பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு: விரைவில் முடிக்க உத்தரவு

பள்ளிக்குச் செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது: 
ஆண்டுதோறும் 14 வயதுக்குள்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரி என 3 முறை சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இதில் கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் இணைப்பு சிறப்புப் பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.அதைத் தொடர்ந்து நடப்பு ஆண்டில் முதல் கட்டமாக ஏப்ரல், மே மாதங்களில் குடியிருப்பு வாரியான சிறப்பு கணக்கெடுப்பு (6-18 வயது) நடத்தி முடிக்க வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியப் பயிற்சியாளர்கள், ஆர்எம்எஸ்ஏ பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி கணக்கெடுப்புப் பணியை முதன்மை கல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் தொலைக்காட்சியை காண ஏற்பாடு: குழந்தைகளைக் கவர அனிமேஷன் திருக்குறள்

தமிழக அரசின் சார்பில் விரைவில் தொடங்கப்படவுள்ள கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.இதில், குழந்தைகளைக் கவரும் விதமாக அனிமேஷன் திருக்குறள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன.

தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படவுள்ளது. இதற்காக 32 மாவட்டங்களுக்கும் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய அலைவரிசை தொடங்கப்படவுள்ளது. இதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக்கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சியின் அனைத்துமாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

இது குறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியது:

கல்வித் தொலைக்காட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற வீதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஒளிப்பதிவு குழுவினருடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சி பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.அரசு கேபிளில் 200-ஆவது சேனலில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும். 24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் இதற்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது. முதல் நிகழ்ச்சியாக தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்க உரையும், அது தொடர்பான அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நிகழ்ச்சியைப் பார்க்க தவறிய மாணவர்கள், மாலையில் மறு ஒளிபரப்பில் காணலாம்.

17 வகை நிகழ்ச்சிகள்:

இதைத் தொடர்ந்து இந்த நாள் இனிய நாள், நலமே வளம், சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த குருவே துணை, சுட்டி கெட்டி, ஒழுக்கம் விழுப்பம் தரும் ஆகியவை உள்பட 17 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன. இவ்வாறு பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தினமும் தொகுத்து வழங்கப்படவுள்ளன.

இவை தினமும் மூன்று முறை என 24மணி நேரமும் ஒளிபரப்பாகும்.அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர் என்றனர்.

தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை

தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
தமிழகத்தில், ஏப்., 18ல், தேர்தல் நடக்கிறது.இதற்கான கண்காணிப்பு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.

சென்னையில், மாவட்ட தேர்தல் அதிகாரிதலைமையில், மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பணியில், 24 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும், முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது.தேர்தல் உயரதிகாரி, ஒருவர் கூறியதாவது:

மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படஇருக்கிறது.
பொதுவாகவே, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், தேர்தல் ஆணையத்தின் கீழ் அலுவலர்கள் வந்துவிடுகின்றனர்.

அதனால், உரிய விதிகளின் படி, தகுந்த காரணங்களுக்காக, தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே விடுப்பு வழங்க வழி வகை இருக்கிறது.அந்த குற்றச்செயல், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவேடில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு விடும். இதனால், அந்த அலுவலர்களின் பல்வேறு சலுகைகள்பாதிக்கப்படும்.

மேலும், தீவிர விசாரணைக்கு பின், குறிப்பிட்ட அலுவலர்கள் மீதான வழக்கை ரத்து செய்யும், அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கிறது. அதனால், தேர்தல் அலுவலர்கள் உரிய முறையிலும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை

தேர்தல் பணியில் முறைகேட்டில் ஈடுபட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.   தமிழகத்தில், ஏப்., 18ல், தேர்தல் நடக்கிறது. இதற்கான கண்காணிப்பு பணியில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.   சென்னையில், மாவட்ட தேர்தல் அதிகாரி தலைமையில், மூன்று தேர்தல் நடத்தும் அலுவலர்கள், 16 உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த பணியில், 24 ஆயிரம் வாக்குச்சாவடி அலுவலர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.   இந்நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட மறுக்கும், முறைகேட்டில் ஈடுபடும் அலுவலர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட இருக்கிறது. தேர்தல் உயரதிகாரி, ஒருவர் கூறியதாவது:   மக்கள் பிரிதிநிதித்துவ சட்டப்படி, தேர்தல் பணிக்கு வர மறுக்கும் அலுவலர்கள் மற்றும் பணியில் முறைகேட்டில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை மட்டுமின்றி வழக்குப்பதிவு செய்து, குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ளப்படஇருக்கிறது.   பொதுவாகவே, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த உடன், தேர்தல் ஆணையத்தின் கீழ் அலுவலர்கள் வந்துவிடுகின்றனர்.   அதனால், உரிய விதிகளின் படி, தகுந்த காரணங்களுக்காக, தவிர்க்க முடியாத சூழலில் மட்டுமே விடுப்பு வழங்க வழி வகை இருக்கிறது.அந்த குற்றச்செயல், சம்பந்தப்பட்ட அலுவலர்களின் பணிப்பதிவேடில் கட்டாயம் பதிவு செய்யப்பட்டு விடும்.    இதனால், அந்த அலுவலர்களின் பல்வேறு சலுகைகள்பாதிக்கப்படும்.   மேலும், தீவிர விசாரணைக்கு பின், குறிப்பிட்ட அலுவலர்கள் மீதான வழக்கை ரத்து செய்யும், அதிகாரம், தேர்தல் ஆணையத்திற்கு மட்டுமே இருக்கிறது.    அதனால், தேர்தல் அலுவலர்கள் உரிய முறையிலும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும்இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

அனைத்துப் பள்ளிகளிலும் கல்வித் தொலைக்காட்சியை காண ஏற்பாடு: குழந்தைகளைக் கவர அனிமேஷன் திருக்குறள்

