மழை காரணமாக டிசம்பர் 1,2 தேதிகளில் பள்ளிகளுக்கு விடுமுறை

மழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம் ,நாகை,திருவள்ளூர், கடலூர், திருநெல்வேலி மாவட்ட பள்ளிகளுக்கு  டிச.1 மற்றும் 2 ஆம் தேதிகளில் விடுமுறை

போக்குவரத்து ஊழியர்களுக்கு ரூ.3,000 முன்பணம் !!


 தமிழகத்தில் உள்ள போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என போக்குவரத்து துறையால் அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழகத்தில்
எட்டு போக்குவரத்து கழங்கள் உள்ளன. இவற்றில் பல ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். ரூபாய் நோட்டு வாபஸ் பிரச்னைக்கு பிறகு, மாத சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என அரசு ஊழியர்கள் எதிர்பார்த்தனர். ஆனால், மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்கவில்லை. முன்பணம்இந்த நிலையில், தமிழக போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய முன்பணமாக, ரூ.3,000 நாளை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மீதி சம்பள தொகை, ஊழியர்களின் வங்கி கணக்கில்செலுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


டெல்லி ஜந்தர்மந்தரில் ஆசிரியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மத்திய அரசின் புதிய பென்ஷன் திட்டத்தை எதிர்த்து ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்
https://2.bp.blogspot.com/-v6Dgl5WOc6g/WD1XFWsMrVI/AAAAAAAARDM/bt1H8kWye3cyc_hEhSH4VuCUOHjbvDLdACLcB/s320/IMG-20161129-WA0365.jpg

