அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஆங்கில அடிப்படை மொழித் திறன்களை மேம்படுத்தும் ‘Level Up’ திட்டம்: கல்வித்துறையின் புதிய முயற்சி
ஏன் ‘Level Up’ திட்டம்?
தமிழக அரசு ஏற்கனவே ‘திறன்கள்’ என்ற திட்டத்தை தமிழில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் பாடங்களில் மாணவர்களின் அடிப்படை திறன்களை மேம்படுத்தும் வகையில் செயல்படுத்தி வருகிறது. ஆனால், தேசிய அளவில் நடைபெறும் நாஸ் (NAS) மற்றும் ASER போன்ற கற்றல் மதிப்பீடுகளில், மாணவர்கள் வகுப்பிற்கேற்ற மொழித் திறனை அடைவதில் குறைபாடுகள் இருப்பது குறிப்பிடப்பட்டுள்ளது.
இதற்குப் பதிலளிக்கவே, ஆங்கில மொழித் திறன்களில் மாணவர்களின் அடிப்படைத் திறனை மேம்படுத்தும் புதிய வழிமுறையாக ‘Level Up’ திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர்களின் பங்கு மற்றும் சமூகப் பங்களிப்பு:
இந்த திட்டத்தின் ஒரு சிறப்பு அம்சம் – ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நுட்பங்களை பகிர்வது. தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் பணியாற்றும் ஆங்கில ஆசிரியர்கள், தங்களது வகுப்பறை அனுபவங்களின் அடிப்படையில் பல்வேறு பயனுள்ள கற்பித்தல் முறைகளை உருவாக்கி முன்னெடுத்துள்ளனர். இவை மற்ற ஆசிரியர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் ஒரு ‘மொழி வள வங்கியாக’ (Language Resource Bank) தொகுக்கப்படும்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், ஆசிரியர்கள் தங்களது கற்பித்தல் நடைமுறைகள் மற்றும் மாணவர்கள் மீது அந்த நடைமுறைகளால் ஏற்படும் முன்னேற்றங்களை பகிர முடியும்.
திட்டத்தின் நடைமுறை அம்சங்கள்:
- வகுப்பு 6 முதல் 8 வரை உள்ள மாணவர்களுக்கு குறைவான ஆங்கில அடிப்படை இலக்குகள் நிர்ணயிக்கப்படும்.
- ஜூன் முதல் டிசம்பர் வரை ஒவ்வொரு மாதமும் இந்த இலக்குகளை அடைய வழிமுறைகள் வகுக்கப்படும்.
- இந்த முயற்சியின் மூலம், மாணவர்கள் படிப்பதிலும், பேசுவதிலும், எழுதுவதிலும் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்வதற்கான சூழல் ஏற்படுத்தப்படும்.
Post a Comment