தமிழக அரசின் சார்பில் விரைவில் தொடங்கப்படவுள்ள கல்வித் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிகளை அனைத்து அரசுப் பள்ளிகளிலும் மாணவர்கள் காண்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.    இதில், குழந்தைகளைக் கவரும் விதமாக அனிமேஷன் திருக்குறள் உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளன. தமிழகத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் கல்வித் தொலைக்காட்சி அலைவரிசை தொடங்கப்படவுள்ளது.    இதற்காக 32 மாவட்டங்களுக்கும் ஊடக  ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டு, ஒளிபரப்புக்குத் தேவையான ஏற்பாடுகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.    தமிழகத்தில் பள்ளி மாணவர்களிடம் கற்றலை மேம்படுத்தவும், தகவலை எளிதில் கொண்டு சேர்க்கும் விதமாகவும், கல்வித் தொலைக்காட்சி என்ற பெயரில் 24 மணி நேர புதிய அலைவரிசை தொடங்கப்படவுள்ளது.    இதற்காக சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் 8-ஆவது தளத்தில் புதிய தொலைக்காட்சிக்கான அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது.    இந்த அலுவலகத்தில் ரூ.1 கோடி மதிப்பில் தொலைக்காட்சி அலைவரிசை ஒளிபரப்பத் தேவையான காட்சியரங்கம், ஒளிப்பதிவுக் கூடங்கள், தொழில்நுட்ப சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளன.    இந்தநிலையில் கல்வித் தொலைக்காட்சியின் அனைத்து மாவட்ட ஊடக ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இது குறித்து பள்ளிக் கல்வி அதிகாரிகள் கூறியது:   கல்வித் தொலைக்காட்சி பணிகளை மேற்கொள்வதற்காக அனைத்து மாவட்டங்களிலும் தலா ஒரு அரசுப் பள்ளி ஆசிரியர் என்ற வீதத்தில் அனைத்து மாவட்டங்களிலும் ஊடக  ஒருங்கிணைப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.    இவர்கள், ஒளிப்பதிவு குழுவினருடன் சென்று மாவட்டத்தில் உள்ள கல்வி சார்ந்த நிகழ்ச்சிகளை காட்சி பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அரசு கேபிளில் 200-ஆவது சேனலில் கல்வித் தொலைக்காட்சி ஒளிபரப்பாகும்.    24 மணி நேரமும், கல்வித் தொடர்பான தகவல்கள் மாணவர்களைச் சென்றடையும் விதத்தில் இதற்கான நிகழ்ச்சி நிரல் வடிவமைக்கப்பட்டுள்ளது.   முதல் நிகழ்ச்சியாக தினமும் காலை 5 மணிக்கு குறளின் குரல் என்ற தலைப்பில் ஒரு திருக்குறளைப் பற்றிய விளக்க உரையும், அது தொடர்பான அனிமேஷன் விளக்கமும் இடம்பெறும். குழந்தைகளைக் கவரும் வகையில் இந்த நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. அதிகாலையில் நிகழ்ச்சியைப் பார்க்க தவறிய மாணவர்கள், மாலையில் மறு ஒளிபரப்பில் காணலாம்.   17 வகை நிகழ்ச்சிகள்:    இதைத் தொடர்ந்து இந்த நாள் இனிய நாள், நலமே வளம், சாதனை படைத்த ஆசிரியர்கள் குறித்த குருவே துணை, சுட்டி கெட்டி, ஒழுக்கம் விழுப்பம் தரும் ஆகியவை உள்பட 17 வகையான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகவுள்ளன.    இவ்வாறு பகல் ஒரு மணி வரை நிகழ்ச்சிகள் தினமும் தொகுத்து வழங்கப்படவுள்ளன. இவை தினமும் மூன்று முறை என 24 மணி நேரமும் ஒளிபரப்பாகும்.    அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் இந்த கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.    ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட வகுப்புக்கான ஒளிபரப்பை அந்த வகுப்பு மாணவர்கள் கண்டறிந்து பயன்பெறுவர் என்றனர்.

ஜூன் 3 முதல் இலவச பாடநூல் விநியோகம்: புதிய பாடத் திட்டப் பணிகள் நிறைவு

 பள்ளிக்கல்வியில் அனைத்து வகுப்புகளுக்கும் புதிய பாடத்திட்டப் பணிகள் நிறைவு பெற்றுள்ளது.    இதையடுத்து ஜூன் 3- ஆம் தேதி முதல் அரசுப் பள்ளி மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படவுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பத்தாண்டுகளுக்குப் பிறகு 2018-2019-ஆம் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் மாற்றியமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.    இதையடுத்து பாடத்திட்டம் மற்றும் உயர்நிலைக் குழுக்கள் அமைக்கப்பட்டு ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள்,  பேராசிரியர்கள்,  வல்லுநர்கள், உளவியல் நிபுணர்கள் வழிகாட்டுதலுடன் முதல் கட்டமாக 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.  வண்ணமயமான பக்கங்கள்,  க்யு.ஆர். குறியீடு,  யூ- டியூப் இணைப்பு, செல்லிடப்பேசி செயலியில் பதிவிறக்கம் என பல புதிய அம்சங்கள், தொழில்நுட்பங்களோடு அமையப்பெற்ற புதிய பாடநூல்கள் அனைவரது மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றன.    இதையடுத்து எஞ்சியுள்ள 2, 3, 4, 5, 7, 8, 11, 12 ஆகிய வகுப்புகளுக்கான பாடத்திட்ட பணிகள் கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் தொடங்கி நடைபெற்று வந்தன.   இது குறித்து பாடத்திட்டக் குழுவினர் கூறுகையில், ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பில் 2, 7, 10, 12 ஆகிய நான்கு வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டம் 2019-20-ஆம் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படும் என கூறப்பட்டிருந்தது.    இதையடுத்து திருத்தப்பட்ட அரசாணையில் அனைத்து வகுப்புகளுக்கும் வரும் கல்வியாண்டில் புதிய பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.    இதையடுத்து பாடத்திட்டப் பணிகள் மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் முழு வீச்சில் நடைபெற்று வந்தன.    இந்த எட்டு வகுப்புகளுக்கும் பிறமொழிகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட பாடங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.    ஒவ்வொரு பாடத்துக்கான வடிவமைப்பு முடிவடைந்த பின்னர் அதை பேராசிரியர் கொண்ட குழுவினர் மேலாய்வு செய்துள்ளனர்.   நீட்,  ஜே.இ.இ. நுழைவுத் தேர்வுகளை கருத்தில் கொண்டு பாட நூல்களில் சிந்தனையைத் தூண்டும் பாடப் பகுதிகளை இணைத்துள்ளோம்.    தற்போது பாடத்திட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன. இதையடுத்து பாடநூல்கள் அச்சிடும் பணி விரைவில் நடைபெறவுள்ளது.     இதைத் தொடர்ந்து திட்டமிட்டபடி வரும் கல்வியாண்டில் ஜூன் 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவ,  மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கப்படும் என்றனர்.

பிளஸ்–1 பொதுத்தேர்வு நிறைவு மே 8–ந் தேதி முடிவு வெளியீடு

பிளஸ்–1 பொதுத்தேர்வு கடந்த 6–ந் தேதி தொடங்கி நடைபெற்று வந்தது. நேற்று கம்ப்யூட்டர் சயின்ஸ், நெறிமுறைகள் மற்றும் இந்திய கலாசாரம், உயிரி வேதியியல், புள்ளியியல் உள்பட சில பாடங்களுக்கான தேர்வு நடந்தது.  இதில் புள்ளியியல் தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ–மாணவிகள் கருத்துகளை கூறினர்.  நேற்று நடந்த இந்த தேர்வுகளுடன் பிளஸ்–1 மாணவர்களுக்கான பொதுத்தேர்வு நிறைவடைந்து இருக்கிறது.    விடைத்தாள்களை திருத்தும் பணிகள் அடுத்த மாதத்தில் தொடங்கப்பட இருக்கின்றன.   தேர்வு முடிவுகள் வருகிற மே மாதம் 8–ந் தேதி வெளியிடப்பட இருக்கிறது.

மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்களின் ‘1 பிளஸ் 3’திட்டம்: தீவிர பிரச்சாரத்தில் இறங்கியுள்ள சங்க நிர்வாகிகள்

 மக்களவைத் தேர்தலில் அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்தில் உள்ள மூன்று பேரை தங்கள் கோரிக்கைகளை ஏற்கும் கூட்டணிக்கு வாக்களிக்கச் செய்ய தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர்.    தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசு ஊழி யர்கள் சங்கங்களும் தங்கள் பங்குக்கு பிரச்சாரத்தை முடுக்கிவிட்டுள்ளன.    தங்கள் போராட்டத்தை ஒடுக்கியவர்களுக்கு பாடம் கற்பிக்க வேண்டும் என வலியுறுத்தி சங்க உறுப்பினர்களின் வாட்ஸ் அப் குரூப் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் மூலம் தங்கள் கருத்துகளை பரப்பி வருகின்றனர்.    போராட்டத்தின்போது அடைந்த துயரங் களை உருக்கமாக தெரிவித்து, யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து வருகின்றனர். தேர்தல் பணிக்குச் செல்லும் ஊழியர்கள், தபால் மூலம் வாக்குகளை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.    அதோடு, தங்கள் குடும்பத்தில் உள்ளோரையும் வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வருகின்றனர்.    மக்களவைத் தேர்தலில் சிந்தாமல், சிதறாமல் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் குடும்பத்தினர் 100 சதவீதம் ஓட்டுப் பதிவு செய்ய வேண்டும் என்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர்.    ஒரு அரசு ஊழியர் குறைந்தது தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேரையாவது தாங்கள் சொல்லும் கட்சிக்கு வாக்களிக்கச் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தி வரு கின்றனர். இதை ‘1 பிளஸ் 3’ என பெயரிட்டு அழைக்கின்றனர்.    இதன்படி ஒரு அரசு ஊழியர் அவரது தந்தை, தாய், மனைவி, வாக்களிக்க தகுதி உள்ள மகன், மகள் ஆகியோரில் குறைந்தது 3 பேரையாவது தங்களுக்கு ஆதரவான கட்சிக்கு வாக்களிக்கச் செய்ய பிரச்சாரம் செய்து வருகின்றனர்.    இதுகுறித்து அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது:   எந்த முறையும் இல்லாத அளவுக்கு இந்த முறை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் நடத்திய போராட்டத்தில் ஒடுக்கப்பட்டோம். எங்கள் வலிமையைக் காட்ட இதுவே தருணம்.   எனவே ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் போராட்டத்தின்போது எப்படி ஒற்றுமையுடன் செயல்பட்டோமோ அதே ஒற்றுமையுடன் எங்கள் வலிமையை இத் தேர்தலில் காட்டுவோம். இதற்காக 1 பிளஸ் 3 திட்டத்தை கையில் எடுத்துள்ளோம்.    ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மட்டுமின்றி அவர்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களும் எங்களது பாதிப்பை உணர்ந்துள்ளனர்.    எனவே அவர்களையும் 100 சதவீதம் வாக்களிக்கச் செய்யும் முயற்சியில் ஈடு பட்டுள்ளோம் என்றார்.

பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை விரைவில் முடிக்க வேண்டும்: மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவு

 பள்ளிக்கு செல்லாத குழந்தைகள் கணக்கெடுப்பு பணியை ஏப்ரல், மே மாதங்களில் நடத்தி முடிக்க மாநில திட்ட இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.    இதுகுறித்து மாநில திட்ட இயக்குநர் கே.சுடலைக்கண்ணன், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில், ‘‘ஆண்டுதோறும் 14 வயதுக்குட்பட்ட பள்ளி செல்லாத மற்றும் இடைநின்ற குழந்தைகளை கண்டறிய மே, அக்டோபர், ஜனவரிஎன 3 முறை சிறப்பு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.    இதில்கண்டறியப்படும் குழந்தைகளுக்கு ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வியின் கீழ் உண்டு உறைவிட சிறப்புப் பயிற்சி மையங்கள் மற்றும் இணைப்பு சிறப்பு பயிற்சி மையங்கள் மூலம் கல்வி வழங்கப்பட்டு வருகிறது.    அதைத்தொடர்ந்து நடப்பாண்டும் முதல்கட்டமாக ஏப்ரல், மேமாதங்களில் குடியிருப்பு வாரியான சிறப்பு கணக்கெடுப்பு (6-18 வயது) நடத்தி முடிக்க வேண்டும்.    அனைத்து மாவட்டங்களிலும் ஆசிரியப் பயிற்சியாளர்கள், ஆர்எம்எஸ்ஏ பணியாளர்கள், ஆசிரியர்கள், அங்கன் வாடிபணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் உதவியுடன் வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களின்படி கணக்கெடுப்பு பணியை முதன்மைகல்வி அதிகாரிகள் நடத்தி முடிக்கவேண்டும்’’என்று கூறப்பட்டுள்ளது.

மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்பு தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு

தமிழகத்தில் மெட்ரிக் பள்ளிகளில் 1 முதல் 9ம் வகுப்புகளின் 3ம் பருவ பருவத் தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.    ஏப்ரல் 12ம் தேதியோடு முழு ஆண்டுத் தேர்வை நடத்தி முடிக்க அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.    மெட்ரிக் பள்ளிகளில் 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 29ம் தேதியுடன் பொதுத்தேர்வுகள் முடிவடையவுள்ளது குறிப்பிடத்தக்கது.    தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் காலியாக உள்ள 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக ஏப்ரல் 18ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.    இதையடுத்து, அனைத்து அரசியல் கட்சியினரும் கூட்டணி, தொகுதி ஒதுக்கீடு, மற்றும் பிரச்சாரம் உள்ளிட்ட பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.    அதேபோல, தேர்தல் கமிஷனும் இதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இதனையடுத்து பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் கடந்த 14ம் தேதி தேர்வு குறித்து புதிய மாற்றம் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.    இது தொடர்பாக, அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளது.   அதில் 10,11,12ம் வகுப்பு பொதுத்தேர்வுகள் மார்ச் 29ம் தேதியுடன் முடிவடையும் நிலையில், மற்ற வகுப்புகளுக்கு 3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் நடத்தி முடிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.  3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 1ம் தேதி தொடங்கி ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்றும், அதற்கான கால அட்டவணையை அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்ப வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.    இதையடுத்து, 2018-19ம் கல்வியாண்டில் ஏப்ரல் 12ம் தேதியே கடைசி வேலை நாள் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார்.   இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள அனைத்து மெட்ரிக் பள்ளிகளுக்கும் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.    1 முதல் 9ம் வகுப்புகளுக்கு 3ம் பருவ தேர்வுகளை ஏப்ரல் 12ம் தேதிக்குள் முடிக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளுக்கான கல்விக்  கட்டணம் விரைவில் மாற்றம்: நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு

