தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் ரோபோடிக்ஸ் ஆய்வகம் திறப்பு : கணிதம், அறிவியலை ரோபோ கற்று தரும்


தமிழகத்தில் முதல்முறையாக மதுரை மாநகராட்சி பள்ளியில் மாணவர்களுக்கு அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் கற்றுத்தரும் ரோபோடிக்ஸ் ஆய்வகம் நேற்று திறக்கப்பட்டது. இன்றைய நவீன விஞ்ஞான யுகத்தில்,  ரோபோக்களின் பயன்பாடு வளர்ந்து கொண்டே வருகிறது.


 வீடு முதல் தொழிற்சாலை வரை  இவை பயன்படுத்தப்படுகின்றன. பளுவான பொருட்களை கையாளுதல், மனிதன்  செய்ய வேண்டிய பல கடினமான வேலைகளையும் ரோபோக்கள் செய்து வருகிறது.


மாறி வரும் தொழில்நுட்பத்தை அறிந்து கொள்ளும் வகையில் நவீன ரோபோட்டிக்ஸ் ஆய்வகம் தமிழகத்தில் உள்ள  அரசுப்பள்ளிகளிலேயே முதல்முறையாக மதுரை மாநகராட்சி திருவிக மேல்நிலைப்பள்ளியில் நேற்று துவக்கப்பட்டுள்ளது.


 மதுரை மாநகராட்சியுடன், அமெரிக்கன் இந்தியா நிறுவனம் இணைந்து ரூ.13.50 லட்சம் செலவில் இந்த ஆய்வகத்தை அமைத்துள்ளது. இதனை மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் நேற்று துவக்கி வைத்தார்.

10 ரோபோக்கள் மற்றும் இவற்றை கட்டளையிட்டு இயக்கக்கூடிய வகையில் 10 லேப்டாப்கள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன்  ஆய்வகம் அமைக்கப்பட்டுள்ளது.


 இந்த ஆய்வகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ரோபோ மூலம் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் தொடர்பான பயிற்சிகள் எளிதில் வழங்கப்படும். இதற்காக ரோபோட்டிக்ஸ் துறையில் கைதேர்ந்த ஆசிரியை ரம்யா நியமிக்கப்பட்டுள்ளார்.


 இந்த ரோபோக்கள் ஒரு கணித வரைபடம் 20 ஆண்டுகளுக்கு பிறகு எந்த வடிவில்  வரையப்படும் என்பது உள்ளிட்ட அதிசய தகவல்களை தந்து விடுகிறது. இந்நிகழ்ச்சியில்  உதவி கமிஷனர் (பொ) முருகேசபாண்டியன், சுகாதார அலுவலர் விஜயகுமார், பள்ளி தலைமை ஆசிரியர் எஸ்தர் அம்மா ஆலிவ் உள்பட பலர் பங்கேற்றனர்.


அமெரிக்கன் இந்தியா நிறுவன மாநில திட்ட மேலாளர் பாஸ்கரன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சர்மிளா கூறும்போது, ‘‘ஒவ்வொரு ரோபோவும் 10 வேறுபட்ட ஆய்வுச்சோதனைகளை கற்றுத்தரும்.


அந்த வகையில் 100 மாணவர்களுக்கு ஒரே நேரத்தில் அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் கணிதம் சார்ந்த கல்வியை கற்றுத்தர முடியும்’’ என்றனர்.


 மாநகராட்சி கமிஷனர் அனீஷ்சேகர் கூறும்போது, ‘‘மதுரையின் மற்ற 13 மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு ஒவ்வொரு சனிக்கிழமையும் இப்பள்ளியில் பயிற்சிகள் வழங்கப்பட இருக்கிறது.


அடுத்த கல்வியாண்டு முதல் படிப்படியாக அனைத்து மாநகராட்சி பள்ளிகளிலும் நவீன தொழில்நுட்ப ரோபோடிக்ஸ் ஆய்வகம் ஏற்படுத்தப்படும்.


 ரோபோ மூலம் படிப்பதால் மாணவர்களுக்கு ஒரு ஆர்வமும், மகிழ்ச்சியும், ஈடுபாடும் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே மாணவர்களுக்கான இந்த நவீன அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணிதம் கற்றுத்தரும் ரோபோடிக்ஸ் ஆய்வகம் பயனுள்ளதாக அமையும்’’ என்றார்.

டைப் செய்தால் போதும் வரைபடம் வரைய கற்கலாம்


மாநகராட்சி கல்வி அலுவலர் (பொ) ராஜேந்திரன் கூறும்போது, ‘‘லேப்டாப் மூலம் ரோபோவுக்கு  கட்டளையிட வேண்டும். உடனே அதை புரிந்து கொண்டு ரோபோக்கள் இயங்கும்.


 உதாரணமாக ஒரு வரைபடத்திற்குரிய பெயரை டைப் செய்து கட்டளையிட்டால், அந்த  வரைபடம் எந்த வடிவத்தில் இருக்கும். அதை எப்படி வரையலாம். எவ்வளவு மணி  நேரத்தில் வரைந்து முடிக்க முடியும் உள்ளிட்ட பல்வேறு விபரங்களை ரோபோக்கள்  செய்யும்’’ என்றார்.

IT Calculator 2019 - 95% Fully Automatic Calculator updated! ( New Version 2.0.6 )


Income Tax Form And Software  

IT Calculator 2019 - 95% Fully Automatic Calculator ( Version 2.0.6 ) -  Click here
Features :
1. No needs any link such as Macros
2. Easy access with  Smart Phone
3. No needs any Desktop/Laptop
4. Fixed small bugs .


Thank you sir.

By,

M.TAMILARASAN
Computer Instructor,
Govt Hr Sec School,
Keelakkurichi 622 101.
Pudukkottai -Dt

வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றம் : அமைச்சர் செங்கோட்டையன்
வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார்.
 இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளிக்கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது என்றும், மாணவர்களுக்கு தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை செய்து வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். 

அனுமதியின்றி இயங்கும் பெண்கள், குழந்தைகள் விடுதிக்கு தடை: ஐகோர்ட் கிளை உத்தரவு!மார்ச் 1-க்குள் அனுமதியின்றி இயங்கும் விடுதிகளை முறைப்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு உயநீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் மார்ச் 1 -முதல் அனுமதியின்றி பெண்கள், குழந்தைகள் விடுதிகள் இயங்கக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்கிறது; அமைச்சர் செங்கோட்டையன்


வேலைவாய்ப்புக்கு உத்தரவாதம் அளிக்கும் வகையில் பாடத்திட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பேட்டியளித்தார்.

இந்தியாவே திரும்பி பார்க்கும் வகையில் பள்ளி கல்வித்துறையில் தமிழகம் முன்னோடியாக திகழ்வதாக பெருமையுடன் தெரிவித்தார். மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஏற்படுத்தும் நோக்கில் அரசு பல முயற்சிகளை எடுத்து வருவதாகவும் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

பள்ளி கல்வித்துறையில் நடைபெற்ற லஞ்ச ஒழிப்பு சோதனை பற்றிய கேள்விக்கு கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார். யார் தவறு செய்தாலும் அரசு நடவடிக்கை எடுக்கும் என்று அமைச்சர் செங்கோட்டையன் உறுதியுடன் தெரிவித்தார். ஆசிரியர் பயிற்சி தகுதி தேர்வு முறைகேடு குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது என்றும், புதிய பாடத்திட்டத்தில் என்னென்ன பாடங்கள் என்பது குறித்து ஆலோசனை நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.

கல்வியாளர்கள், ஆசிரியர்கள் தங்கள் கருத்துகளை ஆலோசனைகளை வழங்கலாம் என்று அமைச்சர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு குழு அனுப்பி கல்வி முறை பற்றி அறியப்பட்டு வருவதாகவும் கற்றல் மட்டுமின்றி, செயல்முறை பாடங்களை அதிகளவில் அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செங்கேட்டையன் தெரிவித்தார்.

பணிக்கு வராத 2710 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை


இன்று பள்ளிக்கு வராத 2,000 -க்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு 17பி வழங்க தொடக்கக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
535 ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வராத 2,810 ஆசிரியர்கள் மீது 17 பி -ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விளக்கக் கடிதம் கொடுக்கும் ஆசிரியர்கள் ஏற்கனவே பணியாற்றிய பள்ளியில் பணியின் தொடர முடியாது என்று தெரிவித்துள்ளனர்.

தற்காலிக ஆசிரியராக யாரையும் நியமிக்கவில்லை: அரசு ஏமாற்றி விட்டதாக விண்ணப்பதாரர்கள் குமுறல்


போராட்டத்தில் ஈடுபட்டு பணிக்கு வராத ஆசிரியர்களை மிரட்டி பணியவைப்பதற்காகவே தற்காலிக ஆசிரியர் நியமன அறிவிப்பை வெளியிட்டு தங்களை ஏமாற்றிவிட்டதாக பணிக்கு விண்ணப்பித்தவர்கள் அரசுக்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
வேலைநிறுத்தத்தில் ஈடுபட ஆசிரியர்களுக்கு மாற்றாக தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க அரசு அறிவிப்பை வெளியிட்டிருந்தது.


மாதம் ரூ.10,000 சம்பளம் வழங்கப்படும் என்று அரசு கூறியதால் ஆயிரக்காணோர் தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்திருந்தனர். ஆனாலும் தற்காலிக ஆசிரியர்கள் ஒருவர் கூட நியமிக்கப்படவில்லை. ஏற்கனவே வேலையின்றி தாங்கள் சிரமப்பட்டு வரும் நிலையில் அரசு வேலை தருவதாக கூறி ஏமாற்றுவது அரசுக்கு அழகல்ல என்று தற்காலிக ஆசிரியர் பணிக்கு விண்ணப்பித்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு இணையதளத்தில் வெளியீடு!


