உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர் தமிழக அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு!

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்' என, தமிழக அரசு பதிலளிக்க, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

துாத்துக்குடி மாவட்டம், பழையகாயல் ஜஸ்டின் திரவியம் தாக்கல் செய்த மனுவில், 'அதே பகுதியில் உள்ள, ஒரு பள்ளியில் பட்டதாரி ஆசிரியராக நியமிக்கப்பட்டேன். அதை அங்கீகரித்து, அதற்குரிய சம்பளம் மற்றும் இதர நிலுவை பணப்பலன்களை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்' என, கூறியிருந்தார். மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். இதை எதிர்த்து ஜஸ்டின் திரவியம் மேல்முறையீடு செய்தார்.நீதிபதிகள், என்.கிருபாகரன், எஸ்.எஸ்.சுந்தர் அமர்வு விசாரித்தது.அரசுத் தரப்பில், 'இப்பள்ளி நிர்வாகம், மற்றொரு பள்ளி நடத்துகிறது. அதில் உள்ள உபரி ஆசிரியர்களை இப்பள்ளிக்கு மாற்றலாம். மனுதாரரை புதிதாக நியமித்தது ஏற்புடையதல்ல' என, தெரிவிக்கப்பட்டது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியதாவது:

அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் மற்றும் சிறுபான்மையினர் அல்லாத பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள், ஊழியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; எத்தனை மாணவர்கள் படிக்கின்றனர்; உபரி ஆசிரியர்கள் எத்தனை பேர் உள்ளனர்; அவர்களுக்கு மாதந்தோறும் எவ்வளவு சம்பளம் வழங்கப்படுகிறது? என்பதை, தமிழக அரசு மார்ச், 13ல் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு, உத்தரவில் கூறினர்.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் - அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி

8, 9, 10ஆம் வகுப்புகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கும் மடிக்கணினிகள் கிடைக்கும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறியுள்ளார்.
  இது குறித்து கோவையில் செய்தியாளர்களிடம் புதன்கிழமை அவர் மேலும் கூறியதாவது:

  தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு 1.17 லட்சம் மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்றனர். அப்போது, இங்கு போதிய கட்டமைப்பு இல்லை என்று சிலர் வேறு மாநிலங்களில் தேர்வு எழுதவைக்கப்பட்டனர். ஆனால், இந்த ஆண்டு கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளன. இதனால் ஒன்றரை லட்சம் மாணவர்கள் தமிழ்நாட்டிலேயே தேர்வு எழுத முடியும். இது குறித்து மத்திய நீட் மையத்துக்கு கடிதம் அனுப்பியிருக்கிறோம்.
 தமிழ்நாட்டில் நாளை (வெள்ளிக்கிழமை) பொதுத் தேர்வு தொடங்குகிறது. மாணவ, மாணவிகள் எந்தவித அச்சமும் இன்றித் தேர்வுகளை எழுதலாம். அவர்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில் தற்போது 413 மையங்களில் நீட் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கடந்த ஆண்டைப் போலவே 5 ஆயிரம் சிறந்த மாணவர்களைத் தேர்வு செய்து 25 நாள்கள் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொதுத் தேர்வுகளுக்குப் பிறகே நாடாளுமன்றத் தேர்தல் வருகிறது. ஆசிரியர்களை தேர்தல் பணியில் ஈடுபடுத்துவது தொடர்பாக பல முடிவுகளை அரசு மேற்கொள்ள உள்ளது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டு 11, 12ஆம் வகுப்பு மாணவர்கள் சுமார் 15.80 லட்சம் பேருக்கு மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், 8, 9, 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் மடிக்கணினிகள் வழங்க மத்திய அரசிடம் கேட்டிருக்கிறோம். விரைவில் அது கிடைக்கும்.
 தமிழ்நாட்டில் 6 ஆயிரம் பள்ளிகளில் அதிநவீன ஸ்மார்ட் கிளாஸ் தொடங்கப்படும்.

அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளால் அடுத்த ஆண்டில் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக 2 லட்சம் மாணவர்கள் சேருவார்கள் என எதிர்பார்க்கலாம் என்றார்.

புதிய அரசாணை வெளியிட்டு 12ஆயிரம் பகுதிநேர ஆசிரியர்களை நிரந்தரம் செய்யுங்கள் அரசுக்கு கோரிக்கை!

ஊதிய உயர்வுடன் சிறப்பாசிரியர்களாக பணிநிரந்தரம் அறிவிப்பை அரசு வெளியிட
மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால் 2012ல் நியமிக்கப்பட்ட பகுதிநேர
ஆசிரியர்கள் முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு மாநில
ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் கூறியதாவது:-

எங்களை பணியமர்த்திய மறைந்த முதல்வர் ஜெயலலிதா  காலத்திலிருந்து கோரிக்கை
மனு கொடுத்துவருகிறோம்.

கவர்னரை சந்தித்தும் மனு கொடுத்துவிட்டோம்.

இதுவரை எங்களின் கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் இருந்துவருவது எங்களை
கவலையில் ஆழ்த்துகிறது.

ஜெ.ஜெயலலிதா, ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி கே.பழனிசாமி என முதல்வர்கள் மாறினார்கள்.

சிவபதி முதல் செங்கோட்டையன் என பல கல்வி அமைச்சர்கள் மாறினார்கள்.

சபீதா முதல் பிரதீப் யாதவ் என பள்ளிக்கல்வி செயலர்கள் மாறினார்கள்.

முகம்மது அஸ்லாம் முதல் சுடலைக்கண்ணன் என அனைவருக்கும் கல்வி இயக்க மாநில
திட்ட இயக்குநர்கள் மாறினார்கள்.

கடைசியில் நாங்கள் பணிபுரிந்துவந்த அனைவருக்கும் கல்வி இயக்கம் என்ற
திட்டத்தின் பெயர்கூட ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி திட்டம் என
மாறியது.(சர்வ ஷிக்சா அபியான் என்பது சமக்ர ஷிக்சா அபியான் என
மாறிவிட்டது)
ஆனாலும் எங்களின் நிலை கொஞ்சமும் மாறவில்லை. பகுதிநேரம் என்ற போர்வையில்
எங்களின் மீதி நேரமும் இந்த ஒப்பந்த தொகுப்பூதிய வேலையால் வாழ்வாதாரம்
சுரண்டப்படுகிறது. வாரத்திற்கு 3 அரைநாள் மீதி இரண்டுநாள் எந்த வேலைக்கு
போவது. இதனால் பள்ளியோடு முடங்கிபோகிறது எங்களின் வாழ்க்கை.

அனைத்து வேலைநாட்களிலும் முழுநேர வேலைக்கேட்டோம். இந்த திட்ட
வேலையிலிருந்து பள்ளிக்கல்வித்துறைக்கு மாற்றக்கேட்டோம். தமிழக அரசுப்
பணிக்கு மாற்றிடக் கேட்டோம். காலிப் பணியிடங்களில் எங்களை பணியமர்த்தக்
கேட்டோம். செய்யவில்லை. காலிப்பணியிடங்களில் எங்களுக்கு குறைந்தபட்சமாக
முன்னுரிமையை கேட்டோம். எதுவும் செய்யாமல் அரசு எங்களை
கைவிரித்துவிட்டது. நிதி இல்லை என்று சொல்லியே எங்களின் நீதி
மறுக்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு தமிழக பகுதிநேர ஆசிரியர்களுக்கான
சம்பளத்திற்கு போதுமான நிதி பங்களிப்பை தருவதில்லை என்றும், அதனால் தமிழக
அரசே மத்தியஅரசின் பங்கை சேர்த்து வழங்குகிறது என அரசும், கல்வித்துறை
அதிகாரிகளும் பதில் சொல்லியே எங்கள் கோரிக்கைகளை புறந்தள்ளுகின்றனர்.
நாங்கள் சந்திக்காத அமைச்சர்களே இல்லை. ஆளும் கட்சியின் பவர்சென்டரான
ஐவர் குழுவினருடனும் முறையிட்டுள்ளோம். அப்போதெல்லாம் “அம்மா நிச்சயம்
நல்லது செய்வாங்க. நாங்க சொல்லிட்டோம், கவலைப்படாதீங்க” என்று
சொன்னவர்கள், இப்போது முடிவெடுக்கும் நிலையில் இருக்கும்போதும் “நிச்சயம்
செய்வோம், கவலைப்படாதீங்க என சொல்லிவருவது” எங்களை கவலையில் தள்ளுகிறது.

