Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

இடைநிலை ஆசிரியரின் கவிதை படைப்புகள் ; காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய காதல் நூல்... கவிஞர்.பாடலாசிரியர் பண்டரி நாதன் (இடைநிலை ஆசிரியர், அந்தியூர் ஒன்றியம், ஈரோடு) எழுதிய *இதயத்தில் இன்னொரு இதயம்*"காதல்" இந்த மூன்றெழுத்து சொல்தான் மூவுலகையும் ஆட்சி செய்து கொண்டு இருக்கிறது. மொழியால் வடிக்க முடியாத உணர்வையும், உளியால் செதுக்க முடியாத உருவத்தையும் தருவது காதலின் ரகசியம். காதலன், காதல், காதலி இவர்கள் மூன்றையும் ஒரு நேர்கோட்டில் கொண்டு வந்து நிறுத்துவதுதான் இதன் விந்தை. ஹார்மோன் குறைபாடு என்று சிலரும், வயசு கோளாறு என்று பலரும் பலவாறு இந்த உணர்வுக்கு விளக்கம் அளிப்பவர் மத்தியில் இரு இதயங்களின் இணைப்பு, நான்கு
கண்களின் பிணைப்பு என்று புனிதம் போற்றுபவரும் இங்குண்டு. வராத வரை, வலையில் விழாத வரை கண்டிப்பாக இந்த உணர்வை எவ்வாறு விளக்கினாலும் எவருக்கும் புரியாது. வந்த பிறகு யார் சொன்னாலும் மனது விரும்புவதை நிறுத்தாது. காதல் உயிராகவும் உடலாகவும் உனதாகவும் எனதாகவும் நமதாகவும் வாழட்டும்...!!

பாசத்துடன்
*பண்டரி நாதன்*

வெளியீடு: Kaakitham Pathippagam/Kaakitham Publications
விற்பனை: மெரினா புத்தக நிலையம்/MarinaBooks.com
விலை: ரூ.50/-

காகிதம் பதிப்பகம் வெளியிடும் புதிய நூல்... கவிஞர்.பாடலாசிரியர் அ. பண்டரி நாதன் (இடைநிலை ஆசிரியர், அந்தியூர் ஒன்றியம், ஈரோடு) எழுதிய *புதிய கீற்று*”
"நாம் பிறப்பது என்பதே மிகவும் அரிதான செயல் என நாம் அனைவரும் நினைத்துக் கொண்டு இருக்கிறோம். அதைவிட மிகவும் சிரமமானது தான் நாம் வாழும் சமூகத்தில் நம்மை செம்மைபடுத்தி வாழ்வது என்பது.நாம் கடந்த வந்த பாதை மிகவும் நீண்ட கால பின்னோக்கிய பயணம். பல இன்னல்களையும் இடர்பாடுகளையும் தாண்டி மனிதன் வாழ பழகிக் கொண்டான்.அவன் வாழ்வை துவங்கும் ஆரம்பத்திலேயே  அவனுக்காக காத்திருந்தது மூடப்பழக்க வழக்கங்களும், தேவையற்ற சடங்குகளும் அவனை கட்டுப்பாட்டுக்குள் வாழ வைத்தன என்பதை விட ஒரு வட்டத்திற்குள் அடக்க முயன்றன என்பது மட்டும் நிதர்சணமான உண்மை. அந்த வட்டத்தை விட்டு அவன் வெளியே வர அவன் பட்ட பாடு பெரும்பாடு.மெல்ல மெல்ல தார்சாலையில் முளைக்கும் தாவரமாய் மேலே உயர ஆரம்பித்தான். பல நிலைகளை தாண்டி மனித சமுதாயம் ஒரு நிரந்தர நிலையை அடைந்தது. அத்தகைய "சமூகம் வன்முகமாக இல்லாமல் மென்முகமாக மாற சமூகமே சுமூகமாக செல்".
பாசமிகு பந்தத்துடன்

பாடலாசிரியர்
*பண்டரி நாதன்*

வெளியீடு: Kaakitham Pathippagam/Kaakitham Publications
விற்பனை: மெரினா புத்தக நிலையம்/ MarinaBooks.com
விலை: ரூ.150/-

பி.இ., கவுன்சிலிங் முடிந்தது : ஆளில்லாமல் 1 லட்சம் 'சீட்' காலி


அண்ணா பல்கலையில் நடந்த, இன்ஜினியரிங் கவுன்சிலிங் முடிந்தது. ஒட்டுமொத்தமாக, 90 ஆயிரம் இடங்கள் நிரம்பியுள்ளன. மீதம், 1.02 லட்சம் இடங்கள் காலியாக உள்ளன.


அண்ணா பல்கலையின் இணைப்பில், 523 இன்ஜி., கல்லுாரிகளில், 1.92 லட்சம் இடங்களுக்கு இந்த ஆண்டு கவுன்சிலிங் நடந்தது. இதில், பொது கவுன்சிலிங்கில், 84,352 இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு, 358 இடங்களும், விளையாட்டு பிரிவில், 122 இடங்களும் நிரம்பின.

வலைதளங்களில் வழிகாட்டும் ஆசிரியர்!

'வாட்ஸ் ஆப், பேஸ்புக்' போன்ற சமூக வலைதளங்களில் மூழ்கி, மாணவ, மாணவியர் நேரத்தை வீணடிக்கும் நிலையில், அவற்றை கல்வி புகட்டும் கருவிகளாக, ஆசிரியர் ஒருவர் பயன்படுத்தி வருகிறார். சென்னை புரசைவாக்கம், எம்.சி.டி.எம்., என்கிற முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தாவரவியல் ஆசிரியர் சவுந்தர பாண்டியன். 16 ஆண்டுகளாக பணிபுரிகிறார்.
பிளஸ் 2 பாடங்களின் முக்கிய அம்சங்களை தொகுத்து, மாணவர்கள், நல்ல மதிப்பெண் பெற உதவி வருகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன் வரை, மாணவர்களின் பெற்றோருக்கு, மொபைல் போன் வாயிலாக, பாடத்தின் முக்கிய அம்சங்கள் பற்றி, எஸ்.எம்.எஸ்., அனுப்பி வந்தார். தற்போது, தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாக, 'வாட்ஸ் ஆப்' மூலம், பிளஸ் 2 மாணவர்களுக்கு வழிகாட்டுகிறார். 

தன் மொபைல்போன் எண்ணை, மாணவர்களுக்கு வழங்கும் இவர், மாணவர்களின் வாட்ஸ் ஆப் குரூப்பில் இணைந்து கொள்கிறார். பின், அந்த குரூப் மாணவர்கள், தங்களது சந்தேகத்தை கேட்டால், வாட்ஸ் ஆப்பில் பதிலளிக்கிறார். மேலும், தாவரவியல் மற்றும் உயிரியலில் உள்ள முக்கிய பாடங்களை, தன்னுடன் பணியாற்றும் உயிரியல் ஆசிரியர் இளங்கோவுடன் இணைந்து, சிறிய தொகுப்பாக தயாரித்துள்ளார். இந்த தொகுப்பை, வாட்ஸ் ஆப் மற்றும் பேஸ்புக்கில் இலவசமாக வழங்கி, மாணவர்கள் மதிப்பெண் பெற வழிகாட்டுகிறார்.
தன் சேவை குறித்து, ஆசிரியர் ஆர்.சவுந்தரபாண்டியன் கூறியதாவது: 
பாடங்களில் முக்கிய அம்சங்களை, தனியாக பிரித்து கொடுக்கும்போது, அதை மாணவர்கள் எளிதாக படிப்பர். நான் தயாரித்த தொகுப்புகள், மாணவர்களுக்கு பயன்பட்டதால், அதை இலவசமாகவே வாட்ஸ் ஆப், பேஸ்புக்கில் பதிவேற்றம் செய்கிறேன். பள்ளி வேலை நேரத்தில், என் வகுப்பில் மட்டுமே பாடம் எடுப்பேன். மற்ற நேரங்களில்தான், சமூக வலைதளங்களில் பதிலளிப்பேன்.
இவ்வாறு அவர் கூறினார். 

5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, ஆசிரியர் தேர்வுக்காக இந்திய கல்விப்பணி - புதிய கல்விக்கொள்கை, ஒரு அலசல்

ஒரு நாட்டின் முன்னேற்றம் என்பது, அந்த நாட்டின் கல்விக்கொள்கையின் அடிப்படையில்தான் இருக்கிறது. அந்த முன்னேற்றம் சமூக முன்னேற்றமாக இருந்தாலும், பொருளாதார முன்னேற்றமாக இருந்தாலும், அறிவியல் வளர்ச்சி என்றாலும், புதிய புதிய கண்டுபிடிப்புகளுக்கு வழிகாட்டும் முன்னேற்றமாக இருந்தாலும் சரி, அதற்கு அடித்தளம் அமைப்பது கல்விக்கொள்கைதான். மாறிவரும் உலக சூழ்நிலைகளுக்கேற்ப, கல்வித்திட்டங்களும் மாறிக் கொண்டே இருக்க வேண்டும்.
ஆனால், இப்போது நடைமுறையில் இருக்கும் கல்விக்கொள்கை 30 ஆண்டுகளுக்கு முன்பு உருவாக்கப்பட்டதாகும். அந்தக் காலத்துக் கல்விக்கொள்கை நிச்சயமாக இந்தக்காலத்துக்கு பொருந்தாது. இப்போது ‘இண்டர்நெட்’ காலத்தில் மாணவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு இன்னும் பழையகால கல்விக் கொள்கையின் அடிப்படையிலேயே கல்விச்சக்கரத்தை சுழலவைப்பது ஏற்புடையதல்ல.
எனவே, புதிய கல்விக்கொள்கை அமைக்கவேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, மத்திய அரசாங்கம் ஓய்வுபெற்ற கேபினட் செயலாளர் டி.எஸ்.ஆர்.சுப்பிரமணியன் தலைமையில், ஓய்வுபெற்ற டெல்லி அரசாங்க தலைமை செயலாளர் சைலஜா சந்திரா, முன்னாள் உள்துறை செயலாளர் சேவாராம் சர்மா, குஜராத் மாநில முன்னாள் தலைமை செயலாளர் சுதிர் மங்கத், ஓய்வுபெற்ற தேசிய கல்வி, ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் இயக்குனர் ஜே.சி.ராஜ்புத் ஆகியோர் கொண்ட குழுவை அமைத்தது. 
இந்தக்குழு குறிப்பிட்ட காலத்துக்கு பிறகே தனது அறிக்கையை மத்திய அரசாங்க மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்திடம் தாக்கல் செய்தது. கல்விக்கொள்கையை உருவாக்க நியமிக்கப்பட்ட குழுவில் ஓய்வுபெற்ற உயர் அதிகாரிகள்தானே இடம் பெற்றுள்ளனர், அறிவுசால் கல்வியாளர்களையோ, கல்வி நிபுணர்களையோ காணவில்லையே? என்று விமர்சனம் எழுந்துள்ளது. 
இந்த குழுவின் அறிக்கை உடனடியாக அமலுக்கு வந்துவிடப்போவதில்லை. அனைத்து மாநில அரசுகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, மாநில அரசுகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டு, அதன்பிறகே புதிய கல்விக்கொள்கை நாட்டுக்கு வழங்கப்படும் என்று மத்திய அரசாங்கம் கூறியிருப்பது மிகவும் வரவேற்கத்தக்கதாகும்.
இந்த அறிக்கையில் பல நல்ல அம்சங்கள் இருக்கின்றன. தற்போது கட்டாய கல்விச்சட்டத்தில் குறிப்பிட்டுள்ளபடி, மழலை வகுப்பில் சேரும் ஒரு மாணவனோ, மாணவியோ எப்படி படித்தாலும் 8–வது வகுப்புவரை அடுத்த வகுப்புக்கு பாஸ் ஆக்கிவிடுவார்கள். ‘பெயில்’ என்ற வார்த்தையே கிடையாது. எப்படியும் ‘பாஸ்’ ஆகிவிடுவோம் என்ற தைரியத்தில் சிலபல மாணவர்களும் சரிவர படிப்பதில்லை, ஆசிரியர்களும் அக்கறை எடுத்து பல இடங்களில் கல்வி கற்பிப்பதில்லை என்று குறைகூறப்பட்டது.
இப்போது தாக்கல் செய்யப்பட்டுள்ள அறிக்கையில் 8–வது வகுப்புக்கு பதிலாக, 5–வது வகுப்புவரைதான் ‘ஆல் பாஸ்’, அதற்குப்பிறகு 6–வது வகுப்பில் இருந்து ‘பாஸ்–பெயில்’ உண்டு என்று கூறப்பட்டுள்ளது. அதிலும் 2 ஆண்டுகள் தொடர்ந்து பெயிலானால் அதேவகுப்பில் படிக்கமுடியாது.
அதன்பிறகு மாற்றுக்கல்விதான். மேலும், பள்ளிக்கூட படிப்புகளில் சிறந்து விளங்கும் ஏழை குடும்பங்கள், சமூகரீதியாக, பொருளாதார ரீதியாக பின்தங்கிய நிலையில் உள்ள சமுதாயங்களைச்சேர்ந்த ஒரு லட்சம் மாணவர்களுக்கு உயர்படிப்புக்காக உதவித் தொகை வழங்க வேண்டும்,
ஆசிரியர் தேர்வுக்காக இந்திய ஆட்சிப்பணி, இந்திய காவல் பணிபோல, இந்திய கல்விப்பணி முறை அமலுக்கு வரவேண்டும், தொடக்க வகுப்புகளில் தாய்மொழி வாயிலாகவே கல்வி இருக்கவேண்டும்,
இப்போதுள்ள கற்பித்தல்–கற்றுக்கொள்ளுதல் முறையில் மாற்றங்கள்வேண்டும், அமைதி, நல்லிணக்கம், வேற்றுமையை மதித்தல், சமத்துவம், உண்மை, தர்மம், அகிம்சை ஆகியவற்றை மாணவர்களுக்கு கற்றுக்கொடுக்கும் வகையில் பாடத்திட்டங்கள் இருக்கவேண்டும் என்பதுபோல பல அம்சங்கள் இந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன.
கல்விக்கொள்கை என்பது மிக மிக முக்கியமானதாகும். இதை உருவாக்கும் முன்பு மாநில அரசுகளோடு மட்டுமல்லாமல், கல்வியாளர்கள், பல்கலைக்கழகங்கள், பள்ளிக்கூட, கல்லூரி நிர்வாகங்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர், வேலைவாய்ப்பு அளிக்கும் நிறுவனங்கள் என்று கல்வியின் தாக்கம் உள்ள அனைவரையும் கலந்து ஆலோசிக்க வேண்டும்.
10 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட வேண்டும் என்பதை சட்டமாக்கவேண்டும்

பி.எட்., படிப்புக்கு புதிய கட்டணம்

பி.எட்., கல்லுாரிகளுக்கு, இந்த ஆண்டு, கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட உள்ளது. இதற்காக, அக்கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்து, ஆகஸ்ட், 8ம் தேதி முதல் ஆய்வு செய்யப்படுகிறது. அடுத்த மாத இறுதியில், பி.எட்., கல்லுாரிகளில் மாணவர்கள் சேர்க்கப்பட உள்ளனர்.
இந்நிலையில், புதிய கட்டணம் நிர்ணயிக்கப்பட உள்ளது. நடப்பு கல்வி ஆண்டு முதல், 2018 - 19 வரை, பி.எட்., - எம்.எட்., - பி.பி.எட்., - எம்.பி.எட்., ஆகிய படிப்புகளுக்கான, புதிய கல்விக் கட்டணம் அமலில் இருக்கும்.இதற்காக கல்லுாரிகளின் உள்கட்டமைப்பு வசதிகள் குறித்த ஆவணங்களை, ஆகஸ்ட், 8ம் தேதிக்குள் அனுப்ப, சுயநிதி கல்லுாரி கல்விக் கட்டண கமிட்டி உத்தரவிட்டுள்ளது. ஆவணங்கள் வந்ததும், கல்லுாரிகளில் ஆய்வு செய்து, புதிய கட்டணம் நிர்ணயம் செய்யப்படும்.

