 அதன்படி, ஆசிரி யர் தகுதித்தேர்வு உட்பட ஆசிரியர் நியமனங்களுக்கான தேர்வு களில் தவறு செய்யும் விண்ணப் பதார்ரகள் வாழ்நாள் முழுவதும் தேர்வெழுத தடை விதிக்கும் வகை யில் புதிய விதிமுறை கொண்டுவரப் பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ஆசிரியர் தேர்வு வாரியத்தின் கூட்டத்தில் இதற்கான முக்கிய முடிவு எடுக்கப்பட்டதாக வாரியத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கறுப்பு பட்டியலில்..

புதிய விதிமுறையின்படி, கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த தகுதித் தேர்வில் மதிப்பெண்ணை திருத்தி முறைகேட்டில் ஈடுபட்ட 200 விண்ணப்ப தாரர்கள் மீது முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் வாழ்நாள் முழுவதும் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் எந்த தேர்வையும் எழுத முடியாது. அவர்களின் பெயர், முகவரி, பிறந்த நாள், கல்வித்தகுதி, இடஒதுக் கீட்டுப்பிரிவு உட்பட அனைத்து விவரங்களும் கறுப்பு பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.எனவே, அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தும் தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க முயற்சி செய் தால் அவர்களின் விண்ணப்பம் தானாகவே நிராகரிக்கப்படும்.

தவறு செய்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நடவடிக்கைக்கு உள்ளாகும் விண்ணப் பதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வெழுத தடை விதிக்கும் வகையிலும் நடவடிக்கை எடுக்கப்பட இருப்பதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!


அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பணி பதிவேட்டில் பிறந்த தேதியில் தவறு கண்டறியப்பட்டால் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது.

மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்கள் மற்றும் அரசு பணிகளுக்கு, சரியான பிறந்ததேதி ஆவணம் சமர்ப்பிக்கப்பட வேண்டும். குறிப்பாக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் என்று எந்த அரசுத்துறையிலும் பணியில் சேரும் அலுவலர்கள், ஊழியர்கள் அனைவரும் தங்கள் கல்விச்சான்றிதழில் கூறப்பட்ட பிறந்த தேதியும், ஆதார், வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் ஒன்றாக இருக்க வேண்டும்.

குறிப்பாக 10ம் வகுப்பு சான்றிதழில் கூறப்பட்ட பிறந்த தேதியே இறுதியான ஆதாரமாக கொள்ளப்படுகிறது. இந்நிலையில், தமிழக அரசு கல்வித்துறை சார்ந்த அலுவலகங்கள், கல்வி நிறுவனங்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது. அதில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், தங்களின் பிறந்த தேதியில் தவறு உள்ளதாக திருத்தம் கோரி விண்ணப்பித்தால், அதற்கான ஆதார ஆவணமாக சம்பந்தப்பட்டவர்களின் 10ம் வகுப்பு சான்றிதழை ஆய்வு செய்ய வேண்டும். இந்த சான்றிதழில் 10ம் வகுப்பு முடிக்க, 1977ம் ஆண்டு வரை, 15 வயதும், 1978 முதல் 14 வயதும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே, 10ம் வகுப்பு சான்றிதழ் அடிப்படையில் மட்டுமே, வயதில் திருத்தம் செய்ய வேண்டும். வயது மாற்றம் செய்யப்பட வேண்டும் என்றால் சம்பந்தப்பட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீது, துறைரீதியான நடவடிக்கை எடுப்பதுடன், விசாரணை முடியும் வரை தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட வேண்டும். இறுதி விசாரணைக்கு பின் வயதில் தவறு இருந்தால், பணிநீக்கம் செய்யப்படுவதுடன், அவருக்கான அனைத்து அரசு பலன்களும், ஓய்வூதிய பலன்களும் ரத்து செய்யப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது

ஆசிரியர் குறித்து போலீஸ் விசாரணை வழக்கு இருந்தால் விருது கிடைக்காது


நல்லாசிரியர் விருது பெறும் ஆசிரியர்களுக்கு, போலீஸ் விசாரணை சான்றிதழ் கட்டாயம் என, தேர்வு கமிட்டிக்கு, அதிகாரிகள் அறிவுறுத்திஉள்ளனர்.
நாடு முழுவதும், ஆசிரியர் தின விழா வரும், 5ம் தேதி கொண்டாடப்படுகிறது.இந்த நாளில், மத்திய அரசின் சார்பில், ஆசிரியர்களுக்கு தேசிய விருதும், மாநில அரசுகளின் சார்பில், நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட உள்ளது.இந்தாண்டு, மாநிலம் முழுவதும், 369 பேருக்கு, நல்லாசிரியர் விருது வழங்கப்பட உள்ளது.

இந்த விருதை பெற, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.தமிழக அரசின், கனவு ஆசிரியர் விருது பெற்றவர்களுக்கு, நல்லாசிரியர் விருது வழங்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், பள்ளி நேரத்தில், 'கட்' அடித்து விட்டு, வகுப்பு நடத்தாதவர்கள்; பள்ளி கல்வி நிர்வாகத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் உள்ளிட்ட, பல்வேறு பிரிவினரின் மனுக்கள், தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், நல்லாசிரியர் விருதுக்கானோரை தேர்வு செய்யும் இறுதிகட்ட பணியில், மாநில கமிட்டி ஈடுபட்டுள்ளது. பள்ளி கல்வி செயலர், பிரதீப் யாதவ் ஆலோசனைப்படி, திறமையான, மாணவர்களுக்கு வழிகாட்டியாக, ஒழுக்கமாக திகழும் ஆசிரியர்களை மட்டுமே, விருதுக்கு தேர்வு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக, அவர்களின் வீடு, பணியாற்றும் பள்ளி உள்ள பகுதி போலீசாரிடம், கட்டாயம் விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஆசிரியர்கள் மீது, கிரிமினல் வழக்குகள்,புகார்கள், போராட்டம் தொடர்பான வழக்குகள், குடும்ப பிரச்னைகள் மற்றும் தீய பழக்கங்கள் இல்லை என்பதை, எழுத்துப் பூர்வமாக தெரிவிக்க வேண்டும். விசாரணை நடத்தப்படாத ஆசிரியர்களின் பெயர், விருது பட்டியலில் இருக்கக் கூடாது என, விருது தேர்வு கமிட்டிக்கு, உயர் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

நல்லாசிரியர் விருதுடன் சலுகைகள் வழங்க வேண்டும்: ஆசிரியர்கள் கோரிக்கை


நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகும் ஆசிரியர்களுக்கு வீடு, மருத்துவ காப்பீடு உள்ளிட்ட சலுகைகளை தமிழக அரசு வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள்  கோரிக்கை  வைத்துள்ளனர்.

இது குறித்து தமிழக ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி செயலாளர் இரா.தாஸ் கூறியதாவது:

மத்திய அரசு விருது வழங்கும் போது ரொக்கம் ₹50 ஆயிரம் வழங்குகிறது. ரயில் பயண கட்டணத்தில் 50 சதவீதம் சலுகை வழங்குகிறது. மேலும் விருது பெற்ற ஆசிரியரின் ஓய்வு வயது 60 ஆக உயர்த்தியுள்ளது. அதைப் பின்பற்றி ராஜஸ்தானில், விருது பெற்ற ஆசிரியர்கள் அவர்கள்பணியாற்றும் பள்ளிகளின் அருகில் ஒரு கிமீ தொலைவில் குடியிருப்பு, வழங்கி வருகிறது. அதுபோல தமிழக அரசும் டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது பெறும் ஆசிரியர்களுக்கு சலுகைகள் வழங்கவேண்டும்.

குறிப்பாக மலைப் பகுதியில் சிறப்பாக பணியாற்றும் ஆசிரியர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழக அரசு ஏதாவது செய்ய வேண்டும். மேலும், தேசிய நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுக்கு மத்திய அரசு ₹2 லட்சம் வரை மருத்துவ காப்பீடு வழங்குகிறது. அதேபோல தமிழக அரசும் வழங்க வேண்டும்

பணியில் இருக்கும் போது அரசு ஊழியர்கள் கண்டிப்பாக ஐடி கார்டு அணிய வேண்டும்: தமிழக அரசு உத்தரவுதமிழக பணியாளர் மற்றும் சீர்திருத்தத் துறை செயலாளர் ஸ்வர்ணா, அனைத்து அரசுத் துறைகளின் செயலாளர்கள், தலைமைச் செயலகத்தின் அனைத்து துறைகள், அனைத்து துறைத்தலைவர்கள், மாவட்ட கலெக்டர்கள், அனைத்து மாவட்ட நீதிபதிகள், முதன்மை குற்றவியல் நடுவர்கள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய செயலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

அரசுத் துறைகளில் பணியாற்றும் அனைத்து அரசு ஊழியர்களும், அலுவலர்களும் அலுவலக நேரங்களில் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும் என அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. இவ்வாறு அரசு உத்தரவிட்டும், அது தொடர்பான அறிவுரை வழங்கியும் ஒரு சில துறைகளில் அடையாள அட்டை அணிவதை நடைமுறைப்படுத்தவில்லை என தெரியவருகிறது. இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டும் தமிழக அரசின் அனைத்து அலுவலர்களும், ஊழியர்களும் அடையாள அட்டை அணியவேண்டும். பொதுமக்களை நேரடியாக சந்திக்கும் அனைத்து துறை அலுவலர்களும், ஊழியர்களும் அடையாள அட்டை அணிவதை 60 நாட்களுக்குள் உறுதி செய்யவேண்டும் என கடந்த 16ம்தேதி உத்தரவிட்டுள்ளது.

