வரலாற்றில் இன்று ஜூலை 31சூலை 31 (July 31) கிரிகோரியன் ஆண்டின் 212 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 213 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 153 நாட்கள் உள்ளன.

நிகழ்வுகள்

கிமு 30 – அலெக்சாந்திரியா சமரில் மார்க் அந்தோனியின் படைகள் ஒக்டாவியனின் படைகளை வென்றன. ஆனாலும் அந்தோனியின் பெரும்பாலான படையினர் அவனை விட்டு விலகியதால் அவன் தற்கொலை செய்து கொண்டான்.

781 – பியூஜி எரிமலையின் பதிவு செய்யப்பட்ட முதல் சீற்றம் இடம்பெற்றது.

1009 – நான்காம் செர்ஜியசு 142வது திருத்தந்தையாகப் பதவியேற்றார்.

1423 – நூறாண்டுப் போர்: கிரவாந்த் நகரச் சமரில் பிரெஞ்சுப் படைகள் ஆங்கிலேயரிடம் தோற்றது.

1492 – எசுப்பானியாவில் இருந்து யூதர்கள் வெளியேற்றப்பட்டனர்.

1498 – தனது மூன்றாவது பயணத்தின் போது கிறித்தோபர் கொலம்பசு டிரினிடாட் தீவை அடைந்தார். இவரே இத்தீவை அடைந்த முதலாவது ஐரோப்பியர் ஆவார்.

1588 – எசுப்பானிய பெரும் கடற்படையெடுப்பு இங்கிலாந்தின் கரையோரப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.

1655 – உருசியா லித்துவேனியாவின் தலைநகர் வில்னியூசைக் கைப்பற்றி ஆறு ஆண்டுகள் தமது ஆட்சியில் வைத்திருந்தது.

1658 – ஔரங்கசீப் இந்தியாவின் முகலாயப் பேரரசராக ஆனார்.

1712 – பெரும் வடக்குப் போர்: தென்மார்க்கு, சுவீடன் கப்பல்கள் பால்ட்டிக் கடலில் மோதிக் கொண்டன.

1715 – கியூபா, அவானாவில் இருந்து எசுப்பானியா திரும்பிக் கொண்டிருந்த 12 எசுப்பானிய புதையல் கப்பல்களில், 11 கப்பல்கள் புளோரிடா கரையில் மூழ்கின. சில நூற்றாண்டுகளின் பின்னர் இவற்றின் சிதைவுகளில் இருந்து பெருமளவு புதையல் கண்டுபிடிக்கப்பட்டன.

1741 – புனித உரோமைப் பேரரசர் ஏழாம் சார்லசு ஆஸ்திரியா மீது படையெடுத்தார்.

1790 – முதலாவது அமெரிக்கக் காப்புரிமம் பொட்டாசு செயன்முறைக்காக சாமுவேல் ஒப்கின்சுக்கு வழங்கப்பட்டது.

1805 – இந்திய விடுதலைப் போராட்ட வீரர் தீரன் சின்னமலை பிரித்தானியரால் தூக்கிலிடப்பட்டார்.

1865 – உலகின் முதலாவது குற்றகலத் தொடருந்து சேவை ஆத்திரேலியா, குயின்சுலாந்து மாநிலத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

1913 – பால்க்கன் நாடுகள் புக்கரெஸ்ட்டில் அமைதி உடன்பாட்டுக்கு வந்தன.

1932 – செருமனியில் இடம்பெற்ற பொதுத்தேர்தல்களில் நாட்சி கட்சி 38% வாக்குகளைப் பெற்றது.

1938 – கிரேக்கம், துருக்கி, உருமேனியா, யுகோசுலாவியா ஆகிய நாடுகள் மீது தாக்குதல் நடத்துவதில்லை என பல்காரியா உடன்பாட்டுக்கு வந்தது.

1938 – பெர்சப்பொலிஸ் நகரில் அகாமனிசியப் பேரரசர் முதலாம் டேரியசின் தங்கம், மற்றும் வெள்ளித் தட்டுகளைத் தொல்லியலாளர்கள் கண்டுபிடித்தனர்.

1954 – ஆர்டிடோ டெசியோ என்பவர் தலைமையிலான இத்தாலிய குழு ஒன்று கே-2 கொடுமுடியை எட்டியது.

1964 – சந்திரனின் மிக அருகில் எடுக்கப்பட்ட படங்களை ரேஞ்சர் 7 விண்கலம் பூமிக்கு அனுப்பியது.

1971 – அப்பல்லோ 15 விண்வெளி வீரர்கள் லூனார் ரோவர் வண்டியை சந்திரனில் செலுத்தி சாதனை புரிந்தனர்.

1972 – வட அயர்லாந்தில் பல முக்கியமான நகர்ப்புறப் பகுதிகளை பிரித்தானிய இராணுவம் கைப்பற்றியது.

1973 – அமெரிக்காவின் டெல்டா ஏர்லைன்ஸ் ஜெட் விமானம் ஒன்று மாசச்சூசெட்ஸ், பாஸ்டன் விமான நிலயத்தில் மோதியதில் 89 பேர் உயிரிழந்தனர்.

1987 – ஆல்பர்ட்டா மாநிலத்தில் எட்மன்டன் நகரில் இடம்பெற்ற சூறாவளியில் சிக்கி 27 பேர் உயிரிழந்தனர்.

1988 – மலேசியா, கோலப்புறையில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் உயிரிழந்தனர், 1,674 பேர் காயமடைந்தனர்.

1992 – சியார்சியா ஐநாவில் இணைந்தது.

1992 – நேபாளத் தலைநகர் காட்மாண்டில் தாய்லாந்து விமானம் ஒன்று மலையில் மோதியதில் அதில் பயணம் செய்த அனைத்து 113 பேரும் உயிரிழந்தனர்.

1999 – நிலாவில் உறைநீரைப் பற்றி ஆராய்வதற்காக சென்ற நாசாவின் டிஸ்கவரி விண்கலம் நிலாவின் தரையுடன் மோத வைக்கப்படது.

2006 – பிடெல் காஸ்ட்ரோ தனது அதிகாரத்தைத் தனது சகோதரர் ராவுல் காஸ்ட்ரோவிடம் ஒப்படைத்தார்.

2006 – ஈழப்போர்: திருகோணமலையில் இடம்பெற்ற கிளைமோர் தாக்குதலில் 19 இராணுவத்தினர் கொல்லப்பட்டனர்.

2007 – வட அயர்லாந்தில் பிரித்தானிய இராணுவம் தனது மிக நீண்ட கால இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தி அங்கிருந்து வெளியேறியது.

2014 – தாய்வானில் எரிவாயுக் குழாய் வெடித்ததில் 20 பேர் உயிரிழந்தனர், 270 பேர் காயமடைந்டஹ்னர்.

பிறப்புகள்

1874 – செய்குத்தம்பி பாவலர், தமிழ் எழுத்தாளர், சதாவதானி (இ. 1950)
1880 – பிரேம்சந்த், இந்திய எழுத்தாளர் (இ. 1936)
1902 – கே. சங்கர் பிள்ளை, இந்திய கார்ட்டூன் வரைவாளர் (இ. 1989)
1907 – தாமோதர் தர்மானந்தா கோசாம்பி, இந்திய மார்க்சியப் புலமையாளர், கணிதவியலாளர் (இ. 1966)
1912 – மில்ட்டன் பிரீட்மன், நோபல் பரிசு பெற்ற அமெரிக்கப் பொருளியலாளர் (இ. 2006)
1916 – மோகன் லால் சுகாதியா, இராச்சசுத்தான் அரசியல்வாதி (இ. 1982)
1919 – வே. குமாரசுவாமி, இலங்கைத் தமிழ் அரசியல்வாதி, வழக்கறிஞர்
1936 – நேஷனல் செல்லையா, தென்னிந்தியத் திரைப்பட ஒளிப்படக் கலைஞர் (இ. 2016)
1940 – வியட்னாம் வீடு சுந்தரம் , வசனகர்த்தா ,இயக்குனர்
1951 – சரத் பாபு, தென்னிந்தியத் திரைப்பட நடிகர்
1954 – மணிவண்ணன், தமிழக நடிகர், இயக்குநர் (பி. 2013)
1961 – ராம்ஜி, இந்தியத் திரைப்பட ஒளிப்பதிவாளர்
1965 – ஜே. கே. ரௌலிங், ஆங்கிலேய எழுத்தாளர்
1989 – விக்டோரியா அசரென்கா, பெலருசிய டென்னிசு வீராங்கனை