செய்யாத தவறுக்கு தண்டனை: பெங்களூரு பள்ளிக்கு பாடம் புகட்டிய சிறுவன்


செய்யாத குற்றத்துக்காக தண்டனை வழங்கிய பள்ளி நிர்வாகத்தின் மீது புகார் அளித்து தகுந்த பாடம் புகட்டியிருக்கிறார் பெங்களூரு சிறுவன் ஒருவர்.
பெங்களூருவின் தனியார் பள்ளியொன்றில் படிக்கும் 13 வயது சிறுவனை, பள்ளிக்கு நோட்டுப் புத்தகத்தை எடுத்து வரவில்லை என்றுகூறி, வீட்டுக்குச்சென்று அதை எடுத்துவருமாறு ஆசிரியர் வற்புறுத்தியிருக்கிறார்.
இச்சம்பவம் கடந்த வெள்ளிக்கிழமை நடந்துள்ளது. ஆசிரியர் உத்தரவை ஏற்று சிறுவனும் 5 கி.மீ. தொலைவில் இருக்கும் வீட்டுக்குச் சென்றிருக்கிறார்.
இந்நிலையில், மாணவனை வீட்டுக்குச் சென்று புத்தகத்தை எடுத்துவர வற்புறுத்திய பள்ளி நிர்வாகத்துக்கு எதிராகப் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தந்தையின் குற்றச்சாட்டு:
இச்சம்பவத்தைக் கடுமையாக எதிர்த்துள்ள சிறுவனின் தந்தை ஷங்கர் ஷிண்டே, கர்நாடக மாநில குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்திடம், சந்தீபனி நிகேதன் ஆங்கில உயர்நிலைப் பள்ளியின் செயல்பாடுகள் குறித்து புகார் அளித்துள்ளார்.
இதுகுறித்து ஷிண்டே 'தி இந்து' (ஆங்கிலம்)விடம் பேசும்போது, ''என் மகனுக்கு கடந்த மாதம் தான் அறுவைசிகிச்சை செய்திருந்தோம். அவன் அதிலிருந்து முழுமையாக மீளவில்லை. எங்கள் குடும்பத்தினரில் யாராவது ஒருவர்தான் தினமும் அவனை பள்ளிக்குக் கொண்டுவந்து விடுவோம்.
பள்ளி ஆசிரியர் வீட்டில் நோட்டுப்புத்தகம் இருப்பதாகக் கூறியபோது, எப்படி அது பள்ளியிலேயே இருந்திருக்கமுடியும். என்னுடைய மகன் இதைச் சொல்ல தொடர்ந்து முயற்சித்திருக்கிறான். ஆனால் அவர் அதைக் கேட்கக் கூட மறுத்துள்ளார்.
என் மகனைப் போலவே இன்னும் சில குழந்தைகளும் இதே மாதிரியான சம்பவங்களின்போது வீட்டுக்குத் திரும்ப அனுப்பப்பட்டுள்ளனர். நான் பள்ளி முதவரிடம் பேசியபோது அவருக்கு எங்கள் வீடு இவ்வளவு தூரமாக இருக்கும் என்று தெரியவில்லை என்றார். எப்படி ஒரு பள்ளி, புத்தகத்துக்காக குழந்தையைத் தனியாக வீட்டுக்கு அனுப்ப முடியும்?
இதுகுறித்துப் புகார் அளிக்க முடிவு செய்தபோது வீட்டில் உள்ளவர்கள் எல்லாம் அச்சம் கொண்டனர். பள்ளி நிர்வாகம் ஏதாவது செய்துவிடுமோ என்று கவலைப்பட்டனர். ஆனால் நான் இந்த நிலை மற்ற குழந்தைகளுக்கு ஏற்படக்கூடாது என்று எண்ணினேன்'' என்றார்.
பள்ளிக்கு சம்மன்:
புகார் குறித்துப் பேசிய குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம், பள்ளி நிர்வாகத்துக்கு சம்மன் அனுப்புவதாகவும், நடந்த சம்பவம் குறித்து விசாரிக்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
இதுகுறித்துப் பேசிய ஆணைய உறுப்பினர் மரியசாமி, ''இச்செயல் கர்நாடக மாநில குழந்தை பாதுகாப்புக் கொள்கைக்கு எதிரானது. ஆசிரியரைத் தாண்டி, பள்ளியின் மற்ற அதிகாரிகளையும் விசாரிக்க உள்ளோம். எப்படி ஒரு சிறுவனைத் தனியாக வீட்டுக்கு அனுப்ப முடியும் என்ற ரீதியில் விசாரணை நடைபெறும்'' என்று தெரிவித்தார்.
ஆர்.டி.இ. சட்டத்தை மீறுகிறதா?
குழந்தை உரிமைகள் நல ஆர்வலர்கள், பள்ளி ஆசிரியர் அந்த மாணவனை நடத்திய விதம் தவறானது எனக் கூறுகின்றனர். மேலும், ஆசிரியரை இடைநீக்கம் செய்ய வேண்டும் என வலியுறுத்தி வருகின்றனர்.
கல்வி உரிமைச் சட்டத்தின் (ஆர்.டி.இ.) 17 வது பிரிவு,எந்தக் குழந்தைக்கும் உடல்ரீதியான தண்டனையோ அல்லது மனரீதியான துன்புறுத்தலையோ அனுபவிக்கக் கூடாது எனக் கூறுகிறது

RBI removes withdrawal limits from 29 Nov


*விதிகள் தளர்த்தப்படும் - ரிசர்வ் வங்கி
*வங்கிகளில் பணத்தை எடுப்பதற்கான விதிகள் நாளை முதல் தளர்த்தப்படும்.
* கட்டுப்பாடுகளால் பணத்தை வங்கியில் செலுத்த தயங்குவதை போக்க நடவடிக்கை. 
* வங்கிகளில் ₹500,₹2000 நோட்டுகளை பெற்றுக் கொள்ளலாம் : ரிசர்வ் வங்கி.

DSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது.
இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும். இப்பணிமுடிந்த பின்னர் பணி பதிவேடு ‘டிஜிட்டல் சர்வீஸ் ரெஜிஸ்டர்’ என்று அழைக்கப்படும்.இந்த டிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ள முதல் பக்க சுய விபரம் மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணை பதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறை தகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்து கல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்வி தகுதிகளின் உண்மை தன்மை சார்ந்த பதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமை சார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயில முன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதிய நிர்ணயம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் சார்ந்த பதிவுகள், பல்வேறு வகையான விடுப்பு பதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும்.

இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில், ‘பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும்.