 எனவே அனைத்து அரசு ஊழியர்களும் பணியின்போது கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். அவ்வாறு அடையாள அட்டை அணியாத ஊழியர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மாவட்ட கலெக்டர்களும், துறைத் தலைவர்களும் இதுதொடர்பாக தங்கள் சார் நிலை அலுவலர்களுக்கு உத்தரவிட்டு அடையாள அட்டைஅணிவதை உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வில் முதலிடம் பெறும் மாணவருக்கு ரூ.20 ஆயிரம் பரிசு - தமிழக அரசு பள்ளிகளுக்கு சுற்றறிக்கை!


தமிழக அரசால் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 வில் மாநில அளவில் முதல் மூன்று மதிப்பெண் பெற்றவர்களுக்கு பரிசு தொகை வழங்கும் திட்டம் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
கற்றல் என்பது தெரிந்து கொள்ளுதல், அறிந்து கொள்ளுதல், வினவுதல், புதியன படைத்தல் என பல நிலைகளில் நடைபெறும் ஒரு செயல்.எழுத்து தேர்வில் எடுக்கப்படும் மதிப்பெண்களுக்கு மட்டும் முக்கியத்துவம் அளிப்பது தவிர்க்கப்பட வேண்டும் என்ற நோக்கில்முதல் மூன்று இடங்களை அறிவிக்கும் நடைமுறை கைவிடப்பட்டது. மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் நடப்பாண்டில் 'காமராஜர் விருது' வழங்கும் திட்டத்தை பள்ளி கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது.

பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை:

அரசு மற்றும் உதவி பெறும் பள்ளியில் தமிழ் வழியில் பயின்று பத்தாம் மற்றும் பிளஸ் 2 பொது தேர்வில் குறைந்த பட்சம் 60 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களை 'காமராஜர் விருதுக்கு' பரிசீலனைக்கு எடுத்து கொள்ள வேண்டும்.கலை இலக்கிய திறன், விளையாட்டு போட்டி, அறிவியல் விருது, பள்ளி இணை செயல்பாடுகளில் பங்கேற்றவர்களை தேர்வு செய்து, நான்கு செயல்பாடுகளிலும் தலா 10 மதிப்பெண் வீதம் 40க்கு கணக்கிட்டு இதில் முன்னுரிமை பெற்றவர்களை விருதுக்கு பரிந்துரைக்க வேண்டும்.ஒரு பள்ளி சார்பில் அதிக பட்சம் 3 பேரை பரிந்துரைக்கலாம். மாவட்ட அளவில் பத்தாம் வகுப்பில் 20 பேர், பிளஸ் 2வில் 20 பேரை தேர்வுசெய்து அதன் பட்டியலை முதன்மை கல்வி அலுவலர்கள் பள்ளி கல்வி இயக்குனருக்கு அனுப்ப வேண்டும்.

பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு 10 ஆயிரம், பிளஸ் 2 மாணவருக்கு 20 ஆயிரம் ரூபாய் மற்றும் காமராஜர் விருது அளிக்கப்பட உள்ளது. ஒரு மாவட்டத்துக்கு தலா 15 மாணவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர், என கூறப்பட்டுள்ளது.

TNPSC-ல் வெற்றி பெற்றவர்கள் E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பை மேற்கொள்ளுவது எப்படி ?


TNPSC இதற்கு முன்பு சான்றிதழ்சரிபார்ப்புக்கு சென்னையில அலுவலகத்திற்கு அழைப்பது வழக்கம்..
தற்போது அலைச்சலைக் குறைக்கும் பொருட்டு தேர்வர்களின்வசதிக்காக அவரவர் மாவட்டத்திலேயே E-seva மையம் மூலமாக சான்றிதழ் சரிபார்ப்பைமேற்கொள்ளும் வசதியை ஏற்படுத்தி உள்ளது...ஒரு சான்றிதழைபதிவேற்ற ரூ 5 மட்டும் கட்டணமாக வசூலிக்கப்படும்... (சான்றிதழ்எண்ணிக்கைக்கு ஏற்ப கட்டணம்) ...

 சான்றிதழ் பதிவேற்ற முறை பற்றி பார்ப்போம்.

முதலில் கீழே நான் குறிப்பிட்டுள்ள அனைத்து அசல்சான்றிதழ்களையும் கையில் வைத்துக் கொள்ளுங்கள்..தற்போதுபடித்துக் கொண்டிருப்பவர் எனில் கல்லூரியில் உங்கள் Originals'ஐஇப்பொழுதே கேட்டு கையில் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள்..(TC ஐதவிர அனைத்தும் தருவார்கள்.TC பற்றி கவலைப் பட வேண்டாம்)

கடைசியில் அலைய வேண்டாம்...

E- Seva மையத்திற்கு சென்று உங்கள் நிரந்தர பதிவின் ((One Time Registeration)) User ID மற்றும் Password'ஐ  அவரிடம் கூறினால் அவர் Login செய்வார்..(கட்டாயமாக USER ID AND PASSWORD ஐ எழுதி வைத்துக்கொள்ளுங்கள்)) .உங்களுடைய புகைப்படத்துடன் உங்கள் Dashboard open ஆகும்.. Dash Board நிரந்தர பதிவு உங்களுடையது தானா என அவர்உங்களிடம்  Confirm செய்த பிறகே சான்றிதழ் பதிவேற்ற வேலையைமேற்கொள்வார் எனவே ஐயம் வேண்டாம்..சான்றிதழ் பதிவேற்றதேர்வர் தான்  நேரில் செல்ல வேண்டும் என அவசியம் இல்லை.. அப்பா, அம்மா, அண்ணன் அல்லது யார் வேண்டுமானாலும்தேர்வரின் நிரந்தர பதிவு user ID ,password மற்றும் அசல் சான்றிதழ்கள்கொண்டு சென்று கொடுத்து சான்றிதழ் சரிபார்ப்பை முடிக்கலாம்.. கூடுமானவரை நீங்களே நேரில் சென்று முடிப்பது நலம்....

அனைத்து சான்றிதழ்களும் நீங்கள் நிரந்தர பதிவின் போது எந்தஎண்ணைக் கொண்ட சான்றிதழ்களை கொடுத்தீர்களோ அதேசான்றிதழைத் தான் பதிவேற்ற வேண்டும்.. வேறு ஒன்றை மாற்றிபதிவேற்றினால் சந்தேகத்திற்கிடம் என TNPSC யால் மீண்டும்சென்னைக்கு அழைக்கப்படுவீர்கள்..

முதலில் TNPSC வலைத் தளத்தில் உங்கள் பதிவு எண்ணை உள்ளிட்டுCV MEMO வை பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

(அனைத்தும் Originals)

1.சாதிச்சான்றிதழ் (மிக மிக முக்கியம்)

2.பத்தாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் .

3.12 ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ்

4.நீங்கள் இளநிலை பட்டதாரி எனில் Provisional Certificate

5.Convocation Certificate

6.பத்தாம் வகுப்பு தமிழ் வழியில் படித்ததற்கான PSTM Certificate (தகுந்தFormat ல்)

7.கடைசியாக நீங்கள் படித்த கல்லூரியில் இருந்து பெறப்பட்டநன்னடத்தைச் சான்றிதழ் (Conduct Certificate)

8.GROUP A அல்லது GROUP  B தரமுடைய அதிகாரியிடம் இருந்துபெறப்பட்ட நன்னடத்தைச் சான்றிதழ் ((குறிப்பு : இது 14.11.2017 க்குப்பிறகு பெற்றதாக இருக்க வேண்டும்.)

இதைஉயர்நிலை அல்லது மேல்நிலைப்பள்ளித்தலைமையாசிரியரிடமோ அல்லது அரசு பதிவு பெற்றமருத்துவரிடமோ பெறலாம்...

9.உங்கள் தெளிவான புகைப்படம் ஒன்று

10.நீங்கள் TYPIST முடித்தவர் எனில் அதற்கான சான்றிதழ்கள்

11.மாற்றுத் திறனாளி எனில் அதற்கான சான்றிதழ்

12.முன்னாள் இராணுவத்தினர் எனில் அதற்கான சான்றிதழ்

13.ஆதரவற்ற விதவை எனில் அதற்கான சான்றிதழ்

14.நீங்கள் ஒருவேளை முதுநிலை முடித்திருந்தால் அதற்கானPROVISIONAL மற்றும்  CONVOCTION சான்றிதழ்..

15.நீங்கள் ஒருவேளை தற்போது அரசுப் பணியில் உள்ளவர் எனில்உங்கள் துறைத் தலைவரிம் இருந்து பெற்ற தடையின்மைச்சான்றிதழ் (No Objection  Certificate) NOC

கடைசியாக படித்த கல்லூரியில் இருந்து நன்னடத்தைச் சான்றிதழ்இல்லையெனில் TC யே போதும்  ..ஆனால் அதில் His / Her Conduct and Character is Good என இரண்டு வார்த்தைகளும் இருக்க வேண்டும்..

இவைஅனைத்தையும் e-Seva மையத்தில் பதிவேற்றிய பின் சரியாகபதிவேற்றியுள்ளார்களா என உங்களிடம் காட்டி உறுதி செய்துகொண்ட பின்னரே அவர்கள் Upload செய்வார்கள்..
Upload செய்த பின் என்னென்ன சான்றிதழ்களை பதிவேற்றினீர்கள்என ஒரு PRINT OUT ஐ அவர்கள் கையெழுத்திட்டு தருவார்கள்.. நீங்கள்சான்றிதழ் சரிபார்ப்பு CV முடித்ததற்கான சான்று அதுதான்.எனவேஅதை பத்திரமாக வைத்துக் கொள்ளவும்..

முடிந்த வரை 10 மணிக்கே சென்று விடுங்கள்..கூட்ட நெரிசல் இன்றிபொறுமையாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வாருங்கள்..