பிளஸ் 1, பிளஸ் 2 வினாத்தாள் வடிவமைப்பு அரசு தேர்வுகள் இயக்ககத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள வினாத்தாள் வடிவமைப்பை பதிவிறக்கம் செய்து மாணவர், ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் தர வேண்டும் என கூறப்பட்டுள்ளது. மேலும் மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் நடைமுறை அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு வரும் என தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய ரயில்வேயில் 14 ஆயிரத்து 33 பணியிடங்களுக்கு விண்ணபிக்க இன்றே கடைசி


இந்திய அரசின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள 14 ஆயிரத்து 33 இளநிலை பொறியாளர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி.

இதுவரை விண்ணப்பிக்க மறந்தவர்கள் இன்று இரவு 11.59க்குள் விண்ணப்பித்து பயனடையுங்கள்.

மொத்த காலியிடங்கள்: 14,033

பதவி: இளநிலை பொறியாளர்(JE) - 13,034,
பதவி: இளநிலை பொறியாளர் (JE-IT) - 49
பதவி: இளநிலை பொறியாளர் (DMS) - 456
பதவி: கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் (CMA) - 494

தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், சிவில், பிரிண்டிங் டெக்னாலஜி மற்றும் அதனதன் துறை சார்ந்த துறைகளில் டிப்ளமோ அல்லது இளங்கலை பட்டம் பெற்றிருப்பவர்கள் இளநிலை பொறியாளர் பணியிடங்களுக்கும், இயற்பியல், வேதியியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் கெமிக்கல் - மெட்டலர்ஜிகல் அசிஸ்டெண்ட் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

சம்பளம்: முதற்கட்ட சம்பளம் மாதம் ரூ.35,400 + இதர ஊதியம் வழங்கப்படும்

வயதுவரம்பு: 01.01.2019 தேதியின்படி 18 முதல் 33 வயதிற்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி வயதுவரம்பில் தளர்வு வழங்கப்படும்.

தேர்வு கட்டணம்: பொதுப்பிரிவினர் கட்டணமாக ரூ.500, மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.250 கட்டணமாக செலுத்த வேண்டும். முதற்கட்ட எழுதிய பின்பு பொதுப்பிரிவு விண்ணப்பதாரர்கள் ரூ.400 திரும்ப பெற்றுக்கொள்ளலாம் மற்ற விண்ணப்பத்தாரர்கள் ரூ.250 திரும்ப பெற்றுக்கொள்ளலாம். முழுமையாக விண்ணப்பம் பூர்த்தி செய்யாத மற்றும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் செலுத்திய தேர்வுக்கான கட்டணத்தை திரும்பப் பெற முடியாது.

தேர்வு செய்யப்படும் முறை: கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு, மருத்துவ பரிசோதனைகள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: www.rrbchennai.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

முதற்கட்ட கணினி வழித் தேர்வு நடைபெறும் தேதி: ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறலாம்.

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://www.rrcb.gov.in அல்லது http://www.rrbchennai.gov.in/downloads/cen03-2018-notice-30-12-2018.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: இன்று 31.01.2019 இரவு 11.59 மணிக்குள் விண்ணப்பிக்கவும்.Flash News : 4 பள்ளிக்கல்வி இயக்குனர் மீது லஞ்ச வழக்கு பதிவு செய்ய உத்தரவு!!

பள்ளி கல்வி துறை அதிகாரிகள் ,ராமேசுவர முருகன் , அறிவொளி, லதா, சங்கீதா, சித்ரா, அமலன் ஆகியோர் மீது வழக்கு!!
பள்ளி கல்வி துறை இயக்குநர்கள் அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதி அரசு அனுமதி அளித்துள்ளது...
பள்ளி கல்வி துறை இயக்குநர்கள் அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதி அரசு அனுமதி அளித்துள்ளது.
உலகமெல்லாம் தமிழ் என்ற திட்டம் உள்ளிட்ட பல திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதற்கென செலவிடாமல் பல்வேறு வகைகளில் கையாடல் செய்த வழக்கில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அலுவலகம் மற்றும் அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை நடத்தியது. இந்த சோதனையில் முறைகேடு செய்ததற்கான முக்கிய  ஆவணங்களை கைப்பற்றினர்.

புதிய பாடத்திட்டத்தின் கீழ் வல்லுநர் குழு அமைத்து பாடத்திட்டம் தயாரிப்பதற்கான கூட்டம் முறையாக நடத்தாமலேயே, நடத்தியதாக போலி கணக்குகள் காட்டி பல லட்சம் கையாடல் செய்ததாகவும், அதேபோல், பள்ளி மாணவர்களுக்கான “தேன் சிட்டு” என்ற சிறுவர் மாத இதழுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.4 கோடி பணத்தை செலவழிப்பதில் முறைகேடு, “உலகமெல்லாம் தமிழ்” என்ற திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதியை அதற்கென செலவிடாமல் பல்வேறு வகைகளில் முறைகேடுகள் செய்தது, மலேசிய நாட்டு தமிழ் ஆசிரியர்களை நட்சத்திர ஓட்டலில் தங்க வைத்து அங்கேயே பயிற்சி அளித்தது, ‘எஜூசாட்’ ஒளிபரப்பு சாதனம் 2 கோடி ரூபாய்க்கு வாங்கியதில் கூடுதல் விலை கொடுத்து அரசுக்கு நஷ்டம் ஏற்படுத்தியது என பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.
புகாரின் அடிப்படையில், நேற்று முன்தினம் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் இயக்குநர் அறிவொளி மற்றும் கல்வி துறை அலுவலர்கள் மீது லஞ்ச ஒழிப்புத்துறை  வழக்கு பதிவு செய்தது. அதை தொடர்ந்து லஞ்ச ஒழிப்புத்துறை  டிஎஸ்பி தலைமையில் 10 போலீசார் நேற்று காலை 7 மணிக்கு கோபாலபுரத்தில் உள்ள இயக்குநர் அறிவொளி வீடு மற்றும் டிபிஐ வளாகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் அதிரடி சோதனை நடத்தினர்.இரண்டு இடங்களிலும் 6 மணி நேரம் நடந்த சோதனையில், போலி ஆவணங்கள் மூலம் பல கோடி மோசடி செய்ததற்கான ஆவணங்கள் மற்றும் அதற்கான போலி பில்களை லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கைப்பற்றினர்.

இந்த சோதனையின்போதே இயக்குநர் அறிவொளியிடம் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை வைத்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து இயக்குநர் அறிவொளி மற்றும் சம்பந்தப்பட்ட கல்வித்துறை அதிகாரிகளுக்கு சம்மன் அனுப்பி நேரில் அழைத்து விசாரணை நடத்தப்படும் என்று லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் பள்ளி கல்வி துறை இயக்குனர்கள் அறிவொளி, லதா மீது வழக்கு தொடர அரசு அனுமதி அரசு அனுமதி அளித்துள்ளது. மேலும் ராமேஸ்வர முருகன் பெற்ற லஞ்சப்பணத்தில் நகைக்கடை ஒன்றை நடத்தி வருவது விசாரணையில் அம்பலமாகியுள்ளது. அந்த நகைக்கடையிலும் விரைவில் சோதனை நடத்த அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதம்


வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட ஊழியர்கள் வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு முடிவு செய்துள்ளது. 

சூலூர் அருகே 2 ஆசிரியர்கள் இட மாற்றம்... ஆசிரியர்களின் இடமாற்றத்திற்கு மாணவர்கள் எதிர்ப்புஜாக்டோ-ஜியோ அமைப்பினர் போராட்டத்தை கைவிட்டு பள்ளிக்கு திரும்பிய நிலையில் ஆசிரியர்கள் பணியிட மற்றும் செய்யப்பட்டு வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோவை மாவட்டம் சூலூர் அருகே கண்ணம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆங்கில ஆசிரியர் சரவணக்குமார், கணித ஆசிரியர் தமிழ்ச்செல்வன் ஆகிய இருவரும் ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் கலந்து கொண்டு நேற்று காலை பணிக்கு திரும்பியுள்ளனர். இந்நிலையில் நேற்று இரவு அவர்களுக்கு பணியிட மாற்றம் வழங்கப்பட்டது. அதனை வாங்க இருவரும் பள்ளிக்கு வந்த போது மாணவர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

சுமார் 400-க்கும் மேற்பட்ட மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

"அங்கு படிக்கவில்லை... கற்றுக்கொள்கிறார்கள்" -பின்லாந்து சென்றுவந்த அரசுப் பள்ளி மாணவர்கள் கருத்துஅறிவியல், தொழில்நுட்பம், இலக்கியம் எனப் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து அயல்நாடுகளுக்கு கல்விச் சுற்றுலா அனுப்ப அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகிறது. முதல் கட்டமாக, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்கும் 50 அரசுப் பள்ளி மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, கடந்த 20 -ம் தேதி, பின்லாந்து மற்றும் சுவீடன் நாடுகளுக்கு அனுப்பியது. தம் கல்விச் சுற்றுலாவை முடித்து 30 -ம் தேதி தாயகம் திரும்பினர். அவர்களை வரவேற்கும் விதமாக சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நிகழ்ச்சி ஒன்றை பள்ளிக்கல்வித் துறை ஏற்பாடுசெய்திருந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், பின்லாந்து நாட்டின் பயோ அகாடமி சி.இ.ஓ, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை - அடுத்த கல்வியாண்டில் அறிமுகம்

மரம் வளர்க்கும் மாணவர்களுக்கு ஒவ்வொரு பாடத்துக்கும் 2 மதிப்பெண்கள் அளிக்கும் முறை வரும் கல்வியாண்டு முதல் அறிமுகப்படுத்த உள்ளதாகத் தமிழகப் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை தேனாம்பேட்டையில் ஆசிரியர்களுக்கான கருத்தரங்கு நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நாடு முழுவதும் பொறியியல் படிப்புப் படித்த 80 இலட்சம் பேர் வேலையில்லாமல் உள்ளதாகவும், தமிழகத்தில் ஒரு இலட்சத்து 68ஆயிரம் பேர் பொறியியல் படிப்பு முடித்துவிட்டு வேலையில்லாமல் உள்ளதாகவும் தெரிவித்தார்.
மரம் வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில், மரம் வளர்க்கும் மாணவருக்கு ஒரு பாடத்துக்கு 2 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 12 மதிப்பெண்கள் வழங்கும் முறையை அடுத்த கல்வியாண்டில் அறிமுகப்படுத்த உள்ளதாகவும் செங்கோட்டையன் தெரிவித்தார்

டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ள புதிய வேலைவாய்ப்பு செய்தி!

