Title of the document
சிபிஎஸ்இ கீழ் இயங்கும் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியருக்கு தகவல் தொடர்பு அறிவை மேம்படுத்தும் வகையில், 22 மொழிகளையும் அறிமுகம் செய்து வைக்க வேண்டும் என்று சிபிஎஸ்இ உத்தரவிட்டுள்ளது. மத்திய மனித வள மேம்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் ‘பாஷாசங்கம்’(மொழிக்கான சங்கம்) ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளது. அதாவது, இந்திய அரசியல் அமைப்பு சட்டத்தின் அட்டவணை 8ல் சேர்க்கப்பட்டுள்ள 22 மொழிகளை, சிபிஎஸ்இ மாணவ, மாணவியர் அடிப்படை மொழியாக தெரிந்து கொள்ள செய்ய வேண்டும். அந்த மொழிகளை  பிரபலப்படுத்துவது, அந்த மொழிகளில் தகவல் தொடர்பு செய்ய குறைந்தபட்சம் 5 வாக்கியங்களை தினமும் பள்ளிகளில் போதிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, அந்தந்த மாநிலத்தின் கல்வித்துறை செயலாளர்களுக்கு பாஷா சங்கம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அதேபோல, சிபிஎஸ்இ தலைவருக்கும், கேந்திரிய வித்யாலயா சங்கதனுக்கும் அனுப்பியுள்ளது. இதன்படி மேற்கண்ட இந்திய மொழிகளாகிய 22 மொழிகளையும் தினமும் பள்ளி மாணவர்களுக்கு குறைந்தபட்சம் 5 வாக்கியங்கள் கற்றுத் தர வேண்டும். இதுதொடர்பாக ஒரு திட்டத்தை பாஷாசங்கம் வகுத்து கொடுத்துள்ளது. அதன்படி, நவம்பர் 27ம் தேதி முதல் டிசம்பர் 21ம் தேதி வரை அனைத்து பள்ளிகளிலும் மேற்கண்ட மொழிகளை போதிக்க வேண்டும். இந்த மொழிகள் தவிர வேறு இந்திய மொழிகள் குறித்து கற்றுத் தர ஆசிரியர்களிடம் மாணவர்களோ, பொதுமக்களோ, பெற்றோரோ கேட்கும்பட்சத்தில், குறிப்பிட்ட அந்த மொழியில் தேர்ந்த ஆட்களை அழைத்து வந்து பள்ளி இறைவணக்க நேரத்தில் தினமும் 5 வாக்கியங்கள் சொல்லித் தரலாம். அந்த வகையில் மேற்கண்ட திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தும் பள்ளிகளை மத்திய மனித வள மேம்பாட்டுத்துறை தேர்வு செய்து, அந்த பள்ளிகளுக்கு சிறந்த பள்ளிக்கான விருது வழங்க உள்ளது.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post