கட்டணம் 100 ரூபாய்க்குள் தான் வரும்.. எதற்கும் அதிகமாக எடுத்துச்செல்லுங்கள்.. சான்றிதழ் பதிவேற்றம் மேற்கோள்ளும் அதிகாரிக்குநீங்கள் எவ்வித கட்டணமும் தனியாக தர தேவையில்லை..

e-seva மையம் திறந்திருக்கும் நேரம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை.. 1-2 உணவு இடைவேளை..

நல்லபடியாக சான்றிதழ் சரிபார்ப்பை முடித்து வர அனைத்து TNPSC நண்பர்களுக்கும் வாழ்த்துக்கள்....

அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்களை பணி நிரந்தரம் செய்ய நடவடிக்கை: யுஜிசி கல்வித் தகுதி உடையவர்களை கணக்கெடுக்க உத்தரவு!


அரசு கலை அறிவியல் கல்லூரி களில் பணியாற்றிவரும் கவுரவ விரிவுரையாளர்களை பணிநிரந் தரம் செய்வதற்கான ஆயத்தப் பணிகள் தொடங்கியுள்ளன.
யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித் தகுதி உடைய கவுரவ விரிவுரை யாளர்களின் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அரசு கலை கல்லூரிகளில் தொகுப்பூதியத்தில் பணியாற்றும் கவுரவ விரிவுரையாளர்கள் சிறப்பு தேர்வு மூலம் பணிநிரந் தரம் செய்யப்படுவர் என உயர் கல்வித்துறை அமைச்சர் கே.பி.அன் பழகன் கடந்த 30-ம் தேதி சட்டப் பேரவையில் அறிவித்தார்.

 இந்த நிலையில், கவுரவ விரிவுரை யாளர்களை பணிநிரந்தரம் செய் வதற்கான ஆயத்தப்பணிகளை கல்லூரி கல்வி இயக்ககம் தொடங்கியுள்ளது.தகுதியுடைய பேராசிரியர்கள்யுஜிசி நிர்ணயித்துள்ள கல்வித்தகுதி உடைய கவுரவ விரிவுரையாளர் விவரங்களை கணக்கெடுக்குமாறு அரசு கல்லூரி முதல்வர்களுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கல்லூரி கல்வி இயக்குநர் பேராசிரியை ஆர்.சாருமதி அனைத்து அரசு கலை அறிவியல் மற்றும் கல்வியியல் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:

அரசு கலை அறிவியல் கல் லூரிகள் மற்று்ம் கல்வியி யல் கல்லூரிகளில் பணிபுரியும் கவுரவ விரிவுரையாளர்களில் தற்போதைய யுஜிசி விதிமுறை களின்படி உதவி பேராசிரியர் நியமனத்துக்குரிய கல்வித்தகுதி யுடன் பணிபுரிவோரின் எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான விவரங்களையும், தங்கள் கல்லூரியில் கவுரவ விரிவுரையாளராக பணியாற்றி அண்ணாமலை பல்கலைக்கழக உபரி பணியாளர்கள் நியமனம் மற்றும் ஆசிரியர்களின் இடமாறு தல் போன்ற காரணங் களினால் பணிவாய்ப்பை இழந்த கவுரவ விரிவுரையாளர்களின் விவரங் களையும் ஆகஸ்ட் 31-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-31-08-2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:41

இல்வாழ்வான் என்பான் இயல்புடைய மூவர்க்கும்
நல்லாற்றின் நின்ற துணை.

உரை:
இல்லறத்தில் வாழ்பவனாகச் சொல்லப்படுகிறவன் அறத்தின் இயல்பை உடைய மூவருக்கும் நல்வழியில் நிலை பெற்ற துணையாவான்.

பழமொழி :

Barking dogs seldom bite

குரைக்கின்ற நாய் கடிக்காது

பொன்மொழி:

மகிழ்ச்சி என்ற உணர்ச்சி இல்லாவிட்டால் வாழ்க்கை சுமக்க முடியாத
பெரிய சுமையாகிவிடும்.

-பெர்னார்ட்ஷா.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.ரியோ உச்சி மாநாட்டின் வேறு பெயர் என்ன?
புவி உச்சி மாநாடு


2.ஹீப்ளி எந்த மாநிலத்திலுள்ளது?
கர்நாடகா


நீதிக்கதை :சமயோசித புக்தியால் உயிர் தப்பிய குரங்கு


ஒரு காட்டில் ஒரு குரங்கு வசித்து வந்தது. அந்த காட்டின் நடுப் பகுதியில் ஆறு ஒன்று ஓடிக்கொண்டிருந்தது. ஆற்றின் கரையில் ஒரு நாவல் மரம் நின்றது. அதில் இருந்த நாவல் பழங்களைத் தின்று குரங்கு உயிர் வாழ்ந்து வந்தது.

அக்காட்டின் ஒரு பகுதில் பெரிய ஆறு ஒன்று ஓடியது. அந்த ஆற்றில் எப்போதுமே நீர் பெருக்கெடுத்து ஓடும். ஆற்றிற்கு மறுபக்கத்தில் இருக்கும் காடு மிகவும் செழிப்பாகக் காணப்பட்டதால் அங்கு போய் பார்க்க வேண்டும் என்று குரங்கிற்கு ஆசை ஏற்பட்டது. ஆனால் குரங்கிற்கு அந்த ஆற்றைக் கடந்து போக பயமாக இருந்தது.
ஒருநாள் ஆற்றில் இருந்த முதலை ஒன்று நாவல் பழம் தின்று கொண்டிருந்த குரங்கைப் பார்த்து ‘நாவல் பழம் மிகவும் ருசியாக உள்ளதா?’ எனக் கேட்டது.

குரங்கும்..”முதலையாரே! உமக்கும் சில நாவல் பழம் பறித்துத் தருகிறேன். சாப்பிட்டுப் பாருங்கள்” என்று நாவல் பழங்கள் சிலவற்றை பறித்து ஆற்றில் வாயைப் பிளந்துக் கொண்டிருந்த முதலையின் வாயில் போட்டது.

முதலையும் பழத்தை ருசித்து சாப்பிட்டது. அவற்றைச் சாப்பிட்ட முதலை இந்த சுவையான பழங்களை உண்ணும் முதலையின் ஈரன் மிகவும் ருசியாக இருக்கும் என எண்ணியது. அதனால் முதலை குரங்குடன் நண்பனாகப் பழகி அதன் ஈரலை உண்ண திட்டம் போட்டது
குரங்காரே நீர் எனக்கு நல்லபழங்களை தந்து என் பசியை தீர்த்தீர் உமக்கு நான் ஏதும் உபகாரம் செய்யலாம் என்று யோசிக்கின்றேன் என்று கூறியது. அத்துடன் ஆற்றின் மற்றக் கரையில் நல்ல பழ மரங்கள் பழுத்து தூங்குகின்றன. நீர் அங்கு சென்றால் அப் பழங்களை நீயும் உண்டு எனக்கும் தரலாம் அல்லவா என்றது.
அதற்கு குரங்கு எனக்கும் அக்காட்டைப் பார்க்க வேண்டும் என்று பல நாளாக ஆசை இருக்கு ஆனால் எனக்கு இந்த ஆற்றைக் கடந்து போகதான் பயமாக இருக்கிறது என்றது.

அதனைக் கேட்ட முதலை நான் இருக்கும் போது நீ ஏன் பயப்பட வேண்டும். இப்பவே எனது முதுகில் ஏறி இரு நான் உன்னை அக்கரையில் சேர்த்து விடுகின்றேன் என்றது.
வஞ்ச எண்ணம் கொண்ட முதலையின் அன்பு வார்த்தையை நம்பிய குரங்கும் முதலையின் முதுகின் மீது தாவி ஏறி உட்காந்தது.

தனது ஆசையை நிறைவேற்ற இதுதான் தருணம் என்று எணிய முதலை குரங்கை நடு ஆற்றுக்கு கொண்டு சென்று அங்கே குரங்கின் ஈரலை சாப்பிட இருக்கும் தனது ஆசையைச் குரங்கிற்கு சொன்னது. அப்போது குரங்கு பதட்டமடையாது.

அப்படியா! நீ அதை முதலில் சொல்லவில்லையே என்று கூறி நீரில் நனைந்து ஈரல் பழுதாகி விடும் என எண்ணி தான் தனது ஈரலை எடுத்து மரக்கிளையில் வைத்துவிட்டு வந்துவிட்டதாக கூறி; என்னை திரும்ப மரத்தடிக்கு கொண்டு செல் நான் அதை எடுத்து மாட்டிக் கொண்டு வருகிறேன் என்று சமயோசிதமாக கூறியது.
முதலையும் யோசிக்காது..குரங்கு உண்மை சொல்வதாக எண்ணிக் கொண்டு அதை திரும்ப மரத்திற்கு அழைத்து வந்தது
வேகமாக மரத்தில் ஏறிய குரங்கு..’முட்டாள் முதலையே. ஈரலை உடலிலிருந்து கழட்டி மாட்ட முடியுமா? உன்னை நம்பிய என்னை ஏமாற்றிவிட்டாயே..நியாயமா? என்று கேட்டது.
முதலையும் ஏமாந்து திரும்பியது.

நாமும் யாரையும் உடன் நம்பக்கூடாது. அவர்கள் நல்லவர்களா..கெட்டவர்களா என நட்பு கொள்ளுமுன் பார்க்க வேண்டும்.

இன்றைய செய்தி துளிகள்:

1.அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் பிறந்த தேதியில் தவறு இருந்தால் பணிநீக்கம் - தமிழக அரசு சுற்றறிக்கை!

