Title of the document
 குறட்டை! குறட்டை நீங்க! குறட்டை விடுவதை நிறுத்த! குறட்டை வராமல் தடுக்க! குறட்டை வராமல் இருக்க!
குறட்டை ஏன் வருகிறது?
ஏன் தூங்கும் போது குறட்டை வருகிறது என்று தெரியுமா?

குறட்டை என்றால் என்ன?
பொதுவாகக் குறட்டை வயதானவர்களுக்கு மட்டும்தான் வரும் என்ற எண்ணம் எல்லோரிடமும் இருக்கிறது. இது தவறு, வயது வித்தியாசமின்றி அனைவருக்கும் குறட்டை வரும். அதாவது, சுவாசிக்கும் போது வெளியேறும் சப்தத்தைத்தான் குறட்டை என்கிறோம்.

நாம் உறங்கியபின், நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்றே சாவகாசமாக வேலை செய்ய ஆரம்பிக்கும். இந்த நேரத்தில் நம் தொண்டையானது சுருங்கத் தொடங்கும். சுருங்கும் தொண்டைவழியாக செல்லும் காற்றுக்கு இப்போது உள்சென்று வெளியேற போதிய இடம் இல்லை. ஆக சுருங்கிய தொண்டை வழியாக செல்லும் காற்றானது அழுத்தத்துக்குட்படுகிறது. அழுத்தம் நிறைந்த காற்று தொண்டையின் பின்புற தசைகளை அதிரச் செய்கின்றன. இந்த அதிர்வைத் தான் நாம் குறட்டை என்கிறோம்

விழித்திருக்கும்போது வராத குறட்டை, தூங்கும்போது மட்டும் ஏன் வருகிறது?

தூங்கும்போது தொண்டை தசைகள் தளர்வடைந்து ஓய்வெடுக்கின்றன. அப்போது மூச்சுப் பாதையின் அளவு குறுகிவிடுகிறது. இப்படிக் குறுகிய பாதையில் சுவாசக் காற்று செல்ல முற்படும்போது சத்தம் எழுவது வழக்கம்தான். இது புல்லாங்குழல் தத்துவத்தைச் சார்ந்தது.
அடுத்து, மல்லாந்து படுத்து உறங்கும்போது, தளர்வு நிலையில் நாக்கு சிறிது உள்வாங்கித் தொண்டைக்குள் இறங்கிவிடும். இதனாலும் மூச்சுப் பாதையில் தடை ஏற்பட்டுக் குறட்டை வருகிறது.

குறட்டையின் வகைகள்
குறட்டையின் தீவிரத்தன்மையைப் பொறுத்து நோயாளிகளை 3 குழுக்களாக வகைப்படுத்தலாம்.

1. மெல்லிய குறட்டை- அடுத்திருக்கும் அறையில் ஒலியைக் கேட்க முடியும். மூச்செடுப்பதில் சிரமம் இல்லை.

2. உயரமான குறட்டை- கதவு மூடி இருந்தாலும் கூட அடுத்துள்ள அறையில் ஒலியைக் கேட்கலாம்.

3. உறங்கும் போது மூச்சுத் திணறுதல், நேரத்துக்கு நேரம், மூச்சு 10 வினாடிகளுக்கு மேலாக நிறுத்தப்படும்.

மாரடைப்பு அபாயம்:

7 மணி நேர நித்திரையின் போது 30 முறை மூச்சு திணறல்  ஏற்பட்டால் இது ஆபத்தானதாக இருக்கலாம். பெருமூச்செடுத்த வண்ணம், நேரத்துக்கு நேரம் நோயாளி தூக்கம் கலையலாம்.

ரத்தத்தில் காணப்படும் குறைவான செறிவுடைய ஆக்சிஜன் இதயம், சுவாசப்பை மற்றும் மூளையை பாதிக்கலாம். ரத்த அழுத்தம் உயர்வடைவதால், மாரடைப்பு ஏற்படும்.

