Title of the document
குறட்டையை தவிர்ப்பது எவ்வாறு?.

    குறட்டையை தவிர்ப்பதற்கு என ஒரு கருவி வந்துள்ளது. இது சி.பி.ஏ.பி. என அழைக்கப்படுகிறது. இந்த கருவி தொடர்ச்சியாக காற்றினை சுவாசத்தில் பங்கு பெற செய்கிறது. காற்று எளிதாகவும், தொடர்ந்தும் உட்செல்வதற்கு ஏற்ற வகையில் செயல்படுகிறது. அதனால் தூக்கம் தடைபடுவதில்லை. எனினும் இத்தகைய கருவிகள் சற்று விலை அதிகம் கொண்டவை.

    உங்களது கழுத்தின் தசைகள் பலப்படுத்தப்பட்டு இருந்தால் பெரும்பாலும் மூச்சு விடுவதில் உள்ள சிரமம் குறையும். காற்று மூச்சு குழல் வழியே சிரமம் இன்றி பயணிக்கும். எனவே தூங்கும்போது கைகளை முகத்திற்கு எதிராக வைத்து கொள்ளவும். பின்னர் தலையினை கையின் உதவியால் எதிர்புறம் திருப்பவும். இந்த முறையை தலையின் இருபுறமும் செய்யவும். சிறிது நேர இடைவெளி விட்டு இதனை தொடரவும். இதேபோல் தலையை மேல் மற்றும் கீழ் திசைகளில் திருப்பவும். இதற்கும் சற்று இடைவெளி விடுதல் அவசியம். இவ்வாறு தூங்கும் முன் படுக்கையறையில் சிறிது நேரம் தொடர்ந்து செய்து வரவும்.

குறட்டையை தடுக்க வழிகள்

    நீங்கள் அதிக உடல் எடை கொண்டவர் என்றால் அதற்கும் குறட்டைக்கும் தொடர்பு உள்ளது. எனவே உங்கள் உடல் எடையை சிறிது குறைத்தால் அது குறட்டையை தவிர்ப்பதற்கு வழிவகுக்கும்.     சிலர் மூக்கின் வழியாக குறட்டை விடுவதும் உண்டு. இவர்கள் தூங்கும்போது வாய் வழியாக காற்றை சுவாசிக்க கற்றுகொண்டால் குறட்டையானது தவிர்க்கப்படும். அதற்கு உதவியாக மூக்கை கெட்டியாக பிடித்து கொள்ளும் கிளிப் போன்றவற்றை உபயோகிப்பதால் எளிதாக தூங்க இயலும். நீராவிப் பிடிப்பது ஆவிப் பிடித்தாலும், குறட்டை வருவதை தவிர்க்கலாம். ஏனெனில் இது மூக்கில் உள்ள அடைப்புக்களை நீக்கி, காற்று எளிதாக செல்ல வழிவகுக்கும்.

    இந்த குறட்டையினை தவிர்ப்பதற்கு உகந்ததாக தற்போது பல சுவாச தைலங்கள் (வேப்பரப்) சந்தையில் வந்துள்ளன. இவற்றை பாதிக்கப்பட்டோர் தங்களது மார்பு பகுதியில் நன்றாக தடவி கொள்ளவும். இவ்வாறு செய்வதால் சுவாசம் மேற்கொள்ளும்போது காற்றானது எளிதில் மூக்கினுள் சென்று வரும். மேலும் இது மூக்கில் தடையேற்படுத்தும் கோழை போன்றவற்றை இளகச்செய்து விடும். இதனால் சுவாசம் அமைதியாகவும், எளிதாகவும் நடைபெறும்.
    குறட்டை விடுவதில் மூக்கின் உட்புறம் அமைந்துள்ள எலும்பு பகுதியும், சதை பகுதியும் ஒழுங்காக அது அமைய வேண்டிய இடத்தில் இல்லாமல் சிலருக்கு இடம் மாறி அமைந்திருக்கும். இதனை சிறிய அறுவை சிகிச்சையின் உதவியால் எளிதில் சரி செய்து விடலாம். குறட்டையையும் தவிர்த்து விடலாம். இவ்வாறு குறட்டையை தடுப்பதற்கு பல வழிகள் உள்ளன.

குறட்டையை தடுக்க என்ன செய்யலாம்?

தூங்கும்போது தலைப் பகுதியை ஓரளவு உயர்த்திக்கொள்ள வேண்டும்.

மல்லாக்கப் படுக்க வேண்டாம்.

ஒரு பக்கமாகத் தலையைச் சாய்த்துப் படுக்க வேண்டும்.

உடல் எடையைச் சீராக வைத்துக்கொள்ள வேண்டும்.

தைராய்டு பிரச்சினைக்கு மருந்து சாப்பிட வேண்டும்.

மது, புகைப்பழக்கத்தை நிறுத்த வேண்டும். புகைப்பிடித்தால் உடலுக்கு ஏற்படும் பல்வேறு பிரச்சனைகளில் ஒன்று தான் குறட்டை விடுவது. ஏனெனில் புகைப்பிடிக்கும் போது, அது தொண்டையில் புண் மற்றும் வீக்கங்களை உருவாக்குவதால், அது மூச்சுவிடுவதில் சிரமத்தை ஏற்படுத்திவிடும்.

 மது அருந்துதலை நிறுத்துவது மது அருந்துவது, தூக்க மாத்திரைகளை உட்கொள்வது போன்றவற்றை நிறுத்தினால், அது தசைகளை தளர்வடையச் செய்து, காற்றை எளிதாக செல்ல உதவும்.

சளி அல்லது ஜலதோஷம் பிடித்தால், அதற்கு உடனே சரியாக சிகிச்சை அளித்து வந்தால், குறட்டை விடுவதைத் தவிர்க்கலாம்.

இரவில் தூங்கும் போது பிட்சா, பர்கர், சீஸ் பாப்கார்ன் போன்ற அதிக கொழுப்புள்ள உணவுப் பொருட்களை உட்கொண்டால், அது சளியின் உற்பத்தியை அதிகரித்து, குறட்டைக்கு வழிவகுக்கும். எனவே கொழுப்புச்சத்துள்ள உணவுப் பொருட்களை இரவில் தவிர்ப்பது நல்லது.

தவிர்க்க வேண்டியவை
சுவாசப் பாதையில் தேவையின்றி சதை வளர்ந்தால் சீராக காற்று போக வழியின்றி குறட்டை ஏற்படலாம். எனவே சதை வளராமல் இருக்க உடல் எடையில் கவனம் வேண்டும். பக்க வாட்டில் படுக்க வேண்டும். 4 அங்குல உயரத்திற்கு மேல் தலையணை வைத்து தூங்க கூடாது.

சாப்பிட்ட உடன் படுக்க போக கூடாது. புகை பிடிக்க கூடாது. அளவுக்கு அதிகமான மருந்துகள் சாப்பிடக் கூடாது. மருந்து அருந்த கூடாது. அத்தோடு இதனால் பாதிக்கப்படுபவர்கள் தொண்டை மூக்கு, காது நிபுணரை அணுகி ஆலோசனைகளை பெற்றுக் கொள்ள வேண்டும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post