பதிவுகளை ஒருமுறை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர் பணி பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்று டிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென ஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொரு நாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள் சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது

IDIB வங்கியில் 1000 உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு.

ஐடிபிஐ வங்கியில் 2016-ஆம் ஆண்டிற்கான 1000 உதவி மேலாளர் கிரேடு ஏ பணியிடங்களுகான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரி இளைஞர்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: IDBI Bank Ltd

மொத்த காலியிடங்கள்: 1000

பணி: Assistant Manager Grade ‘A’

தகுதி: 60 சதவீத மதிப்பெண்களுடன் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிக்க வேண்டும்.

வயதுவரம்பு: 01.10.2016 தேதியின்படி 20 - 28க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

சம்பளம்: தேர்வு செய்யப்படுவர்களுக்கு 9 மாத பயிற்சி அளிக்கப்படும். பயிற்சியின்போது உதவித்தொகையாக மாதம் ரூ.2,500 வழங்கப்படும். அடுத்து 3 மாதம் உள்ளிருப்பு பயிற்சி அளிக்கப்படும். இதில் மாதம் ரூ.10000 வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்தவர்களுக்கு உதவி மோலாளர் கிரேடு ஏ பணியில் பணியமர்த்தப்படுவார்கள். அப்போது ஊதியமாக மாதம் ரூ.14400-1000(19)-33400-1250(6)-40900 (26 ஆண்டுக்கு) அளிக்கப்படும்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் 

ஓபிசி பிரிவினருக்கு ரூ.700. மற்ற பிரிவினருக்கு ரூ.150.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 09.12.2016

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 03.02.2017

மேலும் வயதுவரம்பு சலுகை, தேர்வு மையங்கள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.idbi.com/pdf/careers/Detailed-Advertisment-MGES-2016-17.pdf  என்ற இணையதள அறிவிப்பு லிங்கை கிளிக் செய்து பார்த்து தெரிந்துகொள்ளவும்.

BRC LEVEL TRAINING Primary 2 days

Developing basic skills in teaching of tamil
Batch 1 - 12.12.16 / 13.12.16
Batch 2 - 14.12.16 / 15.12.16
Upper Primary 3 days
Teaching of Maths using SLM Kitbox
09.01.2017
10.01.2017
11.01.2017

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம்: தமிழக தேர்தல் ஆணையம்.

உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக உள்ளாட்சித் தேர்தல் அக்டோபர் 17, 19-ஆம் தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெறும் என்று மாநில தலைமை தேர்தல் ஆணையம் அறிவிப்பாணை வெளியிட்டது.

இந்த நிலையில், உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவிகளில் பழங்குடியினருக்கு முறையான இட ஒதுக்கீடு வழங்கவில்லை என்றும், அது தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணைகளை எதிர்த்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த அக்டோபர் 4-இல் இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றத்தின் தனி நீதிபதி, உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டார். மேலும், புதிதாக அறிவிப்பு வெளியிட்டு, டிசம்பர் மாத இறுதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என்றும் அந்த உத்தரவில் குறிப்பிட்டார்.

இதற்கு பதிலளிக்க கால அவகாசம் கோரியதையடுத்து, நவம்பர் 28-ஆம் தேதிக்கு வழக்கின் விசாரணையை ஒத்தி வைத்து நீதிபதி என்.கிருபாகரன் உத்தரவிட்டார். இந்நிலையில்  இதற்கு இன்று பதில் அளித்த தமிழக தேர்தல் ஆணையம் உள்ளாட்சி தேர்தலை டிசம்பர் 31ம் தேதிக்குள் நடத்துவது சிரமம். அதற்கான சாத்தியக் கூறுகள் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளது

கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50% மறைத்து சிக்கினால் 85 சதவீதம் வரி: மக்களவையில் சட்ட திருத்த மசோதா தாக்கல்

கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தால் 50 சதவீத வரியும், அதை மறைத்து சிக்கினால் 85 சதவீத வரியும் விதிக்கப்படும் என மத்திய அரசு மசோதா தாக்கல் செய்தது. உயர் மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி கடந்த 8ம் தேதி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, 10ம் தேதி முதல் டிசம்பர் 30ம் தேதி வரை செல்லாத நோட்டுகளை வங்கியில் டெபாசிட் செய்ய வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில், ரூ.2.50 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு கணக்கு கேட்கப்படும், அதற்கு முறையான பதில் அளிக்காவிட்டால் அபராதத்துடன் 200 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது.