High School HM - பதவி உயர்வு விரைவில் நடைபெறும்

தலைமை ஆசிரியர் பதவி உயர்வு வழக்கு இன்று 30. 7.2018 - சற்று முன் முடிவுக்கு வந்தது.. PG Trs ஐயும் சேர்த்து புதிய Pannel உடனே வெளியிடப்படுகிறது.
கூடிய விரைவில் , இந்த வாரமே பதவி உயர்வு கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.
தலைமை ஆசிரியர்உயர்வு வழக்கில் இன்று 30. 7.2018Status Quo விலக்கிக் கொள்ளப்பட்டது.எனவே இந்த வாரத்திற்குள் முந்தைய நடைறைப்படி PG + BT ஒருங்கிணைந்த பட்டியல் வெளியிடப்பட்டு உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பதவி உயர்வு நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

" TAB Training " Modules For Teachers

Vidyarthi Vigyan Manthan - மாணவர்கள் அறிவியல் திறனறி தேர்வுக்கு செப்.30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்!


மத்திய அரசின் அறிவியல்
மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான் பிரசார் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
மத்திய அரசின் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறையின் கீழ் இயங்கும் விஞ்ஞான பிரசார் நிறுவனம், என்சிஇஆர்டியின் விபா நிறுவனம் ஆகியவை இணைந்து தேசிய அளவிலான அறிவியல் விழிப்புணர்வு தேர்வை ஆண்டுதோறும் நடத்தி வருகிறது. இந்த தேர்வு நவம்பர் 25 மற்றும் 26ம் தேதிகளில் இணைய வழியில் ஆன்லைன் மூலம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி, கணினி மூலம் தேர்வு எழுதலாம். ஆங்கிலம் தவிர தமிழ், இந்தி, மராத்தி மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் தேர்வு எழுதலாம். தேர்வுக்கட்டணம் ரூ100 செலுத்த வேண்டும்.
செப்டம்பர் 30ம் தேதி விண்ணப்பிக்க கடைசி தேதி. 6ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை படிக்கும் அனைத்து மாணவர்களும் இந்த தேர்வு எழுதலாம். 6 ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஒரு பிரிவாகவும், 9ம் வகுப்பு முதல் பிளஸ் 1 வகுப்பு வரை மற்றொரு பிரிவாகவும் தேர்வு நடக்கும். மேற்கண்ட தேர்வு எழுத  விரும்புவோர் www.vvm.org.in என்ற இணைய தளம் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

TNPSC Group 4 - 2018 Exam Result official link


கடந்த பிப்ரவரி 11-ம் தேதி நடைபெற்ற குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு .

http://results.tnpsc.gov.in/  


http://www.tnpsc.gov.in/Resultget-CCSE_IV_2K18.html

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்- 31-07-2018


பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து
இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.

 உரை:
பற்றுக்களைத் துறந்தவர்களின் பெருமையை அளந்து கூறுதல், உலகத்தில் இதுவரை பிறந்து இறந்தவர்களை கணக்கிடுவதைப்போன்றது.

பழமொழி :

A teacher is better than two books

ஒரு ஆசிரியர் இரு புத்தகங்களை விட மேலானவர்

பொன்மொழி:

ஒரேயடியாக உச்சிக்கு ஏறிவிட வேண்டும் என்ற முயற்சிதான் உலகில் பல பெருந்துயருக்கும் காரணமாயிருக்கிறது.

- சாமுவேல் பட்லர்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.தீக்குச்சி தயாரிக்கப் பயன்படும் மரம்?
பைன்

2.உலக தண்ணீர் தினமாகக் கொண்டாடப்படும் நாள்?
மார்ச் 22

நீதிக்கதை :

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வுகோவில் கோபுரத்தில் சில நீல நிறப்புறாக்களும் சில வெள்ளை நிறப் புறாக்களும் அடைக்கலமாகி இருந்து வந்தன.

கோபுரத்தில் கும்பாபிஷேக வேலை கள் தொடங்க ஆரம்பித்ததால் இது நாள் வரை எதிரும் புதிருமாக இருந்து வந்த இருவகைப் புறாக் கூட்டமும் இப்போது ஒன்று கூடி வேறொரு இடம் தேடி புறப்பட்டன.

செல்லும் வழியில் ஓரிடத்தில் வெயிலில் உலர்த்துவதற்காக பரப்பப்பட்ட தானியங்களை கண்டதும் அனைத்தும் ஒன்று கூடி தானியங்களை தின்று தீர்த்து விட்டு மரக்கிளை ஒன்றில் அமர்ந்தன.

தானியத்தை உலர்த் தும் பொருட்டு பரப்பி விட்டு சென்ற வேடன் தானிய மணிகள் ஒன்று கூட இல்லாதது கண்டு அதிர்ச்சி யடைந்தான். தானியங்கள் காயப்போட்ட இடத்தில் புறாக்களின் எச்சம் கிடப்பதை பார்த்து வேடன் என்ன நடந்தது என்பதை ஊகித்தான்.

நாளைக்கு இந்த புறாக்களை எப்படியும் வலை விரித்து பிடித்து விட வேண்டும் என்று முடிவு செய்து அதன்படி மறுநாள் தயார் செய்து வலை விரித்தான்.

அடுத்த நாள் அங்கே வந்த புறாக்கள் தானியத்தைப் பார்த்ததும், அதை உண்ணும் ஆசையில் வேகமாக தரையிறங்கி உண்ணத் தொடங்கின. சில மணித்துளிகளில் அதன் கால்கள் வலை களில் சிக்கிக் கொண்டன.

சற்று தொலைவில் மறைந்திருந்த வேடன் நிலைமையை நன்கு புரிந்து கொண்டு புறாக்களை பிடிக்க ஓடி வந்தான். வேடன் வருவதைப் பார்த்த புறாக்கள் ஆபத்தை உணர்ந்து கொண்டு, உயிர் மீதுள்ள ஆசையினால் புறாக்கள் எல்லாம் ஒன் றாக இறக்கையை விரித்து பறக்க, வலையோடு புறாக்கள் பறக்க ஆரம்பித்தன.

உடனே வேடன், “அய்யய்யோ… புறாக்கள் போனாலும் பரவாயில்லை. நான் கஷ்டப்பட்டு தயாரித்த வலையும் அதோடு போகிறதே…” என்று புலம்பிக் கொண்டே, பறந்து செல்லும் புறாக்களின் பின்னே ஓடினான்.

பறந்து செல்லும் போதே, அதில் இருந்த வெள்ளைப் புறாக்கள் கர்வத்தோடு, “எங்களது வலிமையால்தான் நீங்களும் காப்பாற்றப்பட்டு இருக்கிறீர்கள். நாங்கள் சிறகை மிக வேகமாக அடித்து பறக்கவில்லை என்றால்… அவ்வளவுதான்” என்று கூறின.

உடனே நீல நிறப் புறாக்களும் தன் பங்குக்கு, “நாங்கள்தான் வலிமையோடு பறந்தோம். உங்களுக்கு அழகு இருக் கலாம், ஆனால் ஆற்றல் கிடையாது” என்று கூறிக் கொண்டு ஒன்றுக்கொன்று சண்டையிட்டுக் கொண்டே பறந்ததினால், அதன் பறக்கும் வேகம் குறைய ஆரம் பித்து, ஒரு மரக்கிளையில் வலை சிக்கிக் கொண்டது.