 தனியார் சுயநிதி கல்லூரிகளில் பிஎட், எம்எட் உள்ளிட்ட படிப்புகளுக்கான கல்விக் கட்டணத்தை மாற்றியமைக்க நீதிபதி என்.வி.பாலசுப்ரமணியன் குழு முடிவு செய்துள்ளது.    தமிழ்நாட்டில் 500-க்கும் மேற்பட்ட கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சிப் பள்ளிகள், உடற் கல்வியியல் கல்லூரிகள் உள்ளன. கல்வியியல் கல்லூரிகளில் பிஎட், எம்எட் படிப்புகளும் ஒருசில கல்லூரிகளில் ஒருங்கிணைந்த பிஎஸ்சி.,பிஎட், மற்றும் பிஏ.,பிஎட் படிப்புகளும் (ஐந்தாண்டு காலம்) உள்ளன.    ஆசிரியர் பயிற்சி பள்ளிகளில் தொடக்க கல்வி டிப்ளமோ (இடைநிலை ஆசிரியர் பயிற்சி) படிப்புகளும், உடற்கல்வியியல் கல்லூரிகளில் பிபிஎட், எம்பிஎட் படிப்புகளும் வழங்கப்படுகின்றன.    தனியார் கல்லூரிகளின் கட்ட ணத்தை ஒழுங்குபடுத்த நீதிபதி என்.வி. பாலசுப்ரமணியன் கட்டண நிர்ணயக் குழு இயங்கி வருகிறது.    இக்குழு கடந்த 2016-ம் ஆண்டு கட்டணம் நிர்ணயித்தது. இக்கட்டணம் இந்த ஆண்டுடன் முடிவடைவதால், புதிய கட்டணத்தை நிர்ணயிக்க உள்ளது. புதிய கல்விக் கட்டணம் அடுத்த 3 ஆண்டுகளுக்கு (2019-20, 2020-21, 2021-22) அமலில் இருக்கும்.   கல்லூரிகள் சார்பில் எதிர்பார்க் கும் உத்தேச கல்விக் கட்டணம், வழங்கப்படும் படிப்புகள், உள் கட்டமைப்பு வசதிகள் உள்ளிட்ட விவரங்களை மார்ச் 25-ம் தேதிக்குள் சமர்ப்பிக்குமாறு அனைத்து தனியார் கல்லூரிகளின் முதல்வர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இக்குழு தகவல் அனுப்பியுள்ளது.    கல்லூரிகள் தரப்பில் தரப்படும் கல்விக் கட்டணம் ஆய்வு செய்யப்பட்டு அங்குள்ள உள்கட்டமைப்பு வசதிகள், கட்டிட வசதிகள், ஆய்வக வசதிகளை கருத்தில் கொண்டு புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது.   தற்போதைய கல்விக் கட்டணம் (ஆண்டுக்கு) டிடிஎட் - ரூ.15,000, பிஎட் - ரூ.37,500, எம்எட் - ரூ.38,000, பிபிஎட் - ரூ.20,000, எம்பிஎட் - ரூ.22,500, பிஎஸ்சி.பிஎட். - ரூ.25,000, பிஏ.பிஎட். - ரூ.22,500 என்று உள்ளது.

School Morning Prayer Activities - 22.03.2019 பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்

 School Morning Prayer Activities  பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்
 School Morning Prayer Activities  பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்திருக்குறள்:156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

பழமொழி :

Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

பொன்மொழி:

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
  - ஜெபர்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :


1.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
புதுக்கோட்டை

2.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?
சிவகாசி

நீதிக்கதை :

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்
(The Foolish Lion and the Clever Rabbit)


அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.


சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.

இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.


இன்றைய செய்தி துளிகள்:

1) நடுநிலையோடு தேர்தல் பணி ஜாக்டோஜியோ அறிவிப்பு!

2) காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு.

3) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடு!

4) அருகாமை வாக்குசாவடிகளில் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி: தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

5) யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர்  விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றார்.

