Title of the document
தமிழ் வழியில் நீட் தேர்வு  எழுதுவது தொடர்பாக உச்ச நீதிமன்றம் வழங்கிய உள்ள தீர்ப்பை மறு சீராய்வு செய்ய தமிழக அரசு முறையிட வேண்டும் என்று டெக் 4 ஆல் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் பத்திரிகையாளர்களை சந்தித்த டெக் 4 ஆல் அமைப்பின் தலைவர் ஜிபி ராம் பிரகாஷ், “ஏழை எளிய, தமிழ் படித்த மாணவர்களின் நலனுக்காக தமிழக அரசிற்கு சில கோரிக்கைகள் வைக்கிறேன். கஜா புயல் பாதிப்பு காரணமாக 2019ஆம் ஆண்டு நடைபெறும் நீட் தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும்.  தமிழ்வழி நீட் தேர்வு எழுதும் மாணவர்களின் எதிர்காலம் கருதி தமிழக அரசு உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை மறுசீராய்வு வழக்கை உச்சநீதிமன்றத்தில் தொடர வேண்டும். தமிழக சட்டமன்றத்தில் 2017 பிப்ரவரி 1 அன்று ஏகமனதாக நிறைவேற்றிய எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் படிப்புகளுக்கான 2017 ஆண்டு தமிழ்நாடு அட்மிஷனுக்கு உடனடியாக ஒப்புதல் வழங்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தை அணுகுவதற்கும் மிகுந்த பொருட்செலவு என்ற காரணத்தால் தென் மாநிலங்களுக்கான உச்ச நீதிமன்ற கிளை ஒன்றை தென்மாநிலங்களில் அமைக்கப்பட வேண்டும்” என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்தார்.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post