41 மாவட்ட கல்வி அலுவலர்கள் நியமனம். click for more details

பள்ளிக் கல்வித் துறையில் மாவட்டக் கல்வி அலுவலர்கள் காலிப் பணியிடங்கள், அதற்கு இணையான காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.
அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் பதவி உயர்வு மூலம் மாவட்டக் கல்வி அலுவலர்களாக 41 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை பிறப்பித்துள்ளார்.
புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்டக் கல்வி அலுவலர்கள் குறித்த விவரம்
1. என்.சுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர்,திருவாரூர்
2. மு.மணிமேகலை, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர்,தஞ்சாவூர்
3. எம்.எஸ்.மல்லிகா, மாவட்டக் கல்வி அலுவலர், ஓசூர்
4. ஆர்.கலைச்செல்வன், மாவட்டக் கல்வி அலுவலர், கோபிசெட்டிப்பாளையம்
5. ஆர்.சண்முகம், மாவட்டக் கல்வி அலுவலர், திருச்சி
6. பி.வி.சாவித்திரி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,திருவாரூர்
7. இ.மொக்கத்துரை, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தேனி
8. கே.வீரேஸ்வரன்நாயர், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், நாகர்கோவில்
9. கே.சங்கரநாராயணன், மாவட்டக் கல்வி அலுவலர், சேலம்
10. எஸ்.தமிழரசி, மாவட்டக் கல்வி அலுவலர், செங்கல்பட்டு
11. ஆர்.சௌந்தரநாயகி, மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தூத்துக்குடி
12. எஸ்.கற்பகவல்லி, மாவட்டக் கல்வி அலுவலர், காஞ்சிபுரம்
13. ஏ.கே.கங்காதரரெட்டி, மாவட்டக் கல்வி அலுவலர், பொன்னேரி
14. ஆர்.லோகநாதன், மாவட்டக் கல்வி அலுவலர், உசிலம்பட்டி
15. கா.பழனிச்சாமி, மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், தர்மபுரி
16. என்.விசாகமூர்த்தி, மெட்ரிக் பள்ளி ஆய்வாளர், காஞ்சிபுரம்
17. ஜி.லில்லிபுஷ்பராணி, மாவட்டக் கல்வி அலுவலர், திருவள்ளூர்
18. கே.தேன்மொழி, மாவட்டக் கல்வி அலுவலர், கோவை
19. கே.அருளரங்கன், மாவட்டக் கல்வி அலுவலர், நாமக்கல்
20. என்.சரஸ்வதி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் ஆய்வாளர், சென்னை
21. சி.செல்வராசு, மாவட்டக் கல்வி அலுவலர், சங்ககிரி
22. எம்.பரிமளம், மாவட்டக் கல்வி அலுவலர், மத்திய சென்னை
23. இ.செந்தமிழ்ச்செல்வி, உதவி இயக்குநர், தொடக்கக் கல்வி இயக்ககம், சென்னை
24. ஆர்.எத்திராஜூலு, மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை வடக்கு
25. அ.பாலுமுத்து, மாவட்டக் கல்வி அலுவலர், பெரியகுளம்
26. ஆர்.எடிசன், மாவட்டக் கல்வி அலுவலர், சென்னை கிழக்கு
27. ஐ.முகம்மதுஅயூப், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், திருச்சி
28. எஸ்.ஆஷா கிறிஸ்டி எமெரால்ட், மாவட்ட தொடக்க கல்விஅலுவலர், நாகப்பட்டினம்
29. ஏ.செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர், நீலகிரி
30. கே.தங்கவேல், மாவட்டக் கல்வி அலுவலர், கரூர்
31. டி.பாலசுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர், பரமக்குடி
32. எஸ்.முருகேசன், மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர், மதுரை
33. ஆர்.ஜெயபாண்டி, மாவட்டக் கல்வி அலுவலர், திருநெல்வேலி
34. எம். செல்வராஜ், மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர்,கரூர்
35. எஸ்.வளர்மதி, மாவட்டக் கல்வி அலுவலர், பட்டுக்கோட்டை
36. ஜி.ஜெயராஜ், மாவட்டக் கல்வி அலுவலர், சேரன்மகாதேவி
37. எம்.அன்புக்கரசி, ஒருங்கிணைப்பாளர், எஸ்எஸ்ஏ, சென்னை.
38. அ.ராமகிருஷ்ணன், மாவட்டக் கல்வி அலுவலர், விருதுநகர்
39. எம்.எஸ்.உமா, மாநகராட்சி கல்வி அலுவலர், கோவை
40. மு.வேலம்மாள், மாவட்ட தொடக்கக் கல்விஅலுவலர், விருதுநகர்
41. த.சுப்பிரமணியன், மாவட்டக் கல்வி அலுவலர், நாகப்பட்டினம்

அரசு B.ED, படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் விநியோகம்.இன்ஜி., மாணவர்களுக்கு 20 சதவித இட ஒதுக்கீடு

அரசு பி.எட்., படிப்பில் சேர்வதற்கான விண்ணப்பங்கள், நாளை முதல் வழங்கப்படுகின்றன. ஆசிரியர் பயிற்சி படிப்புக்கான, 690 பி.எட்., கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், ஏழு அரசு கல்லுாரிகள் மற்றும், 14 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 1,777 இடங்களுக்கு, தமிழக அரசின் சார்பில், சென்னை, சீமாட்டி வெலிங்டன் கல்வியியல் கல்லுாரி மூலம், கவுன்சிலிங் நடத்தப்படுகிறது.
இந்த ஆண்டு கவுன்சிலிங்கிற்கு, நாளை முதல், ஆக., 9ம் தேதி வரை விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன. பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, ஆக., 10ம் தேதி மாலை, 5:00 மணிக்குள், சீமாட்டி வெலிங்டன் கல்லுாரியில் கிடைக்குமாறு, தபாலிலோ, நேரிலோ அளிக்க வேண்டும். தமிழ், ஆங்கிலம், இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம், கணினி அறிவியல், பொருளியல், வணிகவியல், வரலாறு, புவியியல் உள்ளிட்ட, 13 பாடங்களில், மாணவர்கள் சேர்க்கப்படுவர்.கணிதம் மற்றும் அறிவியல் சார்ந்த பாடப்பிரிவுகளில், 1,200 இடங்கள் ஒதுக்கப்படுகின்றன.
அதில், 20 சதவீத இடங்களுக்கு, இந்த ஆண்டு முதல், பி.இ., மற்றும் பி.டெக்., பட்டதாரிகள் சேர்க்கப்பட உள்ளனர். இதுகுறித்து, சீமாட்டி வெலிங்டன் கல்லுாரி முதல்வரும், பி.எட்., மாணவர் சேர்க்கை செயலருமான பேராசிரியை தில்லைநாயகி கூறியதாவது: சீமாட்டி வெலிங்டன் கல்லுாரி இணையதளத்தில், தரவரிசை பட்டியல் மற்றும் கவுன்சிலிங் தேதி வெளியிடப்படும். அடுத்த மாதம், மூன்றாம் வாரத்தில் கவுன்சிலிங் நடத்தப்படும்.இன்ஜினியரிங் பட்டதாாரிகள், இயற்பியல், வேதியியல், கணிதம் மற்றும் உயிரியல் சார்ந்த பாடத்தை படித்திருந்தால் மட்டுமே, பி.எட்., படிப்பில் சேர முடியும்.இவ்வாறு அவர் கூறினார்.
எங்கே கிடைக்கும்? : சென்னையில், சீமாட்டி வெலிங்டன், சைதாப்பேட்டை ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி மற்றும் கோவை, ஒரத்தநாடு, குமாரபாளையம், புதுக்கோட்டை மற்றும் வேலுாரில் உள்ள ஆசிரியர் கல்வியியல் கல்லுாரிகளில், 500 ரூபாய் கட்டணம் செலுத்தி, விண்ணப்பம் பெறலாம். ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் அருந்ததியர் இன பட்டதாரிகள், ஜாதி சான்றிதழ் நகலுடன், 250 ரூபாய் செலுத்தி, விண்ணப்பங்கள் பெறலாம்.

அரசு பள்ளிகளில் 5,000 ஆசிரியர்கள் அதிகம் : இட மாறுதலில் குளறுபடி; அரசு மெத்தனம்

அரசு பள்ளிகளில், மாணவர் எண்ணிக்கை விகிதப்படி, கூடுதலாக, 5,000 ஆசிரியர்கள் உள்ளதால், பணி நிரவல்படி ஆசிரியர் இடமாற்றம் செய்யப்பட உள்ளனர். 'இந்த இடமாற்றத்தில் தில்லுமுல்லு இருக்க கூடாது' என, ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன.
தமிழகத்தில், 50 ஆயிரம் அரசு பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. இவற்றில், ஒன்றரை கோடி மாணவர்கள் படிக்கின்றனர். அரசு பள்ளிகளில் மட்டும், 4.5 லட்சம் ஆசிரியர் பணிபுரிகின்றனர்.ஆகஸ்ட்டில் ஒவ்வொரு ஆண்டும் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு விருப்பத்தின்படி, இடமாறுதல் வழங்கப்படும்; இதற்காக, விருப்ப இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். 'இந்த ஆண்டுக்கானகவுன்சிலிங், ஆகஸ்டில் நடக்கும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.கவுன்சிலிங் நடத்தும் முன்,பள்ளிகளில் ஆகஸ்ட் 1ம் தேதிப்படி, 35 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என கணக்கிட்டு, இந்த விகிதத்தில் கூடுதலாகஉள்ள ஆசிரியர்களை, பற்றாக்குறையான பள்ளிகளுக்கு மாற்றுவர். இந்த கணக்கீட்டில், ஒவ்வொரு ஆண்டும் குளறுபடிகள் தான் நடக்கின்றன. ஆனால், பணி நிரவலில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வர, கல்வித்துறை அக்கறை காட்டுவதில்லை.ஒவ்வொரு ஆண்டும் கூடுதல் ஆசிரியர்கள் இடமாற்றம் செய்யப்பட்டாலும், அடுத்தடுத்தஆண்டுகளில், மீண்டும் பணிநிரவல் நடக்கிறது.
ஓராண்டில் அதிக ஆசிரியர்களின் இடங்கள் சரிசெய்யப்பட்டால், மீண்டும் எப்படி அதிக ஆசிரியர்கள் இருக்க முடியும் என்பது கல்வித்துறைக்கே பதில் தெரியாத கேள்வியாக உள்ளது. ஆண்டுதோறும் அதிக ஆசிரியர்கள்இருப்பதாக கணக்கிட்டால், ஒவ்வொரு ஆண்டும் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைவதாகவே தெரிகிறது. இதையும் கல்வித்துறை கண்டுகொள்வதில்லை. இந்த ஆண்டு மட்டும், உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளில், 2,000 ஆசிரியர்; தொடக்க பள்ளிகளில், 3,000ஆசிரியர் கூடுதலாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தில்லுமுல்லு :

அதேநேரம், பணி நிரவலில் பல தில்லுமுல்லுகளும் நடப்பதாக தெரிய வந்துள்ளது. தங்களுக்கு வேண்டப்பட்ட ஆசிரியர்கள் என்றால், அவர்கள் பணியாற்றும் பள்ளிகளில், விகிதப்படி அதிக ஆசிரியர்கள் இருந்தாலும், பணிநிரவல் செய்வதில்லை. மேலும், பணி நிரவலில் முக்கிய பணியிடங்களை மறைத்து, சிபாரிசுப்படி, பணிமாறுதல் வழங்குவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன.பணி நிரவல் நடவடிக்கையில் காலியாக உள்ள இடங்களை, மாவட்டவாரியாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். பணி நிரவலை மாநில அளவில், 'ஆன்லைன்' மூலம்நடத்த வேண்டும். பணி முடிந்த பின், வேண்டப்பட்டஆசிரியர்களுக்கு மட்டும் விதிகளை தளர்த்தி இடமாறுதல் வழங்குவதை நிறுத்த வேண்டும்.

CPS ஓய்வூதிய திட்ட வல்லுனர் குழு பதவி காலம் 3 மாதம் நீட்டிப்பு'

'பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும்' என, பல்வேறு அரசு ஊழியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்தன. இதுகுறித்து ஆராய்ந்து, அரசுக்கு பரிந்துரைக்க, ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில், ஐந்து பேர் குழுவை, பிப்., 26ல், அரசு அமைத்தது. அந்தக் குழு, மார்ச், 28ல் கூடியது. ஆனால், அதன் உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் பங்கேற்கவில்லை. இதற்கிடையில், 'எங்களிடம் கருத்து கேட்க வேண்டும்' என, அரசு ஊழியர் சங்கங்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது.
ஆனால், குழுவினர் சந்திக்கவில்லை.சட்டசபையில், இதுகுறித்து நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் கூறுகையில், 'வல்லுனர் குழு அறிக்கை அளித்ததும் முடிவு செய்யப்படும்' என்றார்.