'நீட்' தேர்வில் ஒரு வினாவிற்கு ஒரு நிமிட நேரம்

 தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சியில் 'நீட்' குறித்து சென்னை ஸ்மார்ட் இன்ஸ்டிடியூட் நிறுவனர் கே.கே.ஆனந்த் பேசியதாவது:    இத்தேர்வில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டத்தில் இருந்து தான் வினாக்கள் கேட்கப்படும். இத்தேர்வுக்கு இன்னும் ஒன்றரை மாதங்கள் உள்ளன.   திட்டமிட்டு படித்தால் வெற்றி பெறலாம்.இத்தேர்வில் பயாலஜி - 90, வேதியியல் -45, இயற்பியல் -45 வினாக்கள் என மொத்தம் 180 வினாக்கள் கேட்கப்படும். ஒரு வினாவிற்கு ஒரு நிமிடத்தில் விடையளிக்கும் வகையில் நேரம் ஒதுக்கப்படும்.    இந்தாண்டு 60 வினாக்கள் வரை எளிதாக கேட்க வாய்ப்புள்ளது. இதன் மூலம் 240 மதிப்பெண் குறைந்தபட்சமாக பெற்று விடலாம்.    இந்தாண்டு 425 மதிப்பெண் பெற்றால் அரசு ஒதுக்கீட்டில் மெடிக்கல் சீட் கிடைக்க வாய்ப்புள்ளது, 300 மதிப்பெண் வரை பெற்றால் தனியார் கல்லுாரிகளில் கிடைக்கும், பயாலஜியில் ஹூமன் பிசியாலஜி, ஜெனிட்டிக்ஸ், சுற்றுச்சூழல், பிளான்ட் பிசியாலஜி போன்ற பகுதிகளில் இருந்து அதிக வினாக்கள் கேட்கப்படும்.   இதுபோல் வேதியியல், இயற்பியலிலும் பாடப் பிரிவுகளை தேர்வு செய்து முழுமையாக படிக்க வேண்டும். படிப்பதை எழுதிப் பார்க்க வேண்டும். அதிகமாக மாதிரி தேர்வு எழுதி பழகிக்கொள்ள வேண்டும்.   ஆடை தேர்வு உட்பட நீட் தேர்வுக்கு செல்லும் போது விதிமுறைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நெகட்டிவ் மதிப்பெண் உள்ளதால் தெரியாத வினாக்களை எழுத வேண்டாம்.   எளிமையாக கல்வி கடன் பெற'கல்விக் கடன்' குறித்து ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி வணங்காமுடி பேசியதாவது:   வங்கி கடன் குறித்த அடிப்படை விஷயங்களை முதலில் தெரிந்துகொண்டால் கடன் பெறுவதில் கஷ்டம் இருக்காது. உரிய நடைமுறைகளை பின்பற்றினால் எளிதில் பெறலாம்.   அனைத்து வகை யு.ஜி., பி.ஜி., மற்றும் டிப்ளமோ படிப்புகளுக்கும் கடன் பெறலாம். படிக்கும் கல்லுாரி உரிய அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.   தற்போது வித்யாலட்சுமி போர்ட்டலில் ஆன்லைன் மூலம் மட்டுமே கல்விக் கடனுக்கு விண்ணப்பிக்க முடியும்.    அதில் ஆதார், பான் எண், கல்லுாரி சான்று, வருமான சான்று, ஜாதி சான்று உட்பட தேவைப்படும் அனைத்து ஆவணங்களை நாம் சமர்ப்பிக்க வேண்டும்.   நீட் தேர்ச்சி பெற்று அரசு ஒதுக்கீட்டிற்கு ஆண்டிற்கு 4 லட்சம் ரூபாயும், தனியார் கல்லுாரி ஒதுக்கீட்டிற்கு 12 லட்சம் ரூபாயும் கடன் பெறலாம். முன்கூட்டியே வங்கிக்கு சென்று பெற்றோர்- மாணவர் பெயரில் ஜாயின்ட் அக்கவுண்ட் துவங்க வேண்டும்.   திட்டமிடுதல், தேவையான ஆவணங்கள் சமர்ப்பித்தல், சரியான வங்கிகளை உரிய அதிகாரிகளை அணுகுதல் ஆகியவற்றால் எளிதில் வங்கிக் கடன் பெறலாம்.வெளிநாட்டில் படிக்கும் டிகிரி, டிப்ளமோ, சான்றிதழ் படிப்பிற்கும் வங்கி கடன் வசதி உண்டு.    உள்நாட்டில் அதிகபட்சம் 10 லட்சம் ரூபாய், வெளி நாட்டில் படிக்கும் படிப்புகளுக்கு அதிகபட்சம் 20 லட்சம் ரூபாய் வரை கடன் பெறலாம். உள்நாட்டில் ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற படிப்புகளுக்கு 25 லட்சம் ரூபாய் வரை கூட கடன் பெறலாம். பெற்ற கடனை திருப்பி செலுத்துவது மிக முக்கியம்.    பரிசு பெற்ற மாணவர்கள்காலை கருத்தரங்கில் கேள்விகளுக்கு பதில் அளித்த மதுரை மாணவி இலக்கியா டேப்லெட் பரிசு பெற்றார். மாணவர்கள் அகமது அலி, பாலசந்தர், சண்முகபிரியன், காவியா, ஜோயிலின் மரியா வாட்ச் பரிசு பெற்றனர்

1000 கிராம நிர்வாக அலுவலர்கள் நியமனம் : தமிழக அரசு உத்தரவு

 15 ஆயிரம் தொகுப்பூதியத்தில் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமனம் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.    தமிழகத்தில் மொத்தம் 12616 கிரமா நிர்வாக அலுவலர் பணியிடங்கள் உள்ளன. இவற்றில் தற்போது 2 ஆயிரத்து 896 கிராம நிர்வாக அதிகாரி பணியிடங்கள் காலியாக உள்ளன.    தேர்தல் பணிகளில் அதிக அளவில் நிர்வாக அலுவலர்கள் அதிக அளவில் பயன்படுத்தபடுவார்கள் என்பதால் 1000 கிராம நிர்வாக அலுவலர்களை நியமிக்க வேண்டும் என்று வருவாய் நிர்வாக ஆணையர் அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.   இதன்படி ஓய்வு பெற்ற 1000 கிராம நிர்வாக அலுவலர்களை பணி நியமனம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.   இவர்களுக்கு தொகுப்பூதியமாக 15 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்றும் அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.    ஓராண்டோ அல்லது டிஎன்பிஎஸ்சி மூலம் இந்த இடங்கள் நிரப்பப்படும் வரை வரை தற்காலிக விஏஓக்கள் பணியில் இருப்பார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அருகாமை வாக்குசாவடிகளில் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி: தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

பெண் ஆசிரியர்களை அருகாமையில் உள்ள வாக்குசாவடிகளில் தேர்தல் பணியில் ஈடுபடுத்திட தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.   தமிழ்நாடு தனியார் பள்ளி ஆசிரியர் அலுவலர் சங்க மாவட்ட பொதுக்குழு கூட்டம் மாவட்ட தலைவர் கண்ணன் தலைமையில் தக்கலை சங்க அலுவலகத்தில் நடைபெற்றது. தக்கலை கல்வி மாவட்ட தலைவர் விஜயகுமார் வரவேற்றார்.   மாவட்ட செயலாளர் விஜயராஜ், பொருளாளர் அஜின், நிர்வாகிகள் ஜோஸ் பென்சிகர், வினோத், சிவஸ்ரீரமேஷ், மகேஷ், பிரைட்சிங் மோரீஸ், டொமினிக்ராஜ், அகஸ்டஸ் சிங் ஆகியோர் பேசினர். சாந்தசீலன் நன்றி கூறினார்.    தேர்தல் பணியில் ஈடுபடுத்தப்படும் பெண் ஆசிரியர்களை அவர்களது இருப்பிடங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்குசாவடிகளில் பணியமர்த்த தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.    பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கை உயர்நீதிமன்ற கண்காணிப்பில் விரைவான விசாரணை மேற்கொண்டு தொடர்புடைய குற்றவாளிகள் அனைவருக்கும் கடுமையான தண்டனையை உறுதி செய்ய வேண்டும்.    உதவி பெறும் பள்ளிகளுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடிகள் குறித்த கருத்தரங்கம் மற்றும் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டுவிழா நடத்த வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

தமிழகம், புதுச்சேரியில் 8.21 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர்.


 8 லட்சத்து 16 ஆயிரத்து 618 மாணவ-மாணவியர் தேர்வு எழுதினர். தனித்தேர்வர்களாக 5 ஆயிரத்து 32 பேர் தேர்வு எழுதினர். மொத்தமாக 8 லட்சத்து 21 ஆயிரத்து 650 மாணவ- மாணவியர் புதிய பாடத்திட்டத்தின் கீழ் இந்த தேர்வை எழுதினர்.


இந்த தேர்வில் வேலூர், கடலூர், உட்பட பல சிறையில் உள்ள 78 கைதிகள் புழல் சிறையில் தேர்வு எழுதினர்.


இந்த ஆண்டு  மார்ச் மாதம் தேர்வு நடத்தி, ஏப்ரல் மாதம் விடைத்தாள் திருத்தி, மே மாதம் தேர்வு முடிவுகளை அறிவிக்க தேர்வுத்துறை திட்டமிட்டது.


இதன்படி தேர்வுகள் தற்போது நடந்து வருகின்றன.


அதில் பிளஸ் 2 தேர்வு கடந்த 19ம் தேதி முடிந்தன. பிளஸ் 1 தேர்வு இன்றுடன் முடிகிறது.


