Title of the document


கொரோனோ பற்றிய புரிதலை குழந்தைகளுக்கு பெற்றோர்கள் எடுத்துரைப்பது மிகவும் அவசியமானது என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். குழந்தைகளை எப்படி அணுகுவது, எடுத்துரைப்பது உள்ளிட்டவற்றை தற்போது காணலாம்.

கொரோனா தொற்று 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளையும், முதியவர்களையும் எளிதாக தாக்கும். கொரோனா பற்றி முதியவர்களைவிட குழந்தைகளுக்கு புரிய வைப்பது மிகவும் எளிதான காரியம் அல்ல. பெரும்பாலான பெற்றோர்கள் வீட்டில் இருக்கும் சூழலில், கொரோனா பற்றி குழந்தைகள் பெற்றோரிடத்தில் ஏராளமான கேள்விகளை கேட்கக்கூடும்.

அதனால், கொரோனா பற்றி பெற்றோர் முழுமையாக தெரிந்துக் கொள்ள வேண்டும். கொரோனா குறித்து குழந்தைகளுக்கு எழும் சந்தேகங்களை பெற்றோர் எளிமையாக புரிய வைக்க வேண்டும். அடிக்கடி கைகளை கழுவுவது, இடைவெளிவிட்டு பேசுவது, ஆரோக்கியமான உணவை எடுத்துக் கொள்வது போன்ற முக்கியத்துவத்தை கதைகள் ரீதியாகவும், படங்கள் மூலமாகவும் குழந்தைகளுக்கு புரிய வைக்க வேண்டும் என்கிறார் மனநல ஆலோசகர் ஸ்நேகா ஜார்ஜ்.ஒருவேளை குழந்தைகளுக்கு கொரோனோ பாதித்தால் உணர்ச்சி வசப்படாமல் எவ்வித பாதிப்பும் ஏற்படாது, எப்படி தனிமைப்படுத்திக் கொள்வது என்பன போன்ற நம்பிக்கையூட்டும் வகையில் பெற்றோர் பேச வேண்டும் எனவும் மருத்துவர்கள் ஆலோசனை கூறுகின்றனர்..

குழந்தைகளுக்குக் கொரோனா தொடர்பாகப் புரிந்து கொள்வதற்கு ஏதுவாக காமிக் வடிவத்திலும் கொரோனா விழிப்புணர்வு மற்றும் தகவல்கள் மத்திய அரசின் கொரோனாவிற்கான வலைதளத்தில் கிடைக்கிறது. அதைப் பதிவிறக்கம் செய்து குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்கலாம்.
# இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள் - யாரேனும் ஒருவருக்காவது பயன்படும்...

Post a Comment

Previous Post Next Post