Title of the document
தமிழக அருங்காட்சியகத் துறையில்



காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.
இதற்கு தாழ்த்தப்பட்ட பிரிவைச் சேர்ந்த தகுதியானவர்களிடம் இருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Curator
காலியிடங்கள்: 04
சம்பளம்: மாதம் ரூ.36700 -116200
வயதுவரம்பு: 01.07.2019 தேதியின்படி குறைந்தபட்சம் 18 பூர்த்தி அடைந்திருக்க வேண்டும். உச்சபட்ச வயதுவரம்பு கிடையாது.
தகுதி: விலங்கியல், தாவரவியல், புவியியல், மானுடவியல் அல்லது இந்திய தொல்லியல், சமஸ்கிருதம், வரலாறு போன்ற ஏதாவதொரு துறையில் முதுகலை பட்டம் பெற்றிருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். தமிழ்மொழி குறித்த அறிவு பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
பதிவுக் கட்டணம்: ரூ.150 மட்டுமே.
எழுத்துத் தேர்வு மையம்: சென்னை, மதுரை மற்றும் கோவை. எழுத்துத் தேர்வு தாள்- 1, தாள் -II என 500 மதிப்பெண்கள் கொண்டது. நேர்முகத் தேர்வு 70 மதிப்பெண்கள் என 570 மதிப்பெண்களுக்கு நடத்தப்படும்.



விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்
www.tnpsc.gov.in / www.tnpscexams.net / www.tnpscexams.in என்ற இணையதளங்கள் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.tnpsc.gov.in/Notifications/2019_06_Notifyn_Curator.pdf என்ற லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 24.02.2019
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post