2.கலைஞருக்கு புகழ் வணக்கம்: முன்னாள் பிரதமர் தேவகவுடா, நிதின் கட்கரி உள்ளிட்ட பல தலைவர்கள் புகழ் அஞ்சலி

3.ஸ்டெர்லைட் ஆய்வு: தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு

4.நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

5.ஆசிய விளையாட்டுயில் 13 வது தங்கப்பதக்கத்தை இந்தியா வென்றது. மகளிர் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் இந்திய அணி தங்கப்பதக்கத்தை வென்று சாதனை படைத்துள்ளது.

ஆசிரியர் தின விழா நிகழ்ச்சி நிரல்ஆசிரியர்தின விழா திட்டமிடல்
நாள்: 01.09.2018

இடம்: ராஜராஜன் பொறியியல் கல்லூரி
காரைக்குடி9.30.  - தொடக்கவிழா

10.15 - ஆசிரியர்களுடன் இணை இயக்குனரின் கலந்துரையாடல்

10.45 - 11.15 -
மேடை ஆச்சரியங்கள்

11.15 - 11.30 இடைவேளை

11.30 -11.45. மூன்று நூல்கள் அறிமுகம்..

11.45 - 1.15
 Mr.நந்தகுமார் IRS அவர்களுடன் அசத்தல் கலந்துரையாடல்

1.15 - 2.00
உணவு இடைவேளை

2.00 - 3.00
மேடை ஆச்சரியங்கள்

2.00 - 2.45
Microsoft ஹரிஹரன் அவர்களுடன் கலந்துரையாடல்

2.45 - 3.15
மேடை ஆச்சரியங்கள்

3.15 - 3.30
இடைவேளை

3.30 - 4.15
கற்றதும், பெற்றதும்

4.15 - 5.00
நிறைவு விழா

அனைவருக்கும் அனுமதி இலவசம்

காரைக்குடி பேருந்து நிலையத்திலிருந்து காலை 8.15 க்கு கல்லூரிக்கு பேரூந்து வசதி செய்யப்பட்டுள்ளது..

Emis பணி மேற்கொண்டுள்ள சக ஆசிரியர்களது பணியை எளிமை படுத்தும் நோக்கில்.. சில தகவல்கள்..!2018-2019 ஆம் கல்வியாண்டில்..
(இக்கல்வியாண்டு) பதிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கு அனைத்து தகவல்களும் உள்ளீடு செய்யப்பட்டுள்ளது.
(இருப்பினும் ஒருமுறை open செய்து recheck செய்யவும்.)

2017-2018ல் பதிவு செய்யப்பட்ட மாணவர்களது (தற்போது இரண்டாம் வகுப்பு) தகவல்களும் முழுமையாக இருக்கும்.

தற்போது..
மூன்று, நான்கு மற்றும் ஐந்து.. மேலதீக வகுப்புகள் பயிலும் மாணவர்களுக்கே கூடுதல் கவனம் மேற்கொள்ள வேண்டி உள்ளது.STEP 1

ஆதாரில் உள்ளபடி ஆங்கிலத்தில்
ஆதாரில் உள்ளபடி தமிழில்
பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி ஆங்கிலத்தில்
பள்ளி வருகைப்பதிவேட்டில் உள்ளபடி தமிழில்

உதாரணமாக:

ஆதாரில் தகப்பனார் பெயரோடு இணைந்து நிர்மலா சீதாராமன் என்றிருக்கும்.

அதனை அவ்விதமே ஆதாரில் உள்ளபடி என்கிற..காலத்தில் பதிவிட்டு விடுக.

ஐடி கார்டு என்கிற காலத்தில்.. சீ.நிர்மலா என்று பதிவிட்டுவிடுக.
(மாவட்டத்திற்கு மாவட்டம் குறிப்பு வேறுபடுகிறது)

STEP 2

முதல், இரண்டு வகுப்புகளுக்கு Father, mother occupation இருக்கும்.

ஏனைய வகுப்புகளுக்கு உள்ளீடு செய்க.

STEP 3

முகவரி சரியாக உள்ளதை உறுதிபடுத்திக் கொள்க

STEP 4

முதல், இரண்டு வகுப்புகளுக்கு Date of joining உள்ளது.

ஏனைய வகுப்புகளுக்கு உள்ளீடு செய்தாக வேண்டும்.

மேற்கண்ட பணிகள் முடிவடைந்த நிலையில்..  step4ல் உள்ள UPDATEனை முடிவில் click  செய்க.

இவைகள் அல்லாது எக்காலமேனும் விடுபட்டுள்ளதா என கவனமுடன் நோக்குக.

தேக்கப்பட்டியல்.. அட்மிசன் பார்ம்..
ஆதார் ஜெராக்ஸ்.. ஆகியவற்றை முன்னேற்பாடாக அருகில் வைத்துக் கொண்டால்.. பணி முடிக்க எளிதாக இருக்கும்.

அல்லது

ஆதார் ஜெராக்ஸில் ஒரு மூலையில்..

வகுப்பு/சே.எண்/ சேர்ந்த தேதி குறிப்பிட்டு முன்னேற்பாடு செய்து கொள்வதும் மேற்கண்ட எமிஸ் பணியை எளிதாக்கும்.

குறிப்பு:

ஆதாரில் குறிப்பிட்டுள்ள பிறந்ததேதியும்.. பள்ளியில் குறிப்பிட்டுள்ள பிறந்த தேதியும் முன்னுக்குபின் முரணாக சிலருக்கு உள்ள வாய்ப்பும் நேர்ந்துள்ளது.

எனவே.. பிறந்ததேதியை உறுதிபடுத்துக. தவறாக இருக்கும் பட்சத்தில் சார்ந்த பெற்றோரை அழைத்து.. ஆதாரை திருத்தம் செய்திட வேண்டிய அவசியத்தை எடுத்துரைத்திடுக.

(Website open ஆனால் தானே இதை எல்லாம் செய்வது என்று நீங்கள் கேட்பது என் காதிலும் கேட்கிறது. என்ன செய்ய...)

NEET Exam - இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு


நீட் தேர்வில் இந்த ஆண்டு கருணை மதிப்பெண் கிடையாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழில் தவறாக மொழிபெயர்க்கப்பட்ட கேள்விக்கு கருணை மதிப்பெண் வழங்க முடியாது என்று தெரிவித்துள்ளது. தமிழக மாணவர்களுக்கு கூடுதலாக 196 மதிப்பெண் தரமுடியாது என்று திட்டவட்டமாக கூறியுள்ளது.மருத்துவ படிப்புக்கு ஆங்கிலம் முக்கியம் என்றால் பிறமொழிகளில் ஏன் தேர்வு நடத்தப்படுகிறது என்று கேள்வி எழுப்பியுள்ளது. நீட் தேர்வு வழக்கு விசாரணையின் போது சிபி எஸ் க்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. மேலும் வழக்கு விசாரணையை செப்டம்பர் 26-ம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.ஆங்கிலம் கட்டாயம்நீட் உள்ளிட்ட நுழைவுத்தேர்வு எழுதுவதற்கு ஆங்கிலம் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது. மருத்துவ படிப்பு முழுவதுமே ஆங்கிலத்தில்தான் கற்பிக்கப்படுகிறது என்று சிபிஎஸ்இ விளக்கமளித்துள்ளது. மேலும் பள்ளிகளில் ஆங்கிலம் மொழிப்பாடமாக கற்பிக்கப்படுகிறது என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது. நீட் வழக்கு விசாரணையின் போது உச்ச நீதிமன்றத்தில் சிபிஎஸ்இ வாதிட்டது.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18


பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.08.18

ஆகஸ்ட் 30 :
சிறு தொழில் நிறுவன தினம்

திருக்குறள்

நன்றாகும் ஆக்கம் பெரிதெனினுஞ் சான்றோர்க்குக்
கொன்றாகும் ஆக்கங் கடை.

விளக்கம்:

பெரிதாக நன்மை தரக்கூடிய அளவுக்கு ஒரு கொலை பயன்படக் கூடுமெனினும், நல்ல பண்புடைய மக்கள், அந்த நன்மையை இழிவானதாகவே கருதுவார்கள்.

பழமொழி

A little stream will drive a light mill

 சிறு துரும்பும் பல் குத்த உதவும்

இரண்டொழுக்க பண்பாடு

1.  எங்கள் ஊரில் உள்ள குளம், குட்டையை அசுத்தம் செய்யாமல் பாதுகாப்பேன்.

2. இயற்கைச் சீற்றத்தால் பாதிக்கப்பட்ட கிராமங்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை செய்வேன்.

 பொன்மொழி

நேரம் தவறாமை என்னும் கருவியை உபயோகிப்பவன் எப்பொழுதுமே கதாநாயகன் தான்.

  -  காமராஜர்

பொது அறிவு

1. இந்தியாவின்  எலக்ட்ரானிக்  நகரம் என போற்றப்படுவது எது?

 பெங்களூர்

2.  இந்தியாவில்  அமைதி பள்ளத்தாக்கு    எந்த மாநிலத்தில் உள்ளது?

 கேரளா

English words and. Meanings

Tacit.              மௌனமான
Temperature வெப்பம்
Temporary   தற்காலிகம்
Target.           இலக்கு
Trial.               ஒத்திகை
நீதிக்கதை - கழுதையும் நாயும்


கழுதை ஒன்று, நிறைய பொதி சுமந்து கொண்டு சென்றது. அதன் பின்னால் கழுதையின் எஜமானரும், அவர் வளர்க்கும் நாயும் வந்து கொண்டிருந்தனர். செல்லும் வழியில் புல் தரையைப் பார்த்ததும், கழுதையை அங்கு மேயவிட்டு மரத்தின் நிழலில் படுத்துத் தூங்கினார் எஜமானர்.