அப்போது, எதிர்க்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன், 'குழுவில், இருவர்பதவியை ராஜினாமா செய்து விட்டனரே; குழு எப்படி கூடும்' என, கேள்வி எழுப்பினார். அதற்கு மறுநாள் பதிலளித்த அமைச்சர் பன்னீர்செல்வம், 'வேறு உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டு விட்டனர்' என்றார்.அதன்படி, வல்லுனர் குழுவை மாற்றி அமைத்தும், குழுவின் பதவி காலத்தை, மூன்று மாதங்களுக்கு நீட்டித்தும், அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.உறுப்பினர்கள் பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியத்திற்கு பதிலாக, 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஷ் சி புராகித், உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்

7th PAY COMMISSION : மத்திய அரசு ஊழியர்களுக்கு ஆகஸ்ட் சம்பளத்துடன் 'அரியர்ஸ்'

'மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அடிப்படையிலான, 'அரியர்ஸ்' பணம், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.மத்திய அரசு ஊழியர்களுக்கான, ஏழாவது சம்பளக் கமிஷன் அறிவிக்கப்பட்டுள்ளது.
  அதன்படி, 47 லட்சம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும், 53 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு, ஆகஸ்ட் மாதம் முதல், திருத்தியமைக்கப்பட்ட சம்பளம் கிடைக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், 'இந்தாண்டு, ஜனவரி, 1ம் தேதி முதல், சம்பளக் கமிஷன் நடைமுறைக்கு வருவதால், அதற்கான, அரியர்ஸ் பணமும், ஆகஸ்ட் மாத சம்பளத்துடன், ஒரே தவணையாக அளிக்கப்படும்' என, நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது. சம்பளம் திருத்தி அமைப்பதற்கு முன்பு இருந்த, டி.ஏ., எனப்படும் அகவிலைப்படியான, 125 சதவீதம் என்ற அடிப்படையில், புதியசம்பளம் மற்றும் அரியர்ஸ் வழங்கப்படும். திருத்தி அமைக்கப்பட்டுள்ள சம்பளத்துக்கான, புதிய அகவிலைப்படி பின்னர் அறிவிக்கப்படும்.

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்

சிகிச்சை பலனின்றி உயிரிழந்த ஆசிரியர்: கடைசி நேரத்தில் பாடம் நடத்த வருதாக உருக்கமான பேச்சு: மாணவர்கள் கதறல்

மரணத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறோம் என்பதை அறியாத அரசு பள்ளி ஆசிரியர், தன் மாணவர்களுக்கு விடுபட்ட பாடங்களை விரைவில் நடத்தி முடிப்பதாகவும், இதற்காக தனி வகுப்பு எடுப்பேன் என்று உருக்கமாக  பேசியிருந்தை கேட்டு நெகிச்சியடைந்த மாணவர்கள், அவர்இறந்துவிட்டதாக செய்தி அறிந்ததும் கதறினர்.

புதுக்கோட்டை மாவட்டம், மேற்பனைக்காடு கிழக்கு செல்லையா மகன் ரவிச்சந்திரன் (50). விவசாய குடும்பத்தில் பிறந்த இவர் கொத்தமங்கலம் அரசு ஆண்கள்மேல்நிலைப் பள்ளியில் முதுகலை உயிரியல் ஆசிரியராக கடந்த 6 ஆண்டுகளாகபணியாற்றி வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் 2 பெண் குழந்தைகள் உள்ளனர். ஆசிரியர் ரவிச்சந்திரன் கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆசிரியராக வந்த பிறகு 7 மாணவர்கள் மருத்துவ படிப்பிற்கு செல்ல துணையாக இருந்துள்ளார் என்றும் அவரது பாடத்தில் 100 சதவீதம் தேர்ச்சியும் மதிப்பெண்ணும் வாங்க சிறப்பாக பாடம் நடத்தினார் என்றும் மாணவர்கள், சக ஆசிரியர்கள் கூறினார்கள். இந்த நிலையில் ஆசிரியர் ரவிச்சந்திரன் கடந்த வாரம் காய்ச்சல் என்று திருச்சி தனியார் மருத்தவமனைக்கு சிகிச்சைக்காக சென்றுள்ளார். அங்கு அவருக்கு கல்லீரல் பாதிப்பு மற்றும் சிறுநீராக கோளாறுகள் இருப்பது கண்டறியப்பட்டது. அந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவமனையில் சுமார் ரூ. 90 லட்சம் வரை செலவாகும் என்று சொன்னதால் எங்கள் ஆசிரியர் உயிரை காப்பாற்ற தமிழக முதலமைச்சர் கருணையுடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொத்தமங்கலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11, 12 ம் வகுப்பு மாணவர்கள் 400 பேர் முதலமைச்சருக்கு கண்ணீருடன் தனித்தனியாக கோரிக்கை மனு எழுதினார்கள்.

அதே போல ஆசிரியர்கள், பெற்றோர்கள், பொதுமக்களும் கோரிக்கை மனு அனுப்பினார்கள். அதன் பிறகு சென்னை ஸ்டான்லி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.இந்த தகவல் செய்திகளாக வெளிவந்த நிலையில் முதலமைச்சர் உத்தரவு படி மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஆசிரியர் ரவிச்சந்திரனை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியதுடன் சிகிச்சைக்காக சிறப்பு மருத்தவர்கள் குழு அமைக்கப்பட்டு உயர்தர சிகிச்சை அளிக்கப்படும் என்றும் கூறினார். இந்த நிலையில் தொடர்ந்து சிறப்பு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று திடீரென சிகிச்சை பலனின்றி ஆசிரியர்ரவிச்சந்தரன் பரிதாபமாக உயிரிழந்தார்.ஆசிரியர் ரவிச்சந்திரன் சிகிச்சை பெற்று உடல் நடமுடன் வந்து மீண்டும் பாடம் நடத்த வேண்டும் என்று முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதுடன் சிறப்பு சிகிச்சைக்கு ஏற்பாடு செய்துள்ள நிலையில் ஆசிரியர் விரைவில் குணமடைய வேண்டும் சிறப்பு வழிபாடுகளையும் மாணவர்கள் நடத்தினார்கள். ஆனால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் என்ற தகவல் அறிந்ததும் மாணவர்கள் வகுப்பறைகளில் கதறி அழுதனர்.

இந்த சம்பவம் ஆசிரியர்களையும் கண் கலங்க செய்தது.ஒரு ஆசிரியருக்காக மாணவர்களும், சக ஆசிரியர்கள், பொதுமக்கள் ஒட்டுமொத்தமாக கண்ணீர் விடுவது அனைவரையும் நெகிழச் செய்யும் நிகழ்வு தான்.இது குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் மேகநாதன் கூறும்போது, நேற்று முன்தினம் மதியம் ஆசிரியர் ரவிச்சந்திரன் என்னிடம் 15 நிமிடம் போனில் பேசினார். “எனக்காக மாணவர்கள் முதலமைச்சருக்கு கோரிக்கை மனு அனுப்பியதால் முதலமைச்சர் தனிக்கவணம் செலுத்தி அமைச்சரை நேரில் அனுப்பி சிறப்பு சிகிச்சை அளிக்க ஏற்பாடுகள் செய்துள்ளார்கள்.
உடல் நலமடைந்து வருவதாக அறிகிறேன். இன்னும் ஒரு வாரத்தில் ஊருக்கு வந்து உடனே பள்ளிக்கு வந்துவிடுவேன்”.மாணவர்களிடம் சொல்லுங்கள் ஒரு வாரத்தில் வந்து அவர்களுக்கு பாடம் நடத்துவேன் மேலும் இதுவரை தேங்கியுள்ள பாடத்தையும் சனி, ஞாயிற்று கிழமைகளில் சிறப்பு வகுப்புகள் எடுத்து விரைவில் பாடங்களை முடித்து அனைத்து மாணவர்களையும் நல்ல முறையில் மதிப்பெண் பெற வைப்பேன், இந்த ஆண்டும் சிலரை மருத்துவமாணவர்களாக அனுப்புவேன் என்று சொல்லுங்கள் என்று பேசினார். அவரது நம்பிக்கை எங்களுக்கு ஆறுதலாக இருந்தது. அதை மாணவர்களிடமும் சொன்னேன். அனைத்து மாணவர்களும் ஆறுதல் அடைந்த நேரத்தில் இறந்துவிட்டார் என்ற செய்தி அனைவரையும் துயரத்தில் ஆழ்த்திவிட்டது என்றார்.

மாணவர்கள் இல்லாத அரசுபள்ளிக்கு பூட்டு; ஆசிரியர்கள்இடமாற்றம் By நாமக்கல் First Published : 30 July 2016 07:56 AM ISTஒரு மாணவர் கூட இல்லாததால், ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. அங்கு பணியாற்றிய தலைமையாசிரியர் வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டார்.
மோகனூர் ஊராட்சி ஒன்றியம், குமரிபாளையம் ஊராட்சிக்குள்பட்ட அய்யம்பாளையத்தில் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி செயல்பட்டு வந்தது. இப்பள்ளித் தலைமை ஆசிரியராக ராணியும், உதவி ஆசிரியராக உமாராணியும் பணியாற்றினர்.
இப்பள்ளியில் கடந்த கல்வி ஆண்டில் 5-ஆம் வகுப்பில் மட்டும் 6 மாணவ, மாணவியர் படித்து வந்தனர். அவர்கள் படிப்பை முடித்து மாற்றுச் சான்றிதழ் பெற்று 6-ஆம் வகுப்பில் சேர்ந்தனர்.
அதைத் தொடர்ந்து நிகழ் கல்வி ஆண்டில் அதே பகுதியைச் சேர்ந்த தரணிஷா என்ற மாணவி முதல் வகுப்பில் சேர்ந்தார். அந்த ஒரு மாணவியையும் அவரது பெற்றோர் கடந்த 14-ஆம் தேதி மாற்றுச்சான்றிதழைப் பெற்று அருகில் உள்ள சின்னதம்பிபாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சேர்த்தனர். அதையடுத்து பள்ளியில் மாணவர் யாரும் இல்லாததால் பள்ளி தாற்காலிகமாக மூடப்பட்டது.
பள்ளியின் உதவி ஆசிரியர் உமாராணி ஓலப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கும், தலைமை ஆசிரியர் ராணி சின்னகரசப்பாளையம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிக்கும் தாற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டனர்.
இதுகுறித்து மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் இந்திராகாந்தி கூறுகையில், அய்யம்பாளையம் ஊராட்சித் தொடக்கப் பள்ளியில் ஒரு மாணவர் கூட இல்லாததால் அந்தப் பள்ளி தாற்காலிகமாக மூடப்பட்டது என்றார்.

மொரப்பூர் AEEO வை கண்டித்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்-தினமலர்

தருமபுரி;
மொரப்பூரில் உதவி தொடக்க கல்வி அலுவலரை கண்டித்து ஆசிரியர்கள் நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். மொரப்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவாவை கண்டித்து, தமிழ்நாடு தொடக்க கல்வி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில்,நேற்று கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. மொரப்பூர் உதவி தொடக்க கல்வி அலுவலகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணியின் வட்ட செயலாளர் குமாரசாமி தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தில், ஈடுபட்ட ஆசிரியர்கள் உதவி தொடக்க கல்வி அலுவலர் ஜீவா மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை தெரிவித்தனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: 'மொரப்பூருக்கு இடமாறுதல் பெறுவதற்கு, மூன்று லட்சம் ரூபாய் லஞ்சம் கொடுத்து வந்ததாகவும், அந்தப் பணத்தை உங்களிடம் தான் வசூல் செய்ய வேண்டும்' எனக்கூறி வருகிறார். பணம் பெற்றுக்கொண்டு தம் விருப்பம் போல மாற்றுப் பணியில் ஆசிரியர்களை நியமனம் செய்கிறார். அரசுப் பள்ளிகளை பார்வையிட வரும்போது, ஆசிரியர்களை ஒருமையிலும், தகாத வார்த்தையிலும் இழிவாகத் திட்டுகிறார். ஆசிரியர்களுக்கு தேவையான சம்பளச் சான்றுகளை வழங்க காலம் தாழ்த்தி வருகிறார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

New DEEO's promoted list
B.Ed . படிப்பில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு: இந்த ஆண்டு முதல்முறையாக அமல்


பி.எட். படிப்பில் அறிவியல், கணித பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக்கும் புதிய நடைமுறை இந்த கல்வி ஆண்டில் அமல்படுத்தப்பட உள்ளது.தமிழகத்தில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகளும், 14 அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளும் உள்ளன. இவற்றில் வழங்கப்படும் பி.எட் படிப்பில் 1,777 இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 

