Title of the document

மனசுழற்சி நோய் யாருக்கு வருகிறது? இதன் அறிகுறிகள் என்னென்ன ?
பெண்களுக்கு ஏற்படும் முக்கியமான மனநோய்களில்ஒன்று OCD(Obsessive Compulsive Disorder) மனசுழற்சி நோய் என்று அழைக்கப்படுகிறது. இந்த நோயின் சிறப்பம்சமே தனக்கு இந்த நோய் இருப்பது பெரும்பாலும் பல பெண்களுக்கு தெரியாது. அதனால் இதற்கு சிகிச்சை அளிக்கவே முடிவதில்லை. இதற்கு காரணம் இதன் அறிகுறிகள் மிகவும் சாதாரணமாக இருப்பதுதான்.  மனசுழற்சி நோய்க்கான அறிகுறிகள் என்னென்ன என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1) அனைத்து காரியங்களையும் சரியாக செய்வது:
பெண்கள் தனிமையில் இருக்கும்போது தாங்கள் செய்யும் அனைத்து செயல்களும் கச்சிதமாகவும், சரியாகவும் இருக்க வேண்டுமென விரும்பினால் அவர்களுக்கு OCD நோய் உள்ளதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. இது போன்றவர்கள் உங்களுக்கு சாதனையாளர்களாக தோன்றலாம். ஆனால் சரியாக இருக்கும் ஒரு செயலை மேலும் சரியாக செய்ய வேண்டும் என நிர்பந்திப்பது OCD-க்கான அறிகுறியாகும். அனைத்து செயல்களிலும் இந்த நிலை தொடர்ந்தால் நாளடைவில் இதுவே பெரிய மனநோயாக மாறிவிடும்.
2)அதிக பட்டியல்கள் மற்றும் நினைவூட்டல்கள் தயாரித்தல்:
தனிப்பட்ட நேரம் முழுவதையும் பட்டியல் தயாரித்தல் மற்றும் குறிப்பு எடுத்தல் குறிப்பாக மறந்துவிட கூடாது என்பதற்காகவே செய்தால்  OCD உள்ளது என்று அர்த்தம். மறந்துவிடக்கூடிய செயல்கள் பற்றியும் அதனை மறந்துவிடக்கூடாது என்பதற்காகவும் குறிப்பெடுக்க தொடங்குவது நாளடைவில் செயல்கள் செய்வதை காட்டிலும் குறிப்பெடுப்பதிலேயே அதிக நேரம் செலவிடும்படி செய்துவிடும். இந்த நினைவூட்டல்கள் இன்றி  எந்த செயலும் செய்ய இயலாது என்ற நிலை வந்துவிட்டால் மருத்துவரை அணுக வேண்டியது அவசியமாகும்.  
3)அடிக்கடி இடத்தை சுத்தம் செய்தல்:
OCD என்னும் இந்த மனசுழற்சி நோயானது ஒரு வேலையே செய்யவேண்டும் என்று மட்டும் நினைக்க வைக்காது, மாறாக அந்த செயலை செய்யவிட்டால் என்ன ஆகுமோ? என்று பயம்கொள்ளவும் செய்யும்.  வீட்டை கடமை மற்றும் அன்பிற்காக அல்லாமல், வீடு இப்படி இருக்கிறதே என்ற பயத்துடன் சுத்தம் செய்த உங்களுக்கு OCD உள்ளது உறுதியாகிறது. இந்த பயம் வீடு, வேலை செய்யும் இடம் என தொடங்கி உடைகள், பயன்படுத்தும் பொருட்கள் என அனைத்து இடங்களையும் பயத்துடன் அடிக்கடி சுத்தம் செய்ய தூண்டும். தனிமை நேரங்களில் பொருட்களை அடுக்கி வைத்தும், சீராக்கி கொண்டும் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுங்கள்.