கழுதை அங்கிருந்த புற்களை நன்கு மேய்ந்தது. ஆனால், நாய்க்குத் தின்பதற்கு எதுவுமில்லை. பசி, அதன் வயிற்றைப்பிடுங்கியது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்த நாய், கடைசியாக கழுதையைப் பார்த்து, “நண்பனே, என்னால் பசி தாங்க முடியவில்லை. எஜமான ரோ தூங்குகிறார். கொஞ்சம் கீழே படு. உன் பொதியில் உள்ள உணவில் கொஞ்சம் எடுத்துக் கொள்கிறேன்” என்று கெஞ்சியது.

நாயின் கெஞ்சலை கழுதை பொருட்படுத்தவில்லை. அது ஆனந்தமாகப் புற்களை மேய்ந்து கொண்டிருந்தது. நாயும் விடாமல் கெஞ்சிக் கொண்டிருந்தது.

நாயின் தொந்தரவு தாங்காத கழுதை, “என்னப்பா அவசரம்? எஜமானர் எழுந்திரிக்கட்டும். அவர் சாப்பிடும்போது உனக்கும்தான் கொடுப்பாரே” என்றது. வேறு வழியில்லாமல் நாய் சோர்ந்து போய் படுத்துக் கொண்டது.

அப்போது ஓநாய் ஒன்று மேய்ந்து கொண்டிருந்த கழுதை மீது பாய்ந்தது. பயத்தால் அலறிய கழுதை, “நண்பா, சீக்கிரம் ஓடிவந்து என்னைக் காப்பாற்று” என நாயைப் பார்த்து கதறியது.

படுத்திருந்த இடத்தை விட்டு எழுந்திரிக்காமல், “ஏன் அவசரப்படுகிறாய்? கொஞ்சம் பொறுமையாக இரு, எஜமானர் விழிக்கட்டும். அவர்தான் கட்டாயம் உனக்கு உதவி செய்வாரே” என்றது நாய்.

கழுதை, நாய்க்கு உதவி செய்யாமல் தான் செய்த தவறை நினைத்து வருந்தியது.

நீதி: நாம் மற்றவர்களுக்கு உதவினால் தான், மற்றவர்கள் நமக்கு உதவி செய்வார்கள்.

இன்றைய செய்திகள்

30.08.18

 * அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக சரிவைக் கண்டுள்ளது.

* ஐ.நா. சபையின் உதவி பொதுச் செயலாளராகவும், நியூயார்க்கில் உள்ள அந்த அமைப்பின் சுற்றுச்சூழல் திட்ட மையத்தின் தலைவராகவும் இந்தியாவைச் சேர்ந்த சத்யா திரிபாதி நியமிக்கப்பட்டுள்ளார்.

*  கடலூர் மாவட்டம், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி.இ., முதலாம் ஆண்டு வகுப்புகள் இன்று முதல் துவங்கின.

* ஆசிய விளையாட்டுப் போட்டி மகளிர் ஹெப்டத்லான் பிரிவில் இந்திய வீராங்கனை ஸ்வப்னா பர்மன் 6026 புள்ளிகள் பெற்று தங்கப் பதக்கத்தை வென்றார்.

* ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய வீரர் அர்பிந்தர் சிங் மும்முறை தாண்டுதல் பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.

Today's Headlines

🌸NewDelhi:If everything goes according to plan, in 40 months, three Indians will be launched into space by an Indian rocket. This is the aim of India’s ambitious manned spaceflight mission, Gaganyaan, the contours of which were outlined by Dr. K. Sivan, Chairman of the Indian Space Research Organisation (ISRO) on Tuesday.💐

🌸Kochi:A thousand labourers working round the clock in shifts for eight consecutive days! Cochin International Airport Limited (CIAL), the country’s first Greenfield airport, is up and running once again.💐

🌸Chennai:The third in the series of seven Offshore Patrol Vessels (OPV), indigenously made here, was launched at the L&T Shipyard, Kattupalli, on Tuesday.💐

🌸Dindigul:The Tamil Nadu Arasu Cable TV has commenced distribution of free set top boxes to enhance the quality of broadcast to consumers.💐

🌸Asian games: Medal Tally ,India bags ,10 Gold,20 silver,23 bronze ,Total 53 and ranks  9th .

Prepared by
Covai women ICT_போதிமரம்

வரலாற்றில் இன்று ஆகஸ்ட் 30ஆகஸ்ட் 30 (August 30) கிரிகோரியன் ஆண்டின் 242 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 243 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 123 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

70 – உரோமைப் பேரரசர் டைட்டசு எரோடின் கோவிலை அழித்த பின்னர் தனது எருசலேம் முற்றுகையை முடித்துக் கொண்டார்.[1]
1363 – சீனாவில் யுவான் ஆட்சியைக் கவிழ்க்க சென் யூலியாங், கோங்வு பேரரசர் ஆகிய கிளர்ச்சித் தலைவர்களின் தலைமையில் சந்தித்தனர். ஐந்து வார போயாங்கு ஏரி சமர் ஆரம்பமானது.
1464 – இரண்டாம் பவுலுக்குப் பின்னர் இரண்டாம் பயசு 211-வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.
1574 – குரு ராம் தாஸ் நான்காவது சீக்கிய குருவானார்.
1791 – இங்கிலாந்தின் பண்டோரா என்ற கடற்படைக் கப்பல் ஆத்திரேலியாவில் மூழ்கியதில் பெருந் தடுப்புப் பவளத்திட்டில் 4 கைதிகள் உட்பட 35 பேர் கொல்லப்பட்டனர்.
1813 – கூல்ம் நகர சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆத்திரிய-புருசிய-உருசியக் கூட்டுப் படைகளினால் தோற்கடிக்கப்பட்டனர்.
1813 – அமெரிக்கப் பழங்குடி கிறீக் இனத்தவர் அலபாமாவில் ஆங்கிலக் குடியேறிகள் நூற்றுக்கணக்கானோரக் கொன்றனர்.
1835 – ஆத்திரேலியாவில் மெல்பேர்ண் நகரம் அமைக்கப்பட்டது.
1896 – பிலிப்பீனியப் புரட்சி: சான் யுவான் டெல் மொண்டே சமரில் எசுப்பானியா வெற்றி பெற்றதை அடுத்து, பிலிப்பீன்சின் எட்டு மாகாணங்களில் எசுப்பானிய ஆளுநர் இராணுவச் சட்டத்தை அறிவித்தார்.
1914 – முதலாம் உலகப் போர்: செருமனி தானன்பர்க் சபரில் உருசியாவை வென்றது.
1918 – போல்செவிக் தலைவர் விளாதிமிர் லெனின் பானி கப்லான் என்பவனால் சுடப்பட்டுப் படுகாயம் அடைந்தார்.
1922 – கிரேக்கத்-துருக்கியப் போரின் இறுதிச் சமர் தும்லுபினாரில் இடம்பெற்றது.
1942 – இரண்டாம் உலகப் போர்: அலம் ஹல்பா சண்டை எகிப்தின் அருகே ஆரம்பமானது.
1945 – ஆங்காங் மீதான யப்பானியரின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது.
1974 – பெல்கிரேடில் இருந்து செருமனியின் டோர்ட்மண்ட் நோக்கிச் சென்ற விரைவுத் தொடருந்து சாகிரேப் நகரில் தடம் புரண்டதில் 153 பயணிகள் உயிரிழந்தனர்.
1974 – டோக்கியோவில் மிட்சுபிசி தொழிற்சாலையில் குண்டு ஒன்று வெடித்ததில் எட்டு பேர் கொல்லப்பட்டனர், 378 பேர் காயமடைந்தனர். இது தொடர்பாக 1975 மே 19 இல் எட்டு இடதுசாரி செய்ற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டனர்.
1981 – ஈரானில் அரசுத்தலைவர் முகம்மது-அலி ராஜாய், பிரதமர் முகம்மது-யாவாத் பகோனார் ஆகியோர் குண்டுவெடிப்பு ஒன்றில் கொல்லப்பட்டனர்.
1984 – டிஸ்கவரி விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது.
1990 – தர்தாரிஸ்தான் உருசிய சோவியத் சோசலிசக் குடியரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. உருசியா இதுவரை அங்கீகரிக்கவில்லை.
1991 – அசர்பைஜான் சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1992 – மண்டைதீவில் இலங்கைக் கடற்படையினரின் நீருந்து விசைப்படகு ஒன்று விடுதலைப் புலிகளால் கைப்பற்றப்பட்டது.
1995 – பொசுனியப் போர்: நேட்டோ படைகள் பொசுனிய செர்பியர்களுக்கு எதிரான தாக்குதல்களை ஆரம்பித்தன.
1999 – கிழக்குத் திமோர் மக்கள் விடுதலைக்கு ஆதரவாக வாக்களித்தனர்.
2014 – லெசோத்தோவில் இராணுவப் புரட்சி இடம்பெற்றதை அடுத்து பிரதமர் டொம் தபானி தென்னாப்பிரிக்காவுக்குத் தப்பி ஓடினார்.
பிறப்புகள்

