லண்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ்த்துறையின் இந்திய ஒருங்கிணைப்பாளராக அரசுப் பள்ளி ஆசிரியை!``இந்த வாய்ப்பு ரொம்ப சந்தோஷத்தையும் பொறுப்பையும் தருகிறது. என்னுடைய பணி என்பது, லண்டன் சென்று தமிழ் வளர்ச்சி சார்ந்த விஷயங்களை முன்னெடுக்கவும், தமிழ் மொழி கற்பித்தலில் ஆர்வமும் திறனும் உள்ள ஆசிரியர்களை அந்த அமைப்புக்கு ஒருங்கிணைக்கும் பணியைச் செய்ய வேண்டும். அடுத்து, அங்கு படிக்கும் மாணவர்களுக்கான ஆய்வுப் பணிக்கு வழிகாட்டுவது போன்ற பணிகள் இருக்கும்’’ என்கிறார்.


தமிழ்நாட்டு அரசுப் பள்ளி ஆசிரியையின் முயற்சிகளுக்குக் கிடைத்திருக்கும் பெரும் அங்கீகாரம் இது.