தனியார் சுயநிதி கல்வியியல் கல்லூரிகளில் பி.எட். இடங்களை சம்பந்தப்பட்ட கல்லூரி நிர்வாகத்தினரே நிரப்பிக் கொள்கிறார்கள். பொறியியல் படிப்பில் உள்ளதைப் போன்று பி.எட். படிப்பில் தனியார் கல்லூரிகள் அரசு ஒதுக்கீட்டுக்கு இடங்களை வழங்குவதில்லை. தனியார் கல்லூரிகள் விரும்பினால் பொது கலந்தாய்வுக்கு இடங்களை வழங்கலாம். அந்த இடங்கள் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படும்.கடந்த ஆண்டிலிருந்து பிஎட் படிப்பு 2 ஆண்டு காலமாக உயர்த்தப்பட்டது. அதற்கு முன்பு வரை ஓராண்டு கால படிப்பாகவே பிஎட் இருந்து வந்தது. மேலும், சென்ற கல்வி ஆண்டில் பொறி யியல் பட்டதாரிகளும் பிஎட் படிப்பில் சேரும் நடைமுறை அறி முகப்படுத்தப்பட்டது. அதன்படி, பிஇ, பிடெக் பட்டதாரிகள் அறிவியல் பிரிவு அதாவது இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதம் ஆகிய பாடப் பிரிவுகளின் கீழ் பிஎட் படிப்பில் சேரலாம்.பிஎட் மாணவர் சேர்க்கையை பொருத்த வரையில், பட்டப் படிப்பில் பெற்ற மதிப்பெண் (பொருளாதாரம், வணிகவியல், அரசியல் அறிவியல் படிப்பு எனில் முதுகலை பட்டம்), உயர் கல்வித் தகுதி, என்சிசி, என்எஸ்எஸ் போன்ற கல்வி அல்லாத இதர செயல்பாடுகளில் ஈடுபாடு ஆகியவற்றுக்கு சிறப்பு மதிப்பெண் அடிப்படையில் மெரிட் பட்டியல் தயாரிக்கப்பட்டு அதன் பேரில் மாணவர்கள் கலந்தாய்வுக்குஅனுமதிக்கப்படுவர். ஆண்டு தோறும் சென்னை திருவல்லிக் கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனமே பிஎட் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை நடத்தி வருகிறது. நடப்பு கல்வி ஆண்டும் இக்கல்வி நிறுவனத்திடமேகலந்தாய்வு நடத்தும் பொறுப்பும் ஒப்படைக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், 2016-17-ம் கல்வி ஆண்டுக்கான பிஎட் மாணவர் சேர்க்கை வழிகாட்டி நெறிமுறைகளை உயர்கல்வித்துறை வெளியிட்டி ருக்கிறது. அதன்படி, இந்த ஆண்டு முதல் முறையாக பிஎட் படிப்பில் அறிவியல் (இயற்பியல், வேதியியல்) கணிதப் பாடப் பிரிவில் பொறியியல் பட்டதாரிகளுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு அளிக் கப்பட உள்ளது. எஞ்சிய 80 சதவீத இடங்கள் அறிவியல், கணித பட்டதாரிகளுக்கு ஒதுக்கப்பட் டுள்ளது. கடந்த ஆண்டுமுதல்முறையாக பொறியியல் பட்டதாரிகள் பிஎட் சேரும் முறை அறிமுகப்படுத்தப்பட்டபோது அவர் களுக்கு குறிப்பிட்ட இடஒதுக்கீடு எதுவும் அளிக்கப்படவில்லை. ஒட்டுமொத்த மதிப்பெண் அடிப்படையிலேயே அறிவியல், கணித பட்டதாரிகளும்பொறியியல் பட்டதாரிகளும் மெரிட் பட்டியலுக்கு சேர்க்கப்பட்டனர்.தற்போது பொறியியல் பட்டதாரி களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டிருப்பதால், பிஎஸ்சி இயற்பியல், வேதியியல், கணித பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள் தங்களுக்குப் போட் டியாக இருப்பார்களோ என்று அச்சப்படத் தேவையில்லை.
பி.எட். படிப்பில் சேர ஆகஸ்ட் 1 முதல் விண்ணப்பம்
 நடப்பு கல்வி ஆண்டில் பிஎட் படிப்பில் அரசு ஒதுக்கீட்டில் சேருவதற்கான விண்ணப்பப் படிவங்கள் ஆகஸ்ட் 1-ம் தேதி முதல் 9-ம் தேதி வரை வழங்கப்பட உள்ளன. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அரசு ஒதுக்கீட்டின் கீழ் 1,777 இடங்கள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. ஆகஸ்டு 3-வது வாரத்தில் தரவரிசைப் பட்டியல் வெளியிட்டு கலந்தாய்வை நடத்த திட்டமிட்டிருப்பதாக தமிழ்நாடு பிஎட் மாணவர் சேர்க்கை செயலாளரும், சென்னை திருவல்லிக்கேணி லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வருமான பேராசிரியை எம்.எஸ்.தில்லை நாயகி தெரிவித்தார்.மேலும், லேடி வெலிங்டன் கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் நடப்பு கல்வி ஆண்டில் எம்எட் படிப்பில் சேர விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.
விண்ணப்பத்தின் விலை ரூ.50. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஜூலை 29-ம் தேதி மாலை 5 மணிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தில்லைநாயகி தெரிவித்தார்.பிஎட் படிப்பைப் போன்று எம்எட் இடங்கள் ஒற்றைச் சாளர முறையில் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுவதில்லை. எனவே, மாணவர்கள் ஒவ்வொரு கல்லூரிக்கும் சேர தனித்தனியே விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத் தக்கது.

*சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இலவச 'Wi-Fi' வசதி பெறுவது எப்படி?*


  • 'Wi-Fi' வசதியை பயணிகள் தங்களுடைய ஸ்மார்ட் போனில் 'Wi-Fi' ‘ஆன்’ செய்து பெற்றுக்கொள்ளலாம்.
  • ‘Wi-Fi’ ‘ஆன்’ செய்த பின்னர், railwire.co.in என்ற இணையதளத்துக்கு நீங்கள் ரீ-டைரக்ட் செய்யப்படுவீர்கள் அதில் உங்களின் செல்போன் எண்ணை பதிவு செய்ய சொல்லும். அவ்வாறு பதிவு செய்ததும்,
  • ‘ஒரு முறை பாஸ்வேர்டு’ (OTP-One Time Password) (ஓ.டி.பி.) செல்போனுக்கு குறுந்தகவலாக (SMS) வரும்.
  • அதை பதிவு செய்ததும், நீங்கள் ஆன்–லைன்–க்கு வந்து விட்டீர்கள் (இலவச Wi-Fi வசதிக்கு தகுதி பெற்றுவிட்டீர்கள்) என்ற வார்த்தையை திரையில் உங்களுக்கு காண்பிக்கும்.
  • உங்கள் தேடலை இணையத்தில் ஆரம்பிக்கலாம்.

மாணவர்களுக்கு கூற அப்துல் கலாம் பற்றி 50 சுவாரசிய தகவல்கள்
1. தாய்மொழியான தமிழ் வழியில் கல்வி பயின்று, அறிவியல் துறையில் உலக சாதனைகள் செய்தவர் அப்துல் கலாம்.


2. இந்திய ஜனாதிபதிகளில் மிக, மிக எளிமையாக இருந்தவர் இவர் ஒருவரே. ஜனாதிபதி மாளிகையில் சைவ உணவுகள் மட்டுமே சாப்பிட்ட ஒரே ஜனாதிபதி இவர்தான்.

3. நாடெங்கும் பட்டி தொட்டிகளில் படிக்கும் மாணவ – மாணவிகளிடம் கூட நாட்டின் மீது தேசப்பற்று ஏற்பட செய்தவர். ஒரு அரசாங்கம் செய்ய வேண்டிய பணியை ‘‘மாணவர்களே கனவு காணுங்கள்’’ என்று சொல்லி மாணவர்கள் மத்தியில் புரட்சியை ஏற்படுத்தியவர்.


4. நாட்டுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதற்காக பெருந்தலைவர் காமராஜர் திருமணம் செய்து கொள்ள மறுத்தார். அதுபோல திருமணம் செய்தால் அறிவியல் வளர்ச்சிப் பணிகளில் முழுமையாக ஈடுபட முடியாது என்று திருமணம் செய்ய மறுத்தார் அப்துல் கலாம்.


5. இவரது வாழ்க்கையின் ஒவ்வொரு வினாடியும் காந்திய கொள்கைகளை பிரதிபலித்தது.


6. மாணவ, மாணவிகளைப் பார்த்ததும் அவர் பூரித்துப் போவார். அவர்கள் அருகில் சென்று பேசாமல் இருக்க மாட்டார்.


7. ஜனாதிபதியாக இருப்பவர்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று எழுதப்படாத சில மரபுகள் இருந்தன. பதவியேற்ற முதல் நாளே அந்த மரபுகளை உடைத்தவர் அப்துல் கலாம்.


8. ‘‘அக்னிச் சிறகுகள்’’ எனும் நூல் அப்துல் கலாமின் சுய சரிதையாக வெளி வந்துள்ளது.


9. அப்துல் கலாம் நிறைய கவிதைகள் எழுதியுள்ளார். அந்த கவிதைகளின் வரிகள் ஒவ்வொன்றும் வாழ்க்கைக்கு வழிகாட்டும் வார்த்தைகளாக உள்ளன.


10. அப்துல் கலாம் தன்னடகத்தின் உச்சமாக திகழ்ந்தவர். அவரைப் போன்று பணிவான மனிதர்களை காண்பது அரிது என்று உலக தலைவர்களே வியந்துள்ளனர்.


11. நான் என்ற அகந்தை எண்ணம் அவரிடம் துளி அளவு கூட இருந்ததில்லை. சிறு வயது முதல் வாழ்நாளின் இறுதி வரை அமைதியானவர், அன்பானவர் என்ற பாதையில் இருந்து அவர் விலகாமலே இருந்தார்.


12. ‘‘நான் யார் தெரியுமா’’ என்ற ரீதியில் அவர் ஒரு நாள் கூட செயல்பட்டதில்லை. ஒரு தடவை அவர் வெளிநாடு சென்றிருந்த போது விமான நிலைய அதிகாரிகள் அவர் அணிந்திருந்த கால் ஷூ–வை அகற்றி சோதித்த போது, சிரித்துக் கொண்டே முழு ஒத்துழைப்புக் கொடுத்தார்.


13. எந்த ஒரு இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்தி பரபரப்பு ஏற்படுவதை அவர் ஒரு போதும் விரும்பமாட்டார். ஜனாதிபதியாக இருந்த போது ஒரு நாள் டெல்லி ஜும்மா மசூதிக்கு தொழ சென்ற அவர் இடம் நெருக்கடி காரணமாக கடைசி வரிசையில் கூட்டத்தோடு கூட்டமாக நின்று இறைவனை தொழுதது குறிப்பிடத்தக்கது.


14. எந்த அளவுக்கு அவர் தன்னடக்கம் கொண்டிருந்தாரோ, அதே அளவுக்கு அவர் தன்னம்பிக்கையிலும் உச்சத்தில் இருந்தார். ‘‘நீ முயன்றால் நட்சத்திரங்களையும் பறிக்கலாம்’’ என்று அடிக்கடி கூறுவார்.


15. இந்திய அரசியல்வாதிகளிடம் இவர் அடிக்கடி உதிர்த்த வார்த்தை – ‘‘தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துங்கள். அது தான் நம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும்’’


16. உலகத் தலைவர்களில் அப்துல் கலாம் அளவுக்கு இளைய சமுதாயம் எழுப்பிய கேள்விகளுக்கு இதுவரை யாருமே உன்னதமான பதில்களை அளித்ததில்லை.


17. அப்துல் கலாமிடம் ஒரு தடவை ஒரு மாணவி ‘‘நல்ல நாள், கெட்ட நாள் எது?’’ என்று கேட்டாள். அதற்கு அப்துல் கலாம், ‘‘பூமி மீது சூரிய ஒளிபட்டால் அது பகல். படா விட்டால் இரவு. இதில் நல்லது கெட்டது என்று எதுவும் இல்லை’’ என்றார்.


18. அப்துல் கலாம் மிகப்பெரிய உறவு, நட்பு வட்டாரத்தைக் கொண்டவர். ஆனால் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி அவர் யார் ஒருவருக்கும், எதற்கும் சிபாரிசு செய்ததே இல்லை.


19. ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் கூட, அந்த மாத சம்பளத்தை வாங்கி அதில் ஒரு பகுதியை தன் குடும்பத்துக்கு அனுப்புவதை அப்துல் கலாம் வழக்கத்தில் வைத்திருந்தார்.


20. அப்துல் கலாமின் நெருங்கிய உறவினர்கள் எல்லாம் இன்றும் நடுத்தர வர்க்க வாசிகளாகவே உள்ளனர். அப்துல் கலாமின் கறை படாத நேர்மைக்கு இது ஒன்றே சிறந்த எடுத்துக்காட்டு.


21. அப்துல் கலாம் எந்த ஒரு காலக்கட்டத்திலும், எந்த ஒரு பதவியையும் எதிர்பார்க்காதவர். ஜனாதிபதி வேட்பாளராக அவர் பெயர் அறிவிக்கப்படுவதற்கு சற்று முன்பு வரை அவர் தன் விரிவுரையாளர் பணியில் சுறுசுறுப்பாக இருந்தார்.


22. அப்துல் கலாம் இளம் வயதில் விமானி ஆக வேண்டும் என்று ஆசைப்பாட்டார். அது கிடைக்காததால் பாதுகாப்புத்துறை தொழில் நுட்ப படிப்பைத் தேர்வு செய்தார்.


23. அனைத்து வளங்களும் நிறைந்த இந்தியா 2020–ம் ஆண்டில் உலகின் வளர்ந்த 5 நாடுகளில் ஒன்றாக திகழும் என்று பல ஆண்டுகளுக்கு முன்பே சொல்லி இந்தியர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தினார்.


24. திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரியில் 1954–ம் ஆண்டு பி.எஸ்.சி படித்த அப்துல் கலாம் அந்த பட்டத்தை வாங்காமல் விட்டு விட்டார். 48 ஆண்டுகளுக்கு பிறகு அதை கேட்டுப் பெற்றார்.


25. யாழ்ப்பாணத்தை சேர்ந்த கனகசுந்தரம் என்ற சன்னியாசியிடம் அப்துல் கலாம் ஆங்கிலம் கற்றுக் கொண்டார்.


26. ராமேசுவரம் மாவட்ட கல்விக் கழக பள்ளி அறிவியல் ஆசிரியர் சிதம்பரம் சுப்பிரமணியத்திடம் இருந்துதான் அறிவியல் ஆர்வத்தை கலாம் பெற்றார்.


27. அப்துல் கலாமின் நீண்ட நாள் காலை உணவு ஒரே ஒரு ஆப்பம். ஒரு தம்ளர் பால். வேறு எதையும் சாப்பிட மாட்டார்.


28. அப்துல் கலாமிடம் ஒரு பழமையான வீணை உண்டு. எப்போதாவது நேரம் கிடைத்தால் அந்த வீணையை வாசிப்பார்.


29. சிறு வயதில் கிணற்றுக்குள் கலாம் கல்லைத் தூக்கிப் போட்டார். அதில் இருந்து குமிழ், குமிழாக வந்தது. அது ஏன் வருகிறது என்று அப்துல் கலாம் கேட்டார். அவர் கேட்ட முதல் அறிவியல் கேள்வி இது தான்.


30. ராமேஸ்வரத்தில் உள்ள லட்சுமணத் தீர்த்தத்தில் தை மாதம் விழா நடத்தும் போது அப்துல் கலாம் குடும்பத்தினருக்கு ‘‘சந்தனப்பாடி’’ என்று ஒரு மரியாதை கொடுத்தனர். அந்த அளவுக்கு அப்துல் கலாம் குடும்பத்தினருக்கும் இந்துக்களுக்கும் நெருக்கம் இருந்தது.


31. அப்துல் கலாமுக்கு மிகுந்த இசை ஞானம் உண்டு. தியாகராஜ கீர்த்தனைகளில் சில கிருதிகளை அவர் தெரிந்து வைத்திருந்தார்.


32. 1950–களில் திருச்சி ஜோசப் கல்லூரியில் படித்த போது அசைவம் சாப்பிட்டால் அதிகம் செலவாகிறது என்று அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினார். பிறகு அதுவே நிரந்தரமாகிப் போனது.


33. 1998–ம் ஆண்டு மே மாதம் 11–ந் தேதி பொக்ரானில் இந்தியா அணுகுண்டு சோதனை நடத்தி உலக அரங்கில் தன்னை வல்லரசாக அறிவித்தது. இதற்கு அடித்தளம் அமைத்தவர் அப்துல் கலாம்தான்.


34. 1958–ல் மத்திய அரசின் பாதுகாப்புத் துறையில் அப்துல்கலாம் வேலைக்கு சேர்ந்த போது அவருக்கு மாத சம்பளமாக ரூ.250 வழங்கப்பட்டது.