 பத்தாம் வகுப்பு தேர்வு 29ம் தேதி முடிய உள்ளன. இந்த ஆண்டுக்கான பொதுத் தேர்வில் பறக்கும் படையினரால் பிட் அடிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளது.


பிளஸ் 1 தேர்வின் இறுதி நாளான இன்று, தொடர்பு ஆங்கிலம், எதிக்ஸ், கணினி அறிவியல், சிறப்பு தமிழ்,புள்ளியியல், மனையியல், சமூக அறிவியல் பாடங்களுக்கான தேர்வுகள் நடக்கின்றன.

10-வது படித்தவர்களுக்கு கூட வேலை கிடைத்துவிடும், ஆனால் பட்டதாரிகளுக்கு கிடைக்காது..! CMIE அறிக்கை..!

 Centre for Monitoring Indian Economy (CMIE) என்கிற அமைப்பு படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்பாக ஒரு அறிக்கையை வெளியிட்டிருக்கிறது.   இந்த அறிக்கையின் படி ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் படித்த பட்டதாரிகள் எண்ணிக்கை அதிகரிப்பதை சுட்டிக் காட்டுகிறது.   இந்த அறிக்கையை CMIE அமைப்பின் நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் தான் இந்த அறிக்கையை எழுதி இருக்கிறாராம்.   இந்த அறிக்கையில் இந்தியாவில் கடந்த 2018 செப்டம்பர் - டிசம்பர் காலத்தில் படித்த பட்டாதாரிகளுக்கான வேலையில்லா திண்டாட்டம் 13.2% ஆக அதிகரித்திருப்பதை சுட்டிக் காட்டி இருக்கிறார்.  2017 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் இந்த வேலை வாய்ப்பு 12.1% ஆக இருந்ததையும் சுட்டிக் காட்டுகிறார்.   வேலை இல்லையே போதுமான வேலை இல்லை இப்படி படித்தவர்களுக்கான வேலை வாய்ப்பு தொடர்ந்து குறைந்து கொண்டே வருவதைப் பார்த்தால் இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது எனச் சொல்கிறார்.   அந்த 5 பிரிவுகள் ஐந்து பிரிவுகள்   இந்தியாவில் படிக்காதவர்கள், 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள் 9-ம் வகுப்பு வரை மட்டுமே படித்தவர்கள், 10-வது அல்லது 12-வது படித்தவர்கள், பட்டதாரிகள் என ஐந்து பிரிவாக பிரித்திருக்கிறார்கள்.   கல்லூரிக்கு சென்றவர்கள் பட்டதாரிகள்  இந்த ஐந்து பிரிவில் அதிகமாக வேலைவாய்ப்பு இல்லாமல் சிரமப்படுவது பட்டதாரிகள் தானாம்.   பட்டதாரிகளுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் 13.2% ஆக அதிகரித்திருக்கிறது. ஒட்டு மொத்தமாக 2018 செப்டம்பர் - டிசம்பர் காலாண்டில் வேலையில்லா திண்டாட்டம் 6.7% ஆக அதிகரித்திருக்கிறது.   ஆக இந்தியாவின் ஒட்டு மொத்த சராசரியை விட இரண்டு மடங்கு படித்த பட்டதாரிகளுக்கு தான் வேலை இல்லை.  பெண்கள் நிலை   பட்டதாரி பெண்கள் இந்தியாவில் படித்த பட்டதாரி பெண்களின் வேலை வாய்ப்புகள் ஆண்களை விட மோசம். படித்த பட்டதாரி ஆண்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் 10%-ஆகத் தான் இருக்கிறது.   ஆனால் படித்த பட்டதாரி பெண்களுக்கு வேலையில்லா திண்டாட்டம் 35% ஆக இருக்கிறது.

குறைந்த மாணவர்களுடன் இயங்கும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மேல்நிலை பள்ளிகளுடன் இணைப்பு : பள்ளிக்கல்வித்துறை திட்டம்

 தமிழகத்தில் குறைந்த எண்ணிக்கையுடன் செயல்படும் அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்கும் நடவடிக்கையை பள்ளிக்கல்வித்துறை மேற்கொண்டுள்ளது   .தமிழக பள்ளிக்கல்வித்துறை சார்பில் மாவட்டத்துக்கு ஒரு பள்ளி வீதம் மாடர்ன் பள்ளியாக மாற்றப்பட்டு அப்பள்ளிகளில் டிஜிட்டல் திரை, கணினி, நவீன வகுப்பறைகள் என நவீன உட்கட்டமைப்பு வசதிகள் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.    ஆனாலும் தனியார் பள்ளிகள் மீதான மோகம் இன்னும் குறையவில்லை. இதனால் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலவழி கல்வி உட்பட கற்றல், கற்பித்தல் முறைகளில் மாற்றம், சிபிஎஸ்இ அடிப்படையிலான பாடத்திட்டம் என்று பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்தும் மாணவர் எண்ணிக்கை உயரவில்லை.   இதையடுத்து கடந்த ஆண்டு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க வேண்டி ஆசிரியர்களுக்கு இலக்கை நிர்ணயித்ததுடன், அரசு கெடுவும் விதித்தது. ஆனாலும் எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை என்பதே தெரிய வந்தது.    இதையடுத்து மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளை அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுடன் இணைக்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.    தமிழகத்தில் மொத்தம் 2,553 ஓராசிரியர் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் அதிகபட்சமாக கிருஷ்ணகிரியில் 195, திருவண்ணாமலையில் 159, வேலூரில் 127, விழுப்புரத்தில் 113, தருமபுரியில் 131 பள்ளிகள் உள்ளன.   அதேபோல் 16 ஆயிரத்து 421 ஈராசிரியர் பள்ளிகள் உள்ளன. இதில் சென்னை, விழுப்புரம், வேலூர், திருவண்ணாமலை, சேலம் மாவட்டங்களில் உள்ள 16 ஈராசிரியர் பள்ளிகளில் ஓராசிரியர் மட்டுமே பணியாற்றி வருகின்றனர்.    ஆசிரியர், மாணவர் விகிதாச்சார நிர்ணயத்துக்கு மாறாக 387 ஓராசிரியர் பள்ளிகளில் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர்.    இதில் வேலூர் 55, காஞ்சிபுரம் 49, கிருஷ்ணகிரி 36, கடலூர் 27, சென்னை 25, தருமபுரி 25 என பள்ளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.    அதேபோல் வெறும் 5 குழந்தைகள் மட்டுமே பயிலும் 55 பள்ளிகள் மாநிலம் முழுவதும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவித்துள்ளன.   இந்த ஓராசிரியர், ஈராசிரியர் பள்ளிகளில் மொத்தம் 4.5 லட்சம் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.   மாநிலம் முழுவதும் 21 ஆயிரத்து 931 ஆசிரியர் காலி பணியிடங்கள் உள்ளது. இச்சிக்கலுக்கு தீர்வு காணவும், அரசுப்பள்ளிகளை மேம்படுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ள பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.   அதன்படி மாநிலம் முழுவதும் மாணவர் எண்ணிக்கை மிகவும் குறைந்த பள்ளிகளாக கண்டறியப்பட்ட 3,500க்கும் மேற்பட்ட ஊரகப்பகுதிகளில் இயங்கும் பள்ளிகளை அருகில் உள்ள அரசு உயர்நிலை, மேல்நிலைப்பள்ளியுடன் இணைக்க முடிவெடுத்துள்ளது.   இதன் மூலம் நடுநிலை, உயர்நிலைப்பள்ளிகளில் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்களை பணி நிரவல் மூலம் சரி செய்யவும், அதிகப்படியான ஆசிரியர்களை ஆசிரியரல்லாத பள்ளிகளுக்கு மாற்றிவிடவும் பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளதாக ஆசிரியர் சங்கங்கள் தெரிவிக்கின்றன.

