சுதந்திரக் காற்று! - சுதந்திர தினக் கவிதைசுதந்திரக் காற்று! – உதயகுமாரி கிருஷ்ணன்
Image result for சுதந்திர தின வரலாறு மாணவர்களுக்கு

ரப்பர் பாலில் நம் ரத்தம் கலந்தோம்…
மரவள்ளி உண்டும் மாண்போடு வாழ்ந்தோம் …
சுடும் வெயிலிலும் பசுமை வளர்த்தோம்…
கடும் அடிமைத்தனம் உடைத்து சுதந்திரம் பெற்றோம்…

தேசம் எங்கிலும் நேசம் கண்டோம்…
பல்லின மக்களோடும் பாசம் கொண்டோம்…
பாரினில் புகழைத் தேடித் தந்தோம்…
ஓரினமாய் இங்கு கூடி வாழ்கிறோம்…

அதனால் தான்…
அன்று…மரண ரயில் பாதையில் மடிந்த உயிர்களும்
இன்று…புன்னகை முகத்தோடு
பூமியிறங்கி வந்து சுவாசித்து செல்கின்றன
நமது 56 வது சுதந்திரக் காற்றை…
மலேசியர்கள் அனைவருக்கும்
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…