35. இந்திய ராணுவத்தில் உள்ள திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் அகிய ஏவுகணைகள் அப்துல் கலாம் திட்ட இயக்குனராக இருந்த போது வடிவமைக்கப்பட்டு வந்தவையாகும்.


36. இந்தியாவுக்காக இவர் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணையை உருவாக்கிய போது அமெரிக்கா உள்பட பல நாடுகள் இவரை ஆச்சரியத்துடனும், மிரட்சியுடனும் பார்த்தன.


37. போலியோ நோயாளிகளுக்கான எடை குறைந்த ஊன்றுகோல் மற்றும் இருதய நோயாளிகளுக்கான எடை குறைந்த ஸ்டெண்ட் கருவி ஆகியவை இவர் கண்டு பிடித்தவையாகும். அந்த ஸ்டெண்டுக்கு ‘‘கலாம் ஸ்டெண்டு’’ என்றே பெயராகும்.


38. தமிழ் இலக்கியங்கள் அனைத்தையும் அப்துல் கலாம் படித்துள்ளார். குறிப்பாக திருக்குறளை கரைத்து குடித்திருந்தார் என்றே சொல்லலாம்.


39. இவர் எழுதிய ‘‘எனது பயணம்’’ என்ற கவிதை நூல் ஆங்கிலத்தில் மொழி மாற்றம் செய்யப்பட்டுள்ளது.


40. எப்போதும் சுறுசுறுப்பாக இருப்பது இவரது பழக்கம். ஒரு நாளைக்கு 18 மணி நேரம் கூட உழைப்பதற்கு தயங்க மாட்டார்.


41. குடிப்பழக்கம், ஊழல், வரதட்சணை போன்ற 5 தீய பழக்கங்களை கைவிட நாம் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று டெல்லி காந்தி சமாதியில் எழுதி வைக்க அப்துல் கலாம் அறிவுறுத்தி அதை அமல்படுத்தினார்.


42. இந்திய பாதுகாப்புத்துறையின் ஆய்வுக்கு முதலில் வெளிநாட்டு கருவிகள், பொருட்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றை நிறுத்தி விட்டு முழுக்க, முழுக்க உள்நாட்டு பொருட்கள் மூலம் ஆய்வு பணிகளை அப்துல் கலாம் செய்ய வைத்தார்.


43. அப்துல் கலாம் ஒரு போதும் நன்றி மறக்காதவர். தனது ஆசிரியர்கள், நண்பர்கள், உதவி செய்தவர்கள் என அனைவரையும் அடிக்கடி நினைவுப்படுத்தி பேசுவார்.


44. அப்துல் கலாமிடம் நகைச்சுவை உணர்வு அதிகம் உண்டு. நெருக்கடியான சமயங்களில் கூட அவர் நகைக்சுவையை வெளிப்படுத்த தயங்கியதில்லை.


45. இளைஞர்கள் ஒழுக்கமாக இருக்க வேண்டும் என்று அப்துல் கலாம் மிகவும் விரும்பினார். ஒரு தடவை மைசூரில் நடந்த விழாவில் அவர் பேசுகையில், ‘‘இந்தியாவில் உள்ள ஒவ்வொரு இளைஞனுக்கும் கட்டாயம் 2 ஆண்டுகள் ராணுவ பயிற்சி அளிக்க வேண்டும்’’ என்றார்.


46. பணம், வயது, சாதி, இனம், மதம், மொழி என்பன போன்றவற்றில் கலாம் வேறுபாடு பார்த்ததே இல்லை. இந்த அரிய குணத்தை அவர் தம் தந்தையிடம் இருந்து பழக்கத்தில் பெற்றார்.


47. அப்துல் கலாம் தினமும் திருக்குரான் படிக்கத் தவறியதில்லை. அதில் அவருக்கு பிடித்த வரிகள் எவை தெரியுமா?. ‘‘இறைவா! உன்னையே நாங்கள் வணங்குகிறோம். உன்னிடமே நாங்கள் உதவியும் தேடுகிறோம்’’ எனும் வரிகளாகும்.


இந்த வரிகள், என்னுடைய எல்லா சோதனை நாட்களிலும் என்னை கரை சேர்த்த வைர வரிகள் என்று அப்துல் கலாம் குறிப்பிட்டுள்ளார்.


48. சென்னை மூர் மார்க்கெட்டில் உள்ள ஒரு பழைய புத்தகக் கடைகளில் 1950–களில் அப்துல் கலாம், ‘‘த லைட் பிரம் மெனி லேம்பஸ்’’ என்ற புத்தகத்தை வாங்கினார். கடந்த 60 ஆண்டுக்கும் மேலாக அதை அவர் பொக்கிஷமாக வைத்திருந்தார்.


49. அறிவியல் தொழில் நுட்பத்துக்கு மிகவும் உதவும் பெரிலியம் தாது பொருளை வெளிநாடுகள் இந்தியாவுக்கு தர மறுத்தன. உடனே இதுபற்றி கலாம் ஆய்வு செய்தார். இந்தியாவின் பல பகுதிகளில் பெரிலியம் மண்ணில் அதிக அளவில் கலந்து இருப்பதை கண்டுபிடித்தார்.


இதைத் தொடர்ந்து பெரிலியம் மணல் கலவையை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை தடுத்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த உலக நாடுகள் பிறகு போட்டி போட்டு இந்தியாவுக்கு பெரிலியம் கொடுத்தன.


50. ஒரு தடவை காந்தி சமாதிக்கு சென்ற அப்துல் கலாம், ‘‘காந்தியின் வாழ்க்கை அனுபவங்களை குழந்தைகளிடம் பரப்ப நான் சபதம் ஏற்கிறேன் என்று குறிப்பு எழுதினார். அதன்படி ஜனாதிபதி பதவி காலம் முடிந்த பிறகும் பள்ளி, கல்லூரிகளுக்கு சென்று பேசிவந்தார். நேற்று அவர் கடைசி மூச்சும், இந்த பணியில்தான் நிறைவடைந்தது.

EMIS திட்டத்தில் ஆக., 7க்குள் பதிவு செய்ய கெடு


தமிழக அரசு பள்ளிகளில் படிக்கும், ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் விபரங்களை, 'ஆதார்' எண்ணுடன், 'எமிஸ்' கணினி திட்டத்தில் பதிவு செய்யும் பணியை, ஆக., 7க்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டுள்ளது.அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், தமிழக அரசின்,

14 வகை நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இதில் பல பள்ளிகளில், மாணவர்கள் எண்ணிக்கை குறையும் நிலையில், ஆசிரியர் பணியிடத்தை தக்கவைக்கவும், இலவச பொருட்களை, 'அபேஸ்' செய்யும் வகையிலும், போலி பெயரில் மாணவர்கள் இருப்பதாக, கடந்த ஆண்டுகளில் கணக்கு காட்டினர்.இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், 'எமிஸ்' எனப்படும், கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
இதில் ஆண்டுதோறும், பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெயர், முகவரி, பெற்றோர் பெயர், சேரும் பள்ளி, முன்பு படித்த பள்ளி, ஆதார் எண், ரத்த பிரிவு வகை சேர்க்கப்படுகின்றன.
இந்நிலையில், இந்த ஆண்டு ஒன்றாம் வகுப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின், விபரங்களை பதிவு செய்து அதை மாநில கணினித் தொகுப்பில் இணைக்க, அனைவருக்கும் கல்வி இயக்ககமான, எஸ்.எஸ்.ஏ., அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த பணிகளை ஆசிரியர்கள், ஆக., 7க்குள் முடிக்க, கெடு விதிக்கப் பட்டுள்ளது

சரியாக வேலை செய்யாத மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்' என்ற, ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரையை ஏற்று, அரசாணையை வெளியிட்டுள்ளது, மத்திய அரசு.

மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளத்தை உயர்த்தி அளிக்கும், ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளுக்கு, மத்திய அமைச்சரவை, கடந்த மாதம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடர்ந்து, இந்த சம்பள உயர்வை அமல்படுத்தும் வகையிலான அரசாணை நேற்று வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களின் வேலைத் திறனை அதிகரிக்கவும், சரியாக வேலை செய்யாதவர்களுக்கு, பதவி உயர்வு, சம்பள உயர்வை ரத்து செய்வது குறித்தும், ஏழாவது சம்பள கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.

தற்போது நடைமுறையில் உள்ள, எம்.ஏ.சி.பி., எனப்படும், 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, 10, 20, 30 ஆண்டுகள் பணி நிறைவு செய்யும் ஊழியர் களின் சம்பளம், அடுத்த நிலைக்கு தானாகவே உயர்த்தப்படும்; இதைத் தொடருவதற்கு கமிஷன் அளித்த பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது.

அதே நேரத்தில் இதில் சில மாற்றங்கள் செய்து, கமிஷன் அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளதாவது: சிறப்பாக வேலை செய்யாவிட்டாலும், சம்பளம் உயரும் என்ற மனநிலையில், மத்திய அரசு ஊழியர்கள் உள்ளனர். சிறப்பாக பணியாற்றும்

ஊழியர்களை ஊக்குவிப்பதற்காக கொண்டு வரப்பட்ட இந்த திட்டத்தை, அரசு ஊழியர்கள் தவறாக எடுத்துக் கொண்டுள்ளனர்.

சிறந்த முறையில் பணியாற்றுபவர்களுக்கே சம்பள உயர்வு, பதவி உயர்வு அளிக்கப்பட வேண்டும். அதன்படி, 'மாற்றியமைக்கப்பட்ட உறுதியான பணி முன்னேற்றம்' திட்டத்தின்படி, முதல், 20 ஆண்டுகளில், சிறப்பாக பணிபுரியாத ஊழியர்களுக்கான, சம்பள உயர்வை நிறுத்தி வைக்க வேண்டும்.

மேலும், வழக்கமான பதவிஉயர்வுக்கான அடிப்படை தகுதியையும், நன்று என்பதில் இருந்து மிகநன்று என்று உயர்த்த வேண்டும்.இவ்வாறு கமிஷன் பரிந்துரை செய்திருந்தது.இந்தப் பரிந்துரையை, மத்திய அரசு அப்படியே ஏற்று, அரசாணையிலும் அது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 'இனி சிறப்பாக பணியாற்றாத, அரசு ஊழியர்களுக்கு, சம்பள உயர்வு மற்றும் பதவி உயர்வு கிடைக்காது' என, நிதித் துறை உயர் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

'தகவலை மறைத்தால் வேலையிலிருந்து நீக்கலாம்'''பணியில் சேருவதற்கு முன்போ, பணியில் இருக்கும்போதோ, தன் மீது நிலுவையில் உள்ள குற்ற வழக்குகள், கைது செய்யப்பட்டது, விடுதலை செய்யப்பட்டது உள்ளிட்ட தகவலை, ஊழியர்கள் மறைத்தால், அவர்களை பணியில் இருந்து நீக்கும் அதிகாரம் வேலை அளிப்போருக்கு உள்ளது,'' என்று, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

அரசுப் பணியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து, அவ்தார் சிங் என்பவர் தொடர்ந்த வழக்கில், நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், அருண் மிஸ்ரா, பிரபுல்ல பந்த் ஆகியோர் அடங்கிய சுப்ரீம் கோர்ட் அமர்வு பிறப்பித்துள்ள தீர்ப்பில்கூறியுள்ளதாவது:

பணியில் ஒருவர் சேரும்போது அல்லது பணியில் இருக்கும்போது, தன் மீது உள்ள வழக்குகள் உள்ளிட்டவை குறித்த தகவல்களை மறைக்கக் கூடாது. இவ்வாறு மறைத்து பெறும் பணி உத்தரவு செல்லாது என்று உத்தரவிடுவதற்கு வேலை அளிப்போருக்கு அதிகாரம் உள்ளது.

அதே நேரத்தில், ஊழியரால் மறைக்கப்பட்ட தகவல்களால் ஏற்படக் கூடிய பாதிப்பு, அதன் தன்மை, அது நடந்த காலம் உள்ளிட்டவற்றின் அடிப்படையில், இந்த முடிவை வேலை அளிப்போர் எடுக்க வேண்டும். இவ்வாறு அமர்வு கூறியுள்ளது.

அடுத்த மாதம் முதல்புது சம்பளம் கிடைக்கும்:

#ஆகஸ்ட் முதல் ஊதியம்

#குறைந்தபட்சம் 7000முதல் 18000வரை
#ஊதிய உயர்வு ஜனவரி அல்லது ஜூலை 1ம் தேதி.3% ஊதியம்

#2.57மடங்காக இருக்கும்

2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்...(விவரம்)


அனைவருக்கும் கல்வி இயக்ககம் மதிப்புமிகு மாநில திட்ட இயக்குனர் அவர்களின் அறிவுரைப்படி EMIS இணையதளம் 2016-2017 கல்வியாண்டிற்கு மேம்படுத்தப்பட்டுவிட்டது.

தொடக்க கல்வி இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்துவகை பள்ளிகளும் கீழ் காணும்  வழிமுறைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

1.2016-17 கல்வியாண்டில் முதல் வகுப்பு மாணவர்களின் விவரங்களை பதிவு செய்யப்பட வேண்டும்.


2.பள்ளியை விட்டு வேறு பள்ளிக்கு சென்றுவிட்ட மாணவர்களை TRANSFER செய்யப்பட வேண்டும்.இதில் கடந்த ஆண்டில் 5 ஆம் வகுப்பு , 8 ஆம் வகுப்பு படித்த  மாணவர்களின் விவரங்களை ஏற்கனவே TRANSFER செய்யப்பட்டுவிட்டது .

3.ஏற்கனவே பதியப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் பிறந்த தேதி, இனம், சாதி, இது போன்ற ஒரு சில விவரங்களை விடுபட்டிருப்பின் அவற்றை பூர்த்தி செய்வதுடன் விவரங்களை சரிபார்த்து கொள்ளவும் .

தொழில்நுட்பம்  சார்ந்த சந்தேகங்கள் மற்றும் குறைபாடுகளுக்கு தொடர்பு கொள்ளவேண்டிய எண்கள் :

s.மகேஷ்-9444322538,  S.தாமரைச்செல்வன்-9444414417

அரசு உயர்நிலை பள்ளியில் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலம் !

