School Morning Prayer Activities / பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 18.07.2023
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :218
இடனில் பருவத்தும் ஒப்புரவிற்கு ஒல்கார்
கடனறி காட்சி யவர்.
விளக்கம்:
செய்யவேண்டிய கடமையை அறிந்த அறிவாளிகள், தம்மிடம் கொடுக்க இடம் இல்லாக் காலத்திலும், உழைக்கும் சக்தி அற்றவர்க்கு உதவத் தயங்க மாட்டார்கள்.
பழமொழி :
A wild goose never lay a lame egg
புலிக்கு பிறந்தது பூனையாகுமா.
இரண்டொழுக்க பண்புகள் :
1. எல்லாம் தெரியும் என்று சொல்பவனின் தேடலும் அறிவும் விரைவில் முடிவுக்கு வரும்.
2. இன்னும் அறிந்து கொள்ள வேண்டும் எனக்கு அதிகம் தெரியாது என்று சொல்பவர்கள் தேடுதலும் அறிவும் தொடரும்
பொன்மொழி :
ஒரு புத்திசாலி சரியான பதில்களைத் தருவதில்லை, அவர் சரியான கேள்விகளை எழுப்புகிறார். --கிளாட் லெவி-ஸ்ட்ராஸ்
பொது அறிவு :
1. சோம்நாத் கோவில் இந்தியாவின் எந்த மாநிலத்தின் கடற்கரையில் அமைந்துள்ளது?
விடை: குஜராத்
2. உலகிலேயே அதிக இரத்த அழுத்தம் உள்ள விலங்கு எது?
விடை: ஒட்டகச்சிவிங்கி
School Morning Prayer Activities July Month 2023 :
School Morning Prayer Activities 03.07.2023 - Download Here
School Morning Prayer Activities 04.07.2023 - Download Here
School Morning Prayer Activities 05.07.2023 - Download Here
School Morning Prayer Activities 06.07.2023 - Download Here
School Morning Prayer Activities 07.07.2023 - Download Here
School Morning Prayer Activities 10.07.2023 - Download HereSchool Morning Prayer Activities 16.07.2023 - Download Here
School Morning Prayer Activities 17.07.2023 - Download Here
School Morning Prayer Activities 18.07.2023 - Download Here
School Morning Prayer Activities 19.07.2023 - Download Here
English words & meanings :
incitement - stimulus ஊக்கம்; jealous - envious பொறாமை
ஆரோக்ய வாழ்வு :
கருணை கிழங்கு,நமது உடலுக்கு அடிப்படையாக இருப்பது நமது எலும்புகள் ஆகும். மனிதர்கள் ஒவ்வொருவருக்கும் எலும்புகள் வலிமையாக இருப்பதற்கு கால்சியம் சத்து அவசியம். கருணை கிழங்கு எலும்புகளை வலிமையாக்கும் சத்து கொண்டதாக இருக்கிறது. எலும்புகள் வலு குறைவாக இருக்கும் குழந்தைகள், வயதானவர்கள் கருணை கிழங்கை வாரம் ஒரு முறை சாப்பிடவதால் எலும்புகள் வலிமை பெறும்.
ஜூலை 18 இன்று
நெல்சன் மண்டேலா அவர்களின் பிறந்தநாள்
Nelson_Mandela-2008_(edit)
நெல்சன் மண்டேலா (Nelson Rolihlahla Mandela, 18 சூலை 1918 – 5 திசம்பர் 2013), தென்னாப்பிரிக்காவின் மக்களாட்சி முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் குடியரசுத் தலைவர் ஆவார். அதற்கு முன்னர் நிறவெறிக்கு எதிராகப் போராடிய முக்கிய தலைவர்களுள் ஒருவராக இருந்தார். தொடக்கத்தில் அறப்போர் (வன்முறையற்ற) வழியில் நம்பிக்கை கொண்டிருந்த இவர், பிறகு ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் இராணுவப் பிரிவுக்கு தலைமை தாங்கினார். இவர்கள் மரபுசாரா கொரில்லாப் போர்முறைத் தாக்குதலை நிறவெறி அரசுக்கு எதிராக நடத்தினர். மண்டேலாவின் 27 ஆண்டு சிறைவாசம், நிறவெறிக் கொடுமையின் பரவலாக அறியப்பட்ட சாட்சியமாக விளங்குகிறது. சிறையின் பெரும்பாலான காலத்தை இவர் ராபன் தீவில் சிறிய சிறை அறையில் கழித்தார். 1990 இல் அவரது விடுதலைக்கு பிறகு அமைதியான முறையில் புதிய தென்னாப்பிரிக்கக் குடியரசு மலர்ந்தது. மண்டேலா, உலகில் அதிகம் மதிக்கப்படும் தலைவர்களில் ஒருவராக விளங்கினார். மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாபிரிக்காவை மக்களாட்சியின் மிளிர்வுக்கு இட்டுச் சென்றவர். அமைதிவழிப் போராளியாக, ஆயுதப் போராட்டத் தலைவனாக, தேசத்துரோகக் குற்றம் சுமத்தப்பட்ட குற்றவாளியாக, 27 ஆண்டுகள் சிறையில் வாடி பின்னர் விடுதலையாகி குடியரசு தலைவரரானார்
. அமைதிக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது. நெல்சன் மண்டேலா பன்னாட்டு நாள் (Nelson Mandela International Day) என்பது தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18 ஆம் நாளைக் குறிக்க ஐக்கிய நாடுகள் அறிவித்த சிறப்பு நாளாகும்.