தமிழக அருங்காட்சியகத் துறையில்காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Curator
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.36700 -116200
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: விலங்கியல், தாவரவியல், புவியியல், மானுடவியல் அல்லது இந்திய தொல்லியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவை. எழுத்துத் தேர்வு தாள்- 1, தாள் -II என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு 70 மதிப்பெண்கள் என 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2019

புதுக்கோட்டை மாவட்டத்தில் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிப்பு!

புதுக்கோட்டையில் மேலும் 76 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார்.

 இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசுப் பள்ளிக்கு ரூ. 3 லட்சம் பொருட்களை சீர்வரிசையாக வழங்கிய பெற்றோர்கள்கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பீரோ, இருக்கைகள், மின் விசிறிகள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்களே இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக மேள தாளங்கள் முழங்க பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் உள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு 150 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.

மாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள் பீரோ, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினார்கள்.


பெற்றோர்கள் அளித்த அனைத்து பொருட்களும் ஊர் சமுதாய நல கூடத்திற்க்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.

தாய் மொழிக்கு முக்கியத்துவம் தரும் பின்லாந்து மாணவர்கள்

பின்லாந்து நாட்டில் தாய் மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது. அங்குள்ள பள்ளிகளில் ஆசிரியர்கள்- மாணவர்களிடையே நல்ல புரிந்துணர்வு உள்ளதாக அங்கு சுற்றுலா சென்றுவந்த தமிழக மாணவர்கள் பெருமிதத்துடன் குறிப்பிட்டனர்.தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 8-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் சிறந்து விளங்கிய 50 மாணவ, மாணவிகள் கடந்த 21-ஆம் தேதி பின்லாந்து, ஸ்வீடனுக்கு கல்விப் பயணம் மேற்கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை தமிழக பள்ளிக் கல்வித்துறை மேற்கொண்டது.
இந்நிலையில் பயணத்தை முடித்து திரும்பிய மாணவர்கள் தங்களது பயண அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளும் நிகழ்ச்சியில் சென்னை அண்ணா நூற்றாண்டு நூலக அரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது.

5 மற்றும் 8-ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு

5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த மத்திய அரசு உத்தரவு

திட்டத்தை அமல்படுத்துவது குறித்து அந்தந்த மாநில அரசுகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் எனவும் அறிவிப்பு.

இலவச மற்றும் கட்டாய கல்வி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து மத்திய அரசு அறிவித்தது.

அங்கன்வாடிகளில் இடைநிலை ஆசிரியர்களை நியமனம் செய்ய மீண்டும் இடைக்கால தடை - உயர் நீதிமன்றம் உத்தரவு !!

2009&TET போராட்டக்குழு ஆசிரியர்களுக்கு வழக்கு குறித்த நிலவரம்

இடைநிலை ஆசிரியர்களை ஆங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை எதிர்த்து நமது சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த விசாரணை இன்று 31.01.2019 நமது வழக்கறிஞர் சென்னை உயர்நீதிமன்ற ஆணையில் குறிப்பிட்டுள்ளபடி தடையை நீட்டிக்க வேண்டும் என வாதாடி தடையை பிப்ரவரி -11 வரை நீட்டித்துள்ளார்.

இவண்
ஜே.ராபர்ட்
2009&TET இடைநிலை ஆசிரியர்கள் போராட்டக்குழு

ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிப்பு

போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ நிர்வாகிகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டனர்.
        போராட்டத்தில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் தாஸ், தேனி, திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த நிர்வாகிகள் 178 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். நேற்று அவர்கள் நீதிமன்ற ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஒருங்கிணைப்பாளர் தாஸ், தங்களது கோரிக்கைகளை அரசு தாயுள்ளத்துடன் நிறைவேற்ற வேண்டும் என்றும் வழக்குகளை வாபஸ் பெறுவது குறித்து முதலமைச்சரை சந்தித்து பேச உள்ளதாகவும் தெரிவித்தார்

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை எதிர்த்து வழக்கு - இன்று 31.01.2019 விசாரணை

இடைநிலை ஆசிரியர்களை அங்கன்வாடி மையங்களுக்கு பணியிறக்கம் செய்வதை எதிர்த்து நமது சார்பாக மதுரை உயர்நீதிமன்றத்தில் தொடுத்த விசாரணை இன்று 31.01.2019 நமது வழக்கறிஞர் முயற்சியால் கொண்டுவரப்பட்டுள்ளது.

_(நேற்று விசாரணை பட்டியலில் இடம் பெற வேண்டும் வராத சூழ்நிலையில் நமது தரப்பில் முயற்சி மேற்கொள்ளப்பட்டது)_

சிறுபான்மை பள்ளிகள் அந்தஸ்து விவகாரம் : தமிழக அரசின் ஆணை ரத்து :சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு


ஐம்பது சதவீத சிறுபான்மையினர் மாணவர்களை சேர்க்கும் பள்ளிகளுக்கே சிறுபான்மை அந்தஸ்து வழங்கப்படும் என்ற தமிழக அரசின் அரசாணையை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சிறுபான்மை பள்ளிகளில் 50 சதவீத சிறுபான்மையின மாணவர்களை சேர்க்க வேண்டும்.


இந்த மாணவர் சேர்க்கை குறித்த விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் பள்ளிக்கல்வித்துறைக்கு அறிக்கையாக அளிக்க வேண்டும். இந்த விதிகளை கடைபிடிக்கவில்லை என்றால் சிறுபான்மை அந்தஸ்து கிடையாது என்று அரசாணை பிறப்பிக்கப்பட்டது.


இந்த அரசாணையை ரத்து செய்யக்கோரி பிரான்சிஸ்கன் மிஷினரீஸ் ஆப் மேரி கல்வி நிறுவனம் உள்பட 140 கல்வி நிறுவனங்களின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி டி.ராஜா முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில் மூத்த வக்கீல் சேவியர் அருள்ராஜ் ஆஜரானார். வழக்கை விசாரித்த நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.


அதில் கூறியிருப்பதாவது:


தமிழகம் முழுவதும் உள்ள 2,500 பள்ளிகளை நிர்வகிக்கும் இந்த அமைப்புகளின் சார்பில் ஆஜரான வக்கீல்,  சிறுபான்மை பள்ளிகள் துவங்குவதற்கும், நிர்வகிப்பதற்கும் வழங்கப்பட்ட உரிமையை தடுக்கும் வகையில் தமிழக அரசின் அரசாணை உள்ளதால் அந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று வாதிட்டுள்ளார்.


தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையச் சட்டத்தின்படி, சிறுபான்மை அந்தஸ்து தொடர்பாக உத்தரவு பிறப்பிக்க மாநில அரசுக்கு அதிகாரமில்லை. தேசிய சிறுபான்மை ஆணையம்தான் இதுபோன்ற உத்தரவை பிறப்பிக்க முடியும். எனவே, தமிழக அரசின் ஆணை ரத்து செய்யப்படுகிறது.


தகுதியான சிறுபான்மை மாணவர்களை சேர்த்துக் கொள்வதாக சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சார்பில் அளித்த உத்தரவாதத்தை, பள்ளிகள் மீறும்பட்சத்தில், மாநில அரசு, தேசிய சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் ஆணையத்திடம் புகார் தெரிவிக்கலாம்.இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

டிச. 22-30ல் நடந்த தேர்வுக்கு பிப்.6க்குள் உத்தேச விடை மீது ஆட்சேபனைகளை அனுப்பலாம் : டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு


டிஎன்பிஎஸ்சி நேற்று வெளியிட்ட அறிவிப்பு வருமாறு:

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வு வாரியம் சார்பில் 2018 பிப்ரவரி 17ம் தேதி நடந்த மருந்தாய்வக இளநிலை பகுப்பாய்வாளர் பணிக்கும், ஆகஸ்ட் 18ம் தேதி நடந்த சட்டத்துறை மொழிபெயர்ப்பாளர், டிசம்பர் 23ம் தேதி நடந்த கால்நடை பராமரிப்பு புள்ளியியல் ஆய்வாளர், டிசம்பர் 26ம் தேதி நடைபெற்ற உதவி நூலகர் பணிகளுக்கு பிப்ரவரி 7ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெற உள்ளது.


 அதே போல், 147 துறைத் தேர்வுகளை கடந்த டிசம்பர் 22, 30ல் எழுத்துத் தேர்வு முடிந்துள்ளது. இதற்கான அப்ஜெக்டிவ் டைப் தேர்வுகளின் உத்ததேச விடைகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.


 இதில் ஆட்சேபம் இருப்பின் பிப். 6ம் தேதி மாலை 5.45 மணிக்குள் contacttnpsc@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரி மூலம் அனுப்பலாம்

APPOINTMENT TO LKG, UKG ( ANGANWADI) VIOLATION OF NCTE REGULATIONS

அனைத்து இடைநிலை ஆசிரியர்களுக்கும் வணக்கம் !!