2017 சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம்
செய்ய கமிட்டி அமைக்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் செங்கோட்டையன்
அறிவித்திருந்தார்.
ஆனால் இதுவரை கமிட்டி அமைப்பது தொடர்பாக எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கவில்லை.
அனைவருக்கும்  அருகில் உள்ள பள்ளிகளில் பணிபுரிய ஏதுவாக பணியிடமாறுதல்
வழங்கப்படும் என அறிவித்திருந்தார். ஆனால் அதுவும் இன்னும் சொன்னபடி
நடவடிக்கையை காணோம்.
இதனால் பேருந்து கட்டணம், பெட்ரோல் செலவுகளை ஈடுசெய்ய முடியாமல் தள்ளாடி வருகிறோம்.

எங்களுக்கு பிறகு காவல்துறையில் ரூ.7 ஆயிரத்து ஐநூறு தொகுப்பூதியத்தில்
பணியமர்த்தப்பட்ட இளைஞர் படையினர் பின்னர் காலமுறை ஊதியத்தில்
நிரந்தரப்பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.
2003ல் எஸ்மா சட்டத்தில் பணிநீக்கம் செய்யப்பட்டவர்களுக்கு பதிலாக அரசால்
ரூ.4ஆயிரம் தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்டவர்கள் அனைவரும்
பின்னர் சிறப்பு தேர்வு நடத்தி காலமுறை ஊதியத்தில்
பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
தினக்கூலி ஒப்பந்த முறையில் பணிசெய்த சாலைப்பணியாளர்களும் பின்னர்
முறையான ஊதியத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். இதர துறைகளில் உள்ளோர்
பரிந்துரை செய்யப்பட்டு நிரந்தரம் செய்யப்பட்டு வரும்போது
பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் பணிபுரியும் பகுதிநேர
ஆசிரியர்களை மட்டும் நிரந்தரம் செய்யாமல் மறுப்பது எந்தவகையில் நியாயம்
என கேட்டு வருகிறோம்.
ஆனால் பள்ளிக்கல்வித்துறை அனைவருக்கும் கல்வி இயக்க திட்ட வேலையில்
ஒப்பந்த முறையில் ரூ.5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் மறைந்த முதல்வர்
ஜெயலலிதாவால் பணியமர்த்தப்பட்ட 16549 பகுதிநேர ஆசிரியர்களை அரசு இன்னும்
அடுத்தகட்டத்திற்கு மாற்றாமல் தொகுப்பூதிய நிலையிலேயே வைத்து எங்களை
பரிதாபநிலைக்கு தள்ளுவது மிகவும் வேதனையளிக்கிறது.
 பணிநிரந்தரத்திற்கு முன்பு எங்களை அங்கீகரித்து 8 ஆண்டுகளாக பள்ளிகளை
நடத்தும் அனுபவத்தினையும், அரசு கேட்கும் உரிய கல்வித்தகுதியும் உள்ள
எங்களுக்கு முதல்கட்டமாக அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரப்பணி ஊதிய
உயர்வுடன் வழங்க வேண்டும்.
தற்போது 11 மாதங்களுக்கு சுமார் ரூ.100கோடி சம்பளத்திற்கு செலவாகிறது.
சிறப்பாசிரியர்களாக நிரந்தரப்பணியில் அமர்த்த ஆண்டுக்கு ரூ.400கோடி நிதி
ஒதுக்கினாலே போதுமானது.
வேலைநிறுத்த காலங்களில் அரசின் உத்தரவின்படி பள்ளிகளை இயக்கிய பகுதிநேர
ஆசிரியர்களுக்கு அரசு கருணையுடன் வாழ்வாதாரம் மேம்பட நடவடிக்கை மேற்கொள்ள
வேண்டும் என உறுக்கமாக வேண்டுகோள் விடுக்கின்றோம்.

அரசுப் பள்ளிகளில் உடற்கல்வி, ஓவியம், கணினி அறிவியல், இசை, தையல்,
தோட்டக்கலை, கட்டிடக்கலை, வாழ்வியல்திறன் கல்வி போன்ற கல்வி
இணைச்செயல்பாடு பாடங்களை 6 முதல் 8 வகுப்பு மாணவர்களுக்கு போதித்து
வருகிறோம்.
16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்களில் தற்போது சுமார் 12ஆயிரம் பேர்
பணிபுரிகிறோம். இவர்களுக்கு ரூ.5ஆயிரத்தில் ஆரம்பித்த சம்பளம் இந்த 8
கல்வி ஆண்டுகளில் ரூ.7ஆயிரத்து 7 நூறாக தரப்படுகிறது.
கோடைகால விடுமுறையான மே மாதத்திற்கு 7 ஆண்டுகளாக மறுக்கப்பட்டு வருவதால்
ஒவ்வொருவரும் ரூ.45ஆயிரத்து 7 நூறு இழந்து வருகிறோம். எங்களின் நியமன
ஆணையிலோ அல்லது 110 விதியிலோ மே மாதத்திற்கு சம்பளம் கிடையாது என
ஆணையிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஒப்பந்த தற்காலிக தொகுப்பூதிய பணியாளர்களுக்கு தரப்படும் 10% வருடாந்திர
ஊதிய உயர்வு சரிவர தரப்படவில்லை.
P.F., E.S.I., எதுவும் இல்லை.
மருத்துவ விடுப்பு உள்ளிட்ட எந்தவித விடுப்பு சலுகைகளும் தரப்படவில்லை.

ஒருமுறைகூட போனஸ் கொடுக்கவில்லை.

பணியில் சேர்ந்து இறந்தவர்களின் குடும்பங்களுக்கு அரசு நிதி எதுவும் கொடுக்கவில்லை.

58 வயதை எசுட்டி பணிஓய்வு பெற்றவர்களுக்கு எவ்வித நிதியும் கொடுக்கவில்லை.
இதே திட்டவேலையில் ஆந்திராவில் பகுதிநேர ஆசிரியர்களுக்கு ரூ.14ஆயிரத்து
203 வழங்கப்படுகிறது.
மேலும் மகளிருக்கு 6 மாத மகப்பேறு கால விடுப்பும் தரப்படுகிறது.
ஆந்திராவைவிட தமிழத்தில் மிகவும் குறைவாக தரப்படுகிறது.

மேற்குவங்க மாநிலத்தில் ஒப்பந்த தற்காலிக பணியாளர்கள் பணியின்போது
இறந்தால், அவர்களின் குடும்பத்திற்கு அரசு நிதியாக ரூ.2இலட்சம்
தரப்படுகிறது.

எனவே ஆந்திரா மற்றும் மேற்குவங்காள அரசுகளைப் போல தமிழக அரசும் அதிகபட்ச
ஊதியம், மகப்பேறுகால விடுப்பு, இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசுநிதி
போன்றவற்றை வழங்கவேண்டும் என கோரிக்கை விடுத்து வருகிறோம். இதனை அரசு
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த பணியில் நாங்கள் பணியமர்த்தப்பட்ட பின் இதுவரை 7 பட்ஜெட்டுகளை
சமர்பித்துள்ளார்கள். ஆனால் ஒருமுறைகூட ஊதிய உயர்வு அளிக்கவில்லை.
நாங்கள் இதே பாடப்பிரிவுகளில் இத்திட்ட வேலையில் பணிபுரியும்போது
காலிப்பணியிடங்களில் எங்களை பணியமர்த்தாமல், முன்னுரிமை வழங்காமல்,
தமிழ்நாடு ஆசிரியர் தேர்வாணையம் 652 கணினி அறிவியல் ஆசிரியர்கள்
வேலைவாய்ப்பு பதிவு மூப்பு அடிப்படையில் நிரந்தர ஊதியத்தில்
பணியமர்த்திவிட்டது.
அதைப்போலவே ஆசிரியர் தேர்வாணையம் 1325 சிறப்பாசிரியர்கள்
காலிப்பணியிடங்களில் எங்களை புறக்கணித்து முன்னுரிமைகூட வழங்காமல்
உடற்கல்வி, ஓவியம், தையல், இசை ஆசிரியர்கள் தேர்வை நடத்தியது. தேர்வு
முடிவுகள் வெளியிடப்பட்டு பின்னர் நீதிமன்ற உத்தரவால் இந்நியமனங்கள்
இதுவரை நடைபெறாமல் உள்ளது. கல்வித்துறையை தவிர பிற துறைகளில் இதுபோன்று
நடப்பதில்லை.