இதனைப் பார்த்த வேடனுக்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. “ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு” என்ற பழமொழிக் கெற்ப இப்புறாக்கள் தப்பி விடுமோ என்று பயந்தேன். நல்லவேளையாக “ஒற்றுமை நீங்கினால் அனை வருக்கும் தாழ்வு” என்ற நெறிப்படி பறந்த புறாக்களே நன்றி” என்று புறாக்களைப் பார்த்து கூறிக் கொண்டே அவைகளை தனது கூடைக்குள் போடத் தொடங்கினான்.

நீதி: ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு...

இன்றைய செய்தி துளிகள் :

1.கணினி மூலம் நீட் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஐந்து மாதம் சிறப்பு பயிற்சி அளிக்கப்படும்: மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

2.பள்ளிகளில் மதிய உணவுடன் பால் - மத்திய அரசு ஒப்புதல்!

3.கடந்த பிப்ரவரி மாதம் 11-ஆம் தேதி நடைபெற்ற டி.என்.பி.எஸ்.சி க்ரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியீடு.

4.செவ்வாய்க் கிரகத்தில் முதன்முறையாகக் கண்டறியப்பட்டுள்ள மிகப்பெரிய ஏரி!

5.1000-மாவது டெஸ்டில் களமிறங்க உள்ள இங்கிலாந்து..... வாழ்த்து தெரிவித்த ஐசிசி

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்-30-07-2018

பள்ளி காலை வழிபாடு செயல்பாடுகள்:

திருக்குறள்:

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு.

உரை:
ஒழுக்கத்தில் நிலைத்து நின்று பற்று விட்டவர்களின் பெருமையைச் சிறந்ததாக போற்றி கூறுவதே நூல்களின் துணிவாகும்.

பழமொழி :

A stitch in time saves nine

வருமுன் காத்தல் சாலவும் நன்று

பொன்மொழி:

இப்பொழுதே மகிழ்ச்சியாய் இருக்கக் கற்றுக் கொள்ளூங்கள். இன்னும் துன்பங்கள் வரக் காத்திருக்கின்றன.

- பிரேண்டர்ஜான்சன்.

இரண்டொழுக்க பண்பாடு :

1.நான் என்னுடைய வாழ்நாளில் யாருடைய உடலுக்கும் மனதிற்கும் துன்பம் தரமாட்டேன் .

2.துன்பப்படுவோர்க்கு என்னால் முடிந்த உதவிகளை செய்வேன் .

பொது அறிவு :

1.ஆசிரியராக இருந்து பின்னர் குடியரசு தலைவராக பொறுப்பு வகித்தவர்
விடை: டாகடர் ராதாகிருஷணன்

2 மக்களவையின் பெரும்பாண்மை கட்சியின் தலைவர்
விடை: பிரதமர்

நீதிக்கதை :

நரியும் கொக்கும் | The Fox And The Stork - Short Story

அது ஒரு அடர்ந்த காடு. அங்கு பல மிருகங்கள் வாழ்ந்து வந்தன. அந்த காட்டில் நரி ஒன்று வசித்து வந்தது. அதற்கு எப்போதும் யாரையாவது ஏமாற்றி அவர்கள் ஏமாறுவதைக் கண்டு மனம் மகிழ்வது பொழுது போக்காக இருந்தது.

அதே காட்டில் அறிவு மிக்க கொக்கு ஒன்றும் இருந்ததது. அந்த கொக்கு அணைத்து மிருகங்களிடமும் நன் மதிப்பை பெற்று இருந்தது. இதை பொறுக்க முடியாத நயவஞ்சக நரி அந்த கொக்கை எப்படியாவது ஏமாற்ற வேண்டும் என்று நினைத்தது.

ஒரு நாள் கொக்கு நரியின் குகை இருக்கும் வழியில் வந்துகொண்டிருந்தது

நரி அந்த கொக்கைப் பார்த்து "நண்பனே! உன்னுடைய அறிவைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறேன். நான் நாளை உனக்கு ஒரு விருந்து வைக்க விரும்புகிறேன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது.

கொக்கும் சரி வருகிறேன் என்று கூறிவிட்டுச் சென்றது.

அடுத்த நாள், நரி சுவைமிக்க சூப் ஒன்றை செய்தது.

அன்று மாலை கொக்கு நரியின் இடத்திற்கு சென்றது.

நரியோ திட்டமிட்டபடி, சூப்பை அகன்ற இரு தட்டில் ஊற்றியது. ஒன்றை கொக்கிடம் கொடுத்தது.

கொக்கினால் வாய் அகன்ற தட்டில் உள்ள சூப்பை குடிக்க முடியவில்லை.

நரியோ நக்கி நக்கி அந்த சூப்பை குடித்துவிட்டு, "நண்பனே இந்த சூப்பை உனக்காக செய்தேன் எப்படி இருந்தது?" என்று சிரித்துகொண்டே கேட்டது.

கொக்கு ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது. நரியிடம், "நண்பனே சூப் மிகவும் ருசியாக இருந்தது" என்று கூறியது .

கொக்கு நரியிடம், "இரவு நேரம் ஆக போகிறது நான் செல்ல வேண்டும்" என்று கூறியது.

செல்லும்முன் "இன்று நீ எனக்கு விருந்து வைத்தாய்! பதிலுக்கு நான் நாளை உனக்கு விருந்து வைக்கலாம் என்று நினைக்கிறன். உன்னால் வர முடியுமா?" என்று கேட்டது.

நரியும் வர சம்மதம் தெரிவித்தது.

நரியோ கொக்கை ஏமாற்றி விட்டேன் என்ற கர்வத்துடன் சந்தோசமாக உறங்க சென்றது. கொக்கு பசியுடனும், வருத்ததுடனும் பறந்து சென்றது.

அடுத்தநாள் கொக்கு நரிக்கு நல்ல பாடம் புகட்ட வேண்டும் என்று நினைத்தது.

பல இறைச்சிகளை போட்டு சுவை மிக்க சூப் ஒன்றை செய்தது. அதன் வாசனை அந்த காடு முழுவதும் பரவியது.

அன்று மாலை நரி கொக்கின் வீட்டுக்கு சென்றது. கொக்கு நரி வந்தவுடன், அந்த சுவை மிக்க சூப்பை சிறிய துளை கொண்ட இரண்டு குவளையில் ஊற்றியது. அந்த சூப்பின் வாசனயை முகர்ந்தவுடன் நரிக்கு வாயில் எச்சில் ஊறியது. இன்றைக்கு நல்ல வேட்டை என்று நரி நினைத்தது.

கொக்கு குவளையை நரியிடம் கொடுத்தது. கொக்கு தன் வாயை குவளையில் நுழைத்து சூப்பை ருசித்தது. நரியினால், துளை சிறியதாய் இருப்பதனால் குடிக்க முடியவில்லை.

குவளையின் ஓரங்களில் சிதறி இருந்த சிறு துளிகளை மட்டுமே நக்கி சாப்பிட முடிந்தது.

கொக்கு நரியைப் பார்த்து "சூப் எப்படி இருந்தது என்று கேட்டது?" நரியும், "மிகவும் அருமை இதுபோன்ற ஒரு சூப்பை நான் குடித்ததே இல்லை" என்று பொய் சொல்லியது.

அப்போது தான் நரி ஏமாற்றப்பட்டதை உணர்ந்தது.

நரி, கொக்கிடம் விருந்துக்கு நன்றி என்று கூறிவிட்டு வருத்ததுடன் சென்றது.

அப்போது தான் நரி "நாம் மற்றவர்களை ஏமாற்றும் போது அவர்கள் எவ்வாறு வருத்தப்பட்டு இருப்பார்கள்" என்று உணர்ந்தது.

அன்று முதல் திருந்திய நரி, பிறகு யாரையும் ஏமாற்றுவதில்லை.