               இடைநிலை ஆசிரியர்களை கீழ்நிலைப் படுத்தி அங்கன்வாடி மையத்திற்கு உரிய கல்வி தகுதி இல்லாமல் ,புதிதாக ஆரம்பிக்க உள்ள  ANGANWADI LKG UKG வகுப்புகளுக்கு பாடம் நடத்த  பணிபுரிய ,பணிமாற்றம் செய்வது
 NCTE,NCERT,SCERT,விதிமுறைகளுக்கு மற்றும் இது தொடர்புடைய வழக்குகளில் மாண்புமிகு SUPREME COURT, HIGH COURT
வழங்கியுள்ள தீர்ப்புகளுக்கு எதிரானது என்பதை,
 உரிய அதிகாரிகளுக்கு அதாவது ( THE REGIONAL DIRECTOR (southern region) NCTE  New delhi )
மற்றும் மாநில தொடக்க கல்வி இயக்குநர் (THE DIRECTOR, ELEMENTARY EDUCATION ) அவர்களுக்கும் மேற்படி 156 பக்கங்களை இணைப்பாக கொண்ட ஆவண ஆதாரங்களுடன்
 எமது தமி்ழ்நாடு ஆசிரியர் மற்றும் பள்ளி  பாதுகாப்பு சங்கம்( TAMILNADU TEACHERS AND SCHOOL PROTECTION ASSOCIATION ) கடந்த 18-01-2019 தேதியன்று மின்னஞ்சல் மற்றும் பதிவு தபாலில் ஏற்கனவே விண்ணப்பம் சமர்பித்துள்ளோம்
( எங்களது விண்ணப்பத்தின் முழு சாராம்சங்களை அப்படியே எடுத்து கலையாசிரியர் நலச்சங்கம் தனது 24-01-2019 தேதிய கடிதத்தின் வாயிலாக சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளது
எங்களது கடிதத்தினை மேற்கோள் காட்டி19-01-2019 தேதியிட்ட  INDIAN EXPRESS ஆங்கில நாளிதழில் செய்தி வெளியாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது)
மேற்கண்ட நிலையில் தற்போது , மேற்படி பணிமாற்றம்  சம்பந்தமாக ஆசிரிய நண்பர்கள்
சென்னை உயர் நீதி மன்றத்திலும்
மதுரை உயர்நீதிமன்ற கிளையிலும் வழக்கு தொடுத்திருப்பதை  26-01-2019
 தேதிய தினகரன் செய்தித்தாள் மூலமாக இச்சங்கம் அறிந்து மகிழ்ச்சி அடைகிறது
 மேற்படி வழக்கில் நீதிமன்றங்கள்  இடைக்கால தடை ( INTERIM STAY ) விதித்திருப்பதை  அறிய வருகிறோம்..
மேற்படி வழக்கு தொடுத்துள்ள ஆசிரிய நண்பர்கள் ,தங்கள் வழக்குக்கு தேவையான அனைத்துவித
NCTE RULES AND REGULATIONS, NCERT SYLLABUS, SUPREME COURT JUDGEMENTS, HIGH COURT JUDGEMENTS, SCERT SYLLABUS PRE- SCHOOL SYLLABUS
ஆகிய அனைத்து ஆதார ஆவணங்களும் நம்மிடம் உள்ளது..
உங்களது வழக்கினை அடுத்த நிலைக்கு,சரியான மற்றும் வலுவான முறையில் எடுத்துச் செலவதற்கு மிகவும் பேருதவியாக  இருக்கும்
            மேற்படி ஆதார ஆவணங்களை கீழ்கண்ட  எண்ணில் தொடர்பு கொண்டு பெற்று மேற்படி வழக்கினை உரிய நிலையில் வாதிட்டு வெற்றி பெற இச்சங்கம் அன்புடன் கோருகிறது
வாழ்த்துக்களுடன்💐💐💐💐💐💐
                      இரா.இராம்குமார்
 (TNTSPA TEACHER ASSOCIATION)
Mob.98945 74642
.         94436 54642(WP)

தி.மு.க ஆட்சி அமையும் வரை அமைதியாக இருங்கள்! - அரசு ஊழியர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்

மாணவர்கள் நலன் கருதி ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என தி.மு.க தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழக அரசுக்கு எதிராக ஆசிரியர்களும், அரசு ஊழியர்களும் கடந்த 8 நாள்களுக்கும் மேலாக தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்குப் பல்வேறு அரசு ஊழியர்கள் அமைப்புகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால், போராட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் அரசு திணறிவருகிறது. ``பணிக்குத் திரும்பாமல் இருக்கும் ஆசிரியர்கள், ஊழியர்கள்மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று எச்சரித்துள்ளதுடன் 1,300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்களை சஸ்பெண்ட் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது. ஆனால், அதைக் கண்டுகொள்ளாமல் போராட்டம் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுக்கு சம்பளத்தை நிறுத்திவைக்க கருவூலத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. 
Sponsored
இந்நிலையில், 'அரசு ஊழியர்கள் போராட்டத்தைக் கைவிட வேண்டும்' என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ``முன்னறிவிப்பு கொடுத்து நடத்திய போராட்டங்களுக்குப் பிறகும், எடப்பாடி பழனிசாமியோ, சம்பந்தப்பட்ட அமைச்சர்களோ போராடுவோரை அழைத்துப் பேசுவதற்கான அக்கறையோ, பரிவோ அவர்களிடம் கிஞ்சிற்றும் இல்லை என்பதை நிரூபித்துவருகிறார்கள். அடக்குமுறை மூலம் நியாயமான உணர்வுகளை ஒடுக்கி நசுக்கிவிடலாம் என்று எண்ணி நள்ளிரவில் கைது, தற்காலிகப் பணி நீக்கம், டிஸ்மிஸ் செய்வோம் எனும் மிரட்டல், என்றெல்லாம் ஜனநாயக நாட்டில் “ஹிட்லர் பாணியில்” ஒரு முதல்வர் செயல்பட்டிருப்பது கடுமையான கண்டனத்திற்குரியது.
"முதல்வர் அழைத்துப் பேசினால் போராட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொள்ளத் தயார்" என்று அரசு ஊழியர்கள் தெரிவித்தும், "பேச்சுவார்த்தை நடத்தும் பேச்சுக்கே இடமில்லை" என்று நீதிமன்றத்தில் சர்வாதிகாரச் சதி எண்ணத்தோடு கூறியிருக்கும் முதல்வருக்கு மனித நேயமும் இல்லை; மாநில நிர்வாகத்தில் உரிய ஆர்வமும் இல்லை. "எப்படியும் தேர்தலில் தோற்கப்போகிறோம். இருக்கின்ற வரை ஊழல் செய்வதில் மட்டுமே அக்கறை காட்டுவோம்" என்று செயல்படும் ஒரு முதல்வரிடமிருந்தோ, அவர் தலைமையில் இருக்கும் அரசிடமிருந்தோ எவ்வித நியாயத்தையும் நீதியையும் எதிர்பார்க்க முடியாது என்பதை ஜாக்டோ - ஜியோ அமைப்பு நிர்வாகிகளும், போராட்டக் களத்தில் உள்ள அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உணர வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
அ.தி.மு.க அரசு அராஜகத்தையும், அதிகார ஆணவத்தையும் மட்டுமே நம்பியிருப்பதால், மாணவர்கள், மக்கள் நலன் கருதி போராட்டத்தை திரும்பப் பெற வேண்டும் என்று போராட்டக் களத்தில் இருக்கும் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். இதுநாள் வரை போராடிய ஜாக்டோ - ஜியோ அமைப்பினர், தி.மு.க ஆட்சி அமையும் வரை பொறுமைகாக்குமாறும், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகள் அனைத்தும் தி.மு.க ஆட்சி அமைந்தவுடன் உரிய முறையில் நியாயமாகப் பரிசீலித்து நிறைவேற்றப்பட்டு, அ.தி.மு.க ஆட்சியில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் ரத்துசெய்யப்படும் என்றும் உறுதியளிக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 31.01.2019திருக்குறள்


அதிகாரம்:நிலையாமை

திருக்குறள்:331

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி வாண்மை கடை.

விளக்கம்:

நிலையற்றவைகளை நிலையானவை என நம்புகின்ற அறியாமை மிக இழிவானதாகும்.

பழமொழி

Do not look a gifted horse in the mouth

 தானம் கொடுத்த மாட்டைப் பல் பிடித்துப் பார்க்காதே

இரண்டொழுக்க பண்பாடு

1. காலை கடன் கழிக்காமல் மற்றும் தன் சுத்தம் பேணாமல் பள்ளி வர மாட்டேன்.

2. என் வகுப்பறை மற்றும் பள்ளி வளாகத்தை சுத்தமாக வைத்திருக்க முயற்சிப்பேன்.

 பொன்மொழி

பிறரிடம் உள்ள நல்ல விஷசயங்களை கற்றுக் கொள்ள மறுப்பவன் இறந்தவனுக்கு சமம்.

       - விவேகானந்தர்.

பொது அறிவு

1.இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட  முதல் கோட்டை எது?

செயின்ட் ஜார்ஜ் கோட்டை

2. சித்தன்னவாசல் ஓவியங்கள்  அமைந்துள்ள இடம் எது?

 புதுக்கோட்டை

தினம் ஒரு மூலிகையின் மகத்துவம்

அருகம்புல்


1.  இதன் சாற்றை குடிக்கும் போது இரத்த அழுத்தம் கட்டுக்குள் வரும். இரத்த ஓட்டமும் சீராகும்.

2. தோல் நோய்களும் குணமடையும்.

3.இது தொட்டியில் வளர்க்க வேண்டிய மூலிகைத் தாவரம் ஆகும்.

English words and meaning

Establish - நிறுவு
 Estate -பண்ணை
 Evade - மழுப்பு
Examine - தேர்வு செய்
Exchange - மாற்றிக் கொள்

அறிவியல் விந்தைகள்

மனித மூளை

*. மனித மூளையின் எடை 1.361 கி. கி. ஆகும்.
* இது  60% கொழுப்பு உடையது. உடலின் கொழுப்பான உறுப்பு இதுவே ஆகும்.
*. நாம் விழித்து இருக்கும் போது இது 23 வாட் ஆற்றலை உருவாக்க வல்லது.
*. இங்குள்ள இரத்த நாளங்கள் நீளம் பத்து லட்சம் மைல் நீளமுள்ளது.
* நமது மூளையில் நூறு பில்லியன் நரம்பு செல்கள் உள்ளன.

நீதிக்கதை
பொறுப்பு ஒரு ஊரில் வயதான தம்பதியர் வாழ்ந்து வந்தனர். அவர்களுக்கு ஐந்து மகன்கள். அவர்கள் அனைவருக்கும் திருமணமாகி விட்டது. ஐந்து மருமகள்களும் அந்தப் பெரிய வீட்டில் ஒரே கூட்டுக்குடும்பமாக வசித்தனர்.

குடும்பத் தலைவிக்கு அதிகம் வயதாகிவிட்டது. நோயும் நிறைய வந்துவிட்டது. அதனால் அந்தப் பெரிய குடும்பத்தின் நிர்வாகப் பொறுப்பை, யாராவது ஒரு பொறுப்புள்ள மருமகளிடம் ஒப்படைக்க நினைத்தாள். ஐந்து மருமகள்களில் யாரிடம் குடும்பப் பொறுப்பை ஒப்படைப்பது என்ற குழப்பம்.

யோசித்தாள். ஒரு நல்ல யோசனை தோன்றியது.

ஒருநாள் ஐந்து மருமகள்களையும் அழைத்து ஆளுக்கு ஒரு படி வேர்க்கடலையைக் கொடுத்தாள். ""மருமகள்களே! ஆறு மாதம் சென்ற பிறகு இந்த வேர்க்கடலைகளைக் கேட்பேன். கொண்டு வந்து தரவேண்டும்!'' என்றாள்.

மருமகள்களும் அதற்கு ஒப்புக்கொண்டனர்.

ஆறுமாதம் சென்றது.

குடும்பத் தலைவி தனது ஐந்து மருமகள்களையும் அழைத்து, தான் கொடுத்த வேர்க்கடலைகளைத் திருப்பிக் கேட்டாள்.

""ஆறு மாதம் வேர்க்கடலையை வைத்திருந்தால் புழுத்துப் போகாதா? அதனால் அவை வீணாகிவிடுமே. ஆகவே, அதை உடனே வறுத்து, குடும்பத்தோடு சாப்பிட்டு விட்டோம்!'' என்றாள் மூத்த மருமகள்.

""நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை அப்படியே ஓர் அடுக்குப் பானைக்குள் போட்டு வைத்திருந்தேன். நீங்கள் கேட்கும்போது இதைத் திருப்பிக் கொடுப்பது தானே மரியாதை. இந்தாருங்கள்!'' என்று அந்த ஒருபடி வேர்க்கடலையைத் திருப்பிக் கொடுத்தாள் இரண்டாவது மருமகள்.

""ஓர் ஏழைக் குடும்பம் பசியால் துடித்துக் கொண்டிருந்தது. அதைப் பார்க்க மனம் பொறுக்கவில்லை. ஆகவே, அவர்கள் மீது இரக்கப்பட்டு ஒரு படி வேர்க்கடலையையும் அவர்களுக்கு கொடுத்து விட்டேன்!'' என்றாள் மூன்றாவது மருமகள்.

""ஊரிலிருந்து என் பெற்றோர் ஒருமுறை வந்திருந்தனரே, அவர் களிடம் தம்பி, தங்கைகளுக்குக் கொடுக்கும்படி கூறிக் கொடுத்து அனுப்பிவிட்டேன்!'' என்றாள் நான்காவது மருமகள்.

ஐந்தாவது மருமகள் இரண்டு ஆட்களின் துணையோடு ஒரு மூட்டை வேர்க்கடலையைக் கொண்டு வந்து தன் மாமியாரின் முன்னே போட்டாள்.

""அத்தை! நீங்கள் கொடுத்த வேர்க்கடலையை ஆறு மாதங்கள் அப்படியே வைத்திருப்பதால் என்ன பயன்... என்ன லாபம்...? என்று யோசித்தேன். என் தந்தை வீட்டுத் தோட்டத்தில் விதைத்தால் ஒன்றுக்குப் பத்தாக விளைந்து லாபம் கிடைக்குமே என்று நினைத்தேன்.

நிலத்தைப் பண்படுத்தி ஒருபடி வேர்க்கடலையையும் விதைத்தேன். இந்த ஆறு மாதத்தில் அது ஒரு மூட்டை வேர்க்கடலையாகப் பெருகி விட்டது. இந்தாருங்கள்!'' என்றாள். அதைக் கண்ட மாமியார் மகிழ்ந்து போனாள்.

பெரிய குடும்பத்தை நிர்வகிக்கும் தகுதியும், பொறுப்பும் அவளுக்கே உண்டு என்று தீர்மானித்தாள். உடனே பொறுப்பை ஐந்தாவது மருமகளிடம் ஒப்படைத்தாள்.

அதை மற்ற நான்கு மருமகள்களும் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டனர்

ஜாக்டோ ஜியோ போராட்டம் தற்காலிக வாபஸ்; இன்று முதல் பணிக்கு செல்ல முடிவு; போராட்டத்தின்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தையும் திரும்பப்பெற வலியுறுத்தல்

பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தப்பட்டு வந்த வேலை நிறுத்தப் போராட்டத்தைத் திரும்பப் பெறுவதாக ஜாக்டோ - ஜியோ அறிவித்துள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பான ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் சார்பில் சென்னை திருவல்லிக்கேணியில் இன்று மாலை நடைபெற்ற உயர்மட்டக் குழுக் கூட்டத்தில், வேலைநிறுத்தப் போராட்டத்தை தற்காலிகமாக திரும்பப் பெறுவதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதனை ஜாக்டோ - ஜியோ நிர்வாகிகள் செய்தியாளர்கள் முன்னிலையில் அறிவித்தார். இது குறித்து ஜாக்டோ - ஜியோ நிர்வாகி வின்சென்ட் பால்ராஜ் செய்தியாளர்களிடம் பேசுகையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் போராட்டத்தை ஏன் திரும்பப் பெறுகிறோம் என்றால், விரைவில் பொதுத் தேர்வெழுதும் மாணவ, மாணவிகளுக்கு செய்முறைத் தேர்வுகள் தொடங்க உள்ளன. எனவே, பொதுத் தேர்வு எழுதும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும், அவர்களது பெற்றோரின் மன உணர்வைக் கருத்தில் கொண்டும் எங்களது போராட்டத்தை தற்காலிகமாக ஒத்திவைப்பது என்று முடிவு செய்யப்பட்டது. முதல்வர் மற்றும் நீதிமன்றம் வலியுறுத்தலை ஏற்றும், பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் நலனைக் கருத்தில் கொண்டும் இந்த போராட்டம் வாபஸ் பெறப்படுகிறது. எங்களது கோரிக்கைகள் குறித்து அரசுத் தரப்பில் எங்களை அழைத்துப் பேசவில்லை. கோரிக்கைகளுக்காக போராடிய அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும், காவல்துறையினர் வழக்குகளை திரும்பப் பெற வேண்டும், முதல்வர் எங்களை அழைத்துப் பேசி கோரிக்கைகள் குறித்துக் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும் அவர் பேசுகையில், ஏன் எங்களை அழைத்துப் பேச முதல்வர் மறுக்கிறார்? எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்த என்ன முட்டுக்கட்டை இருக்கிறது என்று நீதிபதிகள் கூட கேள்வி எழுப்பியுள்ளனர். ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை அழைத்துப் பேசாமல் அவர்கள் மீது கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது அரசு. ஆனால் பொதுமக்கள் நலன் கருதி, முதல்வர் மற்றும் அனைத்துக் கட்சித் தலைவர்களின் வலியுறுத்தலை ஏற்று ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் இன்று போராட்டத்தைத் திரும்ப பெறுகிறோம். நாளை முதல் அரசு ஊழியர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என்று அறிவித்தார்.

கல்வி துறை அதிகாரி வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை -ஐந்து பேர் மீது வழக்கு

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர், அறிவொளியின், வீடு,அலுவலகங்களில், லஞ்ச ஒழிப்பு போலீசார், நேற்று சோதனை நடத்தினர்.

சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள, டி.பி.ஐ., வளாகத்தில், பள்ளி கல்வித் துறையின் கீழ், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. அதன் இயக்குனராக, அறிவொளி, 55, பணியாற்றி வருகிறார். இதற்கு முன், அவர், பொது நுாலக துறை இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார்.

மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், புதிய பாடத்திட்டங்களை உருவாக்குதல், எளிய முறையில், மாணவர் களுக்கு பாடம் கற்பிப்பது எப்படி என்பது குறித்த ஆராய்ச்சியிலும் ஈடுபட்டு வருகிறது. அதற்காக, பல்வேறு திட்டங்கள் தயாரிக்கப் பட்டு, அரசின் சார்பில் நிதி ஒதுக்கீடும் செய்யப் படுகிறது.

அந்த நிதியில், அறிவொளி உள்ளிட்ட சில அதிகாரிகள், முறைகேடு செய்து இருப்பதாக, லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, அறிவொளியின் வீட்டில்,எட்டு மணி நேரம், லஞ்ச ஒழிப்பு போலீசார், அதிரடி சோதனை நடத்தினர்.

அதேபோல, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்திலும், பல மணி நேரம் சோதனை நடந்தது. அறிவொளி மற்றும் அவரது அலுவலக ஊழியர்களிடமும், லஞ்ச ஒழிப்பு போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அவர்களிடம் இருந்து, பல முக்கிய ஆவணங்களையும் கைப்பற்றி உள்ளனர்.