4)இருமுறை சரிபார்ப்பது :
பொதுவாகவே சரிபார்ப்பதும், சோதனை செய்வதும் பெண்களுக்கான அடிப்படை குணமாகும். ஆனால் இதுவும் OCDக்கான அறிகுறியாக இருக்க வாய்ப்புள்ளது. பெண்கள் தனிமையில் இருக்கும்போது தாங்கள் செய்யவேண்டிய மற்றும் செய்த வேலைகள் அனைத்தையும் இரண்டு அல்லது மூன்றுமுறை சரிபார்ப்பது OCD யாக இருக்க வாய்ப்புள்ளது. இந்த குறைபாடு வந்துவிட்டால் வீட்டை விட்டு வெளியேறும் முன் அனைத்தையும் இரண்டு முறை சரிபார்ப்பது, சரிபார்த்த பிறகும் அவர்கள் மனது அமைதியாகவே இருக்காது. அனைத்தையும் சரிபார்த்து கொள்வது நல்லதுதான் ஆனால் இரண்டு அல்லது மூன்று முறை சோதனை செய்வது வெளியே சென்றபிறகும் அதை பற்றியே சிந்தித்து கொண்டு இருப்பது நிச்சயம் பிரச்சினைதான்.
5) மீண்டும் மீண்டும் அழகுபடுத்துதல்:
  இடத்தை அழகாக வைத்திருப்பது நல்லதுதான். ஆனால்  தனிப்பட்ட நேரங்களில்  செல்லும் இடங்களையெல்லாம் அழகுபடுத்துவதோ, அலங்கரிப்பதோ OCD யாக இருக்கத்தான் வாய்ப்புள்ளது. OCD உள்ளவர்கள் எங்கேயாவது வெளியே செல்லும் முன் அவர்கள் வைத்த பொருட்கள் எல்லாம் அதே இடத்தில் இருக்கிறதா என்று பார்க்காமல் வெளியே செல்லமாட்டார்கள். அப்படி இல்லை என்றால் அதனை சரிபடுத்திவிட்டுத்தான் வெளியே நகருவார்கள். இதற்கு எவ்வளவு நேரமானாலும் சரி, அவர்கள் எவ்வளவு அவசரத்தில் இருந்தாலும் சரி இதனை செய்துவிட்டுத்தான் செல்வார்கள்.
6)ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் யோசிப்பது:
எல்லோருமே அவ்வப்போது ஒரே  விஷயத்தை மீண்டும் மீண்டும் நினைப்பதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். ஆனால் ஒரே விஷயத்தையோ அல்லது சூழ்நிலையையோ தனிமை நேரம் முழுவதும் மீண்டும் மீண்டும் நினைப்பது OCD- யின் அறிகுறியாக இருக்கலாம். OCD உள்ள பெண்கள் தனிமையில் அமர்ந்து ஒரே நிகழ்ச்சியை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டு இருப்பார்கள். அது நிகழ்ச்சியாகவோ, ஏதாவது உரையாடலாகவோ அல்லது அவர்கள் செய்த தவறாகவோ இருக்கும்.
7) ஒரே விஷயத்தை மீண்டும் மீண்டும் கேட்பது:
OCD உள்ளவர்களுக்கு நம்பிக்கையுணர்வு மிகவும் குறைவாக இருக்கும். அது அவர்கள் மேல் மட்டுமல்ல சுற்றியிருப்பவர்கள் மீதும் அவர்களின் செயல்கள், பேச்சுக்கள் என அனைத்தையும் இவர்கள் உறுதிசெய்து கொள்ள வேண்டுமென்று நினைத்துக்கொண்டே இருப்பார்கள். ஒருவர் ஏதேனும் ஒரு விஷயத்தை கூறினால் அதனை உறுதி செய்துகொள்ள மீண்டும் மீண்டும் அதே செய்தியை கேட்பார்கள். இது அவர்கள் உடனிருப்பவர்களுக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு காரணம் அவர்களின் தொடர்ச்சியான குழப்பமும், பதட்டமும்தான்.
சிகிச்சைகள்:
OCD நோயால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் இல்லை. ஆனால் அவர்கள் எப்போதுமே பயம், பதட்டம், சந்தேகம் போன்ற உணர்வுகளுடனேயே இருப்பார்கள். இதனால் அவர்களுக்கு மட்டுமின்றி அவர்கள் உடனிருப்பவர்களுக்கும் நிறைய பிரச்சினைகள் உருவாகும். இந்த அறிகுறிகள் தொடர்ச்சியாக இருந்தால் உடனடியாக மருத்துவரிடம் கவுன்சிலிங் பெறவேண்டியது அவசியம். கவுன்சிலிங் மட்டுமின்றி மேலும் சில மனோதத்துவ சிகிச்சைகளும் இந்த குறைபாட்டுக்கு தேவைப்படுகிறது. அனைத்திற்கும் மேலாக சுற்றியிருப்பவர்களின் அன்பும், புரிதலுமே இதற்கான மிகச்சிறந்த மருந்தாகும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post