Title of the document

 2020-2021 சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை மாணவர்கள் பெறுவது எப்படி ? (முழு விவரம் )...இது குறித்து நமது வலை தளத்திற்கு கிடைத்த தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்களுக்கு பயன்படும் அனைத்து கல்வி சார்ந்த தகவல்களும் உடனுக்குடன் அறிந்து கொள்ள நமது வலைதளத்துடன் இணைந்திருங்கள்..  

தமிழ்நாட்டில் வாழும் சிறுபான்மையினர் இனத்தவரான கிறித்தவர் , இஸ்லாமியர் , சீக்கியர் , புத்த மதத்தினர் , பார்சி மற்றும் ஜெயின் மதத்தைச் சார்ந்து அரசு , அரசு உதவி பெறும் மைய / மாநில அரசால் அங்கிகரிக்கப்பட்ட தனியார் கல்வி நிலையங்களில் 1 முதல் 10 - ம் வகுப்பு வரை பயிலும் மாணவ / மாணவியர்களுக்கான பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகையும் , 11 - ம் வகுப்பு முதல் ஆராய்ச்சி படிப்பு வரை ( ஐடிஜ.ஜடிசி , வாழ்க்கை தொழிற்கல்வி , பாலிடெக்னிக் , செவிலியர் / ஆசிரியர் பட்டயப்படிப்பு , இளங்கலை , முதுகலை பட்டப்படிப்புகள் உட்பட ) பயில்பவர்களுக்கு பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகையும் மற்றும் தொழிற்கல்வி , தொழிற்நுட்ப கல்வி பயில்பவர்களுக்கு தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு மத்திய அரசின் WWW.Scholarships.gov.in என்ற தேசிய கல்வி உதவித்தொகை ( NSP ) இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.


• 2020-2021 - ஆம் ஆண்டிற்கான கல்வி உதவித்தொகை திட்டத்தினை தேசிய கல்வி உதவித்தொகை இணையம் மூலம் ( NSP ) மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு 31.10.2020 வரை கால நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி கல்வி நிலையங்களிலும் தேசிய கல்வி உதவித்தொகை இணையத்திற்கென தனியே ஒருங்கிணைப்பாளர்கள் ( Institute Nodal officer ) நியமனம் செய்யப்பட வேண்டும் .

• பள்ளி / கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலர் பயனாளர் குறியீடு மற்றும் புதிய கடவுச்சொல் ( Login Credentials ) பயன்படுத்தி தேசிய கல்வி உதவித்தொகை இணையத்தில் உள் நுழைந்து ( Login ) அடிப்படை விபரங்களை ( வகுப்பு , கல்வி கட்டணம் மற்றும் பிற விபரங்கள் ) பூர்த்தி செய்து கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை ஆன் லைன் மூலம் சரிபார்க்க துவங்கலாம்

 பள்ளி கல்வி நிலையத்தின் உள் நுழைவு விபரங்கள் ( Login Credentials ) ஏற்கனவே பணிபுரிந்த பள்ளி / கல்வி நிலையத்தின் ஒருங்கிணைப்பு அலுவலரால் பகிரப்படவில்லையெனில் பள்ளி / கல்வி நிலைய தலைவரால் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் கடிதம் அளிக்கப்பட்டு SMS மூலம் பெற்றுக்கொள்ளலாம் . 2020-2021 - ம் கல்வியாண்டிற்கு மேற்படி கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் ( பள்ளி படிப்பு , பள்ளி மேற்படிப்பு , தகுதி ( ம ) வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை ) 1,35,127 மாணவ / மாணவியர்களுக்கு புதிய கல்வி உதவித்தொகை வழங்க அரசால் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது . மாணவ / மாணவியர்களுக்கு கல்வி நிலையங்கள் DISE / AISH குறியீட்டு எண்ணை தெரிவித்து தேசிய கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிப்பதற்கு அறிவுறுத்த வேண்டும்.