அதேபோல, அறிவொளி வீட்டிலும், சொத்து ஆவணங்களும் சிக்கி உள்ளன. 'கம்ப்யூட்டர், பென் டிரைவ்' உள்ளிட்ட பொருட்களையும், கைப்பற்றி உள்ளனர்.

இது குறித்து, லஞ்ச ஒழிப்பு துறை உயர் அதிகாரிகள் கூறியதாவது: வெளிநாடுகளுக்கு புலம் பெயர்ந்துள்ள தமிழர்களின் வாரிசுகள், தமிழ் மொழியை எளிதாக கற்றுக்கொள்ள, மாநில கல்வி யியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 'உலக மெல்லாம் தமிழ்' என்ற திட்டத்தை செயல்படுத்துகிறது.

இந்த திட்டத்தில், 'ஆடியோ, வீடியோ' தயாரித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டதில், முறை கேடு நடந்து இருப்பது, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.ரூ.பல கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதற்கு முகாந்திரம் இருப்பதால், அறிவொளி மற்றும் அவருடன் பணியாற்றி வந்த சிலரிடம், தொடர்ந்து விசாரித்து வருகிறோம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

ஐந்து பேர் மீது வழக்கு

அறிவொளி மட்டுமின்றி, முறைசாரா கல்வி நிறுவனத்தின் இயக்குனர், லதா, உதவி பேராசிரியை, சங்கீதா, பட்டதாரி ஆசிரியை, சித்ரா, இடைநிலை ஆசிரியர், அமலன் ஜெரோம் ஆகியோரும், லஞ்ச புகாரில் சிக்கி உள்ளனர். இவர்களின் வீடுகளிலும், லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி உள்ளனர். ஐந்து பேர் மீதும், வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது

தமிழக தலைமைச் செயலர் மீது குற்றவியல் நடவடிக்கை கோரி மனு : தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு

குட்கா முறைகேடு தொடர்பாக நீதிமன்றத்தில் தவறான தகவல்களை அளித்ததாக, தமிழக தலைமைச்  செயலர் கிரிஜா வைத்தியநாதன் மீது குற்றவியல் நடவடிக்கை கோரிய மனு மீதான தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்து புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கதிரேசன் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த மனு:
குட்கா முறைகேடு தொடர்பாக கடந்த 2016-இல் வருமானவரித் துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் காவல்துறையினர், உயர் அதிகாரிகள் மற்றும் ஆளும் கட்சியினருக்கு லஞ்சமாக பணம் கொடுத்தது தொடர்பான ஆவணங்கள் சிக்கின. குட்கா முறைகேட்டில் தொடர்புள்ள அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு வருமானவரித் துறை கடிதம் அனுப்பியது. அப்போதைய டிஜிபி அசோக்குமார், இந்த கடிதத்தை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்றார்.
இந்நிலையில், குட்கா முறைகேடு குறித்து சிபிஐ விசாரணை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தேன். அந்த மனு மீதான விசாரணையின்போது, தமிழக தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் தரப்பில், குட்கா முறைகேட்டில் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான எந்த ஆவணமும் அரசு அலுவலகங்களில் இல்லை  என பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா வீட்டில் கடந்த 2017-இல் வருமானவரித் துறை சோதனையின் போது, குட்கா முறைகேட்டில் டிஜிபி ராஜேந்திரன் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வருமானவரித் துறை அளித்த கடிதம் உள்ளிட்ட சில ஆவணங்கள் சசிகலா அறையில் கைப்பற்றப்பட்டன. அந்த ஆவணங்கள் நீதிமன்றத்தில் வருமானவரித் துறையினர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்நிலையில் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் தவறான தகவலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். இதற்காக அவர் மீது குற்றவியல் நடைமுறை சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது, குட்கா விவகாரம் தொடர்பாக வருமானவரித் துறையினர், டிஜிபிக்கு கடிதம் அனுப்பியது மற்றும் தலைமை செயலருக்கு கடிதம் அனுப்பியது தொடர்பான ஆவணங்கள் நீதிமன்றத்தில் சீலிட்ட உறையில் வைத்து தாக்கல் செய்யப்பட்டன.
இந்நிலையில், இந்த வழக்கு  நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, குட்கா முறைகேடு தொடர்பாக நடவடிக்கை கோரி வருமானவரித்துறை  அனுப்பிய கடிதம் தலைமை செயலர் அலுவலகத்துக்கு சென்றடைந்துள்ளது என்று வருமானவரித் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டது. அதற்கு அரசுத் தரப்பு வழக்குரைஞர், வருமானவரித் துறையினர் அனுப்பிய கடிதம் அரசுக்கு சென்றடைந்தபோது, தற்போதைய தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் பொறுப்பில் இல்லை. மேலும், அவர் நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தபோது, குட்கா புகார் தொடர்பான ஆவணங்கள் ஏதும் அரசிடம் இல்லை. எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கூடாது என்று வாதிட்டார். இதை பதிவு செய்துகொண்ட நீதிபதிகள் வழக்கின் தீர்ப்பை ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.

அரசு ஊழியர்கள் மீதான நடவடிக்கையை கைவிட வேண்டும்: ஜி.கே.வாசன்

அரசு ஊழியர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள துறை ரீதியான நடவடிக்கைகளை தமிழக அரசு கைவிட வேண்டும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக புதன்கிழமை அவர் வெளியிட்ட அறிக்கை:
பழைய ஓய்வூதியம் உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தி வந்த அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டத்தை திரும்பப் பெற்றுள்ளனர். மாணவர்கள் நலன், பொது மக்களுக்கான பணிகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இந்த முடிவை எடுத்துள்ளனர். இது வரவேற்கத்தக்கது.
அரசு ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட போது கைது செய்தவர்களை வழக்கு ஏதுமின்றி விடுதலை செய்யவும், துறை ரீதியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகளைத் திரும்பப் பெறவும் தமிழக அரசு உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியீடு

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான, 'நீட்' தேர்வு முடிவுகள், இன்று வெளியிடப்பட உள்ளன.நாடு முழுவதும், அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லுாரிகளில், எம்.டி., - எம்.எஸ்., பட்ட மேற்படிப்பு மற்றும் பட்டய மேற்படிப்புக்கு, 26 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் உள்ளன. தமிழகத்தில் மட்டும், 2,500 இடங்கள் உள்ளன.இந்த இடங்களில், தேசிய தேர்வுகள் வாரியம் நடத்தும், நீட் தேர்வில் தகுதி பெற்ற, எம்.பி.பி.எஸ்., டாக்டர்கள் சேர்க்கப்படுகின்றனர். 2019 - 20 கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு, நாடு முழுவதும், சென்னை, கோவை உள்ளிட்ட, 148 நகரங்களில், ஜன., 6ல் நடந்தது.இதில், ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட டாக்டர்கள் எழுதினர். தமிழகத்தில், 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் எழுதியுள்ளனர். இதற்கான தேர்வு முடிவுகள், www.natboard.edu.in என்ற, தேசிய தேர்வுகள் வாரிய இணையதளத்தில், இன்று வெளியிடப்பட உள்ளன.

அரசு கலை கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப்பணியிடங்கள்: ஆசிரியர் தேர்வு வாரியம் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

தமிழகத்தில் அரசு  கலை, அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலி பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தொடர்பான அறிக்கையை, ஆசிரியர் தேர்வு வாரியம் தாக்கல் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை புதன்கிழமை உத்தரவிட்டுள்ளது.
மதுரையை சேர்ந்த கார்த்திக், உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் தாக்கல் செய்த பொதுநல மனு:
தமிழகத்தில்  91 அரசு கலை அறிவியல்  கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 50 கல்லூரிகள் கிராமப்புற பகுதிகளில் செயல்பட்டு வருகின்றன. தற்போது இக் கல்லூரிகளில்  2,500 விரிவுரையாளர் பணியிடங்கள்  நிரப்பப்படாமல் உள்ளன.
 காலிப் பணியிடங்களை நிரப்ப கடந்த 2015-இல் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்வு நடத்தப்பட்டது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும், கௌரவ விரிவுரையாளர்களாக நியமிக்கப்பட்ட 3,544 பேரில் பல்கலைக்கழக மானியக்குழு நிர்ணயம் செய்த கல்வித் தகுதிகளை 1,330 விரிவுரையாளர்கள் மட்டுமே பெற்றுள்ளனர்.
 முறையான கல்வித்தகுதி இல்லாதவர்களால், மாணவர்களுக்கு சரியான கல்வியை கற்றுக்கொடுக்க முடியாது. கடந்த ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 264 புதிய பாடத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இதனால் விரிவுரையாளர்கள் பணி இடங்களும் அதிகரித்துள்ளன.   எனவே, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை, யுஜிசி விதிமுறைகளை பின்பற்றி நிரப்ப அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
 இந்த மனு நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், தமிழகத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் விரிவுரையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த அறிக்கையை தாக்கல் செய்யுமாறு ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு உத்தரவிட்டு விசாரணையை பிப்ரவரி 19-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Budget 2019: மத்திய அரசின் பட்ஜெட்டில் தொடர்ந்து புறக்கணிக்கப்படும் உயர் கல்வி துறை.. மாணவர் நிலை?

  உயர் கல்விக்கு மத்திய அரசு ஒதுக்கும் நிதி போதிய அளவுக்கு இல்லை என்று புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் வரும் பிப்ரவரி 1ம் தேதி தாக்கல் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில் உயர் கல்வித்துறை தொடர்பாக 'இந்தியா ஸ்பென்ட்' வெளிக்கொண்டுவந்துள்ள புள்ளி விவர தகவல்களை நீங்களே பாருங்கள்:
இதுவரை, மொத்த பட்ஜெட்டில் மிக குறைந்த சதவீதமாக மட்டுமே உயர் கல்விக்கான செலவீனம் உள்ளது.
12 ஆண்டுகளில் சராசரியாக 1.47% இந்த நிதி ஒதுக்கீடு உயர்ந்துள்ளது. 15 முதல் 24 வயது வரையிலான இளைஞர்களை அதிகம் கொண்ட நாடு இந்தியா (241 மில்லியன் அல்லது 18% இந்தியர்கள்). ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக விவகாரங்கள் துறை 2017 அறிக்கையின்படி, இது சீனாவை விட 169.4 மில்லியன் அதிகம் ஆகும்.