1748 – ஜாக்-லூயி டேவிட், பிரான்சிய ஓவியர் (இ. 1825)
1797 – மேரி செல்லி, ஆங்கிலேய எழுத்தாளர் (இ. 1851)
1850 – மார்செலோ எச். டெல் பிலார், பிலிப்பீனிய ஊடகவியலாளர், வழக்கறிஞர் (இ. 1896)
1852 – யாக்கோபசு என்றிக்கசு வான் தோஃப், நோபல் பரிசு பெற்ற இடச்சு வேதியியலாளர் (இ. 1911)
1869 – ஜோர்ஜ் கெஸ்தே, பிரான்சிய ஓவியர் (இ. 1910)
1871 – எர்ணஸ்ட் ரதர்ஃபோர்டு, நோபல் பரிசு பெற்ற நியூசிலாந்து-ஆங்கிலேய வேதியியலாளர் (இ. 1937)
1875 – சுவாமி ஞானப்பிரகாசர், ஈழத்தின் தமிழறிஞர், பன்மொழிப் புலவர் (இ 1947)
1887 – கோவிந்த் வல்லப் பந்த், உத்தரப் பிரதேசத்தின் 1வது முதலமைச்சர் (இ. 1961)
1903 – பகவதி சரண் வர்மா, இந்திய எழுத்தாளர் (இ. 1981)
1913 – எஸ். தொண்டமான், இலங்கைத் தொழிற்சங்கத் தலைவர், மலையக அரசியல்வாதி (இ. 1999)
1930 – வாரன் பபெட், அமெரிக்கத் தொழிலதிபர்
1936 – ஜமுனா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை
1954 – அலெக்சாண்டர் லுகசெங்கோ, பெலருசின் 1வது அரசுத்தலைவர்
1954 – டி. கே. எஸ். இளங்கோவன், தமிழக அரசியல்வாதி
1954 – இரவி சங்கர் பிரசாத், இந்திய அரசியல்வாதி
1963 – ஆனந்த் பாபு, இந்தியத் திரைப்பட நடிகர்
1972 – கேமரன் டியாஸ், அமெரிக்க நடிகை
1980 – ரிச்சா பலோட், இந்திய திரைப்பட நடிகை
1982 – ஆண்டி ரோடிக், அமெரிக்க டென்னிசு ஆட்டக்காரர்
இறப்புகள்

1181 – மூன்றாம் அலெக்சாண்டர் (திருத்தந்தை)
1329 – குதுக்து கான், சீனப் பேரரசர் (பி. 1300)
1659 – தாரா சிக்கோ, முகலாய இளவரசன் (பி. 1615)
1877 – தோரு தத், இந்தியக் கவிஞர், எழுத்தாளர் (பி. 1856)
1928 – வில்லெம் வீன், நோபல் பரிசு பெற்ற செருமானிய இயற்பியலாளர் (பி. 1864)
1940 – ஜெ. ஜெ. தாம்சன், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1856)
1957 – என். எஸ். கிருஷ்ணன், நகைச்சுவை நடிகர், பாடகர் (பி 1908)
1963 – டி. ஆர். சுந்தரம், தென்னிந்திய நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் (பி. 1907)
1988 – கே. வி. எஸ். வாஸ், இலங்கைப் பத்திரிகையாளர், எழுத்தாளர் (பி. 1912)
1995 – எஸ். எஸ். கணேசபிள்ளை, ஈழத்து வானொலி, மேடை நடிகர் (பி. 1937]])
2001 – ஜி. கே. மூப்பனார், தமிழக அரசியல்வாதி (பி. 1931)
2001 – கொத்தமங்கலம் சீனு, நடிகர், பாடகர் (பி. 1910)
2004 – பிரெட் இலாரன்சு விப்பிள், அமெரிக்க வானியலாளர் (பி. 1906)
2006 – நகிப் மஹ்ஃபூஸ், நோபல் பரிசு பெற்ற எகிப்திய எழுத்தாளர் (பி. 1911)
2008 – கே. கே. பிர்லா, இந்தியத் தொழிலதிபர் (பி. 1918]])
2014 – பிபன் சந்திரா, இந்திய வரலாற்றாளர் (பி. 1928)
2015 – மல்லேசப்பா மடிவாளப்பா கலபுர்கி, இந்தியக் கல்வியாளர், எழுத்தாளர் (பி. 1938)
2015 – ஆலிவர் சாக்சு, ஆங்கிலேய-அமெரிக்க மருத்துவர், எழுத்தாளர் (பி. 1933)

சிறப்பு நாள்

அனைத்துலக காணாமற்போனோர் நாள்

விடுதலை நாள் (தர்தாரிஸ்தான்)
வெற்றி நாள் (துருக்கி)

அரசியலமைப்பு நாள் (துர்கசு கைகோசு தீவுகள்)

SEPTEMBER 2018 Diary:

1-Grievance day

5- Teachers Day

11-RL-Saamaupakarma

12-RL-Hijri new year

13-GH-Vinayagar chathurthi

21-GH-Moharam

17~22- I Term Exams

23~Oct 2- I Term holidays.

விரைவில் தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு அரசு பள்ளிகளில் ஏற்படுத்தப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்


தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்தமிழகத்தில் 57 ஆயிரம் அரசுப் பள்ளிகளில், தனியார் பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையம் அருகே நாதியம்பாளையம் மற்றும் கொளப்பலூர் ஊராட்சிகளில் குடிசை மாற்றுவாரியத்தின் மூலம் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுவதற்கான பூமி பூஜையில் அமைச்சர் செங்கோட்டையன் கலந்து கொண்டார்பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நல்லாசிரியர் விருதில் மீண்டும் பழைய முறையை கடைப்பிடித்து, 22 ஆசிரியர்களுக்கு விருது வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்

EMIS இணையதளம் மெதுவாக இயங்க காரணம் என்ன?


தமிழ் நாட்டில் உள்ள சுமார் 40,000 பள்ளிகளில் உள்ள ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்ய முற்படுவதால் Server பாதிக்கப் படுகிறது.விரைவாக EMIS பணிகளை முடிக்க விரும்பும் ஆசிரியர்கள் இரவு 7 மணி முதல் காலை 10 மணி வரை EMIS இணைய தளத்தில் தகவல்களை உள்ளீடு செய்யலாம்.பள்ளி பற்றிய தகவல்களை உள்ளீடு செய்யும் முன், DISE படிவத்தில் உள்ள தகவல்களை சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும்.

TNTET தகுதிதேர்விற்கானஅறிவிப்பு எப்போது?


அரசுப்பள்ளிகளில் ஆசிரியராக பணியாற்றிட
முதலில் ஆசிரியர் தகுதிதேர்வில் வெற்றிபெறவேண்டும். இந்தாண்டிற்கான தகுதிதேர்வு அக்.6 மற்றும் 7 (சனி,ஞாயிறு)  ஆகிய தேதிகளில் நடைபெறும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், கடந்த சில மாதங்களுக்கு முன்பு அறிவிப்பை வெளியிட்டு தேர்வு அட்டவணையையும் வெளியிட்டார்
. ஆனால் தற்போது தேர்விற்கு 37 நாள் இருக்கும் பட்சத்தில் விண்ணப்பிப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்படவில்லை. எப்போதுமே தேர்விற்கு 40 நாட்களுக்கு முன்பு விண்ணப்பிப்பதற்கான செயல்பாடுகள் துவங்கும். பின் கடைசிதேதி, தேர்வு கட்டணம் செலுத்தும்தேதி  அறிவிக்கப்பட்டு இணையத்தளம் வாயிலாக விண்ணப்பிக்கவேண்டும் என அறிவுறுத்தப்படும். ஆனால் தேர்விற்கு குறுகிய அவகாசமே உள்ள நிலையில் இதுவரையில் தேர்வு குறித்த அறிவிப்பை அரசு அறிவிக்காததால் ஆசிரியராக ஆவதற்காக கனவு கண்டுகொண்டிருப்பவர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள் -29-08-2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:39

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம்
புறத்த புகழும் இல.

உரை:
அறநெறியில் வாழ்வதன் பயனாக வருவதே இன்பமாகும். அறத்தோடு பொருந்தாமல் வருவன எல்லாம் இன்பம் இல்லாதவை: புகழும் இல்லாதவை.

பழமொழி :

Ass loaded with gold still eats thistles

கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை

பொன்மொழி:

நம்முடன் வாழ்வோரைப் புரிந்து கொள்வதற்கு நம்மை நாமே முதற்கண்
புரிந்து கொள்வது அவசியம்.

-அன்னை தெரசா.

இரண்டொழுக்க பண்பாடு :

1. நெகிழிப்பைகள் பயன்பாட்டினை என்னால் இயன்றவரை தவிர்த்திடுவேன்.

2.இயற்கை என்பது இறைவன் கொடுத்த வரம். அதை காப்பதே நம் கடமை.

பொது அறிவு :

1.இந்தியாவின் ”மான்செஸ்டர்” என அழைக்கப்படும் நகரம் எது?
மும்பை

2.உலகின் பருத்தி ஆடை உற்பத்தி செய்யும் நாடுகளில் இந்தியா எத்தனையாவது இடத்தில் உள்ளது?
மூன்றாமிடம்

நீதிக்கதை :


பிறரை வஞ்சித்தால் நீயும் வஞ்சிக்கப் படுவாய்


ஒரு காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி…அவர்கள் ஏமாறுவதைக் கண்டு ..மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

ஒரு நாள், கொக்கு ஒன்றை நரி சந்தித்தது. அதனுடன் நட்புக் கொண்டு…அந்த கொக்கை நரி தன் வீட்டிற்கு விருந்துக்கு அழைத்தது.
கொக்கும் …நரியை நண்பன் என நினைத்து அதனுடைய வீட்டிற்குச் சென்றது.

கொக்கைக் கண்ட நரி..ஒரு தட்டில் கஞ்சியை எடுத்து வந்து கொக்குக்கு உண்ணக் கொடுத்தது. கொக்கு அதன் நீண்ட அலகால்..தட்டிலிருந்த கஞ்சியை சாப்பிட முடியவில்லை…ஒரு வாயகன்ற ஜாடி போன்ற பாத்திரங்களில் இருந்தால் மட்டுமே …கொக்கு தன் அலகை அதனுள் விட்டு கஞ்சியை உறிஞ்சி குடிக்க முடியும்.
கொக்கு படும் துன்பத்தைக் கண்டு நரி சிரித்து மகிழ்ந்தது…அவமானம் அடைந்த கொக்கு..நரிக்கு பாடம் புகட்டத் தீர்மானித்தது.