TRB - கணினி பயிற்றுநர் நிலை I தேர்விற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யும் பொழுது ஏற்படும் சிக்கல்களை சரிசெய்ய தேர்வர்கள் வேண்டுகோள்!


ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்து கணினி பயிற்றுநர் நிலை I தேர்விற்கு இணையத்தில் விண்ணப்பம் செய்யும் பொழுது கல்வித்தகுதியின் விவரத்தை பதிவு செய்வதில் சிக்கல் நீடிக்கிறது இதை உடனே சரி செய்ய ஆசிரியர் தேர்வு வாரியம் முன் வர வேண்டும் கணினி பட்டதாரிகள் வேண்டுகோள்!

அஞ்சல் வாக்குகள் எவ்வாறு செலுத்துவது? How to Vote in Postal - Instructions of postal ballots!


அஞ்சல் வாக்குகள் எவ்வாறு செலுத்துவது?
 


முதன்முறையாக உளவியல் தேர்வுவழிகாட்டி கருத்தரங்கில் மாணவர்களுக்கு உளவியல் தேர்வு நடத்தி அதன் அடிப்படையில் எந்த போட்டித் தேர்வை எழுதலாம், என்ன படிப்பை தேர்வு செய்யலாம், எந்த வேலைக்கு செல்லலாம் என்பது குறித்து ஆலோசனை முதன்முறையாக வழங்கப்பட்டது.இதுகுறித்து மதுரை அமெரிக்கன் கல்லுாரி உளவியல் பேராசிரியர் சுரேஷ்குமார் பேசுகையில், "மாணவர்களின் ஆர்வம், மனப்பான்மை, நாட்டம் ஆகியன குறித்து உளவியல் ஆலோசனை [சைக்கோ மெட்ரிக் தேர்வு] வழங்குவது வளர்ந்த நாடுகளில் அதிகம் நடைமுறையில் உள்ளது. ஆனால் இந்தியாவில் 2008 ம் ஆண்டில் வந்தது. மாணவர்கள் நலன் கருதி இதுபோன்ற தேர்வை தினமலர் நாளிதழ் தான் முதன்முறையாக நடத்துகிறது. மாணவர்களுக்கு சரியான நேரத்தில் சரியான படிப்பை தேர்வு செய்ய இது பயன்படும்" என்றார்.

01.04.2003 முதல் தமிழக அரசால் ஊழியர்களிடம் பிடித்தம் செய்யப்பட்ட CPS தொகை இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) எந்தெந்த தேதியில், எவ்வளவு தொகை முதலீடு செய்யப்பட்டது - RBI பதில்

01.04.2003 முதல் தமிழக அரசால்ஊழியர்களிடம் பிடித்தம்செய்யப்பட்ட CPS தொகைஇந்திய ரிசர்வ் வங்கியில் (RBI)எந்தெந்த தேதியில், எவ்வளவுதொகை முதலீடுசெய்யப்பட்டது என்ற தகவல்அறியும் உரிமைச்சட்டவினாவிற்கு பதில் அளிக்கமிக அதிக அளவில் மனிதஉழைப்பு தேவைப்படுவதால்பதில் அளிக்க இயலாது எனRBI பதில்

Primary CRC Training - Pedagogy And Dictionary Usage Modules [ CRC Dates : 22.03.2019 & 23.03.2019 ]

# Primary CRC நடைபெறும் நாட்கள் மற்றும் CRC Module (22.03.2019 & 23.03.2019)

# குறுவள மைய பயிற்சி 22.03.2019 மற்றும் 23.03.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற உள்ளது.

# 22.03.2019 வெள்ளிக்கிழமை அன்று தொடக்க/ நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்கள் (இடைநிலை தலைமை ஆசிரியர் உட்பட) 50% ஆசிரியர்களும் , 23.03.2019 சனிக்கிழமை அன்று 50% ஆசிரியர்களும் பயிற்சியில் கலந்துகொள்ள வேண்டும்.

CRC MODULE PEDAGOGY & DICTIONARY USAGE ....

1. SALM GENERAL - Click here

2. SALM ENGLISH - Click here

3. DICTIONARY USAGE - Click here

4. SABL NEW , GENERAL - Click here

5. SABL NEW, ENGLISH - Click here

School Morning Prayer Activities - 22.03.2019பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:156

ஒறுத்தார்க்கு ஒருநாளை இன்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்.

உரை:
தீங்கு செய்தவரைப் பொறுக்காமல் வருத்தினவர்க்கு ஒருநாள் இன்பமே; பொறுத்தவர்க்கு உலகம் அழியும் வரைக்கும் புகழ் உண்டு.

பழமொழி :

Be just before you are generous

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

பொன்மொழி:

அவசரமாகத் தவறு செய்வதை விட தாமதமாகச் சரிவர செய்வது மேல்.
  - ஜெபர்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தமிழகத்தில் குடுமியான் மலைக் கல்வெட்டுக்கள் எந்த மாவட்டத்தில் உள்ளன?
புதுக்கோட்டை

2.தமிழகத்தில் முதன்முதலில் எங்கு அச்சுக் கூடங்கள் அமைக்கப்பட்டன?
சிவகாசி

நீதிக்கதை :

முட்டாள் சிங்கமும் புத்திசாலி முயலும்
(The Foolish Lion and the Clever Rabbit)

அடர்ந்த காட்டில் ஒரு கர்வம் கொண்ட சிங்கம் வாழ்ந்து வந்தது. நான் தான் இந்த காட்டுக்கு ராஜா என்ற கர்வத்துடன் அந்த சிங்கம் காட்டில் வாழ்ந்த அனைத்து மிருகங்களையும் வேட்டையாடியது.

மற்ற சிங்கங்கள் உணவுக்காக வேட்டையாடும். அனால் இந்த சிங்கம் பொழுதுபோக்கிற்காக வேட்டையாடியது. இதனால் காட்டில் வாழ்ந்த மற்ற மிருகங்கள் சிங்கத்தின் மீது கோபம் கொண்டன.