இதற்கு ஏற்றார்போல் வருமான வரி சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்கான சட்ட திருத்த மசோதவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி மக்களவையில் நேற்று தாக்கல் செய்தார். இதில்கணக்கில் வராத பணத்தை வங்கியில் டெபாசிட் செய்தவர்களுக்கு 30 சதவீத வரியும், அபராதமாக 10 சதவீதமும், வரிக்கு கூடுதல்  வரியாக 33 சதவீதம் அதாவது 10 சதவீதம் என மொத்தம் 50 சதவீதம் வரி விதிக்கப்படும். இதில் கூடுதல் வரியாக பிடிக்கப்படும் தொகை, ‘கரிப் கல்யாண் ‘ எனப்படும் ஏழை மக்களுக்கான நல்வாழ்வு நிதிக்காக ஒதுக்கப்படும்.

முன்னதாக, கருப்பு பணத்தை தாங்களாக தெரிவிப்பதற்கு கடந்த செப்டம்பர் 30ம் தேதி வரை அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. அதை பயன்படுத்தி, கருப்பு பணத்தை தெரிவித்தவர்களுக்கு 45 சதவீத வரி விதிக்கப்பட்டது. அந்த வாய்ப்பை பயன்படுத்தாமல் விட்டவர்களுக்கு மற்றொரு வாய்ப்பு தற்போதும் வழங்கப்பட்டுள்ளது. இதை மீறி, கருப்பு பணத்தை மறைத்து வருமான வரி சோதனையில் சிக்கினால் 85 சதவீத வரி விதிக்கப்படும் என சட்ட திருத்தத்தில் முக்கிய அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது. வருமான வரி சோதனை சிக்கினால், அந்த தொகைக்கு 60 சதவீத வரியும், கூடுதல் கட்டணமாக வரியில் 25 சதவீதம், அதாவது 15 சதவீதம் வரியும் விதிக்கப்படும். 

இதுதவிர, 10 சதவீத அபாரதத்தை சம்மந்தப்பட்ட வருமான வரித்துறை அதிகாரிகள் முடிவு செய்வார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இது, வரியை குறைப்பதற்காக வருமானத்தை குறைத்து காட்டியவர்களுக்கு மட்டுமே பொருந்தும். மொத்தமாக வருமானத்தை மறைத்திருந்தால், 200 சதவீத வரி விதிக்கப்படும் என சட்ட திருத்தத்தில் கூறப்பட்டுள்ளது.

இதுதவிர, கணக்கில் கட்டாத பணத்தில் 25 சதவீதத்தை வறுமை ஒழிப்பு திட்டத்தில் டெபாசிட் செய்ய வேண்டும். அதற்கு எந்த வட்டியும் வழங்கப்பட மாட்டாது. மேலும், 4 ஆண்டுகளுக்கு டெபாசிட் பணத்தை எடுக்கவும் முடியாது. இந்த பணம் நாட்டின் பல்வேறு பகுதிகளில் சாலை, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதி திட்ட பணிகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த மசோதாவுக்கு கடந்த வாரம் பிரதமர் மோடி தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

‘வருவாய் ஆதாரம் கேட்க மாட்டோம்’

