கஜா புயல் நிவாரணமாக உண்டியல் சேமிப்பை தந்த 1ம் வகுப்பு சிறுமி: ரூ.12,400ஐ அளித்தார்கஜா புயல் நிவாரணத்திற்காக உண்டியலில் சேகரித்த 12,400 ரூபாயை 1ம் வகுப்பு மாணவி அளித்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம், கவுண்டம்பாளையம் அடுத்த ஜி.என்.மில் பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். வழக்கறிஞர். இவரது மகள் தமிழினி (6). அங்குள்ள தனியார் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர் கடந்த 2 ஆண்டுகளாக பிறந்தநாள் பணம், தினசரி பெற்றோர் மற்றும்
உறவினர்கள் கொடுக்கும் பணம் ஆகியவற்றை உண்டியலில் சேமித்து வைத்து வந்துள்ளார்.

இந்நிலையில் திருவாரூர் மாவட்டம், குடவாசலை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியர் வெங்கட்ராமன் கடந்த சில நாளாக கோவை பகுதிகளில் புயல் நிவாரண தொகையை பொதுமக்களிடமிருந்து பெற்று வருகிறார்.

நேற்று கவுண்டம்பாளையம் பகுதியில் வெங்கட்ராமன் நிவாரணத்தொகை பெற்றுக் கொண்டிருந்தபோது அதை பார்த்த சிவக்குமாரும், அவரது மகளும் வீட்டில் தான் சேகரித்து வைத்திருந்த உண்டியலை உடைத்து அதில் இருந்த 12,400 ரூபாயை புயல் நிவாரண நிதியாக அளித்தார். இதை பார்த்த சிறுமியின் உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் சிறுமியின் இச்செயலை பாராட்டினர்.

0 Comments:

Post a Comment