இந்தியாவின் இளைஞர்கள் எண்ணிக்கை
2020 க்குள் இந்தியாவின் மக்கள்தொகையில் 34.33%, 15 முதல் 24 வயது வரை இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. வரும் பிப்ரவரி 1 ஆம் தேதி ஆளும் பாஜக அரசால் தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் இதை கருத்தில் கொண்டு இருக்க வேண்டியது அவசியம். வளர்ந்து வரும் இளைஞர்கள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு அஅவர்கள் உலகளாவிய ரீதியில் போட்டியிடுவதற்கான உயர்ந்த கல்வியைப் பெற்றுக்கொள்வதை உறுதி செய்வது, அரசின் பணிகளில் முக்கியமானது.

மாநில பல்கலைக்கழகங்களுக்கு பட்ஜெட் நிதி குறைவு
2018-19 ஆம் நிதியாண்டில் ஆண்டில் உயர் கல்விக்கு, 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தியா போன்ற பெரிய நாட்டுக்கு இது ஒரு சிறிய தொகையாகும். பல்கலைக் கழகங்களுக்கு நிதியளித்தல் என்பது தேவைக்கு ஏற்ற அளவுக்கு இல்லை. பொதுப் பல்கலைக்கழகங்களில், 97% மாணவர்கள் மாநில பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும்போது, மத்திய பல்கலைக்கழகங்களில் மீதமுள்ள 3% மட்டுமே பயில்கிறார்கள். ஆனால் 57.5% பட்ஜெட் நிதி என்பது மத்திய பல்கலைக்கழகங்கள் மற்றும் ஐஐடி மற்றும் ஐஐஎம் போன்ற முதன்மையான கல்வி நிறுவனங்களுக்கு செல்கிறது. மாநில பல்கலைக் கழகங்களுக்கு அதிக நிதி, வளங்கள் தேவைப்படுகிறது.

இந்தியாவில் உயர் கல்வி பயில்வோர் குறைவு
உயர் கல்வியில் இந்தியாவின் சேர்க்கை விகிதம் குறைவாகவே உள்ளது. 2017-18 ல் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 8 முதல் 23 வயதுள்ள இளைஞர்களில் 70 சதவீதம் பேர் உயர் கல்வியில் பதிவு செய்யவில்லை என்பது தெரியவருகிறது. யுனெஸ்கோ ஆய்வுப்படி, 2000 ஆம் ஆண்டில், இந்தியா மற்றும் சீனா ஆகியவை தங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) கிட்டத்தட்ட அதே சதவிகிதம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு செலவழித்தன: இந்தியா அதன் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.77% மற்றும் சீனா 0.89% செலவழித்தது. இருப்பினும், சீனா அதன் செலவினங்களை சீராக அதிகரித்து 2016 ல் 2.11% ஆக அதிகரித்துள்ளது. இந்தியா 0.73% -0.87% என்ற அளவில் பின்தங்கியுள்ளது. இது 2015இல் 0.62% ஆக சரிந்தது.

தரம் குறைந்த இந்திய பல்கலைக்கழகங்கள்
உலக பல்கலைக்கழக தரவரிசையில் இந்திய பல்கலைக்கழகங்கள் தொடர்ந்து குறைந்த இடங்களை பிடித்து வருகின்றன. டைம்ஸ் உயர் கல்வி உலக பல்கலைக்கழக தரவரிசை 2019இன் படி, ஒரே ஒரு இந்திய பல்கலைக் கழகம் தரவரிசைப்படுத்தப்படவில்லை. மேலும் 5 கல்வி நிறுவனங்கள் மட்டுமே டாப் 500 க்குள் உயர்ந்தன. இந்த தரவரிசை என்பது, ஆசிரியர்கள் எண்ணிக்கை, கற்பித்தல் தரம், ஆராய்ச்சி எண்ணிக்கை மற்றும் ஆராய்ச்சி தரம் ஆகியவற்றை கொண்டது.

பட்ஜெட் மீது எதிர்ப்பார்ப்பு
2017-19-ல் 34,862.46 கோடி ரூபாய், உயர்கல்விக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆனால் மொத்த பட்ஜெட் ஒதுக்கீட்டின் விகிதம் 1.62 சதவீதத்திலிருந்து, 1.43 சதவீதமாக குறைந்துவிட்டது. உயர் கல்வி பட்ஜெட்டில், 2017-18ல் மத்திய பல்கலைக் கழகங்களுக்கு ரூ .7,261.42 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2018-19ல் ரூ. 6,445.23 கோடியாக இருந்தது. ஐஐடிகளுக்கு 2017-18ல் ரூ .7,503.5 கோடியில் இருந்து ரூ. 5,613 கோடியாகவும் நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்டிருந்தது.

கௌரவ விரிவுரையாளர்களுக்கு ரூ.50,000 மாத ஊதியம் வழங்க வேண்டும்: யுஜிசி திருத்தப்பட்ட வழிகாட்டுதல் வெளியீடு

கல்லூரிகள்,  பல்கலைக்கழகங்களில் பணிபுரியும் கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கு ரூ. 1500 வீதம் வழங்க வேண்டும் எனவும், அதிகபட்சமாக ரூ.50,000 வரை வழங்க வேண்டும் எனவும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது.
இதுதொடர்பாக திருத்தப்பட்ட வழிகாட்டுதலை யுஜிசி திங்கள்கிழமை வெளியிட்டது. இதை அனைத்து மாநில உயர்கல்விச் செயலாளர்களுக்கும், அனைத்துப் பல்கலைக்கழக பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பியுள்ள யுஜிசி, இந்த அறிவிப்பு வெளியான நாளிலிருந்து, இந்த வழிகாட்டுதல் நடைமுறைக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
ஏழாவது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் உயர்த்தப்பட்டிருக்கும் இந்த புதிய மதிப்பூதியத்துக்கு, தில்லியில் அண்மையில் நடைபெற்ற யுஜிசி-யின் 537 ஆவது குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி, கௌரவ விரிவுரையாளர்களுக்கு ஒரு வகுப்புக்கான மதிப்பூதியம் ரூ. 1500 ஆக உயர்த்தப்படுவதாகவும், அதிகபட்சமாக ஒரு மாதத்துக்கு ரூ. 50 ஆயிரம் வரை மதிப்பூதியம் உயர்த்தப்படுகிறது. கல்லூரிகளில் ஒப்பளிக்கப்பட்ட இடங்களில் மட்டுமே கௌரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்படவேண்டும் என்றபோதும், பல்கலைக்கழகங்களில் மட்டும் ஒப்பளிக்கப்பட்ட இடங்களைக் காட்டிலும் அதிபட்சம் 20 சதவீத இடங்களில் கௌரவ விரிவுரையாளர்களை நியமித்துக்கொள்ளலாம்.
யுஜிசி-யின் உதவிப் பேராசிரியர் நியமன வழிகாட்டுதலின்படியே கௌரவ விரிவுரையாளரும் நியமிக்கப்பட வேண்டும் என்பதோடு, உதவிப் பேராசிரியருக்கு இணையான கல்வித் தகுதி பெற்றவர்களையே தேர்வு செய்யவேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு நடைமுறைகள் இடம்பெற்றுள்ளன.

என்சிஆர்இடி பாடத் திட்டத்தில் திருக்குறள்: தருண் விஜய் வலியுறுத்தல்

தில்லியில் மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரை புதன்கிழமை சந்தித்து மனுவுடன் நினைவுப்பரிசு  அளித்த  மாநிலங்களவை முன்னாள் உறுப்பினர் தருண் விஜய்.


தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) அகில இந்திய பாடத் திட்டத்தில் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவர் எழுதிய திருக்குறள் பாக்களை இடம் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகரிடம் தமிழ் ஆர்வலரும், திருவள்ளுவர் மாணவர்கள், இளைஞர்கள் அமைப்பின் தலைவருமான தருண் விஜய் வலியுறுத்தினார்.
புது தில்லியில் மத்திய அமைச்சர் ஜாவடேகரை அவரது பிறந்த நாளை ஒட்டி மாநிலங்களவை பாஜக முன்னாள் உறுப்பினரான தருண் விஜய் புதன்கிழமை நேரில் சந்தித்தார். அப்போது, தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சிக் கவுன்சில் (என்சிஇஆர்டி) அகில இந்திய பாடத் திட்டத்தில் திருவள்ளுவரின் வாழ்க்கை மற்றும் அவர் எழுதிய திருக்குறள் பாக்களை இடம் பெற நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொண்டார். மேலும், தனியார் கல்லூரிகளில் திருக்குறளை பரப்ப பணியாற்றுவதாக அமைச்சரிடம் உறுதியளித்தார்.
இதுகுறித்து தருண் விஜய் கூறுகையில், இந்தியா முழுவதும் திருவள்ளுவரின் கருத்துகளை பரப்புவதில் பிரதமர் மோடி தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது. பிரதமரிடமிருந்து பெற்ற தூண்டுகோல்தான் திருக்குறளைப் பரப்பும் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளேன் என்றார்

அரசு ஊழியர்களின் 9 நாள் வேலை நிறுத்தம் வாபஸ்! ஜாக்டோ-ஜியோ அறிவிப்பு- முழு விவரம்

அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், ஒன்பது நாட்களாக நடத்திய வேலைநிறுத்தம், நேற்று வாபஸ் பெறப்பட்டது. 'இது, தற்காலிக முடிவு தான்' என, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
அரசு பள்ளி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் சங்கங்கள் இணைந்துள்ள, ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு சார்பில், 22 முதல், ஒன்பது நாட்களாக, தொடர் வேலைநிறுத்த போராட்டம் நடத்தி வந்தனர். இதனால், அரசு பள்ளிகளின் செயல்பாடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன

மாணவர்கள் பாதிக்கப்படாமல் இருக்க, தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கும் பணியை, பள்ளி கல்வித் துறை மேற்கொண்டது. அதேநேரம், சாலை மறியலில் ஈடுபட்ட, 1,000க்கும் மேற்பட்ட, அரசு பள்ளி ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு, 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.

