
சுடு தண்ணீர் சுவையற்றதாக இருப்பதற்கு காரணம் என்ன?
காய்ச்சல் வந்தா சுடு தண்ணி குடி. இருமல் வந்தா சுடு தண்ணியை குடி, தொண்டை வலி வந்தால் சுடு தண்ணிய குடி என்று பெரியவர்கள் சொல்வார்கள். ஆனால் யாருக்கும் சுடு தண்ணியை குடிக்க பிடிக்காது. காரணம் சுவை இல்லாமல் இருக்கும். யாருக்கும் குடிக்க பிடிக்காது. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் பலவகை உப்புகளும் வாயுக்களும் சத்துக்கலாக் கரைந்துள்ளன. வாயுக்களைப் பொறுத்தவரை ஆக்ஸிஜன் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடு வாயுக்கள் அதிகம் கரைந்துள்ளன.
உப்புக்களைப் பொறுத்தவரை கால்சியம் சல்பேட், மக்னிசியம் கார்பனேட், மக்னீசியம் சல்பேட் போன்ற உப்புகள் கரைந்துள்ளன. இந்த உப்புக்களே நீரின் சுவைக்கும் கடினத்தன்மைக்கும் காரணமாகியுள்ளன. இக்கடின நீரில் சோப்பு அதிக நுரை தராது.
நீரை நாம் கொதிக்க வைக்கும்போது அதில் கரைந்துள்ள வாயுக்கள் வெளியேறிவிடுகின்றன. மேலும் அதிலுள்ள கார்பனேட் மற்றும் ஹைட்ராக்சைடு உப்புக்கள், நீரைக் கொதிக்க வைக்கும் பாத்திரத்தின் உட்புறத்தில் உப்புக்களாகப் படிந்துவிடுகின்றன. எனவே கொதிக்க வைத்த நீரின் சுவை நீங்கிவிடுகிறது. இதன் காரணமாகவே சுடு தண்ணி சுவை இல்லாமல் இருக்கிறது.
Post a Comment