கடலூர் மாவட்ட அரசு உயர்நிலை பள்ளியில் போதிய அடிப்படை வசதிகள் இல்லாததால் திறந்த வெளியில் வகுப்புகள் நடத்தப்படும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. விருதாச்சலம் அருகே உள்ள வடகரை கிராமத்தில் அரசு உயர்நிலை பள்ளி இயங்கி வருகிறது.
அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாததால் மாணவர்கள் கோயில் வளாகம், மரத்தடி உள்ளிட்ட இடங்களில் கல்வி கற்கும் நிலை ஏற்பட்டுள்ளது. குடிநீர், கழிவறை, ஆகிய எந்த வசதியும் இல்லாததால் மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பள்ளிக்கு அருகில் குளம் இருப்பதால் மாணவர்கள் குளத்தில் விழுந்து உயிரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளதாக பெற்றோர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். அதிகளவில் ஏழை, எளிய மாணவர்கள் பயிலும் இந்த பள்ளியில் அனைத்து அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

பி.எட். படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆக.,1 முதல் தொடக்கம் !


பி.எட் படிப்பிற்கான விண்ணப்ப விநியோகம் ஆகஸ்ட் 1 முதல் 9-ம் தேதி வரை வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை ஆகஸ்ட் 10-ம் தேதிக்குள் செலுத்த வேண்டும்.
லேடி வெல்லிங்டன் கல்வியியல் கல்லூரி உட்பட 13 மையங்களில் விண்ணப்பம் விநியோகம் செய்யப்படுகிறது.

வரையறுக்கப்பட்ட விடுப்பு விதிகள் ...அ) தமிழக அரசு தமது அலுவலர்களுக்கு கீழே உள்ள பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள  விழாக்களுக்கு ஒரு ஆண்டிற்கு 3  நாட்கள் என வரையறுக்கப்பட்ட விடுப்பு அனுமதிக்கிறது. (அ.நி.எண் 3 /ப.ம.நி.சீ துறை நாள் 12.01.2006 )


ஆ) மத சார்பின்றி எந்த பண்டிகைக்கு வேண்டுமானாலும் ஆண்டிற்கு 3  நாட்கள் எடுத்துக் கொள்ளலாம். முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும்.

இ) இவ்விடுப்பினை அரை நாளாக எடுக்க இயலாது. (அ.க.எண்.118727 அ.வி. III/88-1 ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)ஈ) காலதாமத வருகைக்காக இவ்வகை விடுப்பை ஈடுகட்ட முடியாது. ஆனால் தற்செயல் விடுப்புடன் இவ்விடுப்பை இணைத்துக் கொள்ளலாம். (அரசுக் கடித எண். 24686 /அவி III / ப.ம.நி.சீ. துறை நாள் 04.04.87)

அரசு பள்ளியில் படிக்கும் குழந்தையின் பெற்றோர் விபத்தில் இறந்தால் அரசு உதவி ரூ 75,000 !


அரசாணை எண் 39
பள்ளிக் கல்வி - அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய்
விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பா திக்கப்டுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000 /- நிதி வழங்குத ல்- ஆணை வெளியிடப் படுகிற து.
பள்ளிக் கல்வி ( இ2 ) துறை
அரசு ஆணை ( நிலை ) எ ண். 39 நாஷீமீ 30.3.2005 .
படிக்க :
தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் 24 . 3 . 2005 அன்று மாண்புமிகு தமிழக
முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட அறிக்கை .
- - -
ஆணை :
ஒரு குடும்பத்தில் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய், விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலே £, வருவாயின்மைக் காரணமாக பள்ளியில் கல்வி கற்கும் அவர்களது குழந்தைகள் கல்வியைத் தொடர்ந்து கற்க இயலாத நிலை ஏற்படுகிற து. அவ்வாறான சூழ்நிலைகளில் அத்தகைய குழந்தைகள் தங்களது கல்வியை இடையில் நிறுத்திவிடாமல் தொடர்ந்து கல்வி கற்கும் வகையி ல், அவர்களது கல்விப் பாதுகாப்பை உறுதிசெளிணிதிடும்
வகையி ல், புதிய திட்டம் ஒன்றை செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்த புதிய திட்டத்தின்ப டி, அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் 1 - ஆம் வகுப்பு முதல் 12 - ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் மாணவ மாணவியரின் வருவாய் ஈட்டும் தந்தை அல்லது தாய் விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது
நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்படுகின்ற அந்த மாணவ , மாணவியர் ஒவ்வொருவருக்கும் ரூ . 50 , 000/- நிதி வழங்கப்படும். இந்த நிதி அரசு நிதி நிறுவனங்களில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்டு அதில் இருந்து கிடைக்கின்ற வட்டித் தொகை மற்றும் அதன் முதிர்வுத் தொகை ஆகியவை அந்த மாணவ,
மாணவியரின் கல்விச் செலவுக்காகவும் மற்றும் அவர்களது பராமரிப்புக்காகவும் பயன்படுத்தப்படும்.
2. இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான விரிவான அறிவுரைகள் தனியாக
வெளியிடப்படும்.
3. இவ்வரசாணை நிதித் துறையின் அ.சா.எண்.1061/ திஷி / றி /2005
நாள் 30.3.2005-ன் இசைவுடன் வெளியிடப்படுகிறது.
(ஆளுநரின் ஆணைப்படி)
கு.ஞானதேசிகன்,
அரசு செயலாளர்.
https://www.facebook.com/226441914189311/photos/a.373091522857682.1073741844.226441914189311/422805234552977/?type=3&theater
பெறுநர்
பள்ளிக் கல்வி இயக்குநர், சென்னை 6
தொடக்கக் கல்வி இயக்குநர், சென்னை 6
மெட்ரிக்குலேக்ஷன் பள்ளிகள் இயக்குநர், சென்னை 6
மாநில கணக்காயர், சென்னை 18
மாநில கணக்காயர், சென்னை 35
கருவூல கணக்கு ஆணையர், சென்னை 15
நகல்
மாண்புமிகு முதலமைச்சரின் அலுவலகம், சென்னை 9
மாண்புமிகு கல்வி மற்றும் வணிகவரித் துறை அமைச்சரின்
சிறப்பு நேர்முக உதவியாளர், சென்னை 9.
/ஆணைப்படி அனுப்பப்படுகிறது/

https://www.facebook.com/226441914189311/photos/a.373091522857682.1073741844.226441914189311/422805234552977/?type=3&theater

ரூ 75,000 ஆக உயர்த்தபட்ட செய்தி
https://www.facebook.com/226441914189311/photos/a.373091522857682.1073741844.226441914189311/426633590836808/?type=3&theater

பயனுள்ள இணையதளங்கள்...! சான்றிதழ்கள் :- 1) பட்டா / சிட்டா அடங்கல் http://taluk.tn.nic....chitta_ta.html…

பயனுள்ள இணையதளங்கள்...!

சான்றிதழ்கள் :-
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic....chitta_ta.html…
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic...._ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet...n/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in...forms/birth.pdf
http://www.tn.gov.in...forms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in...t-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in...cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketc...in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.i...iles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.redi...ping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm…
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofind.../eduloans1.aspx
http://www.bankofbar...fs/eduloans.asp
http://www.axisbank....cation-Loan.asp
http://www.hdfcbank....n/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
4) இனையதளங்கள் மூலமாக 10th, 12th Std பாடங்களை கற்றுக்கொள்ளும் வசதி
http://www.classteacher.com/
http://www.lampsglow.com/
http://www.classontheweb.com/
http://www.edurite.com/
http://www.cbse.com/
5) 10th & 12th வகுப்பிற்கான அரசு தேர்வு மாதிரி கேள்வி தாள்கள் மற்றும் பாடங்களை படிக்க அல்லது பதிவிறக்கம் செய்ய
http://www.kalvisolai.com/
6) UPSC/ TNPSC/ BSRB / RRB / TRB க்கான பயிற்சி, தேர்வு மற்றும் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tnpsc.gov.in/
http://www.tnpsctamil.in/
http://www.upsc.gov.in/
http://upscportal.com/civilservices/
http://www.iba.org.in/
http://www.rrcb.gov.in/
http://trb.tn.nic.in/
http://www.tettnpsc.com/
7) உள் நாடு மற்றும் உலக நாடுகளில் வேலை வாய்ப்புகள் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி, பதிவு செய்து விண்ணப்பிக்கும் வசதி
http://www.employmentnews.gov.in/
http://www.omcmanpower.com/
http://www.naukri.com/
http://www.monster.com/
.இந்திய ராணுவத்தில் வேலை வாய்ப்புகள் அறிய
http://www.ssbrectt.gov.in/
http://bsf.nic.in/en/career.html
http://indianarmy.nic.in/
9) இந்திய கப்பல் படையில் பயிற்சி மற்றும் வேலை வாய்ப்புகள் அறிய
http://nausena-bharti.nic.in/
10) Face to Face chat / Interview நேர்காணல் செய்யும் வசதி
http://www.skype.com/
http://www.gmail.com/
http://www.yahoochat.com/
http://www.meebo.com/
F. கணினி பயிற்சிகள் (Online)
1) அடிப்படை கணினி பயிற்சி
http://www.homeandlearn.co.uk/
http://www.intelligentedu.com/
http://www.ehow.com/...c-computer-tra…
2) சிறார்களுக்கு கணினி பயிற்சி
http://www.ehow.com/...ter-training-c…
3) இ – விளையாட்டுக்கள்
http://www.zapak.com/
http://www.miniclip.com/
http://www.pogo.com/
http://www.freeonlinegames.com/
http://www.roundgames.com
4) ப்ரௌசிங், இ-மெயில், சாட்டிங், வெப் கான்ஃபெரென்ஸ், தகவல் தேடுதள்
http://www.google.com/
http://www.wikipedia.com/
http://www.hotmail.com/
http://www.yahoo.com/
http://www.ebuddy.com/
http://www.skype.com/
G. பொது சேவைகள் (Online)
1) தகவல் அறியும் உரிமை சட்டம்
http://rti.gov.in/
http://www.rtiindia.org/forum/content/
http://rti.india.gov.in/
http://www.rti.org/
2) சுற்றுலா மற்றும் முக்கிய தலங்கள் பற்றிய தகவல் பெறும் வசதி
http://www.incredibleindia.org/
http://www.india-tourism.com/
http://www.theashokgroup.com/
http://www.smartindiaonline.com/
3) திருமணம் புரிய விரும்புவோர் இணையதளங்கள் மூலமாக பதிவு செய்து தங்கள் வாழ்க்கை துணையை தேடி தேர்வு செய்யும் வசதி
http://www.tamilmatrimony.com/
http://kalyanamalai.net/
http://www.bharatmatrimony.com/
http://www.shaadi.com/
4) குழந்தைகளுக்கான தமிழ் பெயர்களை அர்த்ததோடு பார்க்கவும் மற்றும் தமிழ் அகராதி, தமிழ் புத்தகங்களை பார்க்க மற்றும் பதிவிறக்கம் செய்ய
http://www.tamilcube.com/
5) ஜாதகம் மற்றும் ராசிபலனை அறிந்துக் கொள்ள
http://www.koodal.com/
http://freehoroscope...n/horoscope.php
6) இனையதளம் மூலமாக இந்தியாவில் எந்த ஒரு மொபைலுக்கும் இலவசமாக SMS அனுப்பும் வசதி
http://www.way2sms.com/
7) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான VIDEO படங்களை தேடி கண்டு மகிழலாம்
http://www.youtube.com/
இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொழில் / வர்த்தகம் மற்றும் ஸ்தாபனங்கின் முகவரி / தொலைபேசி தகவல்கலை இலவசமாக தேடி தெரிந்து கொள்ளலாம்
http://www.justdial.com/
9) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மொழியில் தினசரி / வார நாளிதல்களை இலவசமாக வாசித்து செய்திகளை அறியலாம்
http://www.dinamalar.com/
http://www.dinamani.com/
http://www.dailythanthi.com/
http://www.tamilnewspaper.net/
http://www.vikatan.com/
http://www.puthiyathalaimurai.com/
http://www.nakkheeran.in/
10) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளை நேரலையாக இலவசமாக கண்டு மகிழலாம்
http://puthiyathalaimurai.tv/new/
http://www.bbc.co.uk/
11) SPEED POST மூலமாக நீங்கள் அனுப்பும் தபால்களை இந்திய தபால் துறையின் இனையதளம் மூலமாக தபால் சேர்ந்த விவரம் அறியலாம்
http://services.ptcm...king/Track.aspx
12) இந்திய தபால் துறையின் INTERNATIONAL SPEED POST / ELECRTONIC MONEY ORDER / REGISTERED POST / EXPRESS PARCEL / E-VPP சேவைகளை தபால் துறையின் இனையதளம் மூலமாக விவரம் அறியலாம்.
http://www.indiapost...n/tracking.aspx
H. மென்பொருள் (Software) பதிவிறக்கம் செய்ய
1) இனையதளம் மூலமாக உங்களுக்கு தேவையான மென்பொறுளை இலவசமாக பதிவிறக்கம் செய்து உபயோகிக்கலாம்
http://www.filehippo.com/
I. வணிகம் (Economy)
1) தமிழ் நாட்டின் இன்றைய தங்கம் மற்றும் வெள்ளியின் விலை விவரம் அறியலாம்
http://www.goldenchennai.com/
http://www.rates.goldenchennai.com/
http://www.bullionra...lion-rates.html
2) வெளிநாட்டின் பணமதிப்புக்கு இந்திய ரூபாயின் அன்றைய மாற்றத்தக்க மதிப்பை அறியலாம்
http://www.gocurrency.com/
http://www.xe.com/
H. அரசு சார்ந்த விண்ணப்ப படிவங்கள் (Online)
1) பாஸ்போர்ட் விண்ணப்பம்
http://www.passport.gov.in/
2) பட்டதாரிகள் அரசு வேலைவாய்ப்பிற்கு பதிவு செய்ய
http://www.tn.gov.in...employment.html
J. அரசு நலத் திட்ட படிவங்கள் (Online)
1) குடும்ப அட்டை
http://www.tn.gov.in...orms/ration.pdf
2) மகளிர் சுய வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வங்கிக் கடன் பெறுவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in...nkloan_form.pdf
3) பெண்கள் திருமணத்திற்கு கோரப்படும் உதவித் தொகை விண்ணப்பம் மற்றும் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்
http://www.tn.gov.in...fareschemes.pdf
4) நலிந்தோர் குடும்ப நல நிதியுதவி பெருவதற்கான மனு
http://www.tn.gov.in...rms/pdf-drs.pdf
5) ஆதரவற்ற முதியோர் / விதவைகள் / கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் / உடல் ஊனமுற்றோர் உதவி தொகைக்கான மனு
http://www.tn.gov.in...rms/pdf-oap.pdf
http://www.tn.gov.in...ecurity_net.pdf
6) புல எல்லை அளந்து அத்து காட்டக் கோருவதற்கான விண்ணப்பம்
http://www.tn.gov.in...df-boundary.pdf
7) திருமணப்பதிவிற்கான குறிப்பாவணம் மற்றும் விண்ணப்ப படிவம்
http://www.tnreginet...orms/appln3.doc
http://www.tnreginet...ication_Tamil.…
பட்டா பதிவு மாற்றம் கோருவதற்கான விண்ணப்ப படிவம் – சாதாரண பெயர் மாற்றம் / உட்பிரிவு மாற்றம்
http://www.tn.gov.in...ta-transfer.pdf
K. விவசாய சந்தை சேவைகள் (Online)
1) தேசிய அளவிலான விற்பனை நிலவரம்
http://agmarknet.nic.in/