எனவே சமவேலை சமஊதியம் வழங்கினால் மட்டுமே பகுதிநேர ஆசிரியர்களின்
வாழ்வாதாரம் மேம்படும்.இதே பாடப்பிரிவுகளில் நிரந்தர ஆசிரியர்களுக்கு
வழங்கப்படும் சம்பளத்தை எங்களுக்கு வழங்கவேண்டும்.
தினக்கூலி ஒப்பந்த, தற்காலிக பணியாளர்களுக்கு அதே பிரிவில் நிரந்தர
ஊழியர்களுக்கு வழங்கும் சம்பளத்தை வழங்கவேண்டும் என ஏற்கனவே
உச்சநீதிமன்றமும், தற்போது உயர்நீதிமன்ற மதுரைக்கிளையும் இதனை
உறுதிப்படுத்தியுள்ளது.
எனவே அரசு இதனை பள்ளிக்கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்திட்ட
பகுதிநேர ஆசிரியர்களுக்கும் அமுல்படுத்த வேண்டும்.

2015 முதல் 2019 (ஜனவரி 22-30) ஜாக்டோஜியோ வேலைநிறுத்த நாட்களில்
முழுநேரமும் பள்ளிகளை திறந்து நடத்திட அரசு பகுதிநேர ஆசிரியர்களையே
பயன்படுத்தி வருகிறது.

பள்ளிப்பணிகளில் எல்லா வகையிலும் தொடர்ந்து ஈடுபடுத்தப்பட்டுவரும்
எங்களுக்கு அரசுஊழியர்களைபோலவே பணப்பலன்களையும், அரசு சலுகைளையும்
கிடைத்திட செய்ய அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.

கல்வி தகுதிகேற்ப அவரவர் பாடப்பிரிவுகளில் சிறப்பாசிரியர்களாக அனைவரையும்
காலமுறை ஊதியத்தில் பணியமர்த்தி பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பதே
எங்களின் ஒரே கோரிக்கை. இப்போதுள்ள அரசாணை ஒப்பந்த தொகுப்பூதிய பகுதிநேர
வேலையாக உள்ளதால், புதிய அரசாணை வெளியிட்டு அனைத்து வேலைநாட்களிலும்
முழுநேரத்துடன் சிறப்பாசிரியர்களாக காலமுறை ஊதியத்தில் பணியமர்த்திட
அனைவரும் கேட்டு வருகிறோம். ஆளும் அதிமுக அரசு இதனை இத்தருணத்தில்
செய்திட அனைவரும் வேண்டிக்கொள்கிறோம்.

அனைத்து வேலைநாட்களிலும் முழுநேரவேலையுடன் சிறப்பாசிரியர்களாக
பணிநிரந்தரம் தர வலியுறுத்தி முதல்வருக்கு கடிதம் அனுப்பி வருகிறோம்.
எனவே எங்களின் நீண்டகால கோரிக்கைகளை அரசு கவனம் செலுத்தி மனிதநேயத்துடன்
வாழ்வுரிமை காத்திட கேட்டுக்கொள்கிறோம். மேலும் முதல்வர், பள்ளிக்கல்வி
உள்பட அனைத்து அமைச்சர்கள், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும்
கல்வித்துறை அதிகாரிகளை நேரடியாக சந்திந்து தொடர்ந்து கோரிக்கை மனுவுடன்
முறையிடுவது என  கோரிக்கை நிறைவேறும்வரை தொடர்வது என முடிவு செய்துள்ளோம்
என்பதையும் தெரிவித்து கொள்கிறோம்.


இவண்,
சி.செந்தில்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
தமிழ்நாடு அனைத்து பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு
செல் – 9487257203

பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ் பொது தேர்விற்காக... மாணவர்களுக்கு சில டிப்ஸ்

1. குறித்த நேரத்திற்கு முன்பாக தேர்வு மையத்திற்கு சென்று இறுதி நேர பதற்றத்தை தவிர்த்து கொள்ள வேண்டும்.

2. தேர்விற்கு முந்தைய நாளே தேர்விற்கான எழுது பொருட்களை தயார் செய்து கொள்ள வேண்டும்.

3. கூடுதலாக ஒரு பேனா கையில் வைத்திருப்பது தேர்வறையில் உதவும்.

4. தேர்விற்கு முந்தைய இரவு அதிகம் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.

மன வரைப்படம் போல படித்து நினைவுகூர்தலை பயிற்சி எடுங்கள். சிறு குறிப்புகள் எடுங்கள். இறுதி நேர திருப்புதலில் உதவும்.

ஒவ்வொரு வினாவிலும் - நினைவு கூர்தலுக்காக முக்கிய கருத்துளை points ஆக மனதில் கொள்ளுங்கள்.


5. தேர்வு காலங்களில் அதிகம் பழங்கள் & காய்கறிகளை உணவாக எடுத்து கொள்ள வேண்டும்.

அதிகளவில் நீர் பருக வேண்டும்.

6. தேர்வறைக்கு செல்லும் முன் சிறு காகித துண்டு துணுக்குகள் உள்ளனவா சுய பரிசோதனை செய்து தன்னம்பிக்கையுடன் தேர்வறை செல்ல வேண்டும்.

7. முன் திட்டமிடல் மற்றும் நேர மேலாண்மை மிக அவசியம்.

8. வினாத்தாள் படிக்கும் 10 நிமிடம் மிக முக்கிய தருணம். சலனமின்றி வினாத்தாளை படியுங்கள். வினாத்தாள் எவ்வளவு கடினத் தன்மை மிக்கதாய் இருப்பினும் பதற்றம் வேண்டாம். நம்பிக்கையுடன் எதிர்கொள்ளவும்.

9. தேர்வு தாளில் கையொப்பமிட மறக்க வேண்டாம்.

10. தேர்வு முடிந்த பிறகு வினாத்தாள் பற்றி கலந்துரையாடலை தவிர்க்கவும். எழுதியவை மாறப்போவதில்லை.


 11. சிறு உறக்கம் எடுத்து கொண்டு புத்துணர்வுடன் அடுத்த தேர்விற்கு படிக்கவும்.

12. விடுமுறை நாள் சோம்பலை தவிர்க்க குழுவாக படியுங்கள் அல்லது பள்ளி சென்று படியுங்கள்.

13. இறுதி நேரத்தில் படித்ததை மீள்பார்வை செய்யுங்கள்.
புதியவை படிக்க வேண்டாம்.

14. தேர்வை மயிலிறகை போல மென்மையாய் அணுகவும் . மகிழ்வாய் தேர்வினை எழுதுங்கள் .

15. உங்களுக்கு வழிகாட்டியான பெற்றோர் அல்லது  ஆசிரியர்களிடம் ஆசி பெற்று செல்லுங்கள். கூடுதல் நம்பிக்கை பிறக்கும்.

15. Creative வினாக்காளை பாடத்துடன் தொடர்புபடுத்தி சிந்தித்து தீர்வு கண்டு - விடையளிக்கவும்.

16. வெயில் வெப்பம் அதிகம் இருப்பதால் சரியான அளவு நீர் கொண்ட இயற்கை உணவு பொருட்களை உட்கொள்ளுங்கள்.

17. தேர்விற்கு முந்தைய நாள் தயாரிப்புகளில் - ஏற்கனவே பலமுறை படித்ததன் காரணமாக ஏற்படும் சலிப்பினை தவிர்க்க மனதை ஒருநிலைபடுத்தி மகிழ்ச்சியாய் வைத்து கொள்ளுங்கள்.

18. படிப்பதன் இடைவெளிகளில் இயற்கை சூழலை ரசிக்க நடை பயணம் மேற்கொள்ளுங்கள். TV பார்ப்பது படித்ததை மறக்க செய்யும். மாறாக நல்ல இசை கேட்கலாம்.

19. நம்மை நாம் வெளிபடுத்த _ நமக்கு கிடைத்த வாய்ப்பு என எண்ணி படியுங்கள்.

20. இறுதியாக தன்னம்பிக்கை - இது ஒன்று மட்டும் போதும். எதிர்வரும் தேர்வில் எண்ணிய இலக்கை எட்டலாம்.

முயற்சியும் - பயிற்சியும் வெற்றியின் வழிகாட்டிகள்.

வாகை சூட வாழ்த்துகளுடன் கனவு பள்ளி பிரதீப்

TN School App - மாற்றம் செய்ய வேண்டியவைகள்

1. Synchronization button will be in the home page. Probably at the bottom of home page.

2. Need more server speed. Then only we can mark attendance even in weak signal area.

3. Aged HMs feel reluctant to separate login for students and teachers attendance. Once logout, it is hard to login again.
So separate app for teachers attendance may be the solution.

4. In latest VIVO 11 pro I can able to put attendance but it is not updating (green mark). But with my assistant old 3G phone it can be done. I used all the ways guided by your team. Please clarify this in chennai meeting.

