கைகளில் தவளும் இனிய சுதந்திரம் - சுதந்திர தினக் கவிதை

கைகளில் தவளும் இனிய சுதந்திரம் – தனேஷ் பாலகிருஷ்ணன்
Image result for சுதந்திர தின வரலாறு மாணவர்களுக்கு
அன்று அமாவாசையாய்
இருள் சூழ்ந்து கிடந்த
அடிமைத்தனம் விலகி
பௌர்ணமி பிறந்தது
இன்றைய நாளிலே!

மொழி வேறாயினும்,
இனம் வேறாயினும்
ஒன்றாய் கூடி வாழ்வதும்
இத்திருநாட்டிலே!

ஒற்றுமை கொடியை நாட்டி
உலகமே வியக்க அன்பை ஊட்டி
ஒரே மலேசியராய் வாழ்ந்து காட்டி
ஏட்டினில் எழுதுவோம் என்றும்…
இனிய சுதந்திர தின வாழ்த்துகள்…