Click Below Image To Join WhatsApp Group
KALVINEWS OFFICIAL ANDROID APP பெற கீழே உள்ள IMAGE கிளிக் செய்து GOOGLE PLAYSTORE-ல் DOWNLOAD செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

பள்ளிகளில் மாணவிகள் தலையில் பூ வைக்கவும், கொலுசு அணியவும், தடை விதிக்கப்பட்டு உள்ளது


தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில்,அனைத்து மாணவர்களும், மாணவியரும், பள்ளி நாட்களில் சீருடை மட்டுமே, அணிந்து செல்ல வேண்டும்.
*சில பள்ளிகளில், காலணிகளும், பல பள்ளிகளில், 'ஷூ'அணிந்தும் செல்லவேண்டும் என்பது விதி
*அதேபோல்,நர்சரி பள்ளி குழந்தைகள்,தங்கம், வெள்ளி ஆபரணங்கள் அணிந்து செல்லவும், தடைவிதிக்கப்பட்டுள்ளது.
*இந்நிலையில், சில அரசு பள்ளிகளில், மாணவியர் தலையில் பூ வைத்தும், கொலுசு அணிந்தும் வருகின்றனர். சில மாணவர்கள், கைகளில், பல வண்ண பட்டை மற்றும் கயிறு அணிந்து வரு கின்றனர்.



*இதனால், மாணவ - மாணவியர் இடையே பிரச்னை ஏற்படுவதாக, புகார்கள் எழுந்துள்ளன. இதையடுத்து, அனைத்து அரசு பள்ளிகளிலும், மாணவியர் பூ சூடி வர, தடை விதிக்கப்பட்டுள்ளது.
*இதுகுறித்து, பள்ளி கல்வி முதன்மை அதிகாரிகள் வழியாக, தலைமை ஆசிரியர்கள் அறிவுறுத்த பட்டு உள்ளனர்.
*அதேபோல்,மாணவ,மாணவியர், 'ஜீன்ஸ், டைட்ஸ்' உள்ளிட்ட ஆடைகள் அணியவும்
தேவையற்ற அணிகலன்கள் அணிவதற் கும், மருதாணிவைப்பதற்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளன.
 *தனியார் பள்ளிகளில், ஏற்கனவே இந்த கட்டுப் பாடுகள் அமலில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

0 Comments:

Post a Comment