5. In some schools which are in hilly area attendance shows as not marked even they come to signal area.

6. Teachers attendance ல் பிற்பகல்  அரை நாள் தற்செயல் விடுப்பை பதிவு செய்ய முடியுமா

7. In Teacher's emis no... date of birth is differed.

8. Many teachers have not yet been added in teachers profile.... Even if add them now it is not updated in attendance. How do mark attendance to them???

9. All teachers want atleast one hour training about teacher's app .how to rectify the problems

10. In some schools teachers attendance shows as already marked..... HM suspected someone might have without his knowledge. How solve such technical problems Sir???

11. In some schools userid and password opens in EMIS but not in attendance App.

12. If HM is absent ,how to put teachers attendance.whether the assistant can use HMs id and put teachers attendance on that day.whether any problem will arise.what is the solution.

கணினி ஆசிரியர்களை கவனிக்குமா அரசு? ( சிறப்புக் கட்டுரை)தமிழக அரசு தற்போது வெளியிட்டுள்ள புதிய அரசாணை முதுகலை பட்டம் பயின்ற கணினி ஆசிரியர்களிடம் வரவேற்பை பெற்ற போதிலும் 40,000கணினி ஆசிரியர்களின் வாழ்வாதாரம் பாதிக்கும் நிலையை ஏற்படுத்தியுள்ளது.தமிழகத்தில் இதுவரை 54,000 கணினி ஆசிரியர்கள் பி.எட் பட்டம் பெற்றுள்ளனர். இதில் 40000த்திற்கும் மேற்பட்டோர் இளங்களை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். 

மீதமுள்ள 10000க்கும் மேற்பட்டோர் முதுகலை பட்டத்துடன் பி.எட் பட்டம் பெற்றவர்கள். இந்நிலையில், புதிய அரசாணையில் கணினி ஆசிரியர்களின் கல்வித்தகுதி மாற்றப்பட்டுள்ளது. மற்ற பாடங்களை கற்பிக்கும் அதே கல்வித் தகுதி கொண்ட ஆசிரியர்களை முதுகலை ஆசிரியர்கள் என்றும், கணினி பாடப்பிரிவில் முதுகலை படிப்புடன் பி.எட் பட்டம் பெற்றாலும் பயிற்றுனர் என்றும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுதொடர்பாக, தமிழ்நாடு பி.எட்., கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் தனது குமுறலை வெளிப்படுத்தியுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை மேல்நிலைப்பள்ளிகளில் மட்டும் தான் கணினி அறிவியல் பாடம் நடைமுறையில் உள்ளது. என்சிஇஆர்டி விதியின் படி தனிப் பாடமாக தமிழகத்தில் கணினி பாடம் முதல் வகுப்பிலிருந்து நடைமுறைப்படுத்தப்படவில்லை.


புதிய பாடத்திட்டத்தில் 6 மற்றும் 9ம் வகுப்பில் மத்திய அரசின் நிதிக்காக கணினி என்ற பாடம் பெயரளவில் மட்டும் மூன்று பக்கங்களை அறிவியல் பாடத்துடன் இணைத்துள்ளது.
இதனை முறையாக செயல்படுத்தியிருந்தால் இளங்கலை படித்த அனைத்து ஆசிரியர்களும் பயன்பெறுவர்.2011ம் கல்வியாண்டில் தமிழகத்தில் கணினி அறிவியல் பாடம் 6ம் வகுப்பிலிருந்து 10ம் வகுப்பு வரை மற்ற மாநிலங்களுக்கும் முன்னோடியாக கொண்டுவரப்பட்டது;

 அதற்காக புத்தகங்களும் பல கோடி செலவில் அச்சடிக்கப்பட்டது; ஆனால் இதுவரை மாணவர்களுக்கு வழங்காமல் குப்பைக் கழிவாக மற்றப்பட்டுள்ளது. மேலும் கணினி கல்விக்காக 2011-12ம் ஆண்டு மத்திய அரசு ரூ. 900 கோடி நிதி வழங்கிய போதிலும் கடந்த 8வருடங்களாக நிதியை பயன்படுத்தாமல் நல்ல திட்டத்தை அரசு இன்று வரை கிடப்பில் போட்டுள்ளது.
இந்நிலையில், புதிய அரசாணையால் இளங்கலை பட்டத்துடன் பி.எட் படித்த 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் தேர்வோ, பதிவு மூப்போ எதிலும் கலந்து கொள்ள இயலாத நிலை உருவாகியுள்ளது. 2014ம் ஆண்டில் உச்சநீதிமன்ற உத்தரவின்படி இளங்கலை பட்டத்துடன் கணினி பாடத்தில் பி.எட் பட்டம் பெற்றவர்களை பதிவு மூப்பின் அடிப்படையில் பணி நியமனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


 ஆனால் தற்போது யுஜிசி அறிவிப்பால் குறிப்பிட்ட சில பல்கலைக்கழகத்தில் எம்சிஏ., எம்.எஸ்சி (ஐடி) படித்தவர்கள், எம்எஸ்சி சிஎஸ் (கம்ப்யூட்டர் சயின்ஸ்)க்கு இணையான கல்வி பெறவில்லை என்ற அறிவிப்பால் 5000க்கும் மேற்பட்ட முதுகலை பட்டம் பெற்ற ஆசிரியர்களும் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.


தமிழக அரசு காலியாக உள்ள 814 கணினி ஆசிரியர் பணியிடங்களை தேர்வோ, பதிவுமூப்பின் வாயிலாகவோ நியமனம் செய்தால் மொத்தம் 54,000 ஆசிரியர்களில் 7000பேர் மட்டும் தான் கலந்துகொள்ளும் சூழல் உருவாகும். இந்த அரசாணை எண் 26 என்பது 50000 கணினி ஆசிரியர்கள் குடும்பத்தின் வாழ்வை முற்றிலும் பாதிக்கும் என்று மேற்கண்ட ஆசிரியர் சங்கம் கூறுகிறது.
புறக்கணிக்கப்படும் கணினி ஆசிரியர்கள்
மற்ற பாட ஆசிரியர்கள் போன்று அல்லாமல் டிஇஓ, ஏஇஇஓ போன்ற தேர்வு எழுதவும் கணினி ஆசிரியர்களுக்கு அனுமதி இல்லை.


மத்திய அரசின் நிதியை முறையாக பயன்படுத்தி (தொடக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை)பள்ளிகள் தோறும் குறைந்த பட்சம் 30 கணினிகளுடன் கணினி ஆய்வகங்கள் அமைத்து, பள்ளிக்கு ஓர் கணினி ஆசிரியர் நியமனம் செய்து கணினி அறிவியல் பாடத்தை ஆரம்ப கல்வி முதலே நடைமுறைப்படுத்தினால் தமிழகத்தின் கிராமப்புற அரசுப் பள்ளி ஏழை எளிய மாணவர்களும், அரசுப்பள்ளிகளும் மேன்மையடைவார்கள் என்றும் அச்சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் ஜமுனா ராணி வெளியிட்டுள்ள செய்தியில் வேண்டுகோள் விடுத்துள்ளார்
--
வணக்கம்
வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச் செயலாளர் ,
9626545446 ,
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் பதிவு எண்:655/2014.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு: கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை நினைவூட்ட பள்ளிகளுக்கு அறிவுரை


பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு கால அட்டவணை மற்றும் தேர்வு நேர மாற்றத்தினை அனைத்து மாணவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் நினைவூட்டும் படி அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

அதில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் மொழிப்பாடங்களான தமிழ், ஆங்கிலம் முதல் மற்றும் இரண்டாம் தாள் தேர்வுகள் பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி 4.45 மணி வரை நடைபெறும் என மீண்டும் நினைவூட்டப்பட்டுள்ளது. ஏனைய பாடங்களான கணக்கு, அறிவியல், சமூக அறிவியல் மற்று விருப்ப மொழிப்பாடங்களுக்கான தேர்வு காலை 10 மணிக்கு தொடங்கி, 12.45 மணி வரை நடைபெறும் என்பதையும் நினைவு கூர்ந்துள்ளது.

எனவே, தேர்வு நேர மாற்றத்தை மாணவர்கள் மனதில் பதியும் வண்ணம் இறைவணக்க கூட்டத்தில் அறிவிக்குமாறு அனைத்து பள்ளி தலைமையாசிரியர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், இவ்விவரத்தினை தலைமை ஆசிரியர்கள் அவர்களது பள்ளியில் உள்ள தகவல் பலகையில், மாணவர்கள் பார்வையில் படும் வண்ணம் ஒட்டிவைக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMIS - TN School Attendance App TIps தலைமை ஆசிரியர்கள் கவனத்திற்கு !!