கட்டிலில் மரணம் கூட ஏற்படலாம். இந்த நோயாளிகள் பகலில் கூட நித்திரைத் தன்மையை, சோம்பேறித்தனத்தை உணர்வார்கள். டாக்டர் தூக்க வரலாற்றை சோதிக்கும் போது, இந்த பிரச்சினை பற்றி கூடுதலாக அறிந்த நோயாள ரின் துணையும் இருக்க வேண்டும்.

டான்சில் வீக்கம், அடினாய்டு பிரச்சினைகள் ஏற்படும் போதோ சளி பிடிக்கும் போதோ குறட்டை சத்தம் ஏற்படலாம். இந்தப் பிரச்சினைகளால் ஏற்படும் அடைப்பு நீங்கியவுடன், குறட்டை சத்தமும் நின்று விடும். அதிக உடல் எடை கொண்ட குழந்தைகள் மற்றும் இள வயதினருக்கு குறட்டை ஏற்படுகிறது.

கழுத்தைச் சுற்றி அளவுக்கு அதிகமான தசை வளர்வதால், சதை அடைப்பு உருவாகி, குறட்டை ஏற்படுகிறது. ஆபத்தான மருத்துவக் கோளாறாக இது கருதப்படுகிறது. ஆபத்தான, தூக்கத் தடை ஏற்படுத்தும் நோயாக இது கருதப் படுகிறது.

ஆழ்ந்த தூக்க நிலைக்குச் செல்லும் போது கண்கள் வேகமாக அசையும், அந்த நேரத்தில் நம் மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளியேறும். இதற்கு `அப்ஸ்ட்ரக்டிவ் ஸ்லீப் அப்னியே' என்று பெயர். அந்த நேரத்தில் குறட்டையும் அதிகரிக்கும். ஒரு நேரத்திற்கு 18-க்கும் மேற்பட்ட முறை நம் கண்கள் வேகமாக அசைந்து, மூச்சுக் காற்றும் வேகமாக உள் சென்று வெளிவருகிறது.

குறட்டை விடும் போது திடீரென நின்று திடீரென அதிகரிக்கும் சுவாசத்தால் நம் உடலில் ரத்த அழுத்தம் அதிகரித்து இதய அடைப்பு திடீர் மரணம் ஆகியவை ஏற்படலாம்.

குறட்டை வரக் காரணங்கள்:

நாம் தூங்கும் போது தலைக்கு வைத்து கொள்ளும் தலையணையை மிகவும் பெரிதாக உயரமாக வைத்துக் கொள்வதால் ஏற்படும். சில வகையான ஒவ்வாமை காரணமாக சுவாசக் குழாயில் ஏற்படும் சளி, சிலருக்கு உடல் பருமன் காரணமாகவும் குறட்டை  ஏற்படுகிறது.

குறட்டையை தவிர்க்க  நல்ல வழிகள்
  
மனிதர்களின் வாழ்நாளில் மூன்றில் ஒரு பங்கு நேரத்தை தூங்குவதில் செலவிடுகின்றனர், சராசரியாக ஒரு மனிதர் 60 ஆண்டுகள் இவ்வுலகில் வாழ்கிறார் என வைத்துக்கொண்டால் 20 வருடங்கள் உறக்கத்தில் கழிகிறது. குறட்டை என்பது நாம் தூங்கும் போது, நம் சுவாசக்குழாயில் உள்ள தசைகள் சற்று ஓய்வுக்கு உள்ளாகும் வகையில் தளர்ந்து விடும். மூச்சுக் குழாயில் தற்காலிக அடைப்பு ஏற்படுகிறது. மூச்சு வெளியேறும் போது இந்த அடைப்பை மீறி காற்று வெளியேறுவதால், விதவிதமான ஒலிகளை எழுப்புகிறது. இது தான் குறட்டைச் சத்தமாக நமக்கு கேட்கிறது

