School Morning Prayer Activities - 14.07.2023 / பள்ளி காலை வழிபாட்டுச் செயல்பாடுகள் - 14.07.23
திருக்குறள் :
பால் :அறத்துப்பால்
இயல்: இல்லறவியல்
அதிகாரம்: ஒப்புரவறிதல்
குறள் :215
ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு.
விளக்கம்:
பொதுநல நோக்குடன் வாழ்கின்ற பேரறிவாளனின் செல்வமானது ஊர் மக்கள் அனைவருக்கும் பயன் தரும் நீர் நிறைந்த ஊருணியைப் போன்றதாகும்.
பழமொழி :
A thief knows a theif
பாம்பின் கால் பாம்பறியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
1. உதவி செய்வது பிறரின் வருத்தம் போக்கவே தவிர பிறர் என்னைப் புகழ அல்ல.
2. என்னால் முடிந்த வரை பிறருக்கு உதவி செய்வேன்.
பொன்மொழி :
எல்லோருடைய வாழ்க்கையும் வரலாறு ஆவதில்லை. வரலாறாய் ஆனவர்கள் தனக்காக வாழ்ந்ததில்லை
காமராஜர்
பொது அறிவு :
1.:எந்த நாட்டின் தேசிய கீதத்தில் இசை மட்டுமே உள்ளது, வார்த்தைகள் இல்லை?
விடை: ஸ்பெயின்
2. செவ்வகக் கொடி இல்லாத ஒரே நாடு எது?
விடை: நேபாளம்
English words & meanings :
carbine - a light short gun சிறிய கைத்துப்பாக்கி; dictum - a proverb பழமொழி
ஆரோக்ய வாழ்வு :
வழக்கமான சர்க்கரைவள்ளிக்கிழங்குடன் ஒப்பிடும்போது ஊதா நிற சர்க்கரைவள்ளிக்கிழங்குஆன்டி ஆக்சிடென்ட் நன்மைகளை அதிகம் கொண்டிருக்கும்.
நீதிக்கதை
ஒரு மனிதன் யானைகளைக் கடந்து செல்லும்போது, யானையின் முன் காலில் ஒரு சிறிய கயிரினால் கட்டப்பட்டதை கண்டு குழப்பம் அடைந்தார். சங்கிலிகள் இல்லை, கூண்டுகள் இல்லை. யானைகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து பிரிந்து செல்ல முடியும் என்பது தெளிவாகத் தெரிந்தது. ஆனால் சில காரணங்களால் அவை அவ்வாறு செய்யவில்லை.
அவர் அருகில் ஒரு பயிற்சியாளரைப் பார்த்து, ஏன் இந்த விலங்குகள் தப்பிக்க முயற்சிக்கவில்லை. அங்கேயே நிற்கின்றன என்று கேட்டார். அதற்கு பயிற்சியாளர் கூறினார், “அவை மிகவும் சிறியதாக இருக்கும்போது, அதே அளவு கயிற்றைப் பயன்படுத்தி அவற்றைக் கட்டுவோம், சிறிய வயதில், தப்பிக்க முயற்சிக்கும் போது அவர்களால் அந்த பிடியில் இருந்து தப்பிக்க முடியாது . அவை வளரும்போது, அவை தப்பிக்க முடியாது என்று அவைகள் நம்புகின்றன. எனவே அவைகள் ஒருபோதும் விடுபட முயற்சிக்க மாட்டாது. அந்த மனிதர் ஆச்சரியப்பட்டார். இந்த விலங்குகள் எந்த நேரத்திலும் தங்கள் பிணைப்பிலிருந்து விடுபடலாம், ஆனால் அவை தங்களால் முடியாது என்று நம்பியதால், அவை இருந்த இடத்திலேயே சிக்கிக்கொண்டன.
யானைகளைப் போல, நம்மில் எத்தனை பேர் முன்பு ஒருமுறை தவறிவிட்டதால், நம்மால் திரும்ப செய்ய முடியாது என்ற நம்பிக்கையில் வாழ்கிறோம்
தோல்வி என்பது கற்றலின் ஒரு பகுதி. வாழ்க்கையில் போராட்டத்தை கைவிடக்கூடாது. நீங்கள் தோல்வியடைவது தோல்வி அல்ல, உங்கள் வாழ்க்கையை நீங்கள் நகர்த்தும்போது நீங்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள்.
இன்றைய செய்திகள் - 14.07. 2023
*பிரான்ஸ் சென்றடைந்த பிரதமர் மோடிக்கு தலைநகரில் உற்சாக வரவேற்பு.
*சந்திராயன் 3 விண்கலம் விண்ணில் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடக்கம்.
*யமுனை வெள்ளம் சூழ்ந்ததால் டெல்லியில் குடிநீர் தட்டுப்பாடு- முதலமைச்சர் கெஜ்ரிவால்.
*மாற்றுத்திறனாளிகளுக்கான கல்வி உதவித்தொகை இரு மடங்காக உயர்வு செய்து அரசாணை வெளியீடு.
*வரும் ஜூலை 22-ல் தொடங்குகிறது பொறியியல் கலந்தாய்வு. 3 சுற்றுகளாக மட்டும் நடைபெறும் என்று அமைச்சர் பொன்முடி அறிவிப்பு.
*ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 1000 மீட்டர் நடைப்பந்தயத்தில் இந்தியாவின் அபிஷேக்பால் வெண்கல பதக்கம் வென்றார் # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment