Title of the document
https://tamil.boldsky.com/img/2019/03/whyyoushouldnoteatafter7pm-1552997962.jpg
ஒவ்வொரு உயிர் இனத்திற்கும் ஒரு தனிப்பட்ட உடல் அமைப்பு இருக்கும். இவற்றில் மனிதனுக்கு மிகவும் சிறப்பான உடல் அமைப்பு என்றே கூறலாம். காரணம் 3 வேலை சாப்பாடு, நல்ல ஓய்வு, சீரான வேலை... இவைகள் தான் மனித உடலுக்கு அவசியம் தேவைப்படுகிறவை. மற்ற எல்லாவற்றையும் காட்டிலும் உணவு தான் மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்று.


 இரவில் இந்த நேரத்திற்கு பிறகு சாப்பிட்டால் உங்களுக்கு ஆபத்து நிச்சயம்..! காரணம் தெரியுமா? கண்ட நேரத்தில் உணவு சாப்பிட்டால் அது நமது உடல் ஆரோக்கியத்தை பெரிதும் பாதிக்கும். குறிப்பாக காலை மற்றும் இரவு நேரத்தில் சரியான நேரத்தில் உணவை சாப்பிடுதல் மிக முக்கியமானதாகும். நேரம் தவறி சாப்பிடுவதால் அவை உடல் ஆரோக்கியத்தை முழுவதுமாக பாதித்து ஆபாய நிலைக்கு தள்ளி விடும்.

 அந்த வகையில் ஒரு சில மணி நேரத்திற்கு பிறகு இரவு உணவை சாப்பிட கூடாது என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கான உண்மை காரணத்தையும், ஏன் அவ்வாறு சாப்பிட கூடாது என்பதையும் இந்த பதிவில் அறியலாம். பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும் நேரம் நேரம் பொதுவாக இரவு நேர உணவை மிக விரைவிலே சாப்பிட்டு முடித்து விட வேண்டும். அதாவது, இரவு உணவை 7 மணிக்கு முன்னதாக சாப்பிட வேண்டும் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு கூறுவதற்கு சில காரணிகள் உள்ளன.


இதற்கு முக்கிய காரணம் உணவு சுழற்சி தான். அந்தந்த நேரத்திற்கு நாம் உணவை சாப்பிடவில்லை என்றால் அது முழு உடல் உறுப்புகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்துமாம். செரிமானம் செரிமானம் இரவு 7 மணிக்கு மேல் உணவை சாப்பிட்டால் செரிமான கோளாறுகள் உண்டாகும். மிக விரைவிலே செரிமானம் அடைவதற்கு 7 மணிக்கு முன்னதாக உணவை சாப்பிடுதல் நல்லது. அத்துடன் முழு கலோரிகளும் நமது உடலுக்கு கிடைக்கும்.


MOST READ: தாம்பத்திய உறவில் ஆண்கள் ஈடுபடாமல் அவதிப்படுவதற்கு, இந்த பத்துல ஏதோ ஒன்னு தான் காரணம்! இதயம் இதயம் இரவில் நாம் சாப்பிடும் உணவில் உப்பின் அளவு அதிகமாக இருந்தால் அவை நமது இதய ஆரோக்கியத்தை பாதித்து விடும். அத்துடன் வயிற்று உப்பசம், வாயு தொல்லை, உயர் இரத்த அழுத்தம் போன்ற பலவித பாதிப்புகளை இது ஏற்படுத்தும்.


எனவே, இரவு 7 மணிக்கு மேல் சாப்பிடும் பழக்கம் இந்த பாதிப்புகளில் ஏதேனும் ஒன்றை நமக்கு தர கூடும். ஆராய்ச்சி ஆராய்ச்சி இரவில் மிக தாமதமாக உணவை சாப்பிடுவோருக்கு பல பாதிப்புகள் உண்டாகும் என அண்மைய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. அவற்றில் மிக முக்கியமானவை மார்பக புற்றுநோயின் பாதிப்பு, சர்க்கரை அளவு அதிகரித்தல், இரத்த கொதிப்பு போன்றவை பாதிப்பு உருவாகுதல். இதனை தடுக்க இரவு 7 மணிக்கு முன்னதாக உணவை உட்கொள்ளுங்கள்.


தூக்கம் தூக்கம் தூங்குவதற்கு முன்னர் சிறப்பான சம்பவத்தை சாப்பாட்டில் செய்து விட்டு தூங்கினால் ஆபத்து நமக்கு தான். ஆகையால் தூங்குவதற்கு முன் சாப்பிடுவதை தவிர்க்கவும். மேலும், 7 மணிக்குள் சாப்பிட்டால் நிம்மதியான ஆழ்ந்த தூக்கம் வரும். ஹார்மோன் ஹார்மோன் இரவில் நேரம் கடந்து சாப்பிடுவதால் மூளையின் செயல்பாடு பாதிக்கப்படும். இதனால் மூளை விழித்திருக்கும் நிலை ஏற்படும். இதே நிலை நீடித்தால் ஹார்மோன் உற்பத்தியும் பாதிக்கப்படும்.

 இதனால் சிலருக்கு சீரற்ற முறையில் உறுப்புகள் செயல்பட ஆரம்பிக்கும். உடல் எடை உடல் எடை இரவில் 7 மணிக்கு முன்னதாக சாப்பிட்டால் உடல் பருமனாகாது. நேரம் கடந்து சாப்பிடுவதால் உடல் எடை அபரிமிதமாக கூட தொடங்கி விடும். இது நாளுக்கு நாள் உயர்ந்து இதய நோய்கள், இரத்த அழுத்தம் போன்ற பாதிப்புகளையும் உண்டாக்கி விடும்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post