நரியை ஒரு நாள் கொக்கு விருந்துக்கு அழைத்தது..வந்த நரியை நன்கு உபசரித்த கொக்கு..ஒரு வாய் குறுகிய ஜாடியில்..கஞ்சியைக் கொண்டு வந்து வைத்தது

நரியால்..நாக்கால் நக்கி கஞ்சியை குடிக்க முடியவில்லை..
அதைக் கண்ட கொக்கு ..’நரியாரே..இப்பொழுது எப்படி உங்களால் கஞ்சியை குடிக்க முடியவில்லையோ..அதே போல தட்டில் இருந்தால் …என்னால் குடிக்க முடியாது என தெரிந்தும் எனக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தி ..மனம் மகிழ்ந்தீர்கள்.ஆனால் நான் அப்படியில்லை..உங்களுக்கு பாடம் புகட்டவே ஜாடியில் கஞ்சியை வைத்தேன்…என்று கூறியபடியயே ..கஞ்சியை தட்டில் ஊற்றிக் கொடுத்தது.
தன்னை ஏமாற்றிய நரிக்கு கொக்கு நல்லதே செய்தது.

நரி தன் செயலுக்கு வருத்தம் தெரிவித்து விட்டு ..கஞ்சியைக் குடித்தது.
அது முதல் திருந்திய நரி. பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.
பிறரை வஞ்சித்து அவர் படும் துன்பம் கண்டு மகிழ்ச்சியடையாது. மற்றவர்களுக்கு நாமும் எம்மாலான உதவிகளைச் செய்ய வேண்டும்.


இன்றைய செய்தி துளிகள்:

1.இந்தியாவுக்கு குறை தீர்க்கும் அதிகாரியை நியமிக்காதது ஏன்? முகநூல், வாட்ஸ் ஆப், டிவிட்டர் நிறுவனங்களுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

2.காவிரியில் மீண்டும் வெள்ளப்பெருக்கு....... முக்கொம்பு பணிகள் பாதிக்கும் அபாயம் உடைப்பை அடைக்க தீவிரம்

3.வெப்பச்சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் கனமழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

4.2019 ஜனவரி 3-இல் சந்திராயன்-2 செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்படும்: இஸ்ரோ தலைவர் சிவன் தகவல்

5.ஆசிய விளையாட்டு: 9 தங்கம், 19 வெள்ளி, 22 வெண்கலம் என 50 பதக்கங்களுடன் 8-வது இடத்தில் இந்தியா

ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும் ஊக்கத் தொகை

அரசுப் பள்ளிகளில் ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கும்ஊக்கத் தொகை இந்த ஆண்டு முதல் வழங்கப்பட உள்ளது.அமைச்சர் செங்கோட்டையன்

கட்டியணைத்து வாழ்த்திய குழந்தைகள்.... இதுதான் விருது!" தேசிய நல்லாசிரியர் ஸதி டீச்சர்மறைந்த இந்தியக் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணனின்
பிறந்த நாளான செப்டம்ர் 5-ம் தேதி, தேசிய ஆசிரியர்கள் தினமாக ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அதையொட்டி, மத்திய-மாநில அரசுகள் சிறந்த ஆசிரியர்களைத் தேர்வுசெய்து கெளரவப்படுத்தும். இந்த ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருது பெறுவோர் பட்டியலில், தமிழகத்திலிருந்து கோவையைச் சேர்ந்த ஆசிரியை ஆர்.ஸதி மட்டுமே இடம்பிடித்துள்ளார். கோவை மாவட்டம், மலுமிச்சம்பட்டி ஊராடி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை இவர். வாழ்த்துடன் உரையாடினோம்.``என் பூர்வீகம், கோத்தனூர். அப்பா கல்வித்துறையில் வேலை பார்த்தார். நானும் என் அக்காவும் கல்வித்துறையிலேயே பயணிக்க ஆசைப்பட்டார். 1995-ம் ஆண்டு, டிஆர்பி (ஆசிரியர் தகுதித்தேர்வு) எழுதி, ஆசிரியராகத் தேர்வானேன். சின்னமநாயக்கன்பாளையம் கிராமத்தின் அரசுத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியைப் பணியைத் தொடங்கினேன். பல பள்ளிகளுக்கு இடமாறுதலாகி, 2009-ம் ஆண்டில், தலைமை ஆசிரியை ஆனேன். இந்தப் பள்ளிக்கு வந்தது 2012-ம் ஆண்டு.


நான் வொர்க் பண்ணின எல்லாப் பள்ளிகளிலுமே, மாணவர்கள் நல்ல சுற்றுப்புறச் சூழலில் படிக்கணும். அவர்களின் கல்வித்தரம் உயரணும் என்பதில் கவனமா இருப்பேன். பள்ளிகளின் அடிப்படை கட்டமைப்பு வசதிகளைப் பலரின் உதவிகளுடன் மேம்படுத்தியிருக்கிறேன். இந்தப் பள்ளிக்கு வந்தபோது, வகுப்பறையும் கட்டடங்களும் பழுதாகி இருந்தன. கழிவறை வசதி சரியில்லை. இவற்றைச் சரிசெய்ய களம் இறங்கினேன். மாணவர்களுக்குக் கழிவறை வசதியை ஏற்படுத்த, எஸ்.எஸ்.ஏ திட்டத்தில் கிடைத்த ஒரு லட்சம் ரூபாய் நிதி போதுமானதா இல்லை. எங்க கிராமத்தில் உள்ள எல்.என்.டி கம்பெனி நிர்வாகத்திடம் உதவி கேட்டேன்.
அவங்க கொடுத்த 5 லட்சம் நிதியுதவியால், தரமான கழிவறை வசதியை உருவாக்கினோம். அந்த முதல் வெற்றி, மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ஊக்கமாக அமைந்தது. அப்போது, 146 மாணவர்கள் இருந்தாங்க. மாணவர்கள் இடைநிற்றலும் அதிகமா இருந்துச்சு. இந்தக் கிராமத்தில் அதிக அளவில் வசிக்கும் வடமாநிலத் தொழிலாளர்களின் பிள்ளைகளும் எங்க ஸ்கூல்ல படிக்கிறாங்க. அவங்களுக்குத் தமிழ் சொல்லிக்கொடுப்பது சவாலாக இருந்துச்சு. இதை எல்லாம் மாற்றி, தனியார் பள்ளிக்கு இணையா கொண்டுவரும் முயற்சியில் இறங்கினோம்'' எனப் பெருமிதத்துடன் தொடர்கிறார் ஸதி.
``நிறைய நிறுவனங்களின் உதவியை நாடினோம். எல்.என்.டி நிறுவனம் 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதுக் கட்டடங்களைக் கட்டிக்கொடுத்தாங்க. டேப்லெட் பயன்பாட்டுடன், ஸ்மார்ட் கிளாஸ் வசதி மற்றும் இரண்டு ஆசிரியர்களுக்கு ஊதியம் உட்பட ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான உதவிகளைச் செய்துகொடுத்திருக்காங்க. `மெஷர் கட்டிங்' என்ற நிறுவனம், சுகாதாரமான குடிநீர் வசதி, கணினி பயிற்சி வசதிகளைச் செய்துகொடுத்தாங்க. வி.கே.சி நிறுவனத்தினர்,
ஒவ்வோர் ஆண்டும் மாணவர்கள் எல்லோருக்கும் புது ஷூ, பெல்ட், டை, ஐடி கார்டு கொடுத்து உதவுறாங்க. ஃபர்னிச்சர் உதவிகளையும் செய்றாங்க. இவர்களின் உதவியால், சில ஆண்டுகளிலேயே எங்க பள்ளியின் கட்டமைப்பு வசதிகள் சிறப்பாச்சு. இப்போ 270 மாணவர்கள் படிக்கிறாங்க. தமிழ், ஆங்கிலம் என இரண்டு மொழிகளிலும் மாணவர்கள் சிறப்பா இருக்காங்க. 42 வட மாநில மாணவர்களின் தமிழ்ப் பேச்சும் இனிமையா இருக்கும். யோகா, கராத்தே, இசைப் பயிற்சி, விளையாட்டுப் பயிற்சி உட்பட பல பயிற்சிகள் கொடுக்கிறோம். பல போட்டிகள்லயும் மாணவர்கள் தொடர்ந்து வெற்றி பெற்றுவருகிறாங்க" என்கிறார்.
பள்ளி மாணவர்களால் சிறப்பாக நடைபெற்றுவரும் `குட்டி கமாண்டோ' திட்டம் பற்றிக் குறிப்பிடும் ஸதி, ``எங்க கிராமத்தில் குழந்தைகள் உட்பட பொதுமக்கள் பலரும் திறந்தவெளியில் மலம் கழிப்பதால், பல்வேறு உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டுச்சு. பல குழந்தைகள் சரிவர பள்ளிக்கு வராம இருந்தாங்க. இதைத் தடுக்க, `குட்டி கமாண்டோ' என்ற படையை உருவாக்கினேன். அந்தப் படையில் 10 மாணவர்கள் வீரர்களாக இருக்காங்க. அவங்க தினமும் காலையில 5.30 மணிக்கும், மாலை பள்ளி முடிந்ததும் ஊருக்குள் விசிலடித்தபடி வலம்வருவாங்க. அதனால்,
பலரும் பொதுவெளியில் மலம் கழிப்பதில்லை. மீறிக் கழிப்பவர்களிடம், `பொதுக்கழிப்பிட வசதி அல்லது தனிக்கழிப்பிட வசதியைப் பயன்படுத்துங்க. இல்லையெனில் உடல்நலப் பாதிப்புகள் ஏற்படும்'னு சொல்வாங்க. இந்தத் திட்டம் பெரிய அளவில் வெற்றிபெற்றிருக்கு. அடுத்து, பிளாஸ்டிக் பை பயன்பாடில்லா கிராமம் என்ற முயற்சியை மேற்கொண்டிருக்கிறோம்" எனப் புன்னகைக்கிறார் ஸதி.