2) பதிவு செய்து தினசரி சந்தை விலைகளை பெறும் வசதி
http://indg.in/agric...53oiTM-moo2039/
3) தோட்டப்பயிரகளின் சந்தை நிலவரம்
http://nhb.gov.in/On...ietyreport.aspx
4) முக்கிய வியாபாரிகள் பற்றிய விவரம்
http://indg.in/agric...aders-database/
5) தமிழ்நாட்டில் உள்ள விவசாய அமைப்புகள் / சங்கங்கள்
http://indg.in/…/dat...ons-farmers-a…/
6) கொள்முதல் விலை நிலவரம்
http://www.tnsamb.go...price/login.php
7) ஒழுங்குமுறை விற்பனை கூடம்
http://www.tnsamb.gov.in/mktcom.php
தினசரி சந்தை விற்பனை விலை நிலவரம்
http://59.90.246.98/pricelist/
9) வானிலை செய்திகள்
http://services.indg...ather-forecast/
L. தொழில் நுட்பங்கள்
1) பயிர் சாகுபடி, பாதுகாப்பு மற்றும் பயிர் பெருக்கம்
http://www.agritech....i_index_ta.html
http://www.agritech....op_prot_ta.html
2) விதை கொள்முதல் செய்ய இருப்பு நிலை விவரம்
http://www.tnagrisne...ityReports.php…
3) உயிரிய தொழில்நுட்பம்
http://www.agritech....biotech_ta.html
4) அறுவடை பின்சார் தொழில் நுட்பம்
http://www.agritech....harvest_ta.html
5) உயிரி எரிபொருள்
http://www.agritech....o_fuels_ta.html
M. வேளாண் செய்திகள்
1) பாரம்பரிய வேளாண்மை
http://www.agritech....di_farm_ta.html
http://www.agritech....op_prot_ta.html
2) வளம்குன்றா வேளாண்மை
http://www.agritech....susagri_ta.html
3) பண்ணை சார் தொழில்கள்
http://www.agritech....m_enter_ta.html
4) ஊட்டச்சத்து
http://www.agritech....trition_ta.html
5) உழவர்களின் கண்டுபிடிப்பு
http://www.agritech....nnovations.html
N. திட்டம் மற்றும் சேவைகள்
1) ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் திட்டங்கள் & சேவைகள்
http://www.tnrd.gov....mes_states.html
2) வேளாண் மற்றும் ஊரக வளர்ச்சிக்கான திட்டங்கள் & சேவைகள்
http://www.agritech....schemes_ta.html
3) வட்டார வளர்ச்சி
http://www.agritech....extnmap_ta.html
4) வங்கி சேவை & கடனுதவி
http://www.agritech....dit_bank_ta.htm
5) பயிர் காப்பீடு
http://www.agritech....rop_ins_ta.html
6) Krishi Vigyan Kendra (KVK) | Agricultural Technology Management Agency (ATMA)
http://www.agritech....kvk/kvk_ta.html
http://www.agritech....ma/atma_ta.html
7) NGOs & SHGs
http://www.agritech....ngo_shg_ta.html
அக்ரி கிளினிக்
http://www.agriclinics.net/
9) கிசான் அழைப்பு மையம்
http://www.agritech....n/kisan_ta.html
10) பல்லாண்டு மேம்பாட்டு குறிக்கோள்
http://www.agritech....mdg/mdg_ta.html
11) கேள்வி பதில்
http://www.agritech..../ta/faq_ta.html
12) பல்கலைக்கழக வெளியீடுகள்
http://www.agritech....publish_ta.html
O. ஈ – வேளாண்மை செய்தி மற்றும் சேவைகள்
1) தோட்டக்கலை
http://www.agritech....i_index_ta.html
2) வேளாண் பொறியியல்
http://www.agritech....g_index_ta.html
3) விதை சான்றிதழ்
http://www.agritech....ation_index_ta…
4) அங்கக சான்றிதழ்
http://www.agritech....m_index_ta.html
5) பட்டுபுழு வளர்பு
http://www.agritech....i_index_ta.html
6) வனவியல்
http://www.agritech....amil_index.html
7) மீன்வளம் மற்றும் கால்நடை
http://www.agritech....h_index_ta.html
தினசரி வானிலை, மழைப்பொழிவு மற்றும் நீர்த்தேக்க நிலைகள்
http://services.indg...ather-forecast/
9) விதை மற்றும் உரம் தயாரிப்பாளர் விபரம்
http://www.tnsamb.gov.in/seedcomp.html
http://www.tnsamb.go...ertilizers.html
10) உரங்களின் விலை விபரம்
http://www.tnagrisne...ilizerPrice.php
P. போக்குவரத்து துறை
1) ஓட்டுனர் பழகுனர் உரிமம் மனு முன்பதிவு
http://www.tn.gov.in...forms/form2.pdf
2) புகார்/கோரிக்கைப் பதிவு
http://transport.tn....rievanceLoad.do
3) வாகன வரி விகிதங்கள்
http://www.tn.gov.in.../taxtables.html
4) புகார்/கோரிக்கை நிலவரம்
http://transport.tn....e_statusLoad.do
5) ஓட்டுனர் உரிமம் சேவை முன்பதிவு
http://tnsta.gov.in/...sportTamMain.do
6) தொடக்க வாகன பதிவு எண்
http://transport.tn....artNoListAct.do

Click to download tnnhis2016 Android application

Click to Downlo
ad TNNHIS2016 application

*126 வழக்கறிஞர்கள் இடைநீக்கம்: பார் கவுன்சில் நடவடிக்கை*வழக்கறிஞர் சட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்திய கூட்டு நடவடிக்கை குழுவைச் சேர்ந்த உறுப்பினர்கள் உள்பட 126 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து இந்திய பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது.

தில்லி நடைபெற்ற இந்திய பார் கவுன்சில் பொதுக்குழு கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியின் பரிந்துரையின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

100 ரயில் நிலையங்களில் இலவச வைபை; ரயில்வே துறை அமைச்சர்

100 ரயில் நிலையங்களில் இலவச வைபை; ரயில்வே துறை அமைச்சர் http://dhunt.in/1kWy3?ss=com.google.android.apps.blogger via Dailyhunt

பிளஸ் 2 தேர்வில் மோசடி... தனியார் பள்ளியுடன் கைகோத்த கண்காணிப்பாளர்கள்... அம்பலமாகும் 'சென்டம்' ரகசியம்

!

தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும், எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்வில் மாணவர்கள் காப்பி அடிப்பது மற்றும் முறைகேடுகளில் ஈடுபடுவதை தடுக்க, பறக்கும் படை உள்பட பல்வேறு அதிரடி ஏற்பாடுகள் செய்யப்படும். இது தவிர பள்ளிக்கல்வித்துறையைச் சேர்ந்த இயக்குநர்கள், இணை இயக்குநர்கள் ஆகியோர் இந்த தேர்வில் முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க,  ஒவ்வொரு மாவட்டத்திற்கும் கண்காணிப்பு பணிக்கு அனுப்பப்படுவது வழக்கம்.

பொதுவாக ஈரோடு, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் தேர்வு பணியில் ஈடுபடும் அரசுப் பள்ளி ஆசிரியர்கள் உதவியுடன்,  ‘மாஸ் காப்பியிங்’ எனப்படும் மாணவர்களை ஒட்டு மொத்தமாக காப்பி அடிக்க விடும் செயல் நடப்பதாக  நீண்ட காலமாக குற்றச்சாட்டுகள் உண்டு.

இந்நிலையில் கடந்த மார்ச் மாதம் தொடங்கிய பிளஸ் 2 தேர்வின்போது, ஈரோடு மாவட்டத்திற்கு நேர்மையான அதிகாரியான அப்போதைய இணை இயக்குநர் கருப்பசாமி ( தற்போது மெட்ரிக் பள்ளி இயக்குநராக பதவி உயர்வு பெற்றுள்ளார்)  கண்காணிப்பிற்கு அனுப்பப்பட்டார். ஈரோட்டில் தொழிலதிபர் சிவலிங்கம் என்பவருக்கு சொந்தமாக ஐடியல், ஆதர்ஸ் என்ற இரு பிரபலமான தனியார் மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயங்கி வருகின்றன. இதில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். கடந்த மார்ச் மாதம் 14 ம் தேதி, பிளஸ் 2 வேதியியல் தேர்வு நடந்து கொண்டிருந்தது. அப்போது இணை இயக்குநர் கருப்பசாமிக்கு ஐடியல் பள்ளியில் 'மாஸ் காப்பியிங்' நடப்பதாக தகவல் வந்தது.

உடனே அந்த பள்ளிக்கு விரைந்தார். ஆனால் அதற்கு முன்னதாகவே இணை இயக்குநர் கருப்பசாமி அங்கு வரும் தகவல்,  பள்ளி நிர்வாகத்திற்கு வந்து விட்டது. ஐடியல் மெட்ரிக் பள்ளி 2 மாடிக்கட்டடங்களை கொண்டது. இரு மாடிகளிலும் உள்ள அறைகளில் பிளஸ் 2 தேர்வு நடந்து கொண்டிருந்த நிலையில், உடனே மாணவர்கள் கையில் வைத்திருக்கும் பிட்டுக்களை தூக்கி எறியும்படி பள்ளி நிர்வாகம், தேர்வு பணி ஆசிரியர்கள் மூலம் அறிவுறுத்தியது. உடனே மாணவர்கள், தங்கள் வசம் வைத்திருந்த பிட்டுக்களை அவசர அவசரமாக ஜன்னல் வழியாக தூக்கி எறிந்தனர். பள்ளி வளாகத்திற்குள் சென்ற இணை இயக்குநர் கருப்பசாமி தலை மீதே அந்த பிட்டுகள் விழுந்தன. அந்த பிட்டுகளை பிரித்து பார்த்த கருப்பசாமி அதிர்ச்சி அடைந்தார். இந்த விவரங்கள் எதுவும் தெரியாமல், மற்றொரு தேர்வு அறையில் 20 மாணவர்கள் ஒட்டு மொத்தமாக பிட்டுகளை வைத்து வெளிப்படையாக தேர்வுகள் எழுதுவதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதில் சில மாணவர்களை கையும் களவுமாக பிடித்து, தேர்வு கண்காணிப்பாளரிடம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும்படி உத்தரவிட்டார்.

அதுபோல், ஈரோடு ஆதர்ஸ் தனியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியிலும் இதேப்போன்று  'மாஸ் காப்பியிங்' நடப்பதை நேரில் கண்டறிந்த அவர், இது தொடர்பாக அரசு தேர்வுத்துறைக்கு தனியாக ரகசிய அறிக்கை அனுப்பி வைத்து விட்டு ஒதுங்கிக்கொண்டார்.

அதோடு பிளஸ் 2 தேர்வும் முடிந்தது. அதற்கு பிறகுதான் மோசடியின் உச்சகட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. தமிழகம் முழுவதும், 100க்கு அதிகமான மையங்களில் பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்களை திருத்தும் பணி நடந்தது. அப்போது திருச்சி மாவட்டம், லால்குடியில் உள்ள ஒரு பள்ளியில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஆசிரியர்கள் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒரு மாணவன் வேதியியல், கணக்கு, உயிரியல், ஆகிய 3 பாடத்தில் 200க்கு 200 மதிப்பெண் வாங்கியிருப்பதும், ஆனால் அந்த விடைத்தாளில் 3 , 5 மற்றும் 10 மதிப்பெண்களுக்கான விடைகள் வேறு கையெழுத்தில் எழுதப்பட்டிருப்பதும் தெரியவந்தது. இதே போல் 5 மாணவர்களின் விடைத்தாள்களிலும் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான முக்கியமான பாடங்களில் மட்டும் 200க்கு 200 மதிப்பெண்கள் வாங்கியிருப்பதும், அவர்களின் விடைத்தாளில் கையெழுத்து மட்டும் ஒரே மாதிரியாக இருப்பதையும் கண்டு,  விடைத்தாள் திருத்திய ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்தராதேவியிடம் முறையிடப்பட்டது. உடனே,  'அந்த 5 மாணவர்கள் எந்த பள்ளி மாணவர்கள்' என்று விசாரித்தபோது, அது மாஸ் காப்பிங் சர்ச்சையில் சிக்கிய ஐடியல், ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. உடனடியாக அந்த 5 மாணவர்களின் விடைத்தாள்கள் மட்டும் தனியாக சென்னைக்கு வரவழைக்கப்பட்டு,  தடய அறிவியல் சோதனைக்கு அனுப்பியதில், 5 மாணவர்களின் விடைத்தாள்களில் விடை எழுதியது ஒருவரின் கையெழுத்துதான் என்று கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் அந்த பள்ளிகளில் பிளஸ் 2 தேர்வு நடந்த போது,  பள்ளி வளாகத்தில் உள்ள ஒரு அறையில்,  ஒரு ஆசிரியர் அந்த பாடங்களுக்கான விடைகளை எழுதி,  பிறகு அந்த விடைத்தாள்களை மாணவர்களின் விடைத்தாள்களோடு இணைத்தது, விசாரணையில் தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அந்த குறிப்பிட்ட 5 மாணவர்களும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டு, அவர்களிடம் தனித்தனியாக விசாரணை நடத்தியதில், அந்த விடைத்தாளில் இருந்த கையெழுத்து தங்களது இல்லை, என்பதை ஒப்புக்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பாக,  முதன்மை கல்வி அலுவலர் அய்யணனிடம் அறிக்கையை கோரி பெற்றது தேர்வுத்துறை.

மேலும் இந்த விவகாரம்  பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதாவின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. 'தமிழகத்திற்கு சட்டசபை தேர்தல் மே மாதம் நடக்க இருப்பதால், அப்போது அந்த பிரச்னை வெளியே வந்தால் அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படும்' என்று முடிவு செய்து,  உயர் அதிகாரிகள் அந்த விவகாரத்தை மூடி மறைத்தனர். ஆனால் இப்போது பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகி, சட்டசபை தேர்தலும் முடிந்துவிட்ட நிலையில், ஐடியல் மற்றும் ஆதர்ஸ் ஆகிய  தனியார் மெட்ரிக் பள்ளிகளில் தேர்வுப்பணியில் ஈடுபட்ட ஈரோடு மாத்தூர் அரசு மாடல் முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் நசீர், டி.ஜி.புதூர் அரசு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் ஜோசப் சகாயராஜ், பவானி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி உயிரியல் முதுநிலை ஆசிரியர் முருகன், இயற்பியல் ஆசிரியர் ஆறுமுகம் ஆகியோர் மாணவர்கள் பிட் அடிக்க உதவியதாகவும், குறிப்பிட்ட 5 மாணவர்களுக்கு மட்டும் விடைத்தாள்களில் ஒரு ஆசிரியர் விடைகளை எழுதி மோசடி செய்திருப்பதாகவும் கூறி சமீபத்தில் பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன், அவர்களை சஸ்பெண்ட் செய்தார்.