இந்நிலையில், போராட்டத்தை முறியடிக்கும் வகையில், 'ஜன., 25க்குள், ஆசிரியர்கள் பணியில் சேர்ந்தால், ஒழுங்கு நடவடிக்கை கிடையாது' என, பள்ளி கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன், தொடக்க கல்வி இயக்குனர், கருப்பசாமி அறிவித்தனர். இதை ஏற்று, ஆசிரியர்கள் பணிக்கு வர துவங்கினர்.

பின், இந்த அவகாசம், 27ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டது. அப்போது, 70 சதவீத ஆசிரியர்கள், பணிக்கு திரும்பினர். மீத முள்ளோருக்கு, நேற்று முன்தினம் இரவு வரை, அவகாசம் வழங்கப்பட்டது. இதையடுத்து, 29ம் தேதி, 95 சதவீதம் பேர், பணிக்கு திரும்பினர். அதேபோல், மாணவர், பெற்றோர், அரசியல் கட்சியினர் மத்தியிலும், ஆசிரியர்களின் போராட்டத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

சமூக வலைதளங்களில், ஆசிரியர்களுக்கு எதிராக விமர்சனங்கள் குவிந்தன. இறுதியாக, போராட்டத்தை துாண்டிவிடும் நிர்வாகிகள் குறித்து, அரசு பட்டியல் எடுக்க துவங்கியது. இந்நிலையில், 'மாணவர் நலன் கருதி, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பணிக்கு திரும்ப வேண்டும்' என, முதல்வர் பழனிசாமி வேண்டுகோள் விடுத்தார்.

அதையடுத்து, தி.மு.க., தலைவர் ஸ்டாலின் உள்ளிட்ட கட்சி தலைவர்களும், அரசு ஊழியர்கள் பணிக்கு திரும்ப வலியுறுத்தினர். அதேபோல், சென்னை உயர் நீதிமன்றமும், பணிக்கு திரும்ப அறிவுறுத்தியது.ஜாக்டோ - ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம், நேற்று சென்னையில் நடந்தது. இதில், ஒருங்கிணைப்பாளர்கள், உயர்மட்ட குழு உறுப்பினர்கள், மீனாட்சிசுந்தரம், கே.பி.ஓ.சுரேஷ், தியாகராஜன், அன்பரசு, வின்ஸ்டன் பால்ராஜ், சங்கரநாராயணன்
பங்கேற்றனர்.அதில், ஒன்பது நாட்கள் நடத்தப்பட்ட வேலைநிறுத்த போராட்டத்தை, தற்காலிகமாக வாபஸ் பெறுவது என, முடிவு எடுக்கப்பட்டது.

சம்பளம் இன்று கிடைக்காது

போராட்டத்தில் பங்கேற்றோர், வேலைக்கு வராத நாட்களுக்கு, சம்பளத்தை பிடித்தம் செய்ய, தலைமை செயலர், கிரிஜா வைத்தியநாதன் உத்தரவிட்டார். ஆனால், கருவூல துறையில் உள்ள சிலர், போராட்டத்தில் ஈடுபட்டோருக்கும் சேர்த்து, ஊதிய பட்டியலை அங்கீகரித்தனர்.இது குறித்து, நமது நாளிதழில் செய்தி வெளியானது. இதை
அடுத்து, தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறை முதன்மை செயலர், ஜவஹர், 'வேலை செய்யாத நாட்களுக்கு, சம்பள பிடித்தம் செய்ய வேண்டும்' என, உத்தரவிட்டார்.

இதையடுத்து,அனைத்து கருவூல அதிகாரிகளும், தாங்கள் ஏற்கனவே அனுமதித்த ஊதிய பட்டியலை, அந்தந்த துறை தலைவருக்கு அனுப்பி, அவற்றை சரிசெய்து தர அறிவுறுத்தினர். ஆனால், அதற்குள் ஊதிய பட்டியல், வங்கிகளின் பண பட்டுவாடா பிரிவுக்கு சென்றது.இது குறித்து, தகவல் அறிந்ததும், தமிழக அரசின் கருவூல துறை சார்பில், வங்கிக்கு அவசர தகவல் அனுப்பப்பட்டது. அதில், பண பட்டுவாடாவை நிறுத்த வேண்டும் என்றும், புதிய பட்டியல் வழங்கப்படும் என்றும், கூறப்பட்டுள்ளது.

எனவே, தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான சம்பளம், இன்று கிடைக்க வாய்ப்பில்லை. சம்பள பிடித்தத்துடன், அடுத்த வாரம் தான், இந்த மாதத்திற்கான சம்பளம் கிடைக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

அரசுக்கு வெற்றி

போராட்டத்தை துவக்குவதற்கு முன்னரே, 'நிதி நிலைமை சரிஇல்லாததால், உங்கள் கோரிக்கை களை நிறைவேற்ற முடியவில்லை. எனவே, போராட்டம் வேண்டாம்' என, அரசு தரப்பில் கூறப்பட்டது.

அரசை பணிய வைத்து விடலாம் என்ற நம்பிக்கையில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்கள், வேலைநிறுத்தப் போராட்டத்தை துவக்கின. அதற்கு, சில எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்தன. ஆனால், மக்கள் ஆதரவு கிடைக்க வில்லை.போராட்டத்திற்கு எதிரான மன நிலையில், மக்கள் இருப்பதை அறிந்து, அரசு, தன் நிலையில் பிடிவாதமாக இருந்ததுடன், போராட்டத்தை ஒடுக்கும் பணியை துவக்கியது.

வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டோர், அரசின் கெடுபிடியால், பணிக்கு திரும்பினர்; போராட்டம் பிசுபிசுத்தது. வேறு வழியின்றி, போராட்டத்தை சங்கங்கள் வாபஸ் பெற்றன.இது, அரசுக்கு கிடைத்த வெற்றியாக கருதப்படுகிறது. அதேநேரம், போராட்டம் நடக்கும்போதே, அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், நடவடிக்கைக்கு பயந்து, பணிக்கு திரும்பியது, சங்க நிர்வாகிகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

போராட்டம் பிசுபிசுப்பு

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான, தமிழ்நாடு
தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை, நேற்று ஒரு நாள், அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன.அதை ஒடுக்க, ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த, தலைமைச் செயலக ஊழியர்கள், ஏழு பேர், நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள், நேற்று வழக்கம் போல் பணிக்கு வந்தனர். அரசு தரப்பில், பகல், 12:00 மணிக்கு, 91 சதவீத ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள், தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தன.

போராட்டம் வாபஸ் ஏன்?

ஜாக்டோ - ஜியோ ஒருங்கிணைப்பாளர், வின்ஸ்டன் பால்ராஜ் அளித்த பேட்டி:

எங்களின், 9 அம்ச கோரிக்கைகள் குறித்து, முதல்வர் பழனிசாமி, எங்களை அழைத்து பேச வேண்டும் என, வேண்டுகோள் விடுத்தோம். அவர் எங்களை அழைத்து பேசவில்லை. முதல்வரின் வேண்டுகோள், பெற்றோரின் மன உணர்வுகள், ஏழை மாணவர் களின் கல்வி நலன் மற்றும் கட்சி தலைவர் களின் வேண்டுகோளை ஏற்று, போராட்டம், தற்காலிகமாக வாபஸ் பெறப்படுகிறது.

இன்று முதல், அனைத்து அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும், மீண்டும் பணிக்கு செல்ல உள்ளோம். ஆசிரியர்கள் மீதான, ஒழுங்கு நடவடிக்கைகளை ரத்து செய்வதுடன், கைதானோரை விடுதலை செய்து, வழக்கை வாபஸ் பெற வேண்டும்.

எங்களுடன் இணைந்த எந்த ஆசிரியருக்கும், சிறுகீறல் கூட இல்லாமல் பார்த்து கொண் டோம். எனவே, போராட்டத்தில் பங்கேற்ற, அனைத்து அரசு ஊழியர், ஆசிரியர்களுக்கும் தொடர்ந்து துணை நிற்போம்.இவ்வாறு, அவர் கூறினார்.

ஒருநாள் போராட்டம் இல்லை

அங்கீகரிக்கப்பட்ட சங்கங்களான தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம், தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசுத் துறை ஊர்தி ஓட்டுனர் சங்கம் ஆகியவை நேற்று ஒரு நாள் அடையாள வேலைநிறுத்த போராட்டத்தை அறிவித்தன. அதை ஒடுக்க ஏற்கனவே பணிக்கு வராமலிருந்த தலைமைச் செயலக ஊழியர்கள் ஏழு பேர் நேற்று முன் தினம் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, தலைமைச் செயலக ஊழியர்கள் நேற்று வழக்கம்போல் பணிக்கு வந்தனர்.காலை, 10 மணிக்கு முன்னதாகவே ஊழியர்கள் பணிக்கு வந்தனர்.காலை, 11 மணிக்கு முதல்வர் தலைமையில் நடந்த தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி யில் அனைவரும் பங்கேற்றனர்.

அரசு தரப்பில் பகல் 12:00 மணிக்கு 91 சதவீதம் ஊழியர்கள் பணிக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப் பட்டது. அதைத் தொடர்ந்து அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள் தொடர் போராட்டத்தை கைவிடுவதாக அறிவித்தன.