 
Image result for EMIS - TN School Attendance App
சில பள்ளிகள் அனைத்து வகுப்புகள் பதிவு செய்த பின்னும் பதிவு செய்யாத பள்ளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளதற்கு  காரணம் வகுப்பு பிரிவுகள் (total section) எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் தான். அதனை சரி செய்ய   Google browserஇல் Tn SchoolsEMIS page Open செய்து அதில் school info open செய்யவும்.     அதில் class & section select செய்து *தேவையற்ற வகுப்பு பிரிவுகளை நீக்கி விட்டால் போதும்.

அறிவியல்-அறிவோம்: "ஆரோக்கியம் காக்கும் புளி"


Tamarindus indica. Linn.என்ற தாவரவியல் பெயர் கொண்ட புளி Caesalpiniaceae குடும்பத்தை சேர்ந்தது. புளி நம் உணவின் முக்கிய அங்கமாகும்.

* ‘புளிக்குழம்பா?’ என அலர்ஜி காட்டும் குழந்தைகளில் பலரும் அதன் சுவையால் அதை ஒதுக்குவது இல்லை. அந்தக் குழம்பின் வண்ணம்தான் அவர்களுக்கு அலர்ஜியை வரவழைத்துவிடுகிறது. கறுப்பு என்றால் அழுக்கு, பழுப்பு என்பது பரவாயில்லாத அழுக்கு என்கிற விஷமத்தனமாகப் பழக்கப்படுத்தப்பட்ட மனநிலை காரணமாகவே புளிக்குழம்பைப் பழிக்கிறார்கள். ஆனால், இது மகத்தான மருத்துவக் குணம் கொண்டது என்பதை ஆப்பிரிக்க அப்பத்தாக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். பல்வேறு வகையான காய்ச்சல், அஜீரணம், சுவாச நோய்கள் ஆகியவற்றுக்கும் புண்ணை ஆற்றும் தன்மைக்கும் கிழக்கு, மேற்கு ஆப்பிரிக்க நாடுகள் இதைத்தான் நம்பியிருக்கின்றன. இதை, `ஜர்னல் ஆஃப் எத்னோபார்மகாலஜி’ (Journal of Ethnopharmacology) எனும் மருத்துவ நூல் ஆவணப்படுத்தியுள்ளது.

* புளிக்கரைசலில் ஊறவைத்து வேகவிடுவதாலேயே, காய்கறிகளின் புரதச்சத்து, பல கனிமச் சத்துக்கள் வீணாகாமல் பாதுகாக்கப்படுகின்றன என்ற தேசிய உணவியல் கழகத்தின் ஆய்வு முடிவுகள், நம் முன்னோர்களின் பழக்கத்துக்குக் கிடைத்த அறிவியல் அங்கீகாரம்.

* இதில் அதிகம் இருப்பது, ஆன்டிஆக்ஸிடன்ட் தன்மையுள்ள டார்டாரிக் அமிலம். அதோடு வைட்டமின் பி வகைச் சத்துக்கள், கால்சியம், இன்னும் மருத்துவக் குணமுள்ள கூறுகள் (Phytonutrients) நிறையவே உள்ளன. பார்வைத்திறனில் பாதிப்பு உண்டாக்கும் சாதாரணக் கிருமித் தொற்று முதல் வயோதிகம் உண்டாக்கும் பிரச்னைகள் வரை தீர்ப்பதற்கு புளிக்கரைசைலைப் பயன்படுத்தலாமா என ஆய்வாளர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள்.

புளியங்காய்
`அதிக சர்க்கரைக்கும், அதிக ரத்தக் கொழுப்புக்கும்கூட புளி வேலை செய்வதில் புலியா?’ என  ஆராய்ந்துவருகிறார்கள்.

* `மருத்துவக் குணமும், பட்டையைக் கிளப்பும் ருசியும் கொண்டது’ என உலகம் முழுக்கக் கொண்டாடப்படும் ஐரோப்பாவின் `வோர்செஸ்டெர்ஷைர் சாஸ்’ (Worcestershire sauce), ஜமைக்காவின் பிக்காபெப்பா சாஸ் (Pickapeppa sauce) இரண்டிலும் நாம் இளக்காரமாக நினைக்கும் புளிக்கரைசல்தான் மிக முக்கியப் பொருள்.

புளியின் மருத்துவ குணங்கள்:

உடம்பு உஷ்ணமாகி வயிற்று வலியால் துடிக்கிறவர்களுக்கு புளியை தண்ணீரில் ஊறப்போட்டு நன்றாக கரைத்து, அதோடு பனைவெல்லம் (கருப்பட்டி) சேர்த்துக் குடிக்க கொடுத்தால் உடனடி நிவாரணம் கிடைக்கும். வெயில் காலத்தில் இந்தக் கரைசல் கைகண்ட மருந்தாக இருக்கும்.
புளியம்பூ, புளியம்பிஞ்சு இரண்டையும் தேவையான அளவு க.மிளகாய், உப்பு சேர்த்து இடித்து காய வைக்க வேண்டும். இதை ஊறுகாய் மாதிரி சாப்பாட்டோடு சேர்த்துக்கொண்டால் உடல் உஷ்ணம் தணிவதோடு நல்ல பசியும் உண்டாகும்.
புளியில் இப்படி நல்ல குணங்கள் நிறைய இருந்தாலும், அளவுக்கு மிஞ்சுனா அமிர்தமும் நஞ்சு என்கிற மாதிரி, ஒரு சில நோய்களுக்கு புளி ஆகாது. அதனால் சமயமறிந்து பயன்படுத்துவது நல்லது

புளி எலும்புகள் தேய்மானத்தைக் குறைக்கும் தன்மையுடையது. அதனால், எலும்புகளின் தேய்வால் உண்டாகும் மூட்டுவலி விரைவிலேயே கட்டுக்குள் வரும். 100 கிராம் புளியில் ஒரு நாளைக்கு நமக்குத் தேவைப்படுகிற இரும்புச்சத்து முழுமையும் கிடைக்கிறது.

அதேபோல், ஜீரணக் கோளாறுகள், நோய் எதிர்ப்பு ஆற்றல், உடலின் ரத்த ஓட்டம் உள்ளிட்டவைகளை புளி சீராக்குகிறது.

மேலும், உடலில் உள்ள சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. அதோடு உடலில் தேங்கியிருக்கும் கொழுப்புகளைக் கரைக்கும் சக்தியும் புளிக்கு உண்டு. கால்களில் உண்டாகும் நீர்த்தேக்கம், வீக்கம், கீழ்வாதம் போன்றவற்றையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது.

* நம் ஊர் அம்மன் கோயில் பானகத்தின் ருசிக்கு ஈடு ஏது? அதற்கு யாராவது ஒரு ஆங்கில சாஸ் பெயரை வைத்தால், இளைஞர்கள் போட்டி போட்டுக்கொண்டு வாங்கிச் சாப்பிடுவார்களோ, என்னவோ!

`தாவரக் கூட்டத்தின் மாணிக்கங்கள்’ என்றால் அவை `ஸ்பைசஸ்’ எனப்படும் மணமூட்டிகள்தான். அவற்றில் புளி, நம் ஆரோக்கியம் காக்கும் அற்புதமான மாணிக்கம்!

சமூக வலைதள வதந்தியை நம்பாதீர் : மாணவர்களுக்கு சி.பி.எஸ்.இ., எச்சரிக்கை

  'பொது தேர்வுகள் குறித்து, சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை நம்ப வேண்டாம்' என, மாணவர்களை, சி.பி.எஸ்.இ., எச்சரித்துள்ளது.மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., பாட திட்டத்தில், பொது தேர்வுகள் நடந்து வருகின்றன. இந்த தேர்வுக்கான வினாத்தாள், விதிமுறைகள் குறித்து, பல்வேறு தகவல்கள், 'பேஸ்புக், டுவிட்டர்' போன்ற, சமூக வலைதளங்களில் பரவுகின்றன.இது குறித்து, சி.பி.எஸ்.இ., வெளியிட்ட செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொது தேர்வுகள், பிப்., 15 முதல் நடந்து வருகின்றன. முக்கிய பாடங்களுக்கான தேர்வுகள் துவங்க உள்ளன. எனவே, மாணவர்கள் முன்கூட்டியே சென்று, தங்கள் தேர்வு மைய இடங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.தேர்வு மையங்களுக்கு, காலை, 9:45 மணிக்குள் சென்று விட வேண்டும். போக்குவரத்து பிரச்னைகளை மனதில் வைத்து, மாணவர்கள் முன்கூட்டியே திட்டமிட வேண்டும். காலை, 10:00 மணிக்கு பின், எந்த மாணவரும் தேர்வு மையத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.பள்ளி மாணவர்கள் கட்டாயம் சீருடை அணிந்து வர வேண்டும். தனி தேர்வர்கள், மெல்லிய ஆடை அணிந்து வர வேண்டும். மொபைல்போன் உட்பட, எந்த மின்னணு சாதனங்களும் எடுத்து வரக் கூடாது. ஹால் டிக்கெட்டை கட்டாயம் எடுத்து வர வேண்டும்.பொது தேர்வு தொடர்பாக, பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில், சிலர் வதந்திகளை பரப்புகின்றனர். மாணவர்களும், அவர்களின் பெற்றோரும், சமூக வலைதளங்களில் பரவும் தவறான தகவல்களை நம்ப வேண்டாம். பள்ளிகள் மற்றும் தேர்வு மையங்களில், தகவல்களை உறுதி செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.