குறட்டையினால் ஏற்படும் விளைவுகள்
தூங்குவதில் பல ரகம் உண்டு. சிலர் அடித்து போட்டது போல் தூங்குவர். சிலர் மலர்களை போல் உறங்குவர். சிலர் கும்பகர்ணன் போல் தூங்குவர். குறட்டை விட்டு தூங்குவோர் இதில் ஒரு ரகம். பொதுவாக குறட்டை விடுவோர் பார்ப்பதற்கு நிம்மதியாக உலகை மறந்து உறங்குவது போல் காணப்படுவார்கள். ஆனால் உண்மையில் குறட்டை அவர்களை ஒரு வழி செய்துவிடும். மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். அருகில் படுத்து இருப்பவர்களுக்கு தொல்லை தரும். இதனால் வெளிநாடுகளில் பல தம்பதியர்கள் விவாகரத்து வரை கூட சென்ற சம்பவங்களும் நடந்ததுண்டு. யாராவது குறட்டை விட்டு தூங்கினால் அவனுக்கென்ன நிம்மதியாக தூங்குகிறான் என பலர் நினைப்பதுண்டு. ஆனால் அது தவறு. குறட்டை விடுபவர் நன்றாக தூங்க முடியாது என்பதுடன் பல பாதிப்பு நிலைக்கும் தள்ளப்படும் நிலையும் வரலாம். குறட்டை விடுபவர் மனம் தெளிவாக இருக்காது. உடல் மிகவும் களைப்பாக இருக்கும் உடலில் சக்தி குறைவாக இருக்கும். தெளிவற்ற சிந்தனை வரும். அதிகமாக கோபம் வரும். இதுமட்டுமின்றி உடலுக்கு போதிய அளவு பிராணவாயு கிடைக்காது. இதனால் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், இருதய நோய் பக்கவாதம் போன்ற நோய் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.  அத்தோடு மிக தீவிரமாக குறட்டை விடுபவர்கள் உறக்கத்திலேயே இறந்து விடும் வாய்ப்பும் அதிகம் உள்ளது. அதனால் இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறட்டை! - இந்தியாவில் அதிகம் பேர் பாதிப்பு:

இந்தியர்களில் பெரும்பாலோர் இந்த நோயால் பாதிக்கப் பட்டுள்ளனர். இதனால் திடீர் மரணம் ஏற்படும் வாய்ப்பு அதிகரிக்கிறது. நம் வாழ்க்கை முறை மாறி விட்டதால், இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

குறட்டை ஏற்படுவதற்கான காரணத்தை அறிந்து `ஸ்லீப் அப்னியே' நோய் உருவாகி உள்ளதா என்பதைக் கண்டுபிடிக்க தமிழகத்தின் பெரிய நகரங்களில் மருத்துவமனைகள் உள்ளன.

உங்கள் தூக்க முறையை வைத்து, உங்களுக்கு நோய் உள்ளதாப என்பதை அவர்கள் கண்டறிந்து விடுவர். காரணத்தைக் கண்டறிந்து விட்டால், 30 சதவீதத்தினர் நோயைக் குணப்படுத் திக்கொள்ளலாம். டான்சில் அடினாய்டு, மூக்கினுள் வீக்கம் போன்ற பிரச்னைகளை அறுவை சிகிச்சை மூலம் சரி செய்து கொள்ளலாம்.

குறட்டை சத்தம் அதிகமா இருக்கா? குறட்டையை விரட்ட சூப்பரான வழி!

