Title of the document
சம வேலைக்கு சம ஊதியம் கோரி, இடைநிலை ஆசிரியர்கள் 26.07.2025 அன்று மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் அறிவிப்பு !!


திமுக அரசின் 2021 ஆம் ஆண்டு தேர்தல் அறிக்கை எண் 311-ஐ நிறைவேற்றி பாதிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு "சம வேலைக்கு சம ஊதியம்" வழங்கக் கோரி மாவட்டத் தலைநகரங்களில் மாபெரும் உண்ணாவிரத போராட்டம் நடத்த இடைநிலை ஆசிரியர்கள் பதிவு மூப்பு இயக்கம் (SSTA) முடிவு எடுத்துள்ளது. 

ஜூலை 19ஆம் தேதி போராட்டம் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஜூலை 26 ஆம் தேதிக்கு இடைநிலை ஆசிரியர்களின் உண்ணாவிரதப் போராட்டம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சம வேலைக்கு சம ஊதியம் கோரிய இடைநிலை ஆசிரியர்களின் இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் ஒரே நாளில் அந்தந்த மாவட்ட தலைநகரங்களில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே பணி, ஒரே கல்வியாக இருந்தும் 'சம வேலைக்கு சம ஊதியம்' இல்லாதது உச்ச நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிரானது. இப்பிரச்னையை களைய கோரி 10 ஆண்டுகளுக்கும் மேல் தொடர் போராட்டங்களில் ஆசிரியர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அ.தி.மு.க., ஆட்சியில் நடந்த போராட்டத்திற்கு அப்போதைய எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின் ஆதரவு தெரிவித்து, 2021 தி.மு.க., தேர்தல் அறிக்கையில் 311வது வாக்குறுதியாக 'சம வேலைக்கு சமஊதியம் கோரிக்கை நிறைவேற்றப்படும்' என உறுதி அளிக்கப்பட்டது. தற்போது வரை நடவடிக்கை இல்லை.

2023ல் நடந்த போராட்டத்தால் இப்பிரச்னைக்கு தீர்வுகாண 3 நபர் குழுவை முதல்வர் ஸ்டாலின் அமைத்தார். அக்குழு விரைவாக செயல்பட்டு அறிக்கை வழங்கும் நடவடிக்கையே இல்லை. 2009ல் நியமனமான ஆசிரியர்களில் பலர் எவ்வித பயனுமின்றி ஓய்வு பெறுகின்றனர்.

இதைக் கண்டித்து ஜூலை 26ல் மாவட்ட அளவில் உண்ணாவிரதம் நடைபெறும். அதிலும் முன்னேற்றம் இல்லையென்றால் செப்டம்பரில் கோரிக்கை நிறைவேறும் வரை சிறை நிரப்பும் போராட்டம் நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அந்த போராட்டம் மிக வலுவானதாக இருக்கும் என்று SSTA இயக்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post