காமராஜர் பற்றிய கவிதைகள் - கல்வி வளர்ச்சி நாள் பாடல் வரிகள் !
மெட்டு: கருப்பு நிலா நீதான் கலங்குவதேன்...
கருப்பு நிலா..... கருப்பு நிலா....
கருப்பு நிலா நீதான் மறைந்தது ஏன்...
பகலவனாய் மனதில் நிறைந்தது ஏன்...
கல்விக் கண்ணைத் திறந்து வைத்து அறியாமையை அகற்றிவிட்டாய்..
ஏழைக் குடும்பங்கள் வாழ்வினிலே ஒளி விளக்கை ஏற்றி வைத்தாய்...
எட்டு திசையாவும் மக்கள் நலன் காத்த காமராசர் நீதானே...
சரணம் - 1
விருதுப்பட்டி நகரினிலே தமிழ்மகனாய் பிறந்தாயே...
நாட்டு மக்கள் மனதில் என்றும் தலைமகனாய் வாழ்ந்தாயே...
மாநிலத்தின் வளர்ச்சிக்கு உறங்காமல் உழைத்தாயே...
நானிலமே போற்றும் வகையில் திட்டங்களை விதைத்தாயே...
வானம் உள்ள காலம் ...வரலாறும் உனைக் கூறும் நேர்மையின் முழு தேகமே உனை நாளும் மறவோமே..
(கருப்பு நிலா...)
சரணம் - 2
தொழிற்துறையில் மாற்றம் தந்து புரட்சிகளைச் செய்தாயே...
எழிற்கொஞ்சும் அணைகள் தந்து வளம் கொழிக்கச் செய்தாயே...
பட்டி தொட்டி எங்கெங்கும் பள்ளிகளைத் திறந்தாயே...
பசியுமின்றி பாடம் கற்க மதிய உணவும் தந்தாயே...
வானம் உள்ள காலம் ... வரலாறும் உனைக் கூறும்..
ஏழையின் பங்காளனே உனை நாளும் மறவோமே... கருப்பு நிலா..)
என்றும் அன்புடன்.... இரா. சக்திவேல், இ.நி.ஆசிரியர், ஊ.ஒ.ந.பள்ளி, நாதன்கோவில். கும்பகோணம்
இதையும் படிங்க :
பள்ளி மாணவர்களுக்காக - காமராஜர் முழு திரைப்படம் - KAMARAJAR FULL HD MOVIE DOWNLOAD Link
- காமராஜர் வாழ்க்கை வரலாறு
- காமராஜர் கவிதைகள்
காமராஜர் நூற்றாண்டு விழா கவிதை
காமராஜர் பிறந்த நாளை முன்னிட்டு ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கூற சில தகவல்கள் !
காமராஜரைப் பற்றிய 111 அரிய தகவல்கள் !
நான் விரும்பும் தலைவர் காமராசர்
காமராஜர் பற்றிய கவிதைகள் - கல்வி வளர்ச்சி நாள் பாடல் வரிகள் !
கல்விக்கண் கொடுத்தவர் காமராஜர்
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Sujith
ReplyDeletePost a Comment