Title of the document



மாநிலத்தில் முதன் முறையாக, வால்பாறை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களின் கல்வித்திறனை பெற்றோரும் அறியும் வகையில், 'கியூஆர் கோடு' முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கோவை மாவட்டம், வால்பாறை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில், 986 மாணவர்கள் படிக்கின்றனர். பிளஸ் 2 வகுப்பில் படிக்கும் மாணவர்களின் கல்வித்திறனை ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் கண்டறியும் வகையில் 'கியூஆர் கோடு' முறையில் அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளன. இதற்கான பணிகளை, வகுப்பு ஆசிரியர் சிதம்பரக்கண்ணன் செய்துள்ளார்.தலைமை ஆசிரியர் சிவன்ராஜ் கூறியதாவது:அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களை உயர்ந்த நிலைக்கு கொண்டுவர வேண்டும் என்பதற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.பிளஸ் 2 வகுப்பில், கணக்கு மற்றும் புள்ளியியல் பிரிவில் படிக்கும் மாணவர்களுக்கு, 'கியூஆர் கோடு' அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post