Title of the document

School Re Opening instructions - கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு நாள் குறித்து - இயக்குநரின் செயல்முறைகள் !!


தொடக்கக் கல்வி - அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகள் 2025-26ஆம் கல்வி ஆண்டு கோடை விடுமுறைக்குப் பின்னர் பள்ளிகள் திறப்பு நாள் குறித்து தகவல் தெரிவித்தல் தொடர்பாக. தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் செயல்படும் அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளின் நடப்புக் கல்வியாண்டிற்கான கடைசி வேலை நாள் 30.04.2025 எனவும் 01.05.2025 முதல் கோடை விடுமுறை எனவும் அறிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 2025-26ஆம் புதிய கல்வி ஆண்டிற்கான பள்ளி திறக்கும் நாள் 02.06.2025 (திங்கள் கிழமை) என அறிவிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளையும் திறப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வட்டாரக் கல்வி அலுவலர்கள் மூலம் அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியர்களுக்கும் அறிவுரைகள் வழங்குமாறு அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்களும் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post