 பள்ளி படிப்பு கல்வி உதவித்தொகை பெறுவதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ஒரு இலட்சத்திற்கு மிகாமலும் , பள்ளி மேற்படிப்பு கல்வி உதவித்தொகைக்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு இலட்சத்திற்கு மிகாமலும் மற்றும் தகுதி மற்றும் வருவாய் அடிப்படையிலான கல்வி உதவித்தொகை பெற இரண்டு இலட்சத்து ஐம்பதாயிரத்துக்கு மிகாமலும் இருக்க வேண்டும்.

 மாணவ / மாணவியர்களின் கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களை பெறும் பொழுது கல்வி நிறுவனங்கள் மாணவர்களிடமிருந்து வருவாய் துறை வட்டாட்சியரிடமிருந்து பெறப்பட்ட வருமானச்சான்றிதழ்களை கட்டாயம் பெற்று பராமரிக்க வேண்டும் . மாணவ / மாணவியர்கள் வருவாய்துறையிடமிருந்து பெறப்பட்ட வருமானச்சான்றிதழின் அடிப்படையில் கல்வி உதவித்தொகை விண்ணப்பத்தில் வருமானம் பூர்த்தி செய்ய வேண்டும் .

• கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களின் சரிபார்க்கப்பட்ட கல்வி உதவித்தொகை விண்ணப்பங்களின் ஒருங்கிணைந்த பட்டியல் ( List of Verfied Application ) கல்வி நிலைய தலைவரின் ஒப்புதல் பெற்று மாவட்ட பிற்படுத்தப்பட்டோர்  நல அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பின்னரே நல மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலரால் இணையதளத்தில் சரிபார்க்கப்படும் .

* மாணவ / மாணவியர்களின் ஒருங்கிணைந்த பட்டியல் சமர்ப்பிக்கப்படாத கல்வி நிறுவனங்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும் பட்சத்தில் மாணவ / மாணவியர்களுக்கு கல்வி நிறுவனங்களே முழு பொறுப்பாகும் . எனவே கல்வி நிறுவனங்கள் வரப்பெற்ற மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை சரிபார்க்கப்பட்டு அதற்கான ஒருங்கிணைந்த பட்டியலை நிர்ணயிக்கப்பட்ட காலத்திற்குள் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் .

புதுப்பித்தல் :

புதுப்பித்தல் உதவித்தொகைக்கான குறைந்த பட்சம் 50 % மதிப்பெண்களுக்கான தகுதி கோவிட் -19 தொற்று நோயை கருத்தில் கொண்டு நடப்பு கல்வியாண்டில் தளர்த்தப்பட்டுள்ளது மற்றும் முந்தைய ஆண்டின் இறுதி தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவ / மாணவியர்கள் மேற்படி கல்வி உதவித்தொகைக்கு புதுப்பித்தலுக்கு தகுதியானவராக கருதப்படுவர்.


இணையதளத்தில் மாணவ / மாணவியர்கள் விண்ணப்பிப்பதற்கு தேவையான ஆவணங்கள் :


1.மாணவ / மாணவியர்களின் புகைப்படம்.

2.கைபேசி / மின்னஞ்சல் முகவரி

3.முந்தைய ஆண்டு மதிப்பெண் பட்டியல்

4.ஆதார் நகல்

5.சாதிச்சான்றிதழ்

6.வருமானச்சான்றிதழ்

7.வங்கி கணக்கு நகல் .



பொதுவான வழிமுறைகள் :

பள்ளி படிப்பை பொறுத்தவரை கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களுக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க ஏதுவாக " தத்தம் கல்வி நிறுவனங்களின் அனுபவம் வாய்ந்த கணிணி ஆசியர்கள் மூலம் வசதிகள் ஏற்படுத்தி கொடுக்கலாம்.

