பொங்கல் வாழ்த்து கவிதை | Pongal Vaalthu Kavithai
விடியற்காலையில் விடியலாய்
கழனி நோக்கி நீ சென்றாய்!
கால் பதித்த கழனியில்
உன் வெள்ளை உள்ளம் கண்டு
ஒட்டிக் கொண்ட சேறுகள்!
வயல் வரப்பு பாதைகளில்
உன் பாதச் சுவடுகள்
தினம் தினம் அரங்கேற்றம்!
சுட்டெரிக்கும் வெயிலில்
காந்தி உடையின் பாதியோடு
வியர்வைகள் நீ சிந்துவாய்!
நீயும் நெற்கதிரும்
உரையாடுவீர்கள் தினம் தினம்.
உனக்கு நீ எனக்கு நான்!
உழவனான உன் உழைப்புக்கு
வளர்ந்து விட்ட நெற்கதிர்
தலை சாய்த்து மரியாதை!
தமிழனாய் மட்டும் அல்ல
தரணியில் நல்லதொரு
உழவனாகவும் நீ!
தமிழனும் உழவனும்
தரணியில் வாழ்வாங்கு வாழ
ஒற்றுமையாய் சொல்லிடுவோம்!
பொங்கலோ பொங்கல்!
இனிய பொங்கல் தின நல்வாழ்த்துக்கள்!
- இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 1
இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 2
இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 3இதையும் படிங்க : பொங்கல் கவிதைகள் | Happy Pongal Kavithaigal - 3 - இதையும் படிங்க : மாட்டு பொங்கல் 2021 - Images Download
இதையும் படிங்க : தை பொங்கல் 2021 - Images Download
இதையும் படிங்க : Pongal Images in Tamil - Download Here
இதையும் படிங்க : Pongal History / பொங்கல் வரலாறு - Click Here # இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...
Post a Comment