இன்றைய செய்தி துளிகள் :

1.மத்திய அரசு ஊழியர்கள் சம்பளத்துடன் கூடிய விடுப்பில் வெளிநாடுகளுக்கு பயணிக்க புதிய திட்டம்: விரைவில் அறிமுகம்

2.டெல்லியில் ஏவுகணை தாக்குதல் தடுப்பு அமைப்பு: அமெரிக்காவிடம் இருந்து வாங்க இந்தியா திட்டம்

3.இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகமாக நடைபெறும் மாநிலங்களில் தமிழகம் முதலிடம்

4.தனிப்பட்ட முறையில் பள்ளிகளை நடத்த முடியவில்லை என்றால், அவற்றை மூடும் அதிகாரம் பள்ளிகளுக்கு இல்லை' என சி.பி.எஸ்.இ., உள்ளிட்ட தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிகுலேஷன் பள்ளிகள் இயக்ககம் அறிவுறுத்தல்.

5.குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேசிய இளையோர் தடகள போட்டியில், தமிழக வீரர் கோகுல் தங்கப்பதக்கம் வென்று சாதனை

'குரூப் - 4' தேர்வு முடிவு எப்போது? : 20 லட்சம் பேர் காத்திருப்பு!!!


அரசு துறையில் பல்வேறு பணிகளுக்காக, 20 லட்சம் பேர் எழுதிய, 'குரூப் - 4' தேர்வு முடிவுகள், ஐந்து மாதங்களாக வெளியாகாததால்
, தேர்வர்கள் காத்திருக்கின்றனர்.
தமிழக அரசு துறைகளில், காலி பணியிடங்களை நிரப்ப, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், போட்டி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.இந்த வரிசையில், குரூப் - 4 பதவியில் அடங்கிய, 9,351 காலி பணியிடங்களை நிரப்ப, இந்த ஆண்டு, பிப்., 11ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது.இதில், முதல்முறையாக, கிராம நிர்வாக அலுவலரான, வி.ஏ.ஓ., பதவியில், 494 இடங்களையும் சேர்த்து, 4,096 இளநிலை உதவியாளர், 3,463 தட்டச்சர், 815 சுருக்கெழுத்தர், 156 வரைவாளர் உட்பட, மொத்தம் எட்டு வகை பதவிகளுக்கு தேர்வு நடத்தப்பட்டது.இந்த தேர்வுக்கு, 20.83 லட்சம் பேர் விண்ணப்பித்தனர்; அவர்களில், 20.69 லட்சம் பேருக்கு தேர்வு எழுத அனுமதி வழங்கப்பட்டது. தேர்வு முடிந்து, ஐந்து மாதங்களைத் தாண்டியும், இன்னும் முடிவுகள் வெளியிடப்படவில்லை.
இது குறித்து, தேர்வர்கள் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.,யின், குரூப் - 4 தேர்வில், வி.ஏ.ஓ., பதவியும் சேர்க்கப்பட்டு, வழக்கத்தை விட தாமதமாகவே இந்த ஆண்டு, குரூப் - 4 தேர்வு நடத்தப்பட்டது. அதிலும், விடை திருத்தம் முடிந்து, விரைவில் தேர்வு முடிவுகள் வரும் என, எதிர்பார்த்தோம். ஐந்து மாதங்களாக காத்திருந்தும், தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படவில்லை. இதனால், அடுத்த தேர்வுக்கு தயாராவதிலும், தேர்வர் களுக்கு சுணக்கம் ஏற்பட்டு உள்ளது. எனவே, தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிட, டி.என்.பி.எஸ்.சி., நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்

வரலாற்றில் இன்று 30.07.2018


❇🅾கிரிகோரியன் ஆண்டின் 211 ஆம் நாளாகும். நெட்டாண்டுகளில் 212 ஆம் நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 154 நாட்கள் உள்ளன.*

*🌍நிகழ்வுகள்🌍*

🔹1502 – கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார்.

🔹1629 – இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர்.

🔹1733 – ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது.

🔹1756 – ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார்.

🔹1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.

🔹1930 – உருகுவே முதலாவது உதைபந்தாட்ட உலகக்கிண்ணப் போட்டி இறுதி ஆட்டத்தில் ஆர்ஜெண்டீனாவை 4-2 கணக்கில் தோற்கடித்து உலகக்கிண்ணத்தை வென்றது.

🔹1932 – கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின.

🔹1945 – இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல் I-58 அமெரிக்காவின் கடற்படைக் கப்பலை மூழ்கடித்ததில் 883 கடற்படையினர் கொல்லப்பட்டனர்.

🔹1954 – எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார்.

🔹1966 – உதைபந்தாட்ட உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணி மேற்கு ஜெர்மனியை 4-2 என்ற கணக்கில் வென்றது.

🔹1971 – அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர்.

🔹1971 – ஜப்பானில் இரண்டு விமானங்கள் வானில் மோதிக் கொண்டதில் 162 பேர் கொல்லப்பட்டனர்.

🔹1980 – பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது.

🔹1997 – அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் “திரெட்போ” என்ற இடம்பெற்ற மண்சரிவில் 18 பேர் கொல்லப்பட்டனர்.

*🌍பிறப்புகள்🌍*

🔹1818 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேய எழுத்தாளர், கவிஞர் (இ. 1848)

🔹1863 – ஹென்றி ஃபோர்ட், அமெரிக்க பொறியியலாளர், தொழிலதிபர், போர்ட் தானுந்து நிறுவனம் நிறுவனர் (இ. 1947)

🔹1886 – முத்துலட்சுமி ரெட்டி, இந்தியாவின் பெண் மருத்துவர், சமூகப் போராளி (இ. 1968)

🔹1909 – கோ. வேங்கடாசலபதி, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர் (இ. 1969)

🔹1917 – கே. குணரத்தினம், இலங்கைத் திரைப்படத் தயாரிப்பாளர், தொழிலதிபர் (இ. 1989)

🔹1918 – எமிலி புராண்ட்டி, ஆங்கிலேயக் கவிஞர், புதின எழுத்தாளர் (இ. 1848)

🔹1924 – மா. நன்னன், தமிழறிஞர், எழுத்தாளர்

🔹1927 – மாதவசிங் சோலான்கி, குசராத்தின் 7வது முதலமைச்சர்

🔹1945 – பத்திரிக்கு மொதியானோ, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய எழுத்தாளர்

🔹1947 – பிரான்சுவாசு பாரி-சினோசி, நோபல் பரிசு பெற்ற பிரான்சிய மருத்துவர்

🔹1947 – ஆர்னோல்டு சுவார்செனேகர், ஆத்திரிய-அமெரிக்க நடிகர், அரசியல்வாதி, கலிபோர்னியாவின் 38வது ஆளுநர்

🔹1958 – பட்டுக்கோட்டை பிரபாகர், தமிழக எழுத்தாளர், பதிப்பாளர்

🔹1962 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (இ. 2015)

🔹1963 – லிசா குட்ரோ, அமெரிக்க நடிகை

🔹1969 – சைமன் பேக்கர், ஆத்திரேலிய நடிகர்

🔹1970 – கிறிஸ்டோபர் நோலன், ஆங்கிலேய-அமெரிக்க இயக்குநர்

🔹1971 – பேரறிவாளன், ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்

🔹1973 – சோனு நிகம், இந்தியப் பின்னணிப் பாடகர், நடிகர்

🔹1982 – ஜேம்ஸ் அண்டர்சன், ஆங்கிலேயத் துடுப்பாளர்

*🌍இறப்புகள்🌍*

🔹1898 – ஒட்டோ ஃபொன் பிஸ்மார்க், செருமனியின் 1வது அரசுத்தலைவர் (பி. 1815)

🔹1914 – பின்னத்தூர் அ. நாராயணசாமி ஐயர், தமிழகத் தமிழறிஞர் (பி. 1862)

🔹1942 – லியோபோல்டு மேன்டிக், கப்புச்சின் சபையை சேர்ந்த கத்தோலிக்க அருட்பணியாளர், புனிதர் (பி. 1866)

🔹1961 – குஞ்சிதம் குருசாமி, திராவிட இயக்க செயற்பாட்டாளர் (பி. 1909)

🔹1969 – இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர்

🔹2003 – கே. பி. சிவானந்தம், வீணையிசைக் கலைஞர் (பி. 1917)

🔹2004 – இரேந்திரநாத் முகர்சி, இந்திய இடதுசாரி அரசியல்வாதி (பி. 1907)

🔹2007 – இங்மார் பேர்ஜ்மன், சுவீடிய இயக்குநர் (பி. 1918)

🔹2015 – யாக்கூபு மேமன், இந்தியத் தீவிரவாதி (பி. 1962)

*🌍சிறப்பு நிகழ்வு🌍*

🔹1825 – பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது

வகுப்பறையில் மாணவர்கள் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்!:- கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை இயக்குநர்!