• சிறுபான்மையினர் கல்வி உதவித்தொகை விண்ணப்பிப்பது குறித்து கல்வி நிறுவனங்களின் அறிவிப்பு பலகையில் கட்டாயம் விளம்பர இடம் பெற்றிருக்க வேண்டும் என்று சுற்றறிக்கை கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய விண்ணப்பங்களுக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை நிர்ணயிக்கப்படும் எண்ணிக்கையில் மட்டும் வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் மாணவ / மாணவியர்களின் பெற்றோரின் ஆண்டு வருமானம் மட்டும் மதிப்பெண் அடிப்படையில் மத்திய அரசால் தேர்வு செய்யப்படுவார்கள் . புதிய விண்ணப்பங்களில் 30 % மாணவியருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கல்வி உதவித்தொகை புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு விலக்கு ஏதும் கிடையாது . புதுப்பித்தல் மாணவ / மாணவியர் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை :


* புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் ( WWW.Scholarships.gov.in ) என்ற இணையதள முகவரியில் New User / Register என்பதை தெரிவு செய்து முதன்மை விவரங்களை பதிவு செய்ய வேண்டும். மாணவ / மாணவியர்களால் பதிவு செய்யப்பட்ட கைபேசி எண் இணையதளத்தால் சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் மட்டுமே விண்ணப்பம் செய்ய அனுமதிக்கப்படும். பதிவு செய்யப்படும் கைபேசி எண்ணை மாணவ / மாணவியர்கள் எந்த காரணத்தை முன்னிட்டு மாற்றக்கூடாது.

• புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர்கள் கல்வி பயிலும் பள்ளிகளை மாற்ற இயலாது. கடந்தாண்டு கல்வி உதவித்தொகை பெற்ற மாணவரே புதுப்பித்தலுக்கு தகுதி உடையவர் ஆவார்.

• கல்வி உதவித்தொகை பெற்று வரும் மாணவர் / மாணவியர் அதே கல்வி நிலையத்தில் பயிலும் வரை புதுப்பித்தல் செய்ய முடியும். கல்வி மாறுதல் ஆகும் சமயத்தில்  மாணவ / மாணவியர்கள் ஏற்கனவே உள்ள விண்ணப்பிக்க விண்ணப்பத்தினை நிராகரிப்பு செய்து விட்டு புதியதாக வேண்டும். மாணவ / மாணவியர்கள் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கணக்குகளையே சமர்ப்பிக்க வேண்டும். மேலும் வங்கி கணக்குடன் ஆதார் எண் கட்டாயமாக இணைப்பு செய்திருக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை ஆன்லைனில் சரிபார்ப்பு செய்து அனுப்பும் போது மாணவ / மாணவியர் தங்கள் கல்வி நிலையத்தில் பயில்கிறார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

• மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் தவறுதலாக வரப்பெற்ற கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை இணையதளத்தில் Defect கொடுத்த உடன் தொடர்புடைய மாணவ / மாணவியர்களின் கைபேசி எண்ணில் தெரிவித்து விண்ணப்பத்தை Withdraw செய்து புதியதாக விண்ணப்பிக்க அறிவுறுத்த வேண்டும்.

• கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்கப்பட்ட மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்கள் கல்வி நிறுவனங்கள் சரிபார்க்கப்படாத பட்சத்தில் கல்வி நிலையங்களே அதற்கான பொறுப்பேற்க வேண்டும்.

* மாணவ / மாணவியர்கள்  கல்வி உதவித்தொகை இணையதளத்தில் விண்ணப்பிக்கும் பொழுது வங்கி கணக்கு விபரங்களை கவனத்துடன் உள்ளீடு செய்ய வேண்டும் . பதிவு செய்யப்பட்ட விண்ணப்பங்களின் விபரங்களை எந்த நிலையிலும் மாற்றவோ , திருத்தவோ இயலாது . . கல்வி நிறுவனங்கள் தங்களின் கல்வி நிலையத்தில் பயிலும் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை மட்டுமே சரிபார்த்து இணையதளத்தில் அனுப்ப வேண்டும். தவறுதலாக வரும் மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை கல்வி நிறுவனங்க நிராகரிக்க வேண்டும்.