வருமான வரி சட்ட திருத்த மசோதா குறித்து வருவாய் செயலாளர் ஹஸ்முக் ஆதியா கூறுகையில், ‘கருப்பு பண பதுக்கலை தடுப்பதற்கு இத்தகைய நடவடிக்கை அவசியமாகிறது. பிரதான் மந்திரி கரிப் கல்யாண் யோஜனா திட்டத்தின் கீழ் டெபாசிட் செய்யப்படும் பணத்துக்கு எந்த வருவாய் ஆதாரமும் கேட்கப்படாது. மேலும், சொத்து, சிவில் வரி உள்ளிட்ட வரி ஆதாயங்கள் பெறலாம். அதே நேரத்தில், அந்நிய செலாவணி சட்டம், சட்டவிரோத பண பரிவர்த்தனை தடுப்பு சட்டம், கருப்பு பணம் தடுப்பு சட்ட நடவடிக்கையிலிருந்து தப்ப முடியாது. நவம்பர் 10ம் தேதிக்கு பிறகு கரிப் கல்யாண் திட்டத்தில் டெபாசிட் செய்யப்படும் பணம் கணக்கில் கொள்ளப்படும். இதற்கான கடைசி தேதி, மசோதா தாக்கல் செய்யப்பட்ட பிறகு அறிவிக்கப்படும். தோராயமாக இது டிசம்பர் 30ம் தேதியாக இருக்கலாம்’ என்றார்.

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வங்கி கணக்கில் செலுத்தப்படும் தமிழக அரசு முடிவு

சென்னை,அரசு ஊழியர்களுக்கான மாத சம்பள தொகையையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையையும் வழக்கம் போல வங்கி கணக்கில் செலுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

பண கட்டுப்பாடு 

தமிழகத்தில் 14 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், உள்ளாட்சி அமைப்பு ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். 1 லட்சம் தொகுப்பூதியதாரர்களும், 7 லட்சம் ஓய்வூதியதாரர்களும் உள்ளனர். இவர்களுடைய வங்கி கணக்கில் மாதந்தோறும் 30-ந்தேதி பணம் செலுத்தப்பட்டு வருகிறது.

அதேபோன்று இந்த மாதமும் வங்கி கணக்கில் பணம் செலுத்துவதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளது. அன்றைய தினமே அவர்கள் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.

இதுகுறித்து என்.ஜி.ஓ. சங்க தலைவர் சண்முகராஜாவிடம் கேட்டபோது, அவர் கூறியதாவது:-

வங்கி கணக்கு மூலம் அரசு ஊழியர்களுக்கு சம்பள தொகையும், ஓய்வூதியதாரர்களுக்கு பென்சன் தொகையும் வழக்கம் போல் வங்கி கணக்கு மூலம் 30-ந்தேதி வழங்கப்பட உள்ளது.

வங்கிகளில் ஒரு வாரத்துக்கு 24 ஆயிரம் ரூபாய் மட்டுமே பணம் எடுக்க முடியும் என்று கட்டுப்பாடு உள்ளது. இதனை தளர்த்தினால் மட்டுமே ஒட்டுமொத்த தொகையையும் எடுக்க முடியும்.

ரிசர்வ் வங்கிக்கு கோரிக்கை

அரசு ஊழியர்கள் மாத தொடக்கத்தில் வீட்டு வாடகை, மளிகை செலவு, பால் செலவு போன்ற குடும்ப செலவுகளை மேற்கொள்ள வேண்டி உள்ளது. எனவே அரசு ஊழியர்களுக்கு ஒட்டுமொத்த சம்பளத் தொகையையும் ரிசர்வ் வங்கி வழங்க அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார். 

வங்கிக்குச் செல்வதற்காக வரும் சனிக்கிழமை (03.12.16) சி.ஆர்.சி., பயிற்சி ஒத்திவைக்கப்பட ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தற்போது 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து நிலவும் வங்கி நடைமுறைகளால் பணம் எடுப்பதில் சிரமங்கள் நிலவி வருகிறது. மேலும் ஆண்டு இறுதியாக உள்ளதால் விடுமுறை இல்லாத நிலையில், ஆசிரியர்கள் வங்கிக்கு பணம் எடுக்கச் செல்ல இயலாத நிலையும் ஏற்பட்டுள்ளது. 

எனவே நவம்பர் மாத ஊதியத்தை வங்கிக்குச் சென்று எடுக்க வசதியாக வரும் சனிக்கிழமை (03.12.16) நடைபெற உள்ள குறுவளமைய அளவிலான பயிற்சியினை ஒத்திவைத்து வேறொரு நாளில் நடத்திட அரசு ஆவன செய்ய வேண்டும் என ஆசிரியர்கள் எதிர்பார்க்கின்றனர். தொடக்க கல்வி துறையும், அனைவருக்கும் கல்வி இயக்கமும் ஆசிரியர்களின் இந்த எதிர்பார்ப்பினை நிறைவேற்ற ஆவன செய்வார்கள் என்ற நம்பிக்கையில் ஆசிரியர்கள்.