15.18 லட்சம் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கும் திட்டம்: முதல்வர் தொடங்கி வைத்தார்மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தொடங்கி வைத்த முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி.

தமிழகத்தில் பள்ளிகள், பாலிடெக்னிக்குகளில் படிக்கும் மாணவ-மாணவியருக்கு இலவச மடிக்கணினி வழங்கும் திட்டத்தை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி புதன்கிழமை தொடங்கி வைத்தார். இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.
இதுகுறித்து, தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:-பிளஸ் 2 வகுப்பில் வழங்கப்பட்டு வந்த மடிக்கணினிகளை ஓராண்டுக்கு முன்பாக பிளஸ் 1 வகுப்பிலேயே வழங்கிட தமிழக அரசு முடிவெடுத்தது. இதன் அடிப்படையில், பிளஸ் 1 படிக்கும் 5.12 லட்சம் மாணவ-மாணவிகளுக்கும், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மடிக்கணினி பெறாத பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கும், அரசு-அரசு உதவி பெறும் பாலிடெக்னிக் கல்லூரிகளில் முதலாண்டு படிக்கும் மாணவர்கள், அரசு மற்றும் அரசு உதவி பெறும் மாற்றுத் திறனாளி பள்ளிகளில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்கள் என மொத்தம் 15.18 லட்சம் பேருக்கு விலையில்லாத மடிக்கணினிகள் வரும் கல்வியாண்டில் அளிக்கப்பட உள்ளது.
இந்தத் திட்டத்தை தொடங்கி வைக்கும் அடையாளமாக ஏழு பேருக்கு மடிக்கணினிகளை முதல்வர் பழனிசாமி வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, எம்.மணிகண்டன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

அரசு பள்ளியில் மாணவிகளே நூலகம் துவங்கினர்


600 புத்தகங்கள் வழங்கி அசத்தல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அடுத்த கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஒவ்வொரு ஆண்டும் கல்வியில் சாதனை படைத்து வரும் பள்ளிகளில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், மாணவிகளை சாதிக்க தூண்டும் விதமாக முன்னாள் மாணவிகள், பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் ஒவ்வொரு ஆண்டும் தேர்வில் வெற்றி பெற்று சிறப்பிடம் பிடிக்கும் மாணவிகளுக்கு தங்க நாணயம், ரொக்க பரிசுகள் என வழங்கி சிறப்பித்து வருகின்றனர்.

இந்நிலையில், பள்ளியில் படிக்கும் மாணவிகள் இணைந்து பள்ளியில் நூலகம் தொடங்க திட்டமிட்டனர். இதனால், பள்ளியில் படிக்கும் சுமார் 825 மாணவிகளும் இணைந்து 600 புதிய புத்தகங்களை வாங்கி பள்ளி ஆசிரியர்களிடம் வழங்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் வாங்கப்பட்ட புத்தகங்களை ஆசிரியர்களிடம் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது.

நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமை ஆசிரியர் கோவிந்தராஜ் தலைமை வகித்தார்.  பிடிஏ தலைவர் சின்னசாமி முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் 600 புத்தகங்களை மாணவிகள் வழங்கினர். மாணவிகளின் ஆர்வத்தை மேலும் தூண்டும்விதமாக பள்ளியில் பணிபுரியும் 30 ஆசிரியர்களும் தங்களுடைய பங்காக புத்தகங்களை பள்ளிக்கு வழங்கினர். மாணவிகளிடம் இருந்து பெறப்பட்ட புத்தகங்களை பள்ளி நூலக அலுவலர் நதிராபேகத்திடம் பள்ளி தலைமை ஆசிரியர் வழங்கினார்.

இதுகுறித்து புத்தகம் வழங்கிய பள்ளி மாணவிகள் கூறுகையில், ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்கள் மாணவிகளுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுவார்கள். அதனால் அந்த நாளில் மாணவிகள் அனைவரும் ஆசிரியர்களிடம் புத்தகம் வழங்கி நூலகம் அமைக்கலாம் என்று மாணவிகள் இணைந்து திட்டமிட்டு அனைத்து மாணவிகளிடமும் பணம் சேகரித்தோம். ஆனால் அந்த நேரத்தில் கஜா புயல் வீசியதால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.

அதனால், அப்போது எங்களால் புத்தகங்களை வாங்க இயலவில்லை.  கடந்த சில நாட்களுக்கு முன் புதுக்கோட்டையில் நடந்த புத்தக திருவிழாவில் புத்தகங்களை வாங்கி வந்து பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் வகுப்பு ஆசிரியர்களிடம் வழங்கியுள்ளோம். வழங்கப்பட்ட புத்தகங்களில் போட்டி தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையிலும் அதிகமான புத்தகங்களை சேகரித்துள்ளோம்.

மேலும், இங்கே படித்துவிட்டு கல்லூரி படிப்பையும் முடித்து போட்டி தேர்வுகள் மூலம் வேலை தேடும் முன்னாள் மாணவிகளும் எங்கள் நூலகத்தில் வந்து புத்தகங்களை எடுத்து படித்து பயன்பெறலாம். இந்நிகழ்ச்சி இந்த ஆண்டோடு முடிந்துவிடாது. ஓவ்வொரு ஆண்டும் ஆசிரியர் தினத்தில் ஆசிரியர்களை கவுரவிக்கும் விதமாக நூலகத்திற்கு புத்தகம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இன்னும் சில ஆண்டுகளில் பெரிய நூலகம் உள்ள அரசு பள்ளி கீரமங்கலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி என்ற சாதனையை படைப்போம் என்றனர்.

அடிப்படைக் கல்வியில் ஆங்கில மாயை தேவையில்லை- மயில்சாமி அண்ணாதுரை கருத்து


தமிழ்நாட்டில் அங்கன்வாடிகளில் LKG UKG வகுப்புகள் தொடங்க முற்படும் நேரத்தில் புகழ் பெற்ற விஞ்ஞானியின் கருத்து வந்துள்ளது....

மாணவர்கள் அமெரிக்கா, லண்டன் சென்று படிக்க வேண்டியதில்லை. இங்குள்ள குக்கிராமத்தில் படித்த நாங்கள் வெற்றியைப் பெற்றிருக்கும்போது , இன்றைக்கு நவீன வசதிகள் பெருகிவிட்ட நிலையில் தற்போதுள்ள மாணவர்கள் வெற்றி பெற முடியும். அறிவியல் என்பது சுயசிந்தனையில் வர வேண்டும்.
பேசும்போது நான் ஆங்கிலத்தில் பேசலாம், ஆனால் சிந்திப்பது தாய்மொழியில்தான்.

அமெரிக்கா, ரஷ்யா, ஐரோப்பா போன்ற நாடுகளில் செயற்கைக்கோள்களை உருவாக்கி அதை நிலைநிறுத்தப் பல ஆண்டுகள் எடுத்துக் கொண்டார்கள். ஆனால், நாங்கள் குறுகிய காலத்தில் செயற்கைக்கோள்களை உருவாக்கினோம். கடைசியாக ஏவப்பட்ட 3 செயற்கைக்கோள்கள் 96 நாள்களில் ஏவப்பட்டு, விண்ணில் நிலை நிறுத்தப்பட்டன. விண்வெளி ஆய்வில் வெற்றிகளை எட்டுவதற்காகஎன்னுடன் பணியாற்றிய சக அறிவியலாளர்கள் பலர் தாய்மொழியில் கல்வி கற்றிருந்தனர். எனவேதான், அவர்களால் சுயமாகச் சிந்திக்க முடிந்தது. நாங்கள் சுயமாகச் சிந்தித்ததும் எங்களின் வெற்றிக்கு ஒரு காரணமாக இருந்தது

எனவே, *தாய்மொழியில் படிப்பது பலவீனம் அல்ல*. தாய்மொழியில் படிப்பதுதான் பலம். இதை மாணவர்கள் உணர வேண்டும். தன்னிடமிருந்துதான் மாற்றம் தொடங்க வேண்டும் என மகாத்மா காந்தி கூறுகிறார். அப்பா, அம்மா குழந்தைகளுக்கு முன்மாதிரிகளாக இருந்தால், ஒரு நடிகரையோ, விளையாட்டு வீரரையோ குழந்தைகள் முன்மாதிரிகளாகக் கொள்ள வேண்டியதில்லை.