நமது உணவு பழக்கத்தில் ஒரு சில மாற்றங்கள் செய்தால் போதும் நிச்சயம் குறட்டையை விரட்ட முடியும். குறட்டையை கட்டுப்படுத்த  ,  குறட்டையை நிறுத்த எளிய வழி முறைகள். ஆக குறட்டையை விரட்ட பயன்படுத்த வேண்டிய குறிப்புகளாக  உணவுப் பழக்கத்தை மேலாண்மை செய்யலாம்.  குறட்டை வருவதற்கு காரணம் ஆக நமது உணவு பழக்கமே உள்ளது என்று சில கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. . அதிகம் சாப்பிட வேண்டாம் நல்ல உணவை உண்ட பின் உடனடியாக தூங்குவது நல்லதல்ல. சாப்பிட்ட பின்னர், சில மணி நேரம் கழித்து உறங்குவது நல்லது. இந்த இடைப்பட்ட நேரத்தில் சொஞ்சம் நடந்தால் சீக்கிரம் உண்ட உணவு எளிதில் செறிக்கும். ஆனால் இரவு நேரத்தில் அதிகம் சாப்பிடுவதை நாம் தவிர்க்க வேண்டும். குறட்டையை நிறுத்துவதற்கு தேன் ஒரு சிறந்த உணவாக உள்ளது. எரிச்சல்களையும் மற்றும் நுண்ணுயிரிகளையும் வர விடாமல் தேன் தடுக்கின்றது. இதனால் மூச்சு குழாயில் உள்ள அடைப்புகள் சரியாகி தொண்டையில் உள்ள அடைப்புகள் சரி செய்யப்படுகின்றன. குறட்டையை விளைவிக்கும் பொருளாக மாமிச இறைச்சி வகைகள் உள்ளன. இத்தகைய சிவப்பு இறைச்சிகளை தவிர்த்து மீனை உணவில் சேர்த்துக் கொண்டால் குறட்டையை கட்டுப்படுத்த முடியும். இத்தகைய இறைச்சியில் உள்ள கொழுப்பு வகைகள் நமது இரத்த குழாய்களை அடைந்து தசை சுருக்கங்களை உருவாக்குகிறது. இதனால் தொண்டை வீக்கமடைகின்றது. ஆலிவ் எண்ணெய் சாச்சுரேட்டட் எண்ணெயை சாப்பிடுவதன் மூலம் அமிலம் பின்னோக்கி பாய்கின்றன. உணவுக் குழாயில் உள்ள வீக்கத்தினால் உருவாகும் அமிலம் குறட்டையை உண்டாக்குகிறது. ஆலிவ் எண்ணெய் தொண்டை பகுதியில் உள்ள இத்தகைய அடைப்புகளையும் வீக்கங்களையும் குறைத்து குறட்டையை வர விடாமல் தடுக்கின்றது. டீ தொண்டையில் உள்ள அடைப்புகளையும், நெருடல்களையும் நீக்கும் சிறந்த பானமாக டீ உள்ளது. அதனால் குறட்டையும் வராமல் தவிர்க்கப்படுகிறது. கெமோமில் தேயிலை, மின்ட் தேயிலை, பச்சை தேயிலை, மற்றும் டீ டிக்காசன் ஆகியவை இந்த விஷயத்தில் சிறந்த பலனை தருகின்றன. இதனுடன் எலுமிச்சை மற்றும் தேன் சேர்த்து அருந்தினால் குறட்டையை அறவே நிறுத்த முடியும். சோயா பால் லாக்டோஸ் சகிப்புத்தன்மை இல்லாத நபர்கள் மாட்டுப் பால் அருந்தினால் அவர்களுக்கு குறட்டை வரும் என்பது வெளிப்படையான உண்மையாகும். இது மூச்சுக் குழாய்களில் அடைப்புகளை ஏற்படுத்தி குறட்டையை அதிகப்படுத்துகிறது. அதுமட்டுமல்லாமல் அதிக அளவு சளியையும் சுரக்கிறது. மாட்டுப் பாலிற்கு பதிலாக சோயா பாலை பயன்படுத்தினால் குறட்டை இல்லாத உறக்கத்தைப் பெற முடியும் பாலும், பால் சேர்க்கப்பட்ட எந்த உணவுகளும் குறட்டையை வரவழைக்கும் குணத்தைக் கொண்டிருக்கின்றன. நீங்கள் குறட்டையை நிறுத்த விரும்பினால் நிச்சயம் இத்தகைய உணவுகளை தவிர்ப்பது சிறந்த முடிவாக இருக்கும். ஒரு வேளை நீங்கள் இதை அவற்றை சாப்பிட நேர்ந்தால், அவ்வாறு செய்த மூன்று அல்லது நான்கு மணி நேரம் கழித்து உறங்கினால் சிறந்தது.

