அரசு ஊழியர் ஓய்வூதியம் தொடர்பாக ஆய்வு செய்ய அமைக்கப்பட்டிருந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஸ்ரீதர் குழு தனது அறிக்கையை செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்தது. தலைமைச் செயலகத்தில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் இந்த அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்துக்குப் பதிலாக, பழைய ஓய்வூதியத் திட்டமே செயல்படுத்தப்பட வேண்டுமென பல்வேறு அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்கள் கோரிக்கை விடுத்து வந்தன. அதுகுறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தாஷீலா நாயர் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழுவின் பொறுப்பில் இருந்து அவர் சிறிது காலத்திலேயே விலகினார்.
இதைத் தொடர்ந்து, குழுவின் தலைவராக டி.எஸ்.ஸ்ரீதர் கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நியமிக்கப்பட்டார். அவர் தனது பரிந்துரைகளை தமிழக அரசிடம் செவ்வாய்க்கிழமை வழங்கினார். இந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Post a Comment