• மாணவ / மாணவியர்களின் விண்ணப்பங்களை கல்வி நிலையங்கள் நியமிக்கப்பட்ட ஒருங்கிணைப்பு அலுவலரின் கைபேசி எண்ணில் மட்டும் விண்ணப்பங்களை சரிபார்க்கப்பட வேண்டும். எந்தவித காரணங்களை முன்னிட்டும் Browsing Centre- ல் உள்ள நபரின் கைபேசி எண்ணிற்கு விண்ணப்பங்கள் சரிபார்க்க கூடாது .

* மாணவ / மாணவியரின் ஆண்டு வருமானம் ரூ .72000 / -க்கு குறைவாக வரும் கல்வி நிறுவனங்களில் வருமானச்சான்றிதழ் சரியான முறையில் பெறப்பட்டுள்ளதா என்பதை மாவட்டத்தில் அதற்காக குழு அமைக்கப்பட்டு ஆய்வு மேற்கொள ளப்படும் . மாணவ / மாணவியரின் வினாணப்பங்கள் தேர்வு செய்யப்பட்டு வங்கி கணக்கில் கல்வி உதவித்தொகை வரப்பெற்ற விபரத்திற்கு மாணவ / மாணவியர் பதிவு மேற்கொள்ளப்பட்ட உள் நுழைவில் ( Registration / Login ) மாணவ / மாணவியரின் கடவுச் சொல்லை சமர்ப்பித்து தெரிந்துக்கொள்ளலாம் அல்லது ( NSP Home Page- ல் Sanction List ) தேர்வு செய்யப்பட்ட பட்டியலில் மாணவ / மாணவியரின் கைபேசி எண்ணை பதிவு செய்து தெரிந்துகொள்ளலாம். எந்த காரணத்தை முன்னிட்டும் கல்வி நிலையங்கள் மாணவ / மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வரப்பெறாத பட்சத்தில் அவர்களின் பெற்றோர்களை இவ்வலுவலகத்திற்கு அனுப்பி வைக்ககூடாது . அதற்கான தெளிவான விபரத்தை கல்வி நிலையங்களின் அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும். மாணவ / மாணவியர் விண்ணப்பிக்கும் காலம் முடிவடைந்ததும் கல்வி நிறுவனங்கள் தங்களது கல்வி நிறுவன Login- ல் உள் நுழைந்து மாணவ / மாணவியரின் விண்ணப்பங்களை சரிபார்த்து { District Nodal Officer login- ல் ) அனுப்பியவுடன் சரிபார்ப்பு பட்டியலை இவ்வலுவலகத்தில் உடன் சமர்ப்பிக்கும் பட்சத்தில் மாணவ / மாணவியரின் விண்ணப்பகளை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தில் சரிபார்க்க இயலும் .

• கல்வி நிறுவனங்கள் மாணவ / மாணவியர்கள் விண்ணப்பங்களை கல்வி நிறுவன Login- ல் சரிபார்ப்பு செய்து அனுப்பவில்லை என்றால் மாணவ / மாணவியரின் கல்வி நிறுவன Login- ல் நிலுவையில் இருக்கும் .

• புதியதாக விண்ணப்பிக்கும் மாணவ / மாணவியர் அனைவருக்கும் கல்வி உதவித்தொகை வழங்கப்படும் என்பது கட்டாயம்மில்லை அரசால் நிர்ணயிக்கப்பட்ட எண்ணிக்கையில் மட்டும் வருமானம் மட்டும் முந்தைய ஆண்டின் மதிப்பெண் அடிப்படையில் மைய அரசால் நேரிடையாக தேர்வு செய்யப்படும்

# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post