பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 17.07.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :217
மருந்தாகித் தப்பா மரத்தற்றால் செல்வம்
பெருந்தகை யான்கண் படின்.
விளக்கம்:
பெரும் பண்பாளனிடம் சேரும் செல்வம், எல்லா உறுப்புகளாலும் மருந்து ஆகிப் பயன்படுவதிலிருந்து தப்பாத மரம் போலப் பொதுவாகும்.
பழமொழி :
All work and no play makes Jack a dull boy
ஓய்வில்லாத உழைப்பு உப்பில்லாத உணவு
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாம் தெரியும் என்று சொல்பவன் தேடலும் அறிவும் வாழக்கை பாதையின் முடிவுக்கு வரும்
2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்
பொன்மொழி :
ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்
பொது அறிவு :
1. இந்தியாவின் முதல் உயிர்க்கோள காப்பகம் எது?
விடை: நீலகிரி உயிர்க்கோள காப்பகம், தமிழ்நாடு
2. இந்தியாவின் மிகப்பெரிய அணை எது?
விடை: பக்ரா நங்கல் அணை, இமாச்சல பிரதேசம்
English words & meanings :
fantasy – imagining impossible things, நடை முறைக்கு சாத்தியம் இலலாத கற்பனை.gusto – enjoyment in doing something.ஒரு செயலை செய்யும்போது ஏற்படும் ஆர்வ உணர்வு
School Morning Prayer Activities July Month 2023 :
School Morning Prayer Activities 03.07.2023 - Download Here
School Morning Prayer Activities 04.07.2023 - Download Here
School Morning Prayer Activities 05.07.2023 - Download Here
School Morning Prayer Activities 06.07.2023 - Download Here
School Morning Prayer Activities 07.07.2023 - Download Here
School Morning Prayer Activities 10.07.2023 - Download HereSchool Morning Prayer Activities 16.07.2023 - Download Here
School Morning Prayer Activities 17.07.2023 - Download Here
School Morning Prayer Activities 18.07.2023 - Download Here
School Morning Prayer Activities 19.07.2023 - Download Here
ஆரோக்ய வாழ்வு :
கருணை கிழங்கு,நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
நீதிக்கதை
அது ஒரு அடர்ந்த காடு. அந்த காட்டின் நடுவே ஒரு குறுகிய பாலம் ஒன்று ஆற்றின் நடுவில் இருந்தது. ஒரு நாள் அந்த பாலத்தை கடப்பதற்காக இரண்டு ஆடுகள் பாலத்தின் அருகில் வந்து கொண்டு இருந்தன. ஒரு ஆடு பாலத்தின் ஒரு முனையிலும் மற்றொன்று மறுமுனையிலும் நின்றன. பாலத்தை ஒரே நேரத்தில் ஒருவர் மட்டுமே கடக்க முடியும்.
இது தெரிந்தும் இரண்டு ஆடும் ஏறி பாலத்தின் நடுவில் வந்து நின்றன.முதலாவது ஆடு "எனக்கு வழி விடு நான் செல்ல வேண்டும்" என்றது.
உடனே, இரண்டாவது ஆடு "நான் தான் முதலில் வந்தேன்; எனக்கு நீ தான் வழி விடவேண்டும்" .என்றது. இப்படியே இரண்டு ஆடுகளும் சண்டையிட தொடங்கியது.
சண்டையிடும் போது இரண்டு ஆடுகளின் கால்களும் பிடிமாணம் இன்றி ஆற்றில் விழத்தொடங்கின.ஆற்றில் விழுந்தவுடன் இரண்டு ஆடுகளும் தாங்கள் செய்த தவறை நினைத்து வருந்தின. இறுதியில் இரண்டு ஆடுகளும் நீரில் மூழ்கி இறந்தன.
நீதி: விட்டுக் கொடுக்க வேண்டிய நேரத்தில் கண்டிப்பாக விட்டுகொடுக்க வேண்டும்.
இன்றைய செய்திகள் - 17.07. 2023
*சந்திரயான் - 3 விண்கலத்தின் சுற்றுப்பாதை முதன்முறையாக வெற்றிகரமாக உயர்த்தப்பட்டதாக இஸ்ரோ தகவல்.
சந்திரயான்-3 வெற்றியைத் தொடர்ந்து பிரதமர் மோடிக்கும் இஸ்ரோ விஞ்ஞான குழுவினருக்கும் பூட்டான் பிரதமர் வாழ்த்து.
*10 மற்றும் 12 வகுப்பில் இடைநின்ற மாணவர்களுக்கும்,தேர்ச்சி பெற்றும் படிப்பை தொடராமல் இருக்கும் மாணவர்களுக்காகவும் உயர்கல்வி குறித்து ஆலோசனை வழங்க மேலாண்மை குழு கூட்டம் நடத்த அரசு ஏற்பாடு.
*மருத்துவ படிப்புக்கான தரவரிசை பட்டியல் வெளியீடு. 2023-2024 ஆம் கல்வி ஆண்டில் மருத்துவ மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்காக
40,200 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன - அமைச்சர்.
*நடப்பு கல்வி ஆண்டில் செவிலியர் பட்டயப் படிப்புகளில் சேர நேற்று முதல் 26 ஆம் தேதி மாலை 5 மணி வரை இணைய வழியில் விண்ணப்பிக்கலாம்.
*ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வெல்வதே இலக்கு- ருதுராஜ் கெய்க்வாட் சொல்கிறார்.
*முதல் ஒரு நாள் போட்டி இந்தியாவை வீழ்த்தி வங்கதேச மகளிர் அணி அபார வெற்றி.
Post a Comment