வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதால் அரசு ஊழியர்களுக்கு ஊதியம் தாமதமாக வழங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 22ம் தேதி முதல் ஜாக்டோ-ஜியோ அமைப்பினர் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்தி வந்தனர்.
நேற்று போராட்டம் வாபஸ் பெறப்பட்ட நிலையில், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட
ஊழியர்கள் வராத நாட்களுக்கு சம்பளம் பிடித்தம் செய்ய அரசு முடிவு
செய்துள்ளது.
Post a Comment