Title of the document

2025-ம் ஆண்டுக்கான அரசு பொது விடுமுறை நாட்கள் அறிவிப்பு

G.O 792  - Tamil Nadu Public Holiday List 2025 - தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாட்கள் அரசாணை !! 

Tamil Nadu Government Public Holidays List 2025 :

தமிழக அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் முக்கிய தினங்கள் மற்றும் மத ரீதியான பண்டிகைகள் காரணமாக, அரசு பொது விடுமுறைகள் வழங்கப்படுவது வழக்கம். ஒவ்வொரு ஆண்டும் இந்த பொது விடுமுறை பட்டியல் முன்கூட்டியே வெளியிடப்படும். அதன்படி, 2025-ம் ஆண்டுக்கான தமிழ்நாடு அரசு விடுமுறை பட்டியல் வெளியாகி உள்ளது.

அந்த அறிவிப்பின்படி, அடுத்த ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 25-ந்தேதி வரை மொத்தம் 23 நாட்கள் பொது விடுமுறை நாட்கள் ஆகும். 2025-ம் ஆண்டில் அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளும் பொது விடுமுறை நாட்களாகும்.

ஆங்கிலப் புத்தாண்டு, பொங்கல், திருவள்ளுவர் தினம், உழவர் தினம், தைப் பூசம், குடியரசு தினம், தெலுங்கு வருடப் பிறப்பு, மகாவீர் ஜெயந்தி, புனித வெள்ளி, தமிழ்ப் புத்தாண்டு, ரம்ஜான், மே தினம், பக்ரீத், மொகரம், சுதந்திர தினம், கிருஷ்ண ஜெயந்தி, விநாயகர் சதுர்த்தி, மிலாது நபி, காந்தி ஜெயந்தி, ஆயுத பூஜை, விஜய தசமி, தீபாவளி, கிறிஸ்துமஸ் ஆகிய தினங்கள் பொது விடுமுறை தினங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

அதிகபட்சமாக ஜனவரி மாதம் 5 நாட்கள் பொது விடுமுறையாகும். ஏப்ரல் மற்றும் அக்டோபர் ஆகிய மாதங்களில் தலா 4 நாட்கள் பொது விடுமுறை வருகிறது. ஏப்ரல் 1-ந்தேதி (வங்கிகள் ஆண்டுக் கணக்கு முடிவு) வணிகம் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டும் பொது விடுமுறையாகும். குடியரசு தினம், தெலுங்கு வருடப்பிறப்பு, மொகரம் பண்டிகை ஆகிய பொது விடுமுறைகள் ஞாயிற்றுக்கிழமைகளில் வருவது குறிப்பிடத்தக்கது.

G.O 792  - Tamil Nadu Public Holiday List 2025 - தமிழ்நாடு அரசு பொது விடுமுறை நாட்கள் அரசாணை !! 


பொது விடுமுறை நாட்கள் 2025
 பொது விடுமுறை நாட்கள் 2025


பொது விடுமுறை நாட்கள் 2025
 பொது விடுமுறை நாட்கள் 2025


இந்த அறிவிப்பு, தமிழகத்தில் உள்ள வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொது விடுமுறை நாட்கள் 2025,Tamil Nadu Government Public Holidays List 2025,
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post