உலகில் 90 சதவீத மக்கள் குறட்டையால்தான் அவஸ்தைப்படுகிறார்கள். குறட்டை வருவதற்கு பின்னணியில் ஏராளமான காரணங்கள் இருக்கின்றன. அறிவியல்பூர்வமாக, சுவாசப்பாதையின் தசைகள் அளவுக்கு அதிகமாக ரிலாக்ஸ் அடையும் காற்று உள்ளே சென்று வெளிவருவதால் குறட்டை வருவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. குறட்டை விடுவதால் எவ்வித கடுமையான பிரச்சனையையும் சந்திக்காவிட்டாலும், வாழ்நாள் முழுவதும் குறட்டை விடுவதால் தூக்கத்தின் தரம் பாதிக்கப்படும் மற்றும் அருகில் படுப்போரின் தூக்கமும் போகும். இப்போது தூங்கும் போது குறட்டை வருவதற்கான வேறு சில காரணங்கள் என்னவென்று பார்ப்போம்.

மருந்துகள் பெரும்பாலான மருந்துகள் ஒரு குறிப்பிட்ட பக்க விளைவுகளைக் கொண்டிருக்கும். அதிலும் இரவில் படுக்கும் முன் தூக்க மாத்திரைகள் மற்றும் ஹிசுட்டமின் மருந்துகளை எடுத்தால், அதனால் குறட்டையானது அதிக சப்தத்துடன் வரும்.உடல் பருமன் உடல் பருமனால் பல வழிகளில் வாழ்க்கையை பாதிக்கும். அதில் இதய நோய், பக்கவாதம், கருத்தரிப்பதில் பிரச்சனை மற்றும் தூக்க குறைபாடுகளான குறட்டை விடுதல் போன்றவை அடங்கும். குறிப்பாக ஒருவருக்கு கழுத்து சிறியதாகவும், அவ்விடத்தில் கொழுப்புக்கள் அதிகமாகவும் இருந்தால், குறட்டை வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது.இரவு உணவு இரவில் வேகமாக உணவை உட்கொள்வோரை விட, தாமதமாக வயிறு நிறைய உட்கொள்வோருக்குத் தான், அதிக அளவில் குறட்டை வரக்கூடும்.மது அருந்துதல் மது அருந்துவதும் குறட்டை வருவதற்கான காரணங்கள்ளில் ஒன்று. ஆல்கஹால் குடித்த உடனேயே தூங்குவதற்கு பதிலாக, இரவில் தூங்குவதற்கு மூன்று மணிநேரத்திற்கு முன்பே ஆல்கஹால் பருகலாம். இதனால் கொஞ்சம் கொஞ்சமாக குறட்டை பிரச்சனையைக் குறைக்கலாம்.அடிநாச் சதை உங்கள் குழந்தைகள் குறட்டைவிட்டால், பெற்றோர்கள் உடனே அவர்களுக்கு அடிநாச் சதை சோதனையை எடுத்துப் பார்க்க வேண்டும். அடிநாச் சதை வீங்கியிருந்தால் தான் குழந்தைகளுக்கு குறட்டை வரும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். எனவே குறட்டை விடும் உங்கள் குழந்தையை உடனே மருத்துவரிடம் அழைத்துச் சென்று பரிசோதியுங்கள்.தூங்கும் நிலை மென்மையான தலையணை மற்றும் நேராக படுப்பது போன்றவையும் குறட்டை வருவதற்கான காரணங்கள்ளுள் ஒன்று. எனவே உங்களுக்கு குறட்டை வந்தால், தலையணை இல்லாமல் தூங்குங்கள். இல்லாவிட்டால், இடதுபக்கமாக தூங்குங்கள். மூக்கடைப்பு உங்களுக்கு அடிக்கடி மூக்கடைப்பு ஏற்பட்டாலும் குறட்டை வரும். அதிலும் உங்கள் மூக்கைச் சுற்றி சளி அதிகம் தேங்கியிருந்தால், சுவாச பிரச்சனைகளை அதிகம் சந்திக்க நேரிடும். சுவாச பிரச்சனைகள் இருந்தால், குறட்டை கண்டிப்பாக வரும். எனவே தேங்கியுள்ள சளியை வெளியேற்ற முயற்சி செய்யுங்கள்.

குறட்டை நீங்க! குறட்டை!  குறட்டை விடுவதை நிறுத்த!  குறட்டை வராமல் தடுக்க! குறட்டை வராமல் இருக்க!
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post