Title of the document

பிளஸ் 2 தேர்வு நாளை தொடங்குகிறது.

 தேர்வை 8 லட்சத்து 50 ஆயிரம் மாணவ, மாணவியர் எழுதுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 தேர்வு எழுதும் மாணவர்களை சோதனை என்ற பெயரில் பயமுறுத்தக் கூடாது என்றும் தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

 தமிழகம், புதுச்சேரியில் இயங்கும் 7 ஆயிரம் மேனிலைப் பள்ளிகளில் படித்து வரும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நாளை தொடங்கி 19ம் தேதி வரை நடக்கிறது.

 பள்ளிகள் மூலம் மட்டும் 8 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

 இதையடுத்து, 8 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. பொதுத் தேர்வின்போது கடந்த ஆண்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்ட  15 நிமிட  சலுகை இந்த ஆண்டும் ஒதுக்கப்படுகிறது.

 அந்த நேரத்தில் கேள்வித்தாள் படித்துப் பார்த்தல், விடைத்தாள் முகப்பில் விவரங்கள் குறிக்கவும் பயன்படுத்த வேண்டும்.

 கேள்வித்தாளை பொறுத்தவரையில் கடந்த ஆண்டு போல இல்லாமல் இந்த ஆண்டுக்கான கேள்வித்தாளில் சில மாற்றங்களை தேர்வுத்துறை செய்துள்ளது.

 இதற்கான விவரங்கள் கடந்த மாதம் அனைத்து பள்ளிகளுக்கும் தேர்வுத்துறை அனுப்பி வைத்துள்ளது. அதன்படியே பொதுத் தேர்வில் கேள்விகள் கேட்கப்படும்.

 இதையடுத்து, தேர்வு நேரத்தில் தேர்வு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் கடைபிடிக்க வேண்டிய விதிகளை தேர்வுத்துறை வெளியிட்டுள்ளது.

 இதன்படி, தேர்வு தொடங்குவதற்கு முன்னதாக, தேர்வு அறைப் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் அன்றயை தேர்வுக்கான விடைத்தாள் எண்ணிக்கையை மாணவர்களுக்கு  தெரிவிக்க வேண்டும்.

 வழங்கப்படுகின்றன விடைத்தாள்களில் உள்ள பக்கங்களை சரிபார்க்க சொல்ல வேண்டும்.

தேர்வு எழுதும் மாணவர்கள் தமது முப்புச் சீட்டில் உள்ள தங்களின் போட்டோ, பெயர், பாடம், பயிற்று மொழி ஆகிய விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும், மாணவர்கள் தாங்கள் அமர்ந்துள்ள இருக்கையின் அடியில் எந்த துண்டுச்சீட்டும் இல்லை என்பதை தேர்வு தொடங்குவதற்கு முன்பே உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விடைத்தாளின் எந்த ஒரு பகுதியிலும் தமது தேர்வு எண்ணையோ அல்லது பெயரையோ கண்டிப்பாக எழுதக் கூடாது. தேர்வு எழுதும் ேபாது, விடைகளை உத்தேசமாக போட்டுப் பார்ப்பதற்கு விடைத்தாளின் அடிப்பகுதியை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

 விடைத்தாளில் எக்காரணம் கொண்டும் ஸ்கெட்ச் பேனாவையோ, அல்லது வண்ண பென்சில்களையோ பயன்படுத்தி அடி கோடிடக் கூடாது.

 கூடுதல் விடைத்தாள் வேண்டும் என்றால் கடைசி இரண்டு பக்கங்கள் எழுதும் முன்பே கூடுதல் விடைத்தாளின் தேவையை  அறைக் கண்காணிப்பாளர்களிடம்  தெரிவிக்க வேண்டும்.

மாணவர்கள் ஒரு சில விடைகளை கோடிட்டு அடித்தால், ‘மேற்படி விடை என்னால் அடிக்கப்பட்டது’ என்று குறிப்புரையை மாணவர்கள் எழுத வேண்டும் என்று அறைக்கண்காணிப்பாளர்கள் தெரிவிக்க வேண்டும்.

அதேபோல பறக்கும் படை உறுப்பினர்கள், தேர்வு மையங்களில் சோதனையில் ஈடுபடும் போது மாணவர்களை பயமுறுத்தும் வகையில் செயல்படக் கூடாது என தேர்வுத்துறை தெரிவித்துள்ளது.

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post