கோவை, 'கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட, வகுப்பறையில்
ஆசிரியர்களை காட்டிலும் மாணவர்களின் பங்களிப்பு, அதிகமாக இருக்க வேண்டும்,' என, ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய் கூறினார்.

தமிழ்நாடு சுயநிதி, கலை, அறிவியல் மற்றும் மேலாண்மை கல்லுாரிகள் சங்கம் சார்பில், பயன்பாடு சார்ந்த கல்விமுறை' என்ற தலைப்பில், மாநில அளவிலான இரண்டு நாள் பயிலரங்கு, கோவையில் நேற்று துவங்கியது. ௪௮.௯ சதவீதம்சங்க தலைவர், கலீல் தலைமை வகித்து பயிலரங்கை துவக்கிவைத்தார்.இதில், ஹரியானா கல்வி தொழில்நுட்பம் மற்றும் மேலாண்மை அகடமி இயக்குனர், மர்மர் முகோபாத்யாய் பேசியதாவது:நம் நாட்டின் உயர் கல்வி மாணவர்கள் சேர்க்கை விகிதம், 25.2 சதவீதமாக உள்ள நிலையில், தமிழகத்தில், 48.9 சதவீதமாக உள்ளது. இதற்கு, தனியார் கல்லுாரிகளின் பங்களிப்பு முக்கியமானது.

சேர்க்கை விகிதத்துடன், பயன்பாடு சார்ந்த கல்விமுறைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டியது அவசியம்.தனியார் கல்வி நிறுவனங்களிடம், பெரும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.அதை உணர்ந்து, பெயரை தக்க வைத்துக்கொள்ள வேண்டும். கற்றல் மற்றும் கற்பித்தல் என்பது சமநிலையில் வைத்து மதிப்பீடு செய்ய இயலாது.பாடத்தை கற்பிக்கும் ஆசிரியரின் தன்மை, ஒரே மாதிரியாகவே இருக்கும். ஆனால், கற்கும் மாணவர்களிடம் பல்வேறு வேறுபாடுகள் உள்ளன. இதை, ஆசிரியர்கள் புரிந்து, கற்பித்தல் செயல்பாடுகளை மேம்படுத்திக்கொள்ள வேண்டும்.

சாத்தியப்படும்கற்றல், கற்பித்தல் செயல்பாடுகளை மையமாக கொண்ட வகுப்பறையில், ஆசிரியர்களின் பங்களிப்பே அதிக அளவில் உள்ளது.ஆனால், ஆசிரியர்களின் பங்களிப்பு, 25 சதவீதமாகவும், மாணவர்களின் பங்களிப்பு, 75 சதவீதமாகவும் இருக்க வேண்டும். ஆசிரியர்கள், மாணவர்களின் வகுப்பறை ஈடுபாடு இணைந்து இருந்தால் மட்டுமே, பயன்பாடு கல்விமுறையை சாத்தியப்படுத்த முடியும்.இவ்வாறு அவர் பேசினார்.விழா மலரை, கோவை ஏ.ஜே.கே., கல்லுாரி செயலர் அஜித் குமார் லால் மோகன் வெளியிட்டார்.

இன்று நடக்கவுள்ள இரண்டாம் நாள் பயிலரங்கில், வல்லுனர்கள் பலர் பேசவுள்ளனர்.துவக்கவிழா நிகழ்ச்சியில், டில்லி உயர்கல்வித்துறை தலைவர் பேராசிரியர் சுதான்சு பூஷன், சங்க பொருளாளர் நித்யானந்தம், இணை செயலர் பரத்குமார் ஜெகமணி மற்றும் தமிழகத்தின் பல்வேறு கல்லுாரிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், முதல்வர்கள், பேராசிரியர்கள் பங்கேற்றனர்.

தலைவர் கலைஞர் விரைவில் குணமடைய திருவாரூரில் அவர் பயின்ற பள்ளியில் 1000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கூட்டுப்பிராத்தனை!...திருவாரூர்: கருணாநிதி மீண்டும் நலம் பெற்று வரவேண்டி திருவாரூரில் அவர் படித்த பள்ளியில் மாணவர்கள் கூட்டு பிரார்த்தனை செய்தனர்.

நாகை மாவட்டம் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924 ஜூன் 3ஆம் தேதி இசை வேளாளர் குடும்பத்தில் முத்துவேலருக்கும் அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாகப் பிறந்தார். கருணாநிதியின் இயற்பெயர் தட்சிணாமூர்த்தி.

கருணாநிதி மாணவர் பருவத்திலேயே தனது பேச்சாற்றலையும் எழுத்தாற்றலையும் வெளிப்படுத்தியுள்ளார். மாணவர் பருவத்திலேயே சமூக நலனுக்காக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துள்ளார்.

50 ஆண்டு அரசியல்

தனது வாழ்நாளில் 50 ஆண்டுகளை அரசியல் வாழ்க்கையில் கழித்துள்ளார்.


இதுவரை தான் போட்டியிட்ட எந்த தேர்தலிலும் அவர் தோல்வியை சந்தித்ததில்லை.

உடல் நலக்குறைவு

கடந்த 2 ஆண்டுகளாக உடல்நலக்குறைவால் பாதிப்பட்டுள்ள கருணாநிதி பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்தார். இந்நிலையில் கடந்த புதன் கிழமை முதல் அவரது உடல் மிகவும் நலிவடைந்துள்ளது.

காவேரி மருத்துவமன

மூன்று நாட்களாக சென்னை கோபாலபுரம் வீட்டிலேயே அவருக்கு காவேரி மருத்துவமனை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். நேற்றிரவு உடல்நிலை மிகவும் மோசமடைந்ததை அடுத்து அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

உடல்நிலையில் முன்னேற்றம்

அவரை சிறப்பு மருத்துவக்குழு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. கருணாநிதியின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்து வருகின்றனர்.

வ.சோ ஆண்கள் பள்ளி

இந்நிலையில் கருணாநிதி நலம் பெற வேண்டி திருவாரூரில் உள்ள அவர் படித்த வ.சோ ஆண்கள் பள்ளியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

2000க்கும் மேற்பட்ட மாணவர்கள்

2000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இந்த பள்ளியில் கருணாநிதி 1939 - 1940ஆம் ஆண்டு படித்துள்ளார்.

கட்டடத்தை திறந்து வைத்தார்

கடைசியாக 2016ஆம் ஆண்டு திருவாரூர் வந்த கருணாநிதி தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து இந்த பள்ளிக்கு கட்டிக்கொடுக்கப்பட்ட புதிய கட்டடத்தை திறந்து வைத்தார்.

புகழாரம்

பள்ளிப் பருவத்திலே கவிதை, கட்டுரை என எழுதி தனது எழுத்தாற்றலை வெளிப்படுத்தியவர் கருணாநிதி என்றும் பேச்சாற்றல் சமயோசிதமாக யோசிப்பவர் என்று அப்பள்ளியின் தலைமையாசிரியர் புகழாரம் சூட்டினார்.