பணம் இல்லா பாிவா்த்தனையின் பலன்கள் இதோ:-*(ஸ்வைப் மிஷின்,நெட் பாங்கிங்,போன் முலம் பணப் பாிவா்தனைகள்)...

*1.ஆள் கடத்தல் இருக்காது;
மணல் கடத்தல் இருக்காது; பெரிய தொகையாக காகித பணம் இனி யார் கையிலும் இருக்காது*

*2. அரிசி கடத்தல் இருக்காது*....

*3. கஞ்சா அபின் கடத்தல் இருக்காது.....*

*4. தீவிரவாதிகளுக்கு பணம் சப்ளை இருக்காது.......?*

*5. அரசியல்வாதிகளுக்கு அல்லக்கை இருக்காது....*

*6. கருப்பு பணத்தில் அரசியல் மாநாடு இருக்காது....*

*7.காசுக்காக மத மாற்றம் இருக்காது......*

*8. தினம் தினம் காசு கொடுத்து அரசியல் கட்சி போராட்டங்கள் இருக்காது!......*

*9. கந்து வட்டி இருக்காது.

*10. ரியல் எஸ்டேட் ஏமாற்று புரோக்கர்கள் இருக்காது....*

*11. அரசு அதிகாரிகள் லஞ்சம் இருக்காது....*

*12. ஹவாலா பண பரிமாற்றம் இருக்காது....*

*13. பணத்திற்கு அரசு அதிகாரிகள் வளைய மாட்டார்கள்.....*

*14. நிலத்தின் அரசு கைடுலைன் வேல்யூஸ் ஒன்று மார்கெட் விலை ஒன்று என இருக்காது....*

*15. ஒரு பிளாட் விலை 1 கோடி 50 லட்சம் என இருக்காது...*

*16.ரியல் எஸ்டேட் விலை கன்னாபின்ன என இருக்காது......*

*18. மீட்டர் வட்டி, கந்து வட்டி கொடுமை என தற்கொலை இருக்காது....*

*19. இனி கருப்பு பணத்தை வைத்து வெட்டி அரசியல் இருக்காது.....*

*20. பணக்காரங்க  - ஏழை வித்தியாசம் இருக்காது....*

*21. வரவு செலவை பொய்யாக கணக்கு காட்டும் ஆடிட்டர் தொழிலே இருக்காது. எல்லாம் ஆன் லைனில் வருமான வரி கண்காணிப்பாளர் இருப்பர்...*

*23. இனி அனைவருக்கும் வீடு சாத்தியமாகும்....*

*24. அரசியல் கட்சிக்கு வாழ்க கோஷமிடும் தொண்டர் படையே இருக்காது.....*

*25. புனித அரசியலுக்கு பணதிற்காக வராமல் உண்மையான தேச அபிவிருத்திக்கு பணியாற்ற வருபவர்களுக்கு வழி பிறக்கும்.....*

*26. பொருளாதார குற்றங்கள் இருக்காது.....*

*27. காவல் நிலையத்தில் திருட்டு வழிப்பறி குற்றங்கள் இருக்காது.....*

*28. செயற்கையாக விலையேற்றம் செய்யும் பதுக்கல்கார்ர்கள் இருக்க மாட்டார்கள்......*

*29. கன்டெய்னர் பணம் கடத்தல் இருக்காது.அதை பிடிக்க தேர்தல் பறக்கும் படையும் இருக்காது.....*

*30. பணத்திற்காக நாட்டை ஆளும் கேவல அரசியல்வாதிகள் இனி இருக்க மாட்டார்கள்....*
* அவர்களால் ஓட்டுக்கு பணம் வழங்க முடியாது*......

