Title of the document
ஜாக்டோ - ஜியோ (JACTTO-GEO)

(Joint Action Council of Tamilnadu Teachers Organisations and Government Employees Organisations)

19.05.2025 அன்று காணொலி வாயிலாக நடைபெற்ற ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்ட முடிவுகள்

ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் 19.05.2025 அன்று இரவு மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் மு. சீனிவாசன் தலைமையில் காணொலி வாயிலாக நடைபெற்றது. அக்கூட்டத்தில் கடந்தகால நடவடிக்கைகளான 22.04.2025 அன்று மாவட்டத் தலைநகரங்களில் நடைபெற்ற பேரணி மற்றும் 28,04,2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவித்த 9 அறிவிப்புகளை தொடர்ந்து 29.04.2025 அன்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தலைமைச் செயலகத்தில் சந்தித்தது தொடர்பாகவும் விவாதிக்கப்பட்டு கீழ்காணும் முடிவுகள் மேற்கொள்ளப்பட்டது.

முடிவுகள் :

1. 24.05.2025 அன்று நடைபெற இருந்த வேலை நிறுத்த ஆயத்த மாநாட்டிற்கு மாற்றாக நமது கோரிக்கைகள் தொடர்பாக அரசின் 9 அறிவிப்புகள் குறித்து ஜுன் 2வது மற்றும் 3வது வாரத்தில் அரசு ஊழியர், ஆசிரியர், பணியாளர்கள் மத்தியில் விரிவான பிரச்சாரத்தை கொண்டு செல்வது என முடிவாற்றப்பட்டது.

2. PFRDA ரத்து செய்தல், 8வது ஊதியக் குழுவை உடனடியாக அமைத்தல் உள்ளிட்ட ஒன்றிய அரசின் ஊழியர் விரோத, மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தேசம் முழுவதும் கருத்தாலும், கரத்தாலும் உழைக்கக்கூடிய அனைத்து தொழிற்சங்கங்களின் சார்பில் 2025, ஜூலை 9 அன்று சுமார் 20 கோடி பேர் பங்கேற்கும் வேலை நிறுத்தத்தில் ஜாக்டோ-ஜியோ பங்கேற்பது என முடிவாற்றப்பட்டது.

3. ஜூலை மாதம் 3வது வாரத்தில் மீண்டும் ஜாக்டோ-ஜியோ கூடி அடுத்த சுட்ட நடவடிக்கையை திட்டமிடுவது என முடிவாற்றப்பட்டது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post