கூட்டுப் பிரார்த்தனை

தங்கள் பள்ளிக்கு பெருமை சேர்த்த முன்னாள் மாணவர் கருணாநிதி மீண்டும் நலம் பெற வேண்டி இந்த கூட்டு பிரார்த்தனை நடத்தப்படுவதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

இன்ஜினியரிங் முதல் சுற்று கலந்தாய்வை புறக்கணித்த 2,653 பேர்


*🌐இன்ஜினியரிங் பொதுப்பிரிவு கலந்தாய்வின் முதல் சுற்றுக்கு தரவரிசையில்
முதல் 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டிருந்த நிலையில் அதை 2,653 பேர் புறக்கணித்துள்ளனர்*

*🌐தமிழகத்தில் இன்ஜினியரிங் கலந்தாய்வை இந்த ஆண்டு இணையதளம் மூலம் நடத்த அண்ணா பல்கலைகழகம் திட்டமிட்டது. இணையதளம், 42 இணைய சேவை மையங்களில் விண்ணப்பித்தல் மே 3ம் தேதி தொடங்கி ஜூன்  2ம் தேதி முடிந்தது*


*🌐அதில், 1,59,631 அரசு ஒதுக்கீடு இன்ஜினியரிங் இடங்களில் சேர விண்ணப்பித்தனர்*


*🌐கலந்தாய்வில் பங்கேற்க தகுதியுள்ள 1,04,453 பேருக்கு அண்ணா*
*பல்கலைக்கழகத்தில் ஜூன் 28ம் தேதி தரவரிசைப்பட்டியல் வெளியிடப்பட்டது*


 *🌐ஜூலை 6ம் தேதி முதல் 22ம் தேதி வரை சிறப்புப்பிரிவு, வொக்கேஷனல்  இடங்களுக்கான கலந்தாய்வு நடந்தது*


*🌐பொதுப்பிரிவு இடங்களுக்கான 5 சுற்று கலந்தாய்வில், முதல் சுற்றுக்கு தரவரிசைப்பட்டியலில் 190க்கு மேல் கட் ஆப் பெற்ற 10 ஆயிரம் பேர் அழைக்கப்பட்டனர். அதன்படி, ஜூலை 25ம் தேதி முதல் அவர்கள் இணையதளம், 42  இணைய சேவை மையங்களில் விருப்பக்கல்லூரி, கல்லூரிப்பட்டியல் பதிவேற்றம் செய்தல் ஆகியவற்றை செய்தனர்*


*🌐இந்த பணி ஜூலை 27ம் தேதி மாலை 5 மணிக்கு முடிந்தது. முதல் சுற்று கலந்தாய்வை 2,653 பேர் புறக்கணித்தனர். 7,136 பேருக்கு மட்டும் தற்காலிகமாக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது*


*🌐இந்நிலையில், முதல் சுற்றில் மாணவர்கள் தங்களுக்கு தற்காலிகமாக ஒதுக்கப்பட்ட இடத்தில் சேர்வதை இன்று மாலை 5 மணிக்குள் மாணவர்கள் இணையதளத்தில் உறுதிபடுத்த வேண்டும்*


 *🌐அவ்வாறு உறுதிபடுத்தாத மாணவர்கள் இரண்டாவது சுற்றில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள்*

*🌐முதல் சுற்று கலந்தாய்வில் கல்லூரியில் சேர்வதை உறுதிப்படுத்திய மாணவர்களுக்கு நாளை நிரந்தரமாக இடம் ஒதுக்கீடு  செய்யப்படும். இந்த முறையை பின்பற்றி 5 சுற்றுக்கள் கலந்தாய்வு நடைபெற உள்ளது*


*🌐மொத்தமுள்ள 1.76 லட்சம் இன்ஜினியரிங் இடங்களுக்கு 1.04 லட்சம் மாணவர்கள் கலந்தாய்வில பங்கேற்க தகுதி பெற்றனர்*


*🌐கடந்த ஆண்டு 89 ஆயிரம் இன்ஜினியரிங் இடங்கள் காலியாக இருந்த நிலையில், இந்த ஆண்டு  கலந்தாய்வு தொடங்குவதற்கு முன்பே 72 ஆயிரம் இடங்கள் காலியாக உள்ளது தெரியவந்துள்ளது. போதிய வேலைவாய்ப்பின்மையால் இந்த ஆண்டு ஒரு லட்சம் இடங்கள் வரை காலியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது*

வன பயிற்சியாளர் தேர்வு மாற்றம்!!!


💎தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, 

டி.என்.பி.எஸ்.சி.,யின், வன பயிற்சியாளர் பதவிக்கான, தேர்வு தேதி மாற்றப்பட்டுள்ளது


💎தமிழக அரசு துறையில், வன பயிற்சியாளர் பணிக்கான தேர்வு, செப்டம்பர், 23 முதல், 30 வரை நடத்தப்படும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்திருந்தது

💎ஆனால், இந்த நாட்களில், யு.பி.எஸ்.சி., என்ற, மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தின், சிவில் சர்வீசஸ் முதன்மை தேர்வு நடத்தப்படுகிறது.எனவே, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்த வன பயிற்சியாளர் தேர்வு, அக்., 9 முதல், 16 வரை நடத்தப்படும்


💎இதற்கான அறிவிப்பு, இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளதாக, டி.என்.பி.எஸ்.சி., செயலர், நந்தகுமார் தெரிவித்துள்ளார்

நடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ‘பள்ளி மேலாண்மை குழு’க்களின் நிலை என்னவாகும் என்ற கேள்விக்குறி


வலுவிழக்கிறது தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள்

 தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளிகளிலும் விரைவில் பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைக்கப்படும் எனவும் பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக விரைவில் அரசாணை வெளியிட உள்ள  நிலையில், ஏற்கனவே 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி அமைக்கப்பட்ட ‘பள்ளி மேலாண்மை குழு’க்களின் நிலை என்னவாகும் என்ற  கேள்விக்குறி எழுந்துள்ளது.

பள்ளி மேலாண்மை குழு ஏற்கனவே அமைக்கப்பட்டு, செயல்பட்டு வரும் நிலையில் புதிதாக பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைத்தால், ஒன்றுக்கொன்று முரண்பாடாகி, பள்ளிகளில் பல்வேறு குளறுபடி ஏற்படும், தற்போது அமலில்  உள்ள பள்ளி மேலாண்மை குழுக்கள் அனைத்தும் வலுவிழக்கும் என கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.தமிழக அரசின் இந்த நடவடிக்கைக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மத்திய  அரசின் தேசிய குழந்தை தொழிலாளர் திட்ட சிறப்பு பள்ளிகளை நடத்தி வரும் ‘சுடர்’ தொண்டு நிறுவன இயக்குனர் நடராஜ் கூறியதாவது:

பெற்றோர்-ஆசிரியர் கழக விதிகளின்படி, அந்தந்த பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படித்தால் மட்டுமே இப்பதவிக்கு போட்டியிட முடியும். இதில்  முறைகேடுகளும் அதிகளவில் நடைபெறும். இதை தடுப்பதற்காகத்தான், கடந்த  2011ம் ஆண்டு முதல் 1-8 வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் இலவச கட்டாய கல்வி பெறும் உரிமை சட்டத்தின் கீழ் பள்ளி மேலாண்மை குழுக்கள் அமைக்கப்பட்டது. இக்குழுவில், பள்ளி குழந்தைகளின் பெற்றோர், ஆசிரியர்கள்,  உள்ளாட்சி நிர்வாகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் என 20 பேர் இருக்கிறார்கள்.இக்குழுவில் 75 சதவீதம் பேர் பெற்றோர்தான் இடம்பெற வேண்டும் என்ற விதி உள்ளது. குறிப்பாக, 20 பேரில் 10 பேர் பெண்களாக இருத்தல் அவசியம். இக்குழுவின் தலைவராக பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படுகிறது.  அமைப்பாளராக பள்ளியில் தலைமை ஆசிரியர் செயல்படுவார். இக்குழு ஒவ்வொரு 2 ஆண்டுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்படுகிறது.

