Title of the document

 


எங்கள் பள்ளி மாணவர்களுக்கு நாங்கள் தயாரித்துள்ள டிஜிட்டல் அடையாள அட்டை போல நீங்களும் தயாரிக்கலாம்.

இங்கு பதிவிட்டுள்ள கூகுல் டாக்குமென்ட்டை உங்கள் கூகுல் ட்ரைவிற்கு மாற்றி பின் அதில் முதல் பக்கத்தில் உங்கள் பள்ளியின் பெயரை மாற்றுங்கள்.

அடுத்து மாணவர் விவரத்தில் உங்கள் வகுப்பு மாணவரின் விவரத்தையும் புகைப்படத்தையும் பதிவு செய்யுங்கள்.

பிறகு புதிதாக கூகுல் டாக்குமென்ட் ஒன்றை உருவாக்கி அதில் வீட்டுப்பாடம் என்ன தரலாம் என்று தயாரித்து அதன் லிங்க்கை இதில் உள்ள வீட்டுப்பாட லிங்க்கில் பேஸ்ட் செய்யுங்கள்.

அடுத்து ஆன்லைன் தேர்வு நாங்கள் ஒவ்வொரு பாடத்திற்கும் அனுப்புவோம். அதன் பிறகு ரேங்க் அட்டையில் உங்கள் மாணவனின் மதிப்பெண்ணை பதிவு செய்யுங்கள்.

மீதம் உள்ள கற்றல் கருவிகள் எதையும் மாற்ற வேண்டாம். அனைத்தும் மூன்று பருவத்திற்கும் உள்ளது.

இறுதியாக உங்கள் வகுப்பில் எத்தனை மாணவர்கள் உள்ளனரோ அத்தனை பேருக்கும் இதை காப்பி செய்து பேஸ்ட் செய்து பின் ஒவ்வொரு மாணவனின் பெயரையும் டைப் செய்யுங்கள்.

பிறகு இதனை மவுசில் ரைட் க்ளிக் செய்து இதன் லிங்க்கை காப்பி செய்து கூகுல் க்ரோமில் க்யூஆர் கோட் ஜெனரேட்டர் என டைப் செய்து அதில் இந்த லிங்கை பேஸ்ட் செய்த உடன் க்யூஆர் கோட் கிடைக்கும். அதனை மாணவரின் அடையாள அட்டையில் பேஸ்ட் செய்தால் போதும்.

வேறு ஏதேனும் தகவல்களுக்கு உங்கள் சந்தேகங்களை கேளுங்கள்.  இதில் உள்ள மீதித்தகவல்கள் மூன்று பருவத்திற்கும் உள்ளது. அதனை தொடர்ந்து நாங்கள் பதிவிடுவோம். அனைத்தும் பல மாதங்கள் இரவுகள் கடந்து தயாரிக்கப்பட்டது. அனைத்து பள்ளிகளுக்கும் ஸ்மார்ட் அடையாள அட்டை.எளிமையாக

அன்புடன்
ஞா.செல்வகுமார்
99435 87673
ஊ.ஒ.தொ.பள்ளி திருப்புட்குழி காஞ்சிபுரம் ஒன்றியம்.


# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post