ஒவ்வொருநாளும் சிங்கம் பல மிருகங்களை வேட்டையாடியது. இதனை கண்ட மற்றைய மிருகங்கள் மிக்க பயத்துடன் வாழ்ந்து வந்தன.

சிங்கம் இப்படி பல மிருகங்களை ஒவ்வொருநாளும் கொல்வதால் தாம் வெகு சீக்கிரமே இறந்துவிடுவோம் என எண்ணி அவை எல்லாம் ஒன்றுகூடி ஆலோசனை செய்தது.

சிங்கத்தை எதிர்த்து அவைகளால் போராட முடியாது என்பது அவைகளுக்குத் நன்கு தெரியும். அதனால் அவை சிங்கத்திற்கு இரையாக தினம் ஒரு மிருகமாக போவதற்கு தீர்மானித்தன.

அடுத்தநாள் குரங்கு ஒன்று அந்த கர்வம் கொண்ட சிங்கத்தை சந்திக்க அதன் குகைக்கு சென்றது.

இதைக்கண்ட சிங்கம் முகுந்த கோபத்துடன் உறுமியது. குரங்கிற்கு பயம் வந்துவிட்டது. சிங்கம் குரங்கை பார்த்து, "உனக்கு என்ன துணிச்சல் இருந்தால் என் குகைக்கு வந்துருப்பாய்?" என்றது. அதற்கு குரங்கு, எல்லா மிருகங்களும் தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வருகின்றோம் என தெரிவித்தன. அதனால் சிங்கராசா இரை தேடி அலையத் தேவையில்லை.

"ஏன் இந்த முடிவு?" என்றது சிங்கம்.

தினம் தினம் எந்த மிருகம் உங்களால் வேடையடபடும் என்ற பயத்துடன் வாழ்வதை விட, தினம் ஒருவராக உங்கள் குகைக்கு இரையாக வந்தால் மற்ற மிருகங்கள் பயமின்றி சிறிது காலம் வாழலாம் என்றது.

அத்துடன் நீங்கள் பல மிருகங்களை ஒரு நாளில் கொன்றால் நாங்கள் எல்லோரும் சீக்கிரமே இறந்து விடுவோம். பின்பு உங்களுக்கு உணவுகிடையாமல் நீங்களும் சீக்கிரமே இறந்து விடுவீர்கள் என்றது.

இதனை கேட்ட சிங்கராசாவுக்கு மகிழ்ச்சி பொங்கியது. மேலும் குரங்கிடம் தவறாமல் தினமும் காலையில் ஒரு மிருகம் கண்டிப்பாக வரவேண்டும்.
இல்லையென்றல் அனைவரையும் வேடையடிவிடுவேன் என்றது சிங்கம்.

அன்றிலிருந்து தினம் ஒவ்வொரு மிருகம் சிங்கத்திற்கு இரையாகச் சென்றது.
ஒருநாள் ஒரு முயலின் முறை வந்தது. முயல் சிங்கத்தின் குகைக்கு சிறிது தாமதமாகச் சென்றது.

அதனால் சிங்கம் மிகுந்த கோபத்துடன் இருந்தது.

சிங்கம் முயலைப் பார்த்து நீ ஏன் தாமதமாகினாய் என கர்ச்சித்தது.

அதனைக் கேட்ட முயலார் நடுக்கத்துடன் “சிங்கராசா” நான் வரும் வழியில் வேறொரு பெரிய சிங்கம் என்னை வேட்டையாட முயற்சி செய்தது. நான் பதுங்கி இருந்துவிட்டு இப்பதான் வாறேன் என்றது.

என்னைவிட பெரிய சிங்கம் இந்தக் காட்டில் இருக்கிறதா? என்று இறுமாப்புடன் கேட்டது.

அதற்கு “சிங்கராசா” வாருங்கள் காட்டுகின்றேன் என்று சிங்கத்தை அழைத்துச் சென்று ஒரு கிணற்றைக் காட்டி இதற்குள்தான் அந்த பெரிய சிங்கம் இருந்தது என்று கூறியது.

அதனை நம்பிய சிங்கம் கிணற்றை எட்டிப் பாத்தது. அப்போது சிங்கத்தின் நிழல் (பிம்பம்) வேறொரு சிங்கம் கிணற்றினுள் இருப்பது போல் தெரிந்தது. சிங்கம் அதைப் பார்த்து கர்ச்சித்தது.

பிம்பமும் கர்ச்சித்தது. சிங்கத்திற்க்கு ஆத்திரம் பொங்கியது. இதோபார் உனக்கு ஒரு முடிவு கட்டுகிறேன் என கூறிக்கொண்டு கிணற்றினுள் பாய்ந்தது. சிங்கம் கிணற்று நீரில் மூழ்கி மாண்டது.

முயல் துள்ளிகுதித்து வெற்றியை மற்ற மிருகங்களிடம் சென்று கூரியது. காட்டில் கொண்டாட்டம் தொடங்கியது.

முயலின் சமயோசித முயற்சியால் மற்றைய மிருகங்களும் காப்பாற்றப்பட்டன.

நீதி: முயற்சியும் திறமையும் இருந்தால் எதையும் வென்றிடலாம்.

இன்றைய செய்தி துளிகள்:

1) நடுநிலையோடு தேர்தல் பணி ஜாக்டோஜியோ அறிவிப்பு!

2) காலியாக உள்ள 1000 VAO பணியிடங்களை ஓய்வு பெற்றவர்களை கொண்டு ரூ.15000/- தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசாணை வெளியீடு.

3) அனைத்து அரசுப் பள்ளிகளிலும் உள்ள தொலைக்காட்சி மூலம் கல்வி தொலைக்காட்சி சேனலைப் பார்க்க ஏற்பாடு!

4) அருகாமை வாக்குசாவடிகளில் பெண் ஆசிரியர்களுக்கு தேர்தல் பணி: தனியார் பள்ளி ஆசிரியர் சங்கம் கோரிக்கை

5) யுஏஇ பள்ளியில் பயிலும் தமிழக மாணவர்  விசேஷ் பரமேஸ்வரன் (13வயது) தங்கப் பதக்கம் வென்றார்.

கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது : உயர்நீதிமன்றம்கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற முடியாது என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிறிஸ்துவ பள்ளிகளில் உள்ள வாக்குச் சாவடிகளை மாற்ற தேர்தல் ஆணையம் சட்டத்தில் இடமில்லை என்றும் பிரார்த்தனைக்காக வரும் பக்தர்களுக்கு வசதிகள் செய்து தர தயாராக இருக்கிறோம் என்றும் தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஏப்ரல் 18ம் தேதி பெரிய வியாழன் என்பதால் கிறிஸ்துவ பள்ளி வாக்குச் சாவடிகளை மாற்றக் கோரி வழக்கு தொடரப்பட்டது.