ரஷ்யா, ஜெர்மனி, அமெரிக்கா போன்ற நாடுகளின் விஞ்ஞானிகள், அவரவர் தாய்மொழியில் படித்து, சிந்தித்து, முன்னேறுகின்றனர். எனவே, ஆங்கிலம் என்ற மாயை பள்ளிக்கூட, அடிப்படைக் கல்வியில் தேவையில்லை என்பதே எனது கருத்து

- விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை

கடந்த வாரம் சென்னை ரஹ்மத் அறக்கட்டளை மற்றும் வளரும் அறிவியல் இதழ் ஆகியவை இணைந்து பத்ம விருதுபெற்ற இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரைக்குப் பாராட்டு விழா நடத்தினர். அந்த விழாவில் மயில்சாமி அண்ணாதுரை ஆற்றிய ஏற்புரையின் சிறு பகுதி...

நன்றி தி இந்து

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு உளவியல் ஆலோசனை

தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு மாநில சுகாதாரத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் 104 உதவி மையத்தின் மூலம்  உளவியல் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து 104 உதவி மையம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழக சுகாதாரத் துறையின் கீழ் 24 மணிநேர தொலைபேசி சேவையான 104 மருத்துவ உதவி மையம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மருத்துவம் தொடர்பான தகவல்கள், உடல்நலம் மற்றும் உளவியல் ஆலோசனை மற்றும் புகார் ஆகியவற்றுக்காக 104 மருத்துவ உதவி மையத்தை மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

 இச்சேவை மூலம் இதுவரை 12 லட்சத்து 35 ஆயிரத்து 268 பேர் பயனடைந்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டும் தேர்வு காலத்தின்போது சிறப்பு முகாம்கள் 104 மருத்துவ உதவி மையம் மூலம் நடத்தப்படுகின்றன.

 அதன்படி, இந்த ஆண்டும் மாணவர்களுக்கான சிறப்பு உளவியல் ஆலோசனை முகாம்கள் தொடங்கப்பட்டுள்ளன.

தேர்விற்கு எப்படி நம்பிக்கையோடு தயாராவது, அதனை எவ்வாறு நம்பிக்கையோடு எதிர்கொள்வது, பதற்றத்தை தவிர்ப்பது எப்படி, மனதை ஒருமுகப்படுத்துவது எப்படி, நினைவாற்றலை பெருக்குவதற்கான எளிய வழிமுறைகள் என்னென்ன?,

மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கான பயிற்சிகள் எவை?, எண்ணச் சிதறலை எப்படி தவிர்ப்பது, உணவு முறைகள், உறங்கும் முறைகள், பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் சுற்றத்தினரின் அழுத்தத்தை பயன்தரும் விதமாக கையாளுவது எப்படி என பல்வேறு விஷயங்கள் குறித்த சிறப்பு ஆலோசனை வழங்குவதற்காக உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் அடங்கிய குழு 24 மணி நேரமும் செயல்படுகிறது.

இந்தச் சிறப்பு சேவை மார்ச் மாதம் முழுவதும் செயல்படும். தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவிகள் 104-ஐ தொடர்பு கொண்டு ஆலோசனைகளை பெறலாம். தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள்களிலும் இந்த சேவைகள் வழங்கப்படும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் பயோ மெட்ரிக் வருகைப்பதிவு: தடை கோரியவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் வருகையை பயோ மெட்ரிக் முறையில் பதிவு செய்யும் திட்டத்துக்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தில் நாமக்கல்லைச் சேர்ந்த ஸ்ரீ திருப்பதி வெங்கடாசலபதி கல்வி அறக்கட்டளையின் பொருளாளர் ரஞ்சித்குமார் தாக்கல் செய்த பொதுநல மனுவில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் வருகை புரிவதைப் பதிவு செய்யும் நோக்கத்துடன் பயோ மெட்ரிக் முறையை முழுமையாக அமல்படுத்த தமிழக பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது.

  கிராமப்புறங்கள் மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளுக்குச் செல்ல போதுமான போக்குவரத்து வசதிகளோ, உள்கட்டமைப்பு வசதிகளோ இல்லை.

 இதன் காரணமாக குறித்த நேரத்தில் ஆசிரியர்களும் மாணவர்களும் பள்ளிக்கு வருவது சாத்தியமற்றது.

எனவே பள்ளிகளுக்குத் தேவையான போக்குவரத்து உள்ளிட்ட வசதிகளைச் செய்து கொடுக்கும் வரை இந்த பயோ மெட்ரிக் முறையை அமல்படுத்தத் தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

 அப்போது நீதிபதிகள்,  மாணவர்களின் நலன் கருதி ஆசிரியர்கள் சரியான நேரத்துக்குப் பணிக்கு வரவேண்டும் என்பதற்காக அரசு கொண்டு வந்துள்ள இந்த நல்ல திட்டத்துக்கு தடை விதிக்க முடியாது எனக்கூறி, இந்த வழக்கைத் தொடர்ந்த மனுதாரருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.

தேர்தல் பணிக்கு கிராம அலுவலர்கள், கூட்டுறவு பணியாளர்களை பயன்படுத்த திட்டம் : தலைமை தேர்தல் அதிகாரி பேட்டி

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த ரூ.414 கோடி செலவாகும்’ என்றும், தேர்தல் பணியில் கிராம அலுவலர்கள், கூட்டுறவு வங்கி பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுவார்கள் என்றும், தலைமைத்தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு கூறினார்

சென்னை தலைமை செயலகத்தில் நிருபர்களுக்கு, சத்ய பிரத சாகு அளித்த பேட்டி வருமாறு:-

கடந்த 26-ந்தேதியன்று நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக அனைத்துத் துறை செயலாளர்களையும் அழைத்து ஆலோசனை நடத்தினேன். தமிழகத்தில் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ரூ.414 கோடி செலவாகும் என்றும் அதை அனுமதிக்க வேண்டும் என்று கோரியிருக்கிறோம்.

ஒவ்வொரு வாக்குச்சாவடிகளிலும் கழிவறை, குடிநீர் வசதி, சாய்தளம், மின்சாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்ய தயாராக இருக்கும்படி அறிவுறுத்தி இருக்கிறேன்.

தேர்தலை முன்னிட்டு அரசு துறைகளில் உள்ள, அதிகாரிகள், அலுவலர்களை பணியிட மாற்றம் செய்வது தொடர்பான நடவடிக்கை இன்னும் முடியவில்லை. காவல்துறையில் பணியிடமாற்ற நடவடிக்கைகள் 100 சதவீதம் நிறைவடைந்துவிட்டது. சப்-இன்ஸ்பெக்டர் பதவியில் இருந்து உயர் பதவியில் இருப்பவர்கள் வரை மாற்றப்பட்டுள்ளனர்.

வருவாய்த் துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையில் அலுவலர்களை பணியிடமாற்றம் செய்வதில் சில விளக்கங்களை கேட்டிருந்தனர். அதை தெளிவுபடுத்தி இருக்கிறோம். எனவே பணியிடமாற்ற நடவடிக்கைகள் விரைவில் நிறைவு பெற்றுவிடும். தேர்தலின்போது போலீசாருடன் என்.சி.சி., என்.எஸ்.எஸ். படையில் உள்ளவர்களையும் பணியில் ஈடுபடுத்த முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துவிடும். அதன் பிறகு மக்கள் நலத்திட்டங்களுக்கான டெண்டர்களை வெளியிடக்கூடாது. புதிய திட்டங்களை தொடங்க வேண்டுமானால் இந்திய தேர்தல் கமிஷனின் அனுமதியைப் பெற வேண்டும்.

நாடாளுமன்ற தேர்தலை நடத்துவது தொடர்பாக ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (கலெக்டர்) காணொலிக் காட்சி மூலம் ஆலோசனை வழங்கி வருகிறேன். தேர்தலின் போது வாக்குச்சாவடிகளின் தயார் நிலை பற்றி அதில் ஆலோசிக்கப்படுகிறது.

தமிழகத்தை பொறுத்தவரை சட்டம்-ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. ஆனாலும் பதற்றமான வாக்குச்சாவடிகள் எவை என கண்டறிந்துள்ளோம். அந்தப் பட்டியலை மாவட்ட தேர்தல் அதிகாரிகளும், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டும் அளித்துள்ளனர்.

வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்ட பிறகு இந்தப் பட்டியலில் மாற்றங்கள் இருக்கும். இந்தத் தேர்தலில் பாதுகாப்புப் பணிக்காக 200 கம்பெனி துணை ராணுவம், சி.ஆர்.பி.எப். படைகளை அழைக்க வேண்டும் என்று முடிவு செய்துள்ளோம்.

தேர்தல் பணியில் ஈடுபட உள்ள ஆசிரியர்கள், அரசு அதிகாரிகள் பட்டியல் தயார் செய்யப்பட்டு அனுப்பப்பட்டுள்ளது. தேர்தல் பணிக்கு அழைக்கப்பட்டு வராமல் இருந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். உடல்நலக்குறை ஏற்பட்டால் அந்தந்த மாவட்ட தேர்தல் அதிகாரியின் அனுமதிபெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம்

ஆசிரியர்கள் குறைவாக இருக்கும் பகுதிகளில் கிராம நிர்வாக அதிகாரிகள், கூட்டுறவு வங்கி அலுவலர்கள் தேவைப்பட்டால் பணியில் அமர்த்தப்படுவார்கள்.

தற்போது இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் வரும் சூழல் ஏற்பட்டுள்ளதாக பேச்சு எழுந்துள்ளது. இதை தேர்தலுடன் தொடர்புபடுத்தி நான் கருத்து கூற முடியாது.

இந்திய தலைமைத் தேர்தல் கமிஷனர் வெவ்வேறு மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அவர் தமிழகத்துக்கு வரும் தேதி பின்னர் அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

நாளை பிளஸ் 2 தேர்வு தொடக்கம் : தேர்வு எழுதும் மாணவர்களை சோதனை என்ற பெயரில் பயமுறுத்தக் கூடாது : தேர்வுத்துறை அறிவிப்பு

பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது.

 தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தேர்வு எழுதும் மாணவர்களை சோதனை என்ற பெயரில் பயமுறுத்தக் கூடாது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 7 ஆயிரம் மேனிலைப் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது.

 பள்ளிகள் மூலம் மட்டும் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதையடுத்து, 8 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வின்போது கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  15 நிமிட  சலுகை இந்த ஆண்டும் ஒதுக்கப்படுகிறது.

 அந்த நேரத்தில் கேள்வித்தாள் படித்துப் பார்த்தல், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

 கேள்வித்தாளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த ஆண்டுக்கான கேள்வித்தாளில் சில மாற்றங்களை தேர்வுத்துறை செய்துள்ளது.

 இதற்கான விவரங்கள் கடந்த மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை அனுப்பி வைத்துள்ளது. அதன்படியே பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.

 இதையடுத்து, தேர்வு நேரத்தில் தேர்வு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

 இதன்படி, தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக, தேர்வு அறைப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அன்றயை தேர்வுக்கான விடைத்தாள் எண்ணிக்கையை மாணவர்களுக்கு  தெரிவிக்க வேண்டும்.

 வழங்கப்படுகின்றன விடைத்தாள்களில் உள்ள பக்கங்களை சரிபார்க்க சொல்ல வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்கள் தமது முப்புச் சீட்டில் உள்ள தங்களின் போட்டோ, பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், மாணவர்கள் தாங்கள் அமர்ந்துள்ள இருக்கையின் அடியில் எந்த துண்டுச்சீட்டும் இல்லை என்பதை தேர்வு தொடங்குவதற்கு முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாளின் எந்த ஒரு பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. தேர்வு எழுதும் ேபாது, விடைகளை உத்தேசமாக போட்டுப் பார்ப்பதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாவையோ, அல்லது வண்ண பென்சில்களையோ பயன்படுத்தி அடி கோடிடக் கூடாது.

 கூடுதல் விடைத்தாள் வேண்டும் என்றால் கடைசி இரண்டு பக்கங்கள் எழுதும் முன்பே கூடுதல் விடைத்தாளின் தேவையை  அறைக் கண்காணிப்பாளர்களிடம்  தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு சில விடைகளை கோடிட்டு அடித்தால், ‘மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்று குறிப்புரையை மாணவர்கள் எழுத வேண்டும் என்று அறைக்கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல பறக்கும் படை உறுப்பினர்கள், தேர்வு மையங்களில் சோதனையில் ஈடுபடும் போது மாணவர்களை பயமுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

CTET - கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஆசிரியராக வாய்ப்பு [ ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019 ]

சிபிஎஸ்சி நடத்தும் சிடெட் எனப்படும் மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த தேர்வில் வெற்றிபெறுவதன் மூலம் இந்தியாவில் உள்ள அனைத்து கேந்திரிய வித்யாலயா மற்றும் நவோதயா பள்ளிகளில் 1ஆம் வகுப்பிலிருந்து 8ஆம் வகுப்பு வரைக்கான ஆசிரியராக பணிபுரிய வாய்ப்பு உள்ளது. இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய தேதிகள்:

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 05.03.2019
தேர்வுக்கட்டணம் செலுத்தக் கடைசி நாள்: 08.03.2019, மதியம் 03.30 மணி
தேர்வு நடைபெறும் தேதி: 07.07.2019

தேர்வுக் கட்டணம்:

பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கான கட்டணம்:
பேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.700
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.1200

எஸ்.சி / எஸ்.டி / PwBD -க்கான கட்டணம்:
பேப்பர்-1 அல்லது பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.350
பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 க்கான கட்டணம் - ரூ.600

தேர்வுக்கட்டணம் செலுத்தும் முறை:
ஆன்லைன் மூலம் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டு அல்லது இ-சல்லான் பயன்படுத்தி தேர்வுக் கட்டணத்தை செலுத்தலாம்.


தேர்வு நடைபெறும் விதம்:

தாள் -1க்கான தேர்வு (1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு ) காலை 09.30 மணி முதல் மதியம் 12.00 மணி வரையும், தாள்-2க்கான (6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர்க்கான தேர்வு) மதியம் 02.00 மணி - மாலை 04.30 மணி வரையும் நடத்தப்படும்.

கல்வித்தகுதி:

1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், சீனியர் செகன்டரி (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) 2-வருட டிப்ளமோ இன் எஜுகேசன் (அல்லது) 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய பேச்சுலர்ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர், பட்டப்படிப்புடன் கூடிய 2-வருட டிப்ளமோ இன் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) பட்டப்படிப்புடன் கூடிய 1-வருட பேச்சுலர் இன் எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எலமென்டரி எஜுகேசன் (அல்லது) சீனியர் செகன்டரி படிப்புடன் கூடிய 4-வருட பேச்சுலர் ஆப் எஜுகேசன் போன்ற ஏதேனும் ஒரு பட்டம் பெற்று, 50% மதிப்பெண்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

கல்லூரியில் கடைசி வருடம் பயின்றுக் கொண்டிருப்பவர்களும் இந்த தகுதித் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை:

அனைத்து வினாக்களும் அப்ஜெக்டிவ் முறையில் வினாக்கள் கேட்கப்படும். ஒவ்வொரு வினாக்களுக்கும் ஒரு மதிப்பெண் கொடுக்கப்படும். தவறான பதில்களுக்கு நெகட்டிவ் மதிப்பெண் கிடையாது.

இரண்டு பேப்பர்களுக்கு சிடெட் தேர்வு நடைபெறும். அதில் 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மட்டும் எழுதினால் போதுமானது. 6-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரை பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-2 மட்டும் எழுதினால் போதுமானது. இரண்டிலும் பணிபுரிய விரும்புவோர் பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டையும் எழுத வேண்டும்.

பேப்பர்-1 மற்றும் பேப்பர்-2 இரண்டிலுமே 150 கேள்விகள் கேட்கப்பட்டு 150 மதிப்பெண்கள் வழங்கப்படும்.

20 மொழிகளில் இத்தேர்வு நடைபெறும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை:
ஆன்லைனில் மட்டுமே இந்த தேர்வுக்கு விண்ணப்பிக்க முடியும்.

விண்ணப்பிக்க விரும்புவோர், சிடெட் -இன் www.ctet.nic.in - என்ற இணையதளத்தில் சென்று அதற்கான விண்ணப்பத்தினை பூர்த்தி செய்யலாம்.

மேலும், இது குறித்த முழுத் தகவல்களைப் பெற, (https://ctet.nic.in/CMS/Handler/FileHandler.ashx?i=File&ii=147&iii=Y) - என்ற இணையத்தில் சென்று பார்க்கலாம்.