பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் / School Morning Prayer Activities - 07.07.2023
பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 07.07.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்:தீவினையச்சம்
குறள் :210
அருங்கேடன் என்பது அறிக மருங்கோடித்
தீவினை செய்யான் எனின்.
விளக்கம்:
வழிதவறிச் சென்று பிறர்க்குத் தீங்கு விளைவிக்காதவர்க்கு எந்தக் கேடும் ஏற்படாது என்பதை அறிந்து கொள்.
பழமொழி :
A rolling stone gathers no moss
அலைபாயும் மனத்தால் எதையும் செய்ய முடியாது.
இரண்டொழுக்க பண்புகள் :
1. ஊக்கமுடன் உழைத்தால் ஆக்கம் தானாக வரும். எனவே ஊக்கமுடன் எனது வேலைகளை செய்வேன்.
2. முயன்றால் பட்டாம்பூச்சி. இல்லாவிட்டால் கம்பளிப்பூச்சி. எனவே சோர்ந்து போகாமல் முயற்சி செய்வேன்.
பொன்மொழி :
ஒரு விஷயம் முக்கியமானதாக இருந்தால், நிலைமை உங்களுக்கு சாதகமாக இல்லாவிட்டாலும் அதை செய்து முடியுங்கள்.எலன் மாஸ்க்
பொது அறிவு :
1.முதுகு தண்டில் உள்ள எலும்புகள் எத்தனை?
33
2.காலரா நோயை உருவாக்கும் பாக்டீரியா எது?
விப்ரியோ காலரே
English words & meanings :
transpire - revealed வெளிப்படுத்துதல் ; utensil - vessel பாத்திரம்
ஆரோக்ய வாழ்வு :
உருளை கிழங்கு :இதில் வைட்டமின் C மற்றும் கரோடின் சத்துகள் நிறைந்துள்ளது. இதனால் இது குழந்தைகளுக்கு ஏற்படக்கூடிய ஸ்கர்வி நோய் வருவதை தடுக்கிறது.
ஜூலை 07 இன்று

மகேந்திர சிங் தோனி
மகேந்திர சிங் தோனி (Mahendra Singh Dhoni), சுருக்கமாக எம் எஸ் தோனி என்று (பிறப்பு: 7 சூலை, 1981) அறியப்படும் இவர் இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் சர்வதேசத் துடுப்பாட்ட வீரரும் முன்னாள் தலைவரும் ஆவார். இவர் 2007 முதல் 2016 ஆம் ஆண்டு வரை வரையிட்ட நிறைவுப் போட்டிகளுக்கும் , 2008 முதல் 2014ஆம் ஆண்டு வரை தேர்வுப் போட்டிகளிலும் இந்திய அணியின் தலைவராக இருந்தார். இவரின் தலைமையில் 2007 ஐசிசி உலக இருபது20 2007-08 பொதுநலவய போட்டித் தொடர், 2010மற்றும் 2016 ஆசியக் கோப்பை, 2011 துடுப்பாட்ட உலகக்கிண்ணம் மற்றும் 2013 ஐசிசி வாகையாளர் ஆகிய கோப்பைகளை இந்திய அணி வென்றுள்ளது. நடுவரிசை மட்டையாளரும் இலக்குக் கவனிப்பாளரான இவர் ஒநாப போட்டிகளில் 10,000க்கும் மேற்பட்ட ஓட்டங்களை எடுத்துள்ளார். இவர் ஒரு நாள் பன்னாட்டுப் போட்டிகளில் சிறப்பாக ஆட்டத்தினை முடித்துவைக்கும் திறன் கொண்டவர்களில் ஒருவராக அறியப்படுகிறார்.[2][3][4][5] மேலும் அவர் காலத்திலான ஒரு நாள் பன்னாட்டு துடுப்பாட்டத்தின் சிறந்த இலக்குக் கவனிப்பாளர்களில் ஒருவராகவும் சிறந்த அணித்தலைவராகவும் கருதப்படுகிறார்

நீதிக்கதை
ஒரு சமயம், தாசு என்ற ஒரு சிறிய பறவை பரந்த காட்டில் ஒன்றில் வாழ்ந்து வந்தது. கோடைக்காலத்தில் ஒரு நாள், கொடூரமான காட்டுத் தீயானது கொழுந்து விட்டு எரிந்தது.அதன் தீப்பிழம்புகள் காட்டில் இருக்கும் பல மரங்கள்,விலங்குகளை விழுங்கிக் கொண்டிருந்தது. மற்ற பறவைகள், வானில் உயரமாகப் பறந்து, வெகு தொலைவிலுள்ள பாதுகாப்பான இடத்திற்குச் சென்று கொண்டிருந்தன; ஆனால் தாசுவால், தன்னுடைய அருமையான இருப்பிடம் மற்றும் எரிந்து கொண்டு இருக்கும் இடத்தை விட்டுச் செல்வதற்கு மனம் வரவில்லை. இரவும் பகலும், தன் ஆற்றல் முழுவதையும் உபயோகித்து, தனது சிறு அலகில் ஆற்று நீரை நிரப்பிக் கொண்டு, முன்னும் பின்னும் அலைந்து காட்டுத் தீயை அணைக்க தாசு முற்பட்டது. அந்த சிறிய பறவை தாசுவின் அரிதான துணிச்சலும், அசைக்க முடியாத மன உறுதியும் போற்றத்தக்க வகையில் இருந்தது. சிறிது நேரத்தில், பெரும் மழை காடுகளின் மீது பொழிந்து, காட்டுத் தீயை தணித்தது. ஆம்.,நண்பர்களே.., உங்களிடம் உள்ள மனஉறுதியைக் கொண்டு சுற்றுப்புற சூழ்நிலையையும் மாற்றிக் கொள்ளும் முயற்சிகளை இடைவிடாமல் தொடர்ந்து செய்து கொண்டே இருங்கள்.
இன்றைய செய்திகள் - 07.07. 2023
*கேரளாவில் தீவிரம் அடைந்துள்ளது தென்மேற்கு பருவமழை. பல்வேறு மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை.
*உலகில் இதுவரை இல்லாத அதிக வெப்பம் பதிவான நாளாக கடந்த ஜூலை 3 ஆம் தேதி அறிவிப்பு. அன்றைய தினம் உலக அளவில் சராசரி வெப்பநிலை 17 டிகிரி செல்சியஸ் பதிவானதாக சுற்றுச்சூழல் கண்காணிப்புக்கான அமெரிக்க தேசிய மையம் தகவல்.
*டுவிட்டருக்கு போட்டியாக பேஸ்புக் நிறுவனர் மார்க் எலியட் சுக்கர் பெர்க்கால் தொடங்கப்பட்ட திரெட்ஸ் சமூக வலைதளம். 4 மணி நேரத்தில் 5 லட்சம் பேர் திரட்சில் இணைந்தனர்.
*சின்ன வெங்காயம் கிலோ ₹ 150 ஆக அதிகரிப்பு அத்தியாவசிய பொருட்கள் தொடர்ந்து விலை உயர்வு- மக்கள் அவதி.
*விம்பிள்டன் டென்னிசில் ஆஸ்திரேலியா வீரரை வீழ்த்தி 350 ஆவது கிராண்ட்ஸ்லாம் வெற்றியை பதிவு செய்தார் ஜோகோவிச்.
*ஐ.சி.சி. தரவரிசையில் இந்தியாவின் அஸ்வின், ஜடேஜா 'நம்பர் 1' இடத்தில் நீடிக்கின்றனர்.
Post a Comment