*31. பள்ளியில் கட்டணங்கள் இனி டொனேசனாக லட்சம் லட்சமாக கருப்புப் பணம் வாங்க முடியாது....*

*32. கல்வி கட்டணம் குறையும்.எல்லாம் வங்கி மூலமே பீஸ் கட்ட வேண்டும்.....*

*33.கருப்பு பணத்தில் கோடிகளுக்கு விற்கப்படும் மெடிக்கல் மற்றும் இன்ஞ்சினியர் படிப்பு சீட்டுகள் இனி அரசு விலையில் ஏழைக்கு படிக்க வாய்ப்பு கிடைக்கும்.....*

*34. தனியார் மருத்துவமனைகளில் தற்போது டாக்டர்கள் வாயில் வருவதுதான் பில். இனி இது மாறும்.....*

*35. இனி யார் கைகளிலும் பெரிய தொகையாக பணம் பணம் என இருக்காது.இனி அனைத்தும் வங்கி பரிமாற்றம் மூலமே அரசு அனுமதி அளிக்க இருக்கிறது......*

*36. சாமானிய மக்கள் இதை வரவேற்க வங்கியியல் வரிசையில் நிற்கிறார்கள் இது தேச வளர்ச்சியின் நல்ல அறிகுறி!......*

*37. பணக்காரன் வங்கிக்குள் நுழைய முடியவில்லை .மக்களின் கூட்டம் முன் வரிசையில் நிற்க அரசியல்வாதிக்கு கர்வம் தடுக்கிறது.*

*இன்னும் 45 நாட்களில் அவர்கள் கருப்பு பணம் *காலி*

*38. இனி உள்ளாட்சி தேர்தலில் இவ்வளவு போட்டி இருக்காது....*

*39. அரசு பதவிக்கும் புரமோசனுக்கும் விலை விலை அல்ல.தகுதி மட்டுமே.....*

*40. அரசு மருத்துவமனை,அரசுப்பள்ளிகள் வஞ்சகமின்றி சிறப்பாக செயல் படும்....*

*41. வெட்டியாக பேசி கொண்டிருந்தவர் வேலை தேடியாக வேண்டும்....*

*42. வீட்டுக்கு வாடகை குறையும்.....*

*43. திருமண மண்டபத்தில் வாடகையாக கருப்புப் பணத்தை லட்சக் கணக்கில் வசூலிக்க முடியாது.....*

*44. இயற்கை விவசாயிக்கும் உண்மையான விலை கிடைக்கும்.....*

*45. ரேசன் கடையில் ஏழைக்கு குடும்பத்துக்கு ஒதுக்கப்பட்ட பொருள் கள்ள சந்தையில் விற்க முடியாது....*

*46 இனி அரசியல் சாக்கடை புனிதமாகும்....*

*47. அனைத்து நிலங்களும் அரசு நிர்ணயம் செய்த விலைக்கு மக்களுக்கு கிடைக்கும்....*

*48. இரண்டு பில் புக் இருக்காது*.

*49. அரசியல் ஒரு சாக்கடை என ஒதுங்கிய நல்லவர்கள் இனி அரசியலுக்கு வந்து மக்களுக்காக சேவையாற்றும் வாய்ப்பு வந்துள்ளது.....*

50.பாக்கிஸ்தான்,சீனாவின் கூலிப்படைகள் இந்தியாவுக்கு எதிராக இருக்காது.

51. *DD , செக் , டெபிட் கார்டு , கிரெடிட் கார்டு Neft / RTGS என லட்சம்  எல்லாம் வங்கிகள் பரிவர்த்தனைகளின் மூலம் மட்டுமே இருக்கும்.

52.நமக்கு பணமாக பாக்கட் மணி மட்டுமே குறைந்த அளவு வழங்கப்படும்.*

53.*மக்களின் ஒவ்வொரு பண பரிவர்தனையும் வருமான வரி துறையின் கண்காப்பு வளையத்திலிருந்து தப்பாது*.....