நீதிக்கதை
விவசாயி ஒருவன் தனது நிலத்திற்கு அருகே இருந்த உயரமான பாறையில் இருந்து ஒரு கழுகு முட்டையினை வீட்டிற்கு எடுத்து வந்தான்.
அக்கழுகு முட்டையினை தன் வீட்டில், கோழி முட்டைகளோடு வைத்து அடைகாக்க செய்தான்.
சில நாட்களுக்குப் பின்னர் கோழிக்குஞ்சுகளோடு கழுகு குஞ்சும் பொறித்தது.
எல்லா கோழிக்குஞ்சுகள் கூடவும் சகஜமாக பழகி, தாய்க்கோழியோடு இரையினை தேடி உண்டு கொண்டிருந்தது.
ஒரு நாள் இரை மேய்ந்து கொண்டிருந்த கழுகு குஞ்சிடம் ,ஒரு கோழிக்குஞ்சு வானத்தில் மேகத்திற்கு மேல் பறந்து கொண்டிருந்த ஒரு கழுகினை காட்டி, "அச்சோ..! அந்த கழுகினை பார்..! எவ்வளவு உயரத்தில் பறக்கின்றது.. நம்மால் அதைப்போல் பறக்க முடியாது." என்று கவலையோடு கூறியது.
இதைக்கேட்ட அந்த கழுகு குஞ்சும், “ஆமாம்.. நம்மால் அவ்வளவு உயரத்தில் பறக்க முடியாது.." என்றது.
கழுகு குஞ்சிடம் அந்த மேகத்தை தாண்டி பறக்கும் வலிமை இருந்தபோதிலும் கோழிக்குஞ்சுகளோடு பழகியதால் தன் வலிமையை உணராது போனது.
இதைப் போலத்தான் நன்கு படிக்கக் கூடிய மாணவர்கள் கூட மற்ற மாணவர்களோடு சேர்ந்து தங்களின் திறனை உணராமல், இலக்கை நிர்ணயிக்க முடியாமல் தோற்றுப் போய் விடுகிறார்கள்.
நாம் நம் சேர்க்கையை பொறுத்தே, நமது வாழ்வு நிர்ணயிக்கப்படுகிறது என்பதை உணரலாம்.
"பூவோடு சேர்ந்த நாறும் மணக்கும்".
இன்றைய செய்திகள் - 18.07. 2023
*ஈரோட்டில் மஞ்சள் விலை உயர்வு விவசாயிகள் மகிழ்ச்சி.
*தக்காளி விற்று கோடீஸ்வரரான விவசாய தம்பதி. ஒரே மாதத்தில் ரூபாய் 2.8 கோடி வருமானம் ஈட்டினார்.
*புவி சுற்றுவட்ட பாதையில் சந்திராயன்-3 விண்கலம் சுற்றிவரும் உயரம் இரண்டாவது முறையாக அதிகரிப்பு. 41,600 கிலோமீட்டர் உயரத்தில் விண்கலம் இருப்பதாக இஸ்ரோ தகவல்.
*நட்சத்திர வீரர் ஜோகோவிச்சை வீழ்த்தி முதல் முறையாக விம்பிள்டன் கோப்பையை வென்று சர்வதேச அளவில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார் அல்காரஸ்.
*வாஷிங்டன் பிரீடம் அணிக்கு எதிரான போட்டியில் டெக்ஸாஸ் அணியின் நட்சத்திர வீரர் பிராவோ 6 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 39 பந்துகளில் 76 ரன்கள் குவித்து அசத்தினார்.
Post a Comment