பள்ளி மேலாண்மை குழு கூட்டம் மாதம் ஒருமுறை கூட்டப்படுகிறது.பெற்றோர்-ஆசிரியர் கழகம் அமைத்தால் பணிகள் எதுவும் நடக்காது. கல்வித்துறை நடவடிக்கையில் அரசியல் தலையீட்டிற்கும், முறைகேட்டிற்கும் வழிவகுக்கும். அத்துடன், மத்திய அரசு கொண்டுவந்த இலவச கட்டாய கல்வி  பெறும் உரிமை சட்டமும் கேள்விக்குறியாகிவிடும். தற்போது இயங்கும் இந்த மேலாண்மை குழுக்களை சட்டப்படி கலைக்க தமிழக அரசுக்கு அதிகாரமும் இல்லை.

ஆனால், செயல்பாடின்றி முடக்கி வைக்க முடியும். அதற்காகத்தான் பெற்றோர்-ஆசிரியர் கழகம் கொண்டுவரப்படுகிறது. இது, ஆசிரியர்-பெற்றோர் இடையே மோதல் போக்கை உருவாக்கும்.இவ்வாறு நடராஜ் கூறினார்

எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவக்கம்!


எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள், ஆகஸ்ட், 1ல், துவங்குவதாக, மருத்துவ கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, 4,699 அரசு ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.இதற்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 1 முதல், 7ம் தேதி வரை நடந்தது. இதில், அனைத்து இடங்களும் நிரம்பின.நிர்வாக ஒதுக்கீட்டுக்கான கவுன்சிலிங் தேதி அறிவிக்கப்பட்டிருந்த போது, 'நீட்' தேர்வில், தமிழில் தேர்வெழுதிய மாணவர்களுக்கு, 196 கருணை மதிப்பெண் வழங்கும்படி, உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.இந்த உத்தரவை எதிர்த்து, சி.பி.எஸ்.இ., தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில், உயர் நீதிமன்ற உத்தரவுக்கு, உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.அதைத்தொடர்ந்து, நிர்வாக ஒதுக்கீட்டுக்கான, முதற்கட்ட கவுன்சிலிங், வரும், 30, 31ம் தேதி, சென்னை, ஓமந்துாரார் அரசு பல்நோக்கு மருத்துவமனை வளாகத்தில் நடைபெற உள்ளது.இந்நிலையில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில், அரசு ஒதுக்கீட்டு இடங்களை பெற்ற மாணவர்களுக்கு, ஆக., 1ம் தேதி முதல், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான வகுப்புகள் துவங்க உள்ளன.இதுகுறித்து, மருத்துவ கல்வி இயக்குனர், எட்வின் ஜோ கூறியதாவது:அரசு ஒதுக்கீட்டில், அனைத்து இடங்களும் நிரம்பி விட்டன. எம்.சி.ஐ., எனப்படும், இந்திய மருத்துவ கவுன்சில் விதிப்படி, ஆக., 1ம் தேதி, வகுப்புகள் துவங்குகின்றன.

மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளை உத்தரவால், இரண்டாம் கட்ட அகில இந்திய மருத்துவ கவுன்சிலிங் முடிவுகள் வெளியிடப்படவில்லை.அந்த முடிவுகள் வெளியானதும், அதில், மாநில ஒதுக்கீட்டுக்கு வழங்கப்படும் இடங்கள் மற்றும் நிர்வாக ஒதுக்கீட்டில் நிரம்பாத இடங்கள் அடிப்படையில், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

அரசு பள்ளி மாணவர்களுக்கு ஊரக திறனாய்வு தேர்வு செப்., 23ல் நடக்கிறது!


'அரசு பள்ளி மாணவர்களுக்கு, 'ஸ்காலர்ஷிப்' வழங்குவதற்கான ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23ல் நடக்கும்' என, அரசு தேர்வுத்துறை இயக்குனர் அறிவித்துள்ளார்.

 இதுதொடர்பாக, ஊரக பள்ளிகளுக்கு, தேர்வுத்துறை இயக்குனர், வசுந்தராதேவி அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில், 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வு முடிவு மற்றும் தகுதி அடிப்படையில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, மேல் படிப்பு உதவி தொகையாக, ஆண்டுதோறும், 1,000 ரூபாய் வழங்கப்படும்.ஒவ்வொரு வருவாய் மாவட்டத்துக்கும், தலா, 50, மாணவ - மாணவியர் தேர்வு செய்யப்படுவர். இந்த தேர்விற்கு, நகராட்சி, மாநகராட்சி பள்ளி மாணவர்கள் விண்ணப்பிக்க முடியாது. நடப்பு கல்வி ஆண்டுக்கான, ஊரக திறனாய்வு தேர்வு, செப்., 23 காலை, 10:00 முதல், பிற்பகல், 12:30 மணி வரை நடைபெறும்.

இந்த தேர்வுக்கு, அந்தந்த பள்ளி வழியாக விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப ஆண்டு வருமானம், ௧ லட்சம் ரூபாய்க்கு மேல் இருக்கக் கூடாது. இதற்காக, வருவாய் துறையிடம் இருந்து, வருமான சான்றிதழ் பெற வேண்டும். இந்த தேர்வுக்கு, சேவை கட்டணத்துடன், 10 ரூபாய் கட்டணத்தை, பள்ளி தலைமை ஆசிரியரிடம் தர வேண்டும்.

இவ்வாறு சுற்றறிக்கையில் கூறியுள்ளார்.

பள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகள் - பள்ளிக் கல்வித் துறை அறிவிப்பு!


பள்ளி மாணவர்கள், மொபைல் போன் எடுத்து வரவும், நகைகள் அணிந்து வரவும், தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மாணவ - மாணவியர் மற்றும் பெற்றோர்களுக்கு, பல்வேறு அறிவுரைகள் அடங்கிய கையேட்டை, பள்ளிக் கல்வித் துறை வெளியிட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ள அறிவுரைகள்:பள்ளியில் நடக்கும், பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தில், தவறாமல் பங்கேற்க வேண்டும். குழந்தையின் உடல்நலம் குறித்த விபரங்களை, வகுப்பு ஆசிரியரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். குழந்தைகளின் கற்றல் திறன் குறித்து, அவ்வப்போது, வகுப்பு ஆசிரியரிடம் ஆலோசிக்க வேண்டும்.குழந்தைகளின் நடை மற்றும் பாவனைகளை, பெற்றோர், தினமும் கண்காணிப்பது அவசியம். அதேபோல், பிள்ளைகள், மொபைல் போன், கணினி மற்றும் இணையதளத்தை பயன்படுத்துவதை முறைப்படுத்தி, கண்காணிக்க வேண்டும். தங்கள் குழந்தைகளை மற்ற பிள்ளைகளுடன் ஒப்பிட்டு பேசக் கூடாது.மாணவர்கள், பள்ளி உடமைகளை பாதுகாக்க வேண்டும். தேர்வு நாட்களில் விடுமுறைகள் எடுக்கக் கூடாது. நீண்ட விடுப்பு எடுக்க, மருத்துவ சான்றிதழ் அவசியம். பள்ளிக்கு மொபைல் போனை எடுத்து வர அனுமதி இல்லை. விலை உயர்ந்த அணிகலன்களை அணிந்து வரக் கூடாது. கூர்மையான மற்றும் கனமான பொருட்களை பயன்படுத்தி, ஆபத்தான முறையில் விளையாடக் கூடாது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

யோகா கட்டாயம்!

பள்ளி மாணவர்களுக்கான தினசரி நடவடிக்கைகளை, பள்ளிக் கல்வித் துறை அறிவித்துள்ளது.

* முற்பகலில், நான்கு பாடவேளைகள் நடத்தப்பட வேண்டும். மதிய உணவுக்கு முன், யோகா வகுப்பு கட்டாயம்

* எட்டாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களுக்கு, 10 நிமிடம்; 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, 15 நிமிடமும் யோகா பயிற்சி அவசியம்

* அதேபோல், ஒழுக்கம், சுற்றுச்சூழல், சுகாதார கல்வி தொடர்பான செயல்பாடுகளும், அவசியம் போதிக்கப்பட வேண்டும்.