இவர், கடந்த ஆண்டு மாநில அளவிலான `சிறந்த நல்லாசிரியர் விருது' வென்றது குறிப்பிடத்தக்கது. ``தேசிய நல்லாசிரியர் விருது செய்தி கிடைச்சதும், நான் செய்துவரும் அறப்பணியை ஊக்கப்படுத்துவதாகவும், மற்ற ஆசிரியர்களுக்குத் தூண்டுகோலாகவும் இந்த விருது அமையும்னு நினைச்சேன். விருது செய்தியைக் கேள்விப்பட்டு, பல குழந்தைகள் எனக்கு போனில் வாழ்த்துச் சொன்னாங்க. எதிர்பாராத அவர்களின் வாழ்த்துகளால் நெகிழ்ந்துபோனேன். இன்னைக்குப் பள்ளி தொடங்கினதும், பிரேயர்ல விருது செய்தியைக் குழந்தைகள் எல்லோரிடமும் சொன்னேன். என்னைக் கட்டியணைத்து வாழ்த்துச் சொன்னாங்க. இதுவே சிறந்த விருதா நினைக்கிறேன். சீக்கிரமே குழந்தைகளுக்குப் பிரியாணி விருந்து கொடுத்துக் கொண்டாட ஆசைபடறேன்" என்கிறார் ஆசிரியை ஸதி.

வருமானவரி கணக்கு தாக்கல் செய்ய 31-ந் தேதியுடன் கால அவகாசம் நிறைவு வருமான வரித்துறை அதிகாரிகள் தகவல்
வருமானவரிச் சட்டத்தின் கீழ் தணிக்கை தேவைப்படாத பிரிவினர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய கடந்த மாதம் (ஜூலை) 31-ந் தேதியை கடைசி நாளாக வருமான வரித்துறை அறிவித்து இருந்தது. பின்னர் ஒரு மாத காலம் அதாவது வருகிற 31-ந் தேதி வரை கால அவகாசம் அளிக்கப்பட்டது. அந்த கால அவகாசமும் வருகிற 31-ந் தேதியுடன் நிறைவு பெறுகிறது.

மாத ஊதியம், ஓய்வூதியம், வீட்டு வாடகை உள்ளிட்ட சொத்திலிருந்து வருமானம் பெறுவோர், மூலதன மதிப்பு உயர்வு, வர்த்தகம் அல்லது தொழில் மூலம் வருமானம் பெறுவோர், இதர வருமானம் பெறுவோர் இந்த வகையின் கீழ் வருகின்றனர்.

வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்வோருக்கு அபராத கட்டணம் ஏதும் இல்லை. மொத்த ஆண்டு வருமானம் ரூ.5 லட்சத்துக்கு மிகாமல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்கு முன்பாக தாக்கல் செய்தால் அபராத கட்டணமாக ரூ.1,000 செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கும் மேல் உள்ளவர்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு தொடங்கி டிசம்பர் 31-ந் தேதிக்கு முன்னதாக தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.5 ஆயிரம் செலுத்த வேண்டும்.

மொத்த வருமானம் ரூ.5 லட்சத்துக்கு அதிகமாக இருப்போர் தங்கள் வருமானவரி கணக்கை வருகிற 31-ந் தேதிக்கு பிறகு, அடுத்த ஆண்டு மார்ச் 31-ந் தேதிக்குள் தாக்கல் செய்தால் தாமத கட்டணம் ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். இந்த கால கட்டத்துக்கு பிறகு வருமான வரிக்கணக்கை தாக்கல் செய்ய முடியாது.

அனைத்து வரி செலுத்துவோரும் தங்களது வருமானவரி கணக்குகளை மின்னணு முறையில் தாக்கல் செய்ய வேண்டும். மாத ஊதியம், இதர ஊதியங்கள் மற்றும் வீட்டு சொத்தில் இருந்து வருமானம் பெறுவோர் ஆகியோர் காகித வடிவில் வருமானவரி கணக்கை தாக்கல் செய்யலாம்.

வருமானவரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு ஏதுவாக, சென்னை, நுங்கம்பாக்கம், உத்தமர் காந்தி சாலையில் உள்ள வருமானவரி அலுவலகத்தில் வருமான வரி கணக்கு முன் தயாரிப்பு உதவி மையமும் திறக்கப்பட்டு செயல்பட்டு வந்தது.

இந்த நிலையில் வருகிற 31-ந் தேதி வரை வருமானவரி கணக்கை அபராதம் இன்றி தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. மழை வெள்ள பெருக்கு காரணமாக கேரள, கர்நாடக மாநிலங்கள் சார்பில் மேலும் கால அவகாசம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த தேதியில் மாற்றம் செய்வது குறித்து அதிகாரபூர்வமான தகவல்கள் எதுவும் வரவில்லை.

மேற்கண்ட தகவல்களை வருமான வரித்துறை அதி காரிகள் தெரிவித்தனர்.

அரசுபள்ளிகளை தத்தெடுத்து மேம்படுத்த முன்னாள் மாணவர்கள், தொழில் அதிபர்களுக்கு அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு!

முன்னாள் மாணவர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் அரசு பள்ளிகளை தத்தெடுத்து அதனை மேம்படுத்தி சேவை செய்ய முன்வர வேண்டும்.

தத்தெடுத்து சேவை செய்ய முன்வருபவர்களுக்கு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என  நிர்வாக அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அழைப்பு விடுத்துள்ளார்.

உதயசந்திரன் மாற்றத்தால் உற்சாகம் இழந்த ஆசிரியர்கள்: அதிருப்தியில் கல்வியாளர்கள்

கல்வித்துறையில் பல்வேறு மாற்றங்களுக்கு காரணமான பாடத்திட்ட செயலர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டது கல்வியாளர்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இத்துறை அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றபோது செயலராக உதயசந்திரன் நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் 12 ஆண்டுகளுக்கும் மேலாக மாற்றப்படாத பாடத் திட்டங்களை மாற்ற முயற்சி எடுத்து 1,6,9 மற்றும் பிளஸ் 1 வகுப்புக்கு புதிய பாடத்திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

பாடத்திட்டம் உருவாக்க அனுபவம் வாய்ந்த கல்வியாளர்கள், விஞ்ஞானிகள், வரலாற்று ஆய்வாளர்களை தேடிப் பிடித்தார். இது கல்வியாளர்கள், பெற்றோரை மகிழ்ச்சியடைய செய்தது. தவிர பிற மாநிலங்களில் பள்ளி கல்வி செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்ய கேரளா, மகாராஷ்டிரா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு கல்வித்துறை இணை இயக்குனர்களை அனுப்பினார். அவர்களின் பரிந்துரைகளை புதிய பாடத்திட்டங்களில் புகுத்தினார்.

தமிழக மாணவர்களுக்கு பெரும் சவாலாக உள்ள 'நீட்' தேர்வில் கேட்கப்படும் 99 சதவீதம் வினாக்களுக்கு, புதிய பாடத்திட்டங்களில் பதில் உள்ளதாக வெளிப்படையாகவே அவர் கூறி வந்தார். இதன் மூலம் பெற்றோர், மாணவர்கள், ஆசிரியர்களுக்கு நம்பிக்கை பிறந்தது. கற்பித்தலில் புதுமை ஏற்படுத்தும் வகையில் புதியபாடத் திட்டங்களில் 'கியூ.ஆர். கோடு' உட்பட பல அம்சங்கள் புகுத்தப்பட்டதற்கும் உதயசந்திரனுக்கு வரவேற்பு கிடைத்தது.

என்னவாகும் பாடத்திட்டம் பணி :

இதற்கிடையே இரண்டாம் கட்டமாக பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 உட்பட பிற வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கும் பணிகள் நடக்கின்றன. உதயசந்திரனுக்கு பதில் பாடத்திட்ட செயலராக யாரையும் நியமிக்காததால், அந்த பணிகள் என்னவாகும் என்ற கேள்வி எழுந்துள்ளது. உதயசந்திரனை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆசிரியர்கள் 'வாட்ஸ் ஆப்' முகப்பில் அவரது படத்தை வைத்துள்ளது கல்வித்துறையை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

கருத்துகேட்பு கூட்டம்

புதிய பாடத்திட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள் குறித்து மாவட்ட வாரியாக கருத்துக் கேட்பு கூட்டங்களை உதயசந்திரன் நடத்தினார். இதுபோன்ற கூட்டத்திற்கு துறை அமைச்சரையும் அதிகாரிகள் அழைப்பது வழக்கம். ஆனால் உதயசந்திரன் அழைக்காததால் அமைச்சர் தரப்பு அதிருப்தியில் இருந்தது. அவர் மாற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்கின்றனர்.

உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: புதிய பாடத்திட்டங்களில் என்ன பகுதிகள் சேர்க்க வேண்டும் என்பது குறித்து முடிவு செய்ய பாடவாரியாக நிபுணர்கள், பேராசிரியர்கள், இணை இயக்குனர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டிய பகுதிகள் அனைத்தும் முடிவு செய்யப்பட்டுவிட்டன.

1, 6, 9, பிளஸ் 1 தவிர மீதமுள்ள அனைத்து வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணிகள் நடக்கின்றன. இதனால் உதயசந்திரன் மாற்றத்தால் பணிகள் பாதிக்க வாய்ப்பில்லை. இருந்தாலும் முழுமையாக பாடத்திட்டம் வெளிவரும் வரை அவர் தொடர்ந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும், என்றார்