பள்ளி வாகனங்களுக்கு எச்சரிக்கை

Add This Number In Your Whatsapp Groups - 9786053272
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here'பள்ளி வாகனங்களில், பாதுகாப்பு நடைமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்' என, மெட்ரிக் பள்ளிகள் இயக்குனர் கண்ணப்பன் அறிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் அனுப்பி உள்ள சுற்றறிக்கை:பள்ளி வாகனங்களில் கவனமின்மை காரணமாக, விபத்து ஏற்பட்டு, அசம்பாவித சம்பவங்கள் நடக்கின்றன.

எனவே, பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு நடைமுறைகளை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். அனைத்து பள்ளி வாகனங்களுக்கும், முறையான உரிமம் பெற்றிருக்க வேண்டும்; தரச்சான்று புதுப்பிக்கப்பட வேண்டும்.அனைத்து பள்ளி வாகனங்களும், காப்பீடு செய்யப்பட வேண்டும். வாகனத்தின் முன்னும், பின்னும், 'பள்ளிவாகனம்' என, பெரிய எழுத்தில் எழுதப்பட்டிருக்க வேண்டும். முதல் உதவி பெட்டி கட்டாயம் வைத்திருக்க வேண்டும்.தீயணைப்பு கருவி, பாதுகாப்புகம்பி பொருத்தியிருக்க வேண்டும். புத்தகப்பை வைக்க இடவசதி வேண்டும். அவசரகால வழி இருக்க வேண்டும். வேக கட்டுப்பாட்டு கருவி பொருத்தியிருக்கவேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
📲👉 👉 Join Our KalviNews Telegram Group - Click Here