* மேலும் பலர் மாட்டுவார்கள்.

பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வுப்பணிகளில் எந்தெந்த பள்ளிகளில் எந்த ஆசிரியர்களை கண்காணிப்பு பணியில் ஈடுபடச்செய்வது என்பதை முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அந்த அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகள்தான் முடிவு செய்வார்கள். ஆனால் இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள 4 ஆசிரியர்களும் கடந்த 4 ஆண்டுகளாக ஆதர்ஸ் மற்றும் ஐடியல் பள்ளிகளில் மாறி மாறி தேர்வு பணியில் நியமிக்கப்பட்டுள்ளனர். அதனால் இந்த மோசடியில், முதன்மை கல்வி அலுவலகத்தை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு இருப்பதாக தகவல்கள் கசியத்தொடங்கியுள்ளது.

* ஆசிரியர்கள் மற்றும் வக்கீல்களின் பிள்ளைகளா?

குறிப்பிட்ட அந்த 5 மாணவர்களின் பிளஸ் 2 தேர்வு முடிவுகளை அரசு தேர்வுத்துறை ஏற்கனவே நிறுத்தி வைத்து விட்டது. குறிப்பிட்ட அந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஆசிரியர்கள் என்றும், வக்கீல்களின் பிள்ளைகள் என்றும் தகவல்கள் வருகின்றன.

* சென்டம் பெற்ற மாணவர்கள் மீது சந்தேகம்:

ஈரோட்டில் குறிப்பிட்ட அந்த தனியார் பள்ளியில் பிளஸ் 2 தேர்வு எழுதிய மாணவர்களில் கணிசமானோர் இயற்பியல், வேதியியல் உள்பட முக்கியமான பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். அதுபோல் அந்தப் பள்ளியை சேர்ந்த மாணவர் விக்னேஷ் என்பவர் மாநில அளவில் ரேங்க் பெற்று மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் படிப்பில் சேருவதற்கான கட் ஆப்பில் முதலிடம் பெற்று, மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ளார். இதுபோலவே அந்தப் பள்ளியை சேர்ந்த கணிசமான மாணவர்கள் மருத்துவம் மற்றும் இன்ஜினியரிங் கவுன்சலிங்கில் மெரிட் மூலம் தேர்வாகியுள்ளனர். பிளஸ் 2 தேர்வு மோசடி பிரச்னையால் குறிப்பிட்ட அந்த பள்ளி மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் மற்றும் சென்டம்கள் மீது இப்போது சந்தேகக்கறை படியத்தொடங்கியுள்ளது.

* தேர்வு மைய அங்கீகாரம் ரத்து:

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் வசுந்த்ரா தேவியை தொடர்பு கொண்டு கேட்டபோது, " முதல் கட்ட விசாரணையில் காப்பி அடித்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு 4 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். தொடர்ந்து நடக்கும் விசாரணையில் ஈரோடு, நாமக்கல் மாவட்டங்களில் இது போன்ற மோசடிகள் நடந்து வருவது குறித்து அதிர்ச்சியான தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன.

வழக்கமாக 150 மாணவர்களுக்கு மேல் பிளஸ் 2 மற்றும் எஸ்.எஸ்.எல்.சி., தேர்வு எழுதும் மாணவர்களின் பள்ளிகளுக்கு தேர்வு மையம் அங்கீகாரம் வழங்கப்படும். மதிப்பெண் சான்றிதழ்களில் எந்தப் பள்ளியில் தேர்வு எழுதினார்கள் என்று தேர்வு மையப்பள்ளியின் பெயர் குறிப்பிடப்படும். தற்போது முதல் கட்டமாக பிளஸ் 2 தேர்வில் மோசடியில் ஈடுபட்ட அந்த இரு பள்ளிகளின் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் பிளஸ் 2 தேர்விற்கான தேர்வு மையம் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. விரைவில் அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்வது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்." என்றார்.

பள்ளி நிர்வாகம் சொல்வது என்ன?

இந்நிலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகி உள்ள ஐடியல் மற்றும் ஆதர்ஸ் மெட்ரிக் பள்ளிகளின் தாளாளரை தொடர்புகொண்டு, அவர்களது தரப்பு விளக்கத்தை பெற முயற்சித்தோம். ஆனால் அவரது செல்பேசி சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. பள்ளி நிர்வாக அலுவலகத்துடன் தொடர்புகொண்டு பேசியபோது, இதுகுறித்து தங்களால் எதுவும் கூற முடியாது என்றும், எதுவானாலும் பள்ளி தாளாளரிடம் கேட்டுக்கொள்ளுங்கள் என்றும் சொல்லி விட்டனர்.

மேற்கூறிய பள்ளிகள் தரப்பில் சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்க முன்வந்தால், அதனையும் பிரசுரிக்க தயாராக உள்ளோம். 

தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்காக நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு மாணவர் சேர்க்கைக் கலந்தாய்வில் பங்கேற்க ஜூலை 25-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 1 வரை விண்ணப்பிக்கலாம்.
நிகழ் கல்வியாண்டில் தொடக்கக் கல்வி பட்டயப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான இணையவழிக் கலந்தாய்வு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் மற்றும் மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அண்மையில் நடைபெற்றது. இந்த நிலையில், பிளஸ் 2 சிறப்பு உடனடித் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில், தேர்ச்சி பெற்றவர்களுக்காகவும், ஏற்கெனவே நடைபெற்ற கலந்தாய்வில் விண்ணப்பிக்கத் தவறியவர்களுக்காகவும் இரண்டாம் கட்ட மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? விண்ணப்பங்கள் அந்தந்த மாவட்ட ஆசிரியர் கல்வி, பயிற்சி நிறுவனங்களில் ஜூலை 25 முதல் ஆகஸ்ட் 1-ஆம் தேதி விநியோகிக்கப்படும். விண்ணப்பக் கட்டணம் ரூ.500, எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.250.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை விண்ணப்பம் வாங்கிய மையத்திலேயே ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்குள் ஒப்படைக்க வேண்டும்.
தொடக்கக் கல்வி பட்டயப்படிப்பு முதலாமாண்டு மாணவர் சேர்க்கை இணையதள வழியாக ஒற்றைச்சாளர முறையில் அனைத்து மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனங்களில் ஆகஸ்ட் 8-ஆம் தேதி காலை 9 மணி முதல் நடைபெறவுள்ளது என்று மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் ராமேஸ்வர முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களின் இடமாறுதல் கவுன்சிலிங்குக்கு துவங்கியது...பேரம்! எட்டு மாவட்டங்களில் தரகர்கள் முகாமிட்டு 'வசூல்!'

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு, அவர்களது விருப்பத்தின் அடிப்படையில், ஆண்டுதோறும் இடமாறுதல் கவுன்சிலிங் நடத்தப்படும். இந்த ஆண்டு கவுன்சிலிங் தேதியை, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார். தேதி அறிவித்த உடனேயே, அதிக கிராக்கி உள்ள எட்டு மாவட்டங்களில் இடைத்தரகர்கள் முகாமிட்டு, 'வசூல்' வேட்டையில் இறங்கி விட்டனர்.
ஆசிரியர் இடமாறுதலுக்கு, ஜூலை, 19 முதல், முதன்மை கல்வி அலுவலகத்தில், ஆசிரியர்கள் விண்ணப்பித்து வருகின்றனர்; 28ம் தேதி வரை அவகாசம் உள்ளது. அடுத்த மாதம், 6ம் தேதி கவுன்சிலிங் துவங்குகிறது.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 6ல்,மாவட்டத்திற்குள்ளும், பிற மாவட்டங்களுக்குமான இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும்.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, ஆக., 7ல், பதவி உயர்வு கவுன்சிலிங்கும்,உயர்நிலைப் பள்ளி தலைமைஆசிரியர்களுக்கு, ஆக., 13ல், மாவட்டத்திற்குள்ளேயும், வெளியிலும் கவுன்சிலிங் நடக்கும்.

* அரசு மற்றும் நகராட்சி மேல்நிலைப் பள்ளி முதுகலை ஆசிரியர்களுக்கு மாவட்டத்திற்குள், ஆக., 20; வேறு மாவட்டத்துக்கு, 21ம் தேதி; பதவி உயர்வு கவுன்சிலிங், 22ம் தேதியும் நடக்கும்.

* உடற்கல்வி, தையல், இசை, கலை மற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு, மாவட்டத்திற்குள் ஆக., 23ம் தேதி; வேறுமாவட்டங்களுக்கு, 24ல் கவுன்சிலிங் நடக்கும்.

* பட்டதாரி ஆசிரியர்களுக்கு, ஆக., 27 முதல், 29ம் தேதி வரை பணி நிரவலும், செப்., 3ம் தேதிமாவட்டத்திற்குள்ளும், 4ல் வேறு மாவட்டங்களுக்கும் இடமாறுதல் கவுன்சிலிங் நடக்கும். இடைநிலை, உடற்கல்வி, சிறப்பாசிரியர்களுக்கு பட்டதாரி ஆசிரியர்களாக, செப்., 6ல் பதவி உயர்வு கவுன்சிலிங் நடத்தப்படும்இந்நிலையில், ஆசிரியர், அலுவலர் சங்கங்கள், பெற்றோர் - ஆசிரியர் கழக நிர்வாகிகள் மற்றும்.

அரசியல் புள்ளிகள் மூலம், காலியிடங்களுக்கான கோரிக்கைகள் வரத் துவங்கி உள்ளன. அதிக போட்டி உள்ள, திருநெல்வேலி, கன்னியாகுமரி, துாத்துக்குடி, மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை போன்ற மாவட்டங்களிலும், தலைநகர் சென்னையிலும், பேரத்தை அரங்கேற்ற, சில இடைத்தரகர்கள் முயற்சித்து வருகின்றனர்.ஆனால், 'யாரிடமும், 'வி.ஐ.பி., கோட்டா' என்ற அடிப்படையில், இடமாறுதல் செய்யக் கூடாது' என, கண்டிப்பான உத்தரவு, தலைமைசெயலகத்தில் இருந்து வந்துள்ளதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தொடக்க பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் திறன் குறித்து அறிக்கை தர வேண்டும்:

 அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி உத்தரவு

தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் அடிப்படை திறன் மேம்பாட்டில் ஏதாவது குறைபாடு உள்ளதா என்று கண்டறிந்து செப்டம்பர் மாதத்தில் அறிக்கை தர வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து, அனைவருக்கும் கல்வி இயக்கக இயக்குநர் பூஜா குல்கர்னி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளத

கடந்த கல்வி ஆண்டில், ஆசிரியர் பயிற்றுநர்கள் மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ், ஆங்கிலம் வாசித்தல், எழுதுதல் மற்றும் எளிய கணக்குகளை சிக்கல் இல்லாமல் தீர்வு காண்பது தொடர்பாக மாணவர்களின் திறன் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதன் மூலம் ஒவ்வொரு மாணவரின் குறைபாடும் கண்டறிந்து அதற்கேற்ப பயிற்சிகள் அளிக்கப்பட்டது. அதே அடிப்படையில், இந்த ஆண்டும் முதற்கட்ட ஆய்வு பணிகள் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் இரண்டு பிரிவாகவும், இரண்டாம் கட்ட ஆய்வுப் பணி பிப்ரவரி, மார்ச் மாதங்களில் நடத்த வேண்டும் என்று அனைவருக்கும் கல்வி இயக்க மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார்.


இந்த ஆய்வு அறிக்கை செப்டம்பர் மாதம் 5ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி இயக்குநர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து  தமிழகத்தில் உள்ள 23 ஆயிரத்து 815 தொடக்கப் பள்ளிகள், 7307 நடுநிலைப் பள்ளிகளில் இந்த ஆய்வுப் பணிகள் தொடங்கியுள்ளது. ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உள்ள வட்டார வள மையத்தில் பணியாற்றும் ஆசிரியர் பயிற்றுநர்களை கொண்டு ஆய்வுகள் நடத்தப்படுகிறது. 

Thirunelveli district vacant list S.G and B.T


முதல் வகுப்பு மாணவர்கள் விவரம்: ஆன்லைனில் பதிய உத்தரவு

அரசுப் பள்ளிகளில் முதல் வகுப்பு படிக்கும் மாணவர்கள் சார்ந்த தகவல் தொகுப்பு விவரங்களை, கல்வி தகவல் மேலாண்மை முறையில் (இஎம்ஐஎஸ்) இணையதளத்தில் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
இதுகுறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறியதாவது: நிகழ் கல்வியாண்டில் முதல் வகுப்பு பயிலும் மாணவர்கள் தொடர்பான அனைத்து விவரங்களும் விரைவாகப் பதிவு செய்யப்பட வேண்டும். இதில், கடந்த ஆண்டில் 5-ஆம் வகுப்பு, 8-ஆம் வகுப்பு படித்த மாணவர்களின் விவரங்கள் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டு விட்டன. ஏற்கெனவே பதியப்பட்டுள்ள மாணவர்களின் விவரங்களில் பிறந்த தேதி, இனம், சாதி போன்ற விவரங்கள் விடுப்பட்டிருந்தால், அவற்றைப் பூர்த்தி செய்வதுடன் விவரங்களைச் சரிபார்த்து கொள்ள வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தமிழ் எம்.பில்., படிப்பு விண்ணப்பங்கள் வரவேற்பு.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில், தமிழ் பல்கலை ஒப்புதலுடன், முழு நேர தமிழ் ஆய்வியல் நிறைஞர் பட்டம்என்ற எம்.பில்., படிப்பு நடத்தப்படுகிறது. இதில், நடப்பு கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்காக, விண்ணப்பங்கள் வழங்கப்படுகின்றன.

விண்ணப்பங்களை, www.ulakaththamizh.org இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்யலாம். நேரிலும், தபால் மூலமாகவும் பெறலாம். ஆக., 12 விண்ணப்பிக்க கடைசி நாள். நுழைவுத்தேர்வு, ஆக., 18ல் நடைபெறும். மேலும் விபரங்களுக்கு, 044 - 2254 2992 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.