Title of the document
அரசுபள்ளி மாணவர்களிடம் ஆங்கில மொழியின் முக்கியத்துவத்தை உணர்த்தி அவர்களுக்கு ஆங்கிலம் கற்றுக்கொடுக்கும் பணியில் மலேசியாவை சேர்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். காரைக்குடி ராமநாதன் செட்டியார் நகராட்சி உயர்நிலைப்பள்ளியில் மலேசியாவை சேர்ந்த டீம் நலா அமைப்பை சேர்ந்தவர்கள் சார்பில் ஆங்கில பேச்சு பயிற்சி முகாம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் பீட்டர்ராஜா வரவேற்றார். டீம் நலா ஒருங்கிணைப்பாளர் நல்லபெருமாள்ராமனாதன் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து பேசுகையில், ‘‘மாணவர்கள் தாழ்வு மானப்பான்மையை தூக்கி எறியவேண்டும்.
அரசு பள்ளிகளில் படிப்பது தான் சிறந்தது என்ற எண்ணத்தை வளர்த்து கொள்ள வேண்டும். நம்மிடம் உள்ள திறமையை வெளிக்காட்ட வேண்டும். தங்களை வெளிக்காட்டாமல் பலர் உள்ளதாலேயே முன்னேற்றம் அடையாமல் உள்ளனர். ஆங்கில வார்த்தைகளை நாமாக உருவாக்க கற்றுக்கொள்ள வேண்டும். தினமும் 60 நிமிடம் ஆங்கிலம் வாசித்தல் போதும், நிச்சயம் காற்றுக்கொள்ளலாம். கவனமாக கேட்க கற்று கொள்ள வேண்டும். நம்மால் முடியும் என்ற நம்பிக்கையை வளர்த்து கொண்டால் வெற்றி பெறலாம்’’ என்றார். 
இதுகுறித்து ஒருங்கிணைப்பாளர் நல்லபெருமாள்ராமனாதன் கூறுகையில், ‘‘நான் மலேசியாவில் ஆசிரியராக பணியாற்றுகிறேன். எனது சொந்தஊர் காரைக்குடி அருகே உள்ள ஏ.கருங்குளம். எனவே பிறந்த பகுதிக்கு எதாவது செய்ய வேண்டும் என்பதற்காக டீம் நலா என்ற அமைப்பை ஏற்படுத்தியுள்ளோம். இதில் நான் மற்றும்  கிருஷ்ணன்நல்லையா, சியாமளா, லதா, ராமனாதன், டாக்டர் சூரியபாரதி, டாக்டர் ஆதித்யா ஆகியோருடன் சேர்ந்து சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளில் ஆங்கில வகுப்புகளை எடுத்து வருகிறோம். மலேசியாவில் தற்போது 50 நாட்கள் விடுமுறை என்பதால் இதில் வகுப்புகள் எடுக்கிறோம். இந்தபள்ளியை பற்றி பேஸ்புக்கில் பார்த்து இங்கு வந்து பயிற்சி வகுப்புகள் நடத்தி உள்ளோம். ஆங்கில முக்கியத்தும் குறித்தும், உச்சரிப்பு பயிற்சி நடத்தப்படுகிறது’’ என்றார்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post