54.*தேர்தலில் நிற்க சொத்து கணக்கு காட்டிய அரசியல்வாதிகள் அத்தனையும் பினாமி பெயரில் வைத்து விட்டு எனக்கு சொந்தமாக கார் இல்லை.வீடு இல்லை. தோட்டம் இல்லை.என் பெயரில் எதுவுமே இல்லை என கப்சா விட்ட அரசியல்வாதியும் அவர்களின் அறக் கட்டளையும் இனி காலி....*

இன்னும் நாம் அறியாத மேலும் பல பல நண்மைகள்..😀😀😀

பணமில்லா முதல் இந்திய மாநிலமாகிறது கோவா!!


டிசம்பர் 31 ம் தேதி முதல், இந்தியாவில் பணமில்லா முதல் மாநிலமாக கோவா மாற உள்ளது. டிசம்பர் 31 ம் தேதியிலிருந்து கோவா மக்கள் அனைவரும் காய்கறி, மீன், இறைச்சி உள்ளிட்ட அன்றாட தேவைக்கான அனைத்து பொருட்களையும் தங்களின் மொபைல் போனை பயன்படுத்தியே 
வாங்க உள்ளனர்பணமில்லா கோவா :

கோவா மக்கள் இனி பொருட்கள் வாங்க புறப்படும் போது பணம் வைக்கும் பர்ஸ் எடுத்துச் செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இதனால் பிக்பாக்கெட் பயமும் இல்லாமல் போக உள்ளது. மொபைல் மூலமே பணபரிமாற்றம் அனைத்தும் செய்யப்பட உள்ளது. மொபைல் போனை பயன்படுத்தி ஒருவர் வாங்கும் பொருளுக்கான பணம், அவரது வங்கிக் கணக்கில் இருந்து எடுத்துக் கொள்ளப்படும் என கோவா தலைமை செயலாளர் ஆர்.கே.ஸ்ரீவட்சவா தெரிவித்துள்ளார்.


மொபைலில் வியாபாரம் :

ஏடிஎம்., மற்றும் கிரெட் கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்கும், பொருட்களும் வாங்கும் முறையும் நடைமுறையில் இருக்கும். அதேசமயம் ஒருவரிடம் ஸ்மார்ட்போன் இல்லை என்றாலும், சாதாரண மொபைல் போனில் * 99# என்ற எண்ணிற்கு டயல் செய்தால் பணம் பரிமாற்றம் ஆகி விடும். சிறு வியாபாரிகளும், தங்களிடம் ஸ்வைப்மிஷின் இல்லை என்றாலும் இந்த முறையில், தாங்கள் விற்கும் பொருளுக்கான பணம் அவரின் வங்கிக்கணக்கிற்கு வந்து விடும்.


மக்களிடம் விழிப்புணர்வு :

பணமில்லா பணபரிவர்த்தனை செய்வது எப்படி என்பது குறித்த விழிப்புணர்வு சிறு வியாபாரிகள், கடைக்காரர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதே சமயம் நேரடியாக பணம் கொடுத்து வியாபாரம் செய்யும் நடைமுறையும் வழக்கத்தில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமில்லா பணவர்த்தனைக்கு எந்த கட்டுப்பாடும்

இல்லை எனவும், மொபைல் மூலம் நடக்கும் பணபரிவர்த்தனைக்கு எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது எனவும் கோவா முதல்வர் லட்சுமிகாந்த் பர்சேகர் தெரிவித்துள்ளார்.


பிரதமரின் கனவுக்கு துணை நிற்போம் :

இதுதொடர்பாக நடந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய மத்திய அமைச்சர் மனோகர் பாரிக்கர், இந்தியாவை முற்றிலுமாக பணமில்லா நாடாக மாற்றுவது பிரதமர் மோடியின் கனவு. இதில் முன்னோடியாக கோவா திகழ உள்ளது. நாம் பிரதமரின் கனவுக்கு துணைநின்று, ஆதரவு அளிக்க வேண்டும் என்றார். இம்முறையின்படி ஒருவர் தனது மொபைலையே வங்கியாக பயன்படுத்தலாம். ஒருவர் தனது மொபைல் போன் எண்ணை மத்திய அரசின் கீழ் உள்ள வங்கி ஒன்றில் பதிவு செய்து விட்டால், அனைத்து விதமான பணபரிமாற்றத்தையும் அதனை பயன்படுத்தி செய்யலாம்.