
கூடலுார் பழைய சந்தை வளாகத்தில் மூடப்பட்ட அரசுப்பள்ளிக்கட்டடங்கள் அதிக சேதமடைவதற்குள் மாற்றுப்பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.கூடலுார் தாமரைக்குளம் செல்லும் வழியில் பழைய சந்தை உள்ளது. இந்த வளாகத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி பல ஆண்டாக செயல்பட்டு வந்தது. இப்பள்ளி 6ஆண்டுகளுக்கு முன், மாணவர்கள் சேர்க்கை குறைவால் மூடப்பட்டது.இந்தப் பள்ளிக்கட்டடங்கள் தேர்தல் நேரத்தில் மட்டும் ஓட்டுச்சாவடியாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. மற்ற நேரங்களில் பயனற்று இரவில் மது அருந்துதல் உள்ளிட்ட சமூக விரோதச் செயல்கள் அதிகம் நடக்கின்றன. பல கட்டடங்கள் இடிந்து விழும் ஆபத்தான நிலையிலும் உள்ளது. இதை உடனடியாக சீரமைத்து பயன்பாட்டிற்கு கொண்டுவர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Post a Comment