கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள பறக்கை அரசு நடுநிலை பள்ளிக்கு தேவையான விளையாட்டு உபகரணங்கள், பீரோ, இருக்கைகள், மின் விசிறிகள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்களே இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக மேள தாளங்கள் முழங்க பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே பறக்கை பகுதியில் உள்ளது அரசு நடுநிலை பள்ளி. இங்கு 150 க்கும் மேற்ப்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மாணவ மாணவிகளின் கல்விக்கு பயன்படும் விதமாக பள்ளிக்கு தேவையான நோட் புக், பென்சில், மின்விசிறிகள், குடிநீர் பாட்டில்கள் பீரோ, இருக்கைகள், விளையாட்டு உபகரணங்கள் உட்பட 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை பெற்றோர்கள் இணைந்து பள்ளிக்கு சீர் வரிசையாக வழங்கினார்கள்.
பெற்றோர்கள் அளித்த அனைத்து பொருட்களும் ஊர் சமுதாய நல கூடத்திற்க்கு கொண்டுவரப்பட்டு அங்கிருந்து நூற்றுக்கும் அதிகமான பெற்றோர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இணைந்து மேள தாளம் முழங்க பள்ளிக்கு எடுத்து வந்து அதனை பள்ளி நிர்வாகிகளிடம் வழங்கினர்.
தங்கள் குழந்தைகள் படிக்கும் அரசு பள்ளி அனைத்து வசதிகளுடன் அமைந்து அதனுடன் பள்ளி வளம் பெற்றால் தங்கள் குழந்தைகளின் எதிர்காலமும் வளமானதாக அமையும் என்பதால் தாங்கள் அனைவரும் ஒன்றிணைந்து இந்த சீர் வரிசை பொருட்களை வழங்குவதாக பெற்றோர்கள் தெரிவித்தனர்.
Post a Comment