2 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 'தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி!தருமபுரியில் உள்ள ஒளவையார்அரசு மகளிர் பள்ளியில் நடைபெற்ற வாசிப்பு நிகழ்ச்சியில் மாணவிகளுடன் அமர்ந்து வாசிக்கும் மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, காவல் துறை கண்காணிப்பாளர் ப. கங்காதர்,
தருமபுரி மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 2 லட்சம் மாணவ, மாணவிகள் ஒரே நேரத்தில் பங்கேற்ற தருமபுரி வாசிக்கிறது' நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தருமபுரியில் வரும் ஆகஸ்ட் 3 முதல் 12ஆம் தேதி வரை நடைபெறவுள்ள புத்தகத் திருவிழாவையொட்டி இந்தச் சிறப்பு நிகழ்ச்சி நடத்தப்பட்டது.
தகடூர்ப் புத்தகப் பேரவை மற்றும் பாரதி புத்தகாலயம் ஆகியவை இணைந்து தருமபுரியில் முதல் முறையாக புத்தகத் திருவிழாவை வரும் ஆக. 3ஆம் தேதி முதல் 12ஆம் தேதி வரை நடத்துகின்றன. பாரதிபுரத்திலுள்ள மதுராபாய் திருமண மண்டபத்தில் இப் புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது.
இதனையொட்டி, பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற தருமபுரி வாசிக்கிறது' என்ற சிறப்பு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. அந்தந்தப் பள்ளி வளாகங்களிலேயே காலை 10 மணி முதல் முற்பகல் 11 மணி வரை இந் நிகழ்ச்சி நடைபெற்றது.
தருமபுரி ஒளவையார் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் சு. மலர்விழி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மு. ராமசாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியில் ஆட்சியர் மலர்விழி பேசியது: வழக்கமாக பள்ளிகளில் மாணவ, மாணவிகள் படிப்பது மதிப்பெண்களைப் பெறுவதற்கான பாடப் புத்தகங்கள். ஆனால், பாடப் புத்தகத்தையும் தாண்டி, மனதுக்குப் பிடித்தமான ஒரு தலைப்பில் ஒரு புத்தகத்தைத் தேர்வு செய்து படிப்பது என்பது அந்தத் துறை தொடர்பான புலமையை வளர்க்கும். தொடர்ந்து வாசிப்போரின் ஆளுமைத் திறன் அதிகரிக்கும்.
இப்போது இணைய வழிப் புத்தகங்கள் வெளிவந்துவிட்டன. எனவே, வாசிப்பதும் எளிதாகி விட்டது. தினமும் தூங்கும் முன்பு அரை மணி நேரம் வாசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கடைகளில் பொட்டலமாகக் கிடைக்கும் துண்டுச் சீட்டுகளும் கூட நமக்கு நிறைய தகவல்களைத் தரும்.
ஒவ்வொரு நாளும் புதிதுபுதிதாக 5 சொற்களை அறிந்து கொண்டால் மொழி ஆளுமை வளரும். தங்கு தடையின்றிப் பேச முடியும் என்றார் மலர்விழி.
நிகழ்ச்சியில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் ப. கங்காதர் பேசும்போது, ஒரு புத்தகம் என்பது அதனை எழுதியவரின் மொத்த வாழ்வும், அனுபவத்தையும் கொண்டது. 100 ஆண்டுகள் வாழ்வது என்பது மட்டுமே வாழ்க்கையல்ல, வாழும் ஆண்டுகளுக்குள் எத்தனைப் புத்தகங்களைப் படித்து வாழ்வின் முதிர்ச்சியைப் பெற்றுக் கொண்டோம் என்பதுதான் வாழ்க்கை என்றார் கங்காதர்

விண்ணப்பித்துவிட்டீர்களா..? மருத்துவ துறையில் மருந்தாளுநர் பணிகள்


தமிழக அரசு சுகாதாரத்துறையில் காலியாக உள்ள 229 மருந்தாளுநர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழக மருத்துவ பணியாளர் தேர்வு வாரியம் (எம்ஆர்பி) வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து வரும் 30க்குள் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
மொத்த காலியிடங்கள்: 229

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. சித்தா - 148
2. ஆயுர்வேத - 38
3. ஓமியோபதி - 23
4. யுனானி - 20

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் பார்மசிஸ்ட் டிப்ளமோ முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
வயதுவரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.07.2018 தேதியின்படி 57க்குள் இருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.500. இதனை ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 30.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.mrb.tn.gov.in  என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்

நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை - வேலூர் CEOநாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என தெரிவித்தல்

அனைத்துவகை பள்ளி தலைமையாசிரியர்கள்/ முதல்வர்கள்,

ஏற்கனவே இரு சனிக்கிழமைகள் வேலை நாட்களாக பள்ளிகள் செயல்பட்டதாலும், தொடர்ந்து இரு வேலை நாட்கள் வருவதாலும் ,  நாளை (28.07.2018) சனிக்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை எனவும் அனைத்துவகை பள்ளிகளும் செயல்படாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

முதன்மைக்கல்வி அலுவலர், வேலூர்

Tomorrow ( 28.07.2018 ) - School Working Day - CEO Proceeding!

'Smart' classrooms in 3,000 schools are handheld computers for 30 thousand students3,000 பள்ளிகளில் 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் 30ஆயிரம் மாணவர்களுக்கு கையடக்க கணினி
அரசு பள்ளி மாணவர்கள், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' எனப்படும், கையடக்க கணினிகள் வழங்கப்பட உள்ளன.
மேலும், 3,000 பள்ளிகளில், டிஜிட்டல் பலகையுடன், 'ஸ்மார்ட்' வகுப்பறைகள் அமைக்கப்படுகின்றன.அரசு பள்ளிகளின் உள்கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்தை உயர்த்த, பல்வேறு திட்டங்களை, தமிழக பள்ளி கல்வித்துறை அறிமுகம் செய்து வருகிறது.இதன்படி, 3,000 அரசு தொடக்க மற்றும் நடுநிலை பள்ளிகளில், மூன்று மாதங்களில், டிஜிட்டல் பலகையுடன், ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்கப்பட உள்ளன.பாடங்களை ஒளிபரப்ப, தலா ஒரு புரஜக்டர் வழங்கப்படும்.

மேலும், ஆசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு, 3,000, 'டேப்லட்'கள் வழங்கப்படும்.இதற்கான நடவடிக்கைகளை, தமிழ்நாடு பாடநுால் மற்றும் கல்வி சேவை பணிகள் கழகம் மேற்கொண்டுஉள்ளது. இவற்றுடன், ஒரு பள்ளிக்கு, 10 மாணவர் வீதம், மொத்தம், 30 ஆயிரம் பேருக்கு, 'டேப்லட்' என்ற, கையடக்க கணினி இலவசமாக வழங்கப்பட உள்ளது.இந்த ஸ்மார்ட் வகுப்பறைகள், இன்னும், 90 நாட்களில் அனைத்து பள்ளிகளிலும் இயங்க துவங்கும்; ஒன்று முதல், எட்டாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, நவீன தொழில்நுட்பத்தில் பாடங்கள் நடத்தப்படும்.

சென்னை உட்பட, எந்த முக்கிய நகரங்களில் இருந்தும், கல்வியாளர்கள், கல்வித்துறை அதிகாரிகள், 'டேப்லட்' பயன்படுத்தி, 'வீடியோ கான்பரன்சிங்' முறையில், ஸ்மார்ட் வகுப்பில் உள்ள மாணவர்களுக்கு, பாடம் நடத்த முடியும்.

இந்த ஸ்மார்ட் வகுப்பில், ஆங்கிலம் மற்றும் தமிழ் வழியில், 'ரைம்ஸ்' என்ற, பள்ளி குழந்தைகளுக்கான பாடல்கள், ஒழுக்க நெறி கதைகள் போன்றவையும், வீடியோவாகவழங்கப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.