அரசு உதவி பள்ளி’ என குறிப்பிடுவது கட்டாயம் பள்ளிக்கல்வித் துறை உத்தரவு!
அரசு உதவி பெறும் பள்ளிகளின் பெயர்ப்பலகையில், இது ‘அரசு உதவி பள்ளி’ என குறிப்பிடுவது கட்டாயம் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் வி.சி.ராமேஸ் வர முருகன் வெளியிட்ட அறி விப்பு: அரசு உதவி பெறும் பள்ளிகள் தங்கள் பெயர்ப் பலகையில் பள்ளியின் தனிப் பட்ட பெயரை மட்டும் குறிப்பிடுவ தால் பொதுமக்கள் அதை தனி யார் பள்ளி என நினைத்துக் கொள்கின்றனர் என்று பள்ளிக் கல்வி மதிப்பீட்டுக்குழு இயக்கு நரகத்துக்கு கருத்துரு வழங்கி உள்ளது. அதை அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

எனவே, மாநிலம் முழுவதும் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகள் இனி தங் கள் பள்ளியின் பெயர்ப்பலகை யில் ‘அரசு உதவி பள்ளி’ என தமிழிலும், ஆங்கிலத்தில் ‘Government aided school’ எனவும் திருத்தம் செய்ய வேண்டும். இதற்கான அறிவுறுத்தல் களை மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வழங்க வேண்டும். அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆய்வு செய்யும்போது பள்ளி யின் பெயர்ப்பலகையில் ‘அரசு உதவி பள்ளி’ எனக் குறிப்பிடப் பட்டுள்ளதா என்பதை கண் காணிக்க வேண்டும்.