SPECIAL TET Exam Date - சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு !!
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்ட சிறப்பு அனுமதி மனு (SLP) எண். 1385/2025இல் 01.09.2025 அன்று அளிக்கப்பட்டுள்ள தீர்ப்பாணை அடிப்படையில் தமிழ்நாடு அரசினால் வெளியிடப்பட்ட அரசாணை (நிலை) எண். 231, பள்ளிக்கல்வித் (ஆ.தே.வா) துறை, நாள்.13.10.2025இல் தற்போது தமிழ்நாடு பள்ளிகளில் பணிபுரிந்து வரும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு மட்டும் முறைப்படியான ஆசிரியர் தகுதித் தேர்வுகளுடன்,
2026ஆம் ஆண்டில் சிறப்பு ஆசிரியர் தகுதித் தேர்வு
ஜனவரி-2026,
ஜீலை-2026,
டிசம்பர்-2026,
மாதங்களில் நடத்த ஆகிய ஆணையிடப்பட்டுள்ளது. இவ்வாணைக்கிணங்க, ஜனவரி-2026ஆம் மாதத்தில் சிறப்புத் தகுதித் தேர்வு உத்தேசமாக 24.01.2026 தாள்-I மற்றும் 25.01.2026 தாள்-II நடத்துவதற்கும். இதற்கான அறிவிக்கையை நவம்பர்-2025 மாத கடைசி வாரத்தில் வெளியிடவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேலும், ஜீலை-2026 மற்றும் டிசம்பர்-2026 ஆகிய மாதங்களில் நடத்த வேண்டிய சிறப்